Posts

Showing posts from May, 2012

சாதிய கட்டமைப்பும் பிராமணர்களின் மேலாண்மை செயல்களும்!

  பிராமணர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  மேற்கொண்ட முயற்சிகளையும் இந்த கொடுமையை     எதிர்த்து பிராமணர்களோடும்,அவர்களுக்கு ஆதரவாக இருந்துவந்த படைகளுடனும்  ஆட்சியாளர்களுடனும்   தமிழர்கள் தொடர்ந்து போராடி வந்ததை  வரலாற்றில் இடங்கை-வலங்கை போராட்டம் என்று குறித்து  வந்ததையும் பார்த்தோம். 
       துரதிஷ்டவசமாகஇந்தபோராட்டத்தில்  பிராமணர்களின் செயல்களுக்கு  ஆதரவாக அரசர்களும் ஆட்சியாளர்களும்  செயல் பட்டதால், தமிழகத்தில்  கோயில்கள் எதற்காக கட்டபபட்டனவோ  அந்த நோக்கம்  பின்னுக்கு தள்ளப்பட்டது! அதாவது, எல்லோருக்கும் பொதுவான, ஆட்சியின்  செயல்களுக்கு என்ற பொதுப்  பயன்பாட்டுக்கு உருவான கோயில்கள், ஆட்சியின்  பயன்பாட்டில்  இருந்து  விளக்கப்பட்டது! 

 கோயில்கள் ,குறிப்பிட்ட சிலரின் பயன்பாட்டுக்கும்  வழிபாட்டுக்கும்  என்றும்   மாறுதல்  அடைந்தன. கோயில்களில்  இருந்துவந்த  நடைமுறை   வழிபாடும், பழக்கங்களும்  பின்னுக்குத் தள்ளப்பட்டு, வழிபாட்டில் இருந்து வந்த  தேவாரமும் திருவாசகமும்   தமிழ்  பாசுரங்கள் பாடப்பட்டதும் ஆன நிலை  மாறியது. ஓதுவார்கள்,  கோயில்  பணியாளர்கள் ஆகியோரின்  முக்கியத்துவம்  குற…

குந்தவை குறித்த சந்தேகங்கள்,ஒரு விளக்கம்!

  குந்தவை  குறித்த  சந்தேகங்கள் என்று  சந்திரா  என்பவரும்  சிலரும்   கேட்ட கேள்விகளுக்கு   பதில்  சொல்ல  வேண்டியே இந்த பதிவு !
    சந்திராகேள்வி:: உங்கள் கருத்துப்படி குந்தவை 1006 இல் மதம் மாறினாள். ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தது 1012; ராஜராஜன் காலமானது 1014 . ஆனால் தஞ்சை கோவிலின் தெற்கு வாசலில் உள்ள கல்வெட்டு 1015 ம் ஆண்டு குந்தவை கோவிலுக்கு அளித்த கொடைகளை விவரமாக தெரிவிக்கிறது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் கல்வெட்டு பற்றி அறிவேன்.    சோழ வரலாற்றில் மூன்று குந்தவைகள் இருந்தனர். அரிஞ்சய சோழன்  வைதும்ப அரச குலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை மணப்பதற்கு  முன்பு, கீழைச் சாளுக்கிய அரசர் குலப் பெண் "வீமன் குந்தவையை" மணந்திருந்தான்! இவரது பெயரையே(பெரிய பாட்டி), சுந்தரசோழன்  தனது மகளுக்கு  வைத்து இருந்தான்! இந்த குந்தவையே  "ஆழ்வார் பராந்தகன் குந்தவை" என்றும், "வல்லவரையர்  வந்தியத்தேவன்மாதேவர் மாதேவியார்"  என்றும் "உடையார்  பொன்மாளிகையில்துஞ்சிய தேவர் திருமகளார்  ஸ்ரீ பராந்தகன்  குந்தவைபிராட்டியார் "என்றும் சோழர்களின் கல்வெட்டுகள்  குறிக்கிறது!
        ராஜரா…

மாலிக்காபூர் படையெடுப்பால் பிராமணர்கள் அடைந்த பயன்கள்!

பிராமணர்களின்இன நலனுக்கும் ஆதிக்க மேலாண்மைக்கும்  அன்னியரின்  படையெடுப்புகளும்கூட மறைமுகமாக உதவி வந்துள்ளன  எனபது வரலாற்றில் இருந்து அறியவருகிறது! 

      தென்னகத்தின் மீது மாலிக்கபூர் நடத்திய படையெடுப்பின் விளைவாக,தமிழகத்தில் உள்ள கோயில்களில்     பிராமணர்கள் ஆதிக்கம்  அதிகரித்தது.! பிராமணர்கள் தங்கள்  ஆதிக்கத்திற்கும், தங்கள் இன நலனுக்கும், மாலிக்காபுரின் படையெடுப்பைப் பயன்படுதிக் கொண்டுள்ளனர்.

  கோயில்களில் சேர்த்துவைத்திருந்த  ஏராளமான  பொன்னும், பொக்கிஷமும் கோயிலில் இருந்து ... பிராமணர்களால்  வேறு இடங்களுக்கு  அப்புறப்படுத்தவும்,  மறைத்து வைக்கவும், தாங்களே கைக்கொள்ளவும்  கூடிய சூழ்நிலையை  மாலிக்காபூர்  படையெடுப்பு ஏற்படுத்தி இருப்பதை  அறிய இயலுகிறது! 
        அதுமட்டுமின்றி, தங்களது ஆதிக்கதிற்கு எதிரான  பிரதிமங்கள், சிலைகள்,ஆகியவைகளை கோயிலில் இருந்து நீக்கவும்,அது தொடர்பான கல்வெட்டுகள்,சாசனங்களைமறைக்கவும்கூட மாலிக்காபுரின் 
படையெடுப்பு  உதவியது எனலாம்! 
    மாலிக்கபூர் படையெடுத்து வருவதாக  தெரிந்து,  ஸ்ரீரங்கம்  கோயிலில் இருந்த விக்கிரங்களை எல்லாம் மறைத்தும்  அப்புறப்படுத்தியும் உள்ளதா…