வரலாற்றை அறிய உதவும் கல்வெட்டுகள்!

     நமது பதிவர்களில் சிலர் இந்த வரலாற்று ஆய்வுதொடரில்;ஆதாரம் எங்கே?   என்றுகேட்டு கருத்துரை இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்!

        உண்மையில் ஒவ்வொரு  பதிவும்  ஆதாரத்துடன் இடப்பட்டு வருவதை அவர்கள் அறியாமல்,அல்லது ஏதோ காரணத்தால்  ஏற்றுகொள்ள மறுத்து இவ்விதம் நடந்து கொள்கின்றனர்! 

    ஒரு வரலாற்று ஆய்வுக்கு ஆதாரம் இன்றியமையாதது! ஆதாரங்கள் எனபடுவது, கல்வெட்டுகள்,கோயில் தலவரலாறு,செப்பேடுகள், 
இலக்கிய நூல்கள், புதை படிமங்கள், அகழ்வாராய்ச்சி, கண்டெடுக்கப்படும்  சிலைகள்,காசுகள், முதுமக்கள் தாளிகள்,முன்னோர் பயன்படுத்திய கருவிகள், இடம்,காலசூழல்,ஆகியவற்றை உள்ளடக்கியது!

       நான் ஆதாரமாக அவைகளைக் குறித்தே வருகிறேன்! சிலர் இன்னும் ஒருபடி மேலே போய்,ஹோசூர் ராஜன், "கரிகாலன் கல்வெட்டு இது" என்று அவரே தயாரித்து   காட்டினாலும் காட்டுவார் என்கிறார்கள்! கல்வெட்டுகள் குறித்த அவர்களது பார்வையும் அறியாமையையும் எண்ணி  வருத்தப்படலாம்! 

   உண்மையில் அவர்கள் கூறுவதுபோல,  யாரும் புதிதாக கல்வெட்டுகளை உருவாக்கி அவற்றை ஆதாரமாக காட்டிவிட முடியாது. !

         காரணம், கல்வெட்டுகள் காலத்துக்கு ஏற்றபடியும்  அதில் எழுதப்பட்டுள்ள   கிரந்த எழுத்துகள் ,தமிழ் எழுத்துக்கள் ஆகியவைகள்  மாற்றம் அடைந்து வந்துள்ளது! இப்போதுள்ள தமிழுக்கும்  பத்தாம் நூற்றாண்டில் இருந்த தமிழ் எழுத்துக்களுக்கும்  மலையளவு வேறுபாடும்  வித்தியாசமும்  உள்ளது!

கி மு.3 நூற்றாண்டு முதல் கி.பி.19 -ம் நூற்றாண்டுவரை தமிழ் உயிர் எழுத்துகளின் வளர்ச்சி(அ)  மாறுபாடு :

      
 கி மு.3 நூற்றாண்டு முதல் கி.பி.19 -ம் நூற்றாண்டுவரை தமிழ் மெய் எழுத்துகளின் வளர்ச்சி(அ)  மாறுபாடு :


       கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை வைத்தே,    அந்த கல்வெட்டு எந்த நூற்றாண்டு கல்வெட்டு  எனபது தெரிந்து விடும்.  கல்வெட்டில்    எழுதியுள்ளதில் இருந்தும்  கல்வெட்டு இடம்பெற்றுள்ள இடத்தில இருந்தும் பலவிசயங்கள்  தெரியவருகிறது! 

      கோயில்கள் அந்நாளில்  பலதரப்பு மக்களின் சங்கம இடமாகவும், அரசின் பல்துறை அலுவல்களைச் செய்துவந்த இடங்களாகவும்  இருந்து வந்தன.  ஆகவே,அன்றைய அரசர்கள்  கோயில்களில்  அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலிலும், விருப்பத்தின் பேரிலேயும்  மிகுதியாக  கல்வெட்டுகளை  ஆக்கிவைத்துள்ளனர்.! 

      நமது முன்னோர்களான  அன்றைய ஆட்சியாளர்களின்  கல்வெட்டுகள்,இன்றைய ஆட்சியாளர்களின் நிரந்தர உத்தரவுகளைப் போன்றே,    நிரந்தர  நிலை ஆணை  உத்தரவுகள்(Standing Orders) எனலாம்! 

       அன்றைய அரசர்களின்,ஆட்சியாளர்களின் உத்தரவுகளை எல்லோரும் அறிந்துகொண்டு,  கடைப்பிடித்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவைகள்  கோயிலின் முக்கிய இடங்களில், அனைவரது பார்வையிலும் படுமாறு  பாதிக்கப்பட்டு,தொடர்ந்து பராமரிக்கப்பட்டும்  வந்தன. !

         எனவே,  யாரும் புதிதாக கல்வெட்டு செய்து,  "அது.. இதுதான்"  என்று  ஏமாற்ற முடியாது! நான் பெரும்பாலும் கோயிலில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளையே  இந்தபதிவுகளுக்கு ஆதாரமாக குறிப்பிட்டு உள்ளேன்!

        நான் ஆதாரமாக  குறிப்பிட்டு வரும் கோயிலில் உள்ள கல்வெட்டுகள்  யாவும்,  கல்வெட்டு ஆய்வாளர்கள்,படியெடுக்கப்பட்டு, படித்து அறியப்பட்டு, கல்வெட்டு ஆண்டறிக்கை, தென்னிந்திய கோயில் சாசனங்கள், தென்னிந்திய கல்வெட்டுகள் என்று நூலாக  தொடுக்கப்பட்டு உள்ளவைகள்தான்! 

       தவிர, தஞ்சைகல்வேட்டுகள், எசாலம் செப்பேடுகள்  ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள், சோழர்கள் குறித்தும், தென்னிந்திய கோயில்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ள  வரலாற்று ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள்  ஆகியவர்களின்  ஆய்வு,மற்றும் அவர்களது நூலில் உள்ளத்தில் இருந்தே  மேற்கோள்கள் காட்டி வருகிறேன்! 
 
         ஆகவே,நான்  தந்துவரும் வரலாற்று  ஆய்வில்,   இல்லாத ஆதாரங்களைக் காட்டி யுள்ளதாக  எண்ணத் தேவை இல்லை! 

         இப்போது உள்ள கல்வெட்டுகளை மறைக்கவும்  , மாற்றவும், அல்லது புதிதாக கோயிலில் வைத்து நிலைநிறுத்தவும் என்னால் முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 

        அப்படி இருப்பதை அழிக்கும்,மாற்றும் வாய்ப்பும் வசதியும் கூட இன்றுவரை "பிராமணீயம்" என்ற பாசிச சக்திக்கே உள்ளது என்பதும்  அவர்களால்  மட்டுமே இன்றும் அது போன்ற செயல்கள்  நடந்து வருகிறது என்பதே எதார்த்தமாகும்! 

   "பிராமணீயம்" என்ற பாசிச சக்தி கடந்த காலங்களில்,  அவ்வாறு தமிழகத்தில்   உள்ள  கோயில் கல்வெட்டுகளை தனது நோக்கத்துக்காக  சிதைத்து, அழித்து வந்தும் உள்ளது!

  அவைகளையும் அடுத்து பார்ப்போம்!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?