பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டம்!

           பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின், தமிழர்களின் போராட்டமாக  இடங்கை-வலங்கைப் போராட்டத்தை சொல்லலாம்! 

          இந்த போராட்டம்,ஒன்றிரண்டு வருடங்களில் நடந்து முடிந்த போராட்டம் இல்லை.900 -ஆண்டுகளுக்கும் மேலாக,வாழையடி வாழையாக,  உழைக்கும் மக்களின் வாரிசுகளுக்கும், ஆதிக்கத்தை நிலைநாட்டி,அடக்கி ஒடுக்கும்" பிராமணீயம்" என்ற பாசிசத்துக்கும்  இடையில் தொடர்ந்து நடந்த போராகும்!

          இடங்கை-வலங்கை போராட்டம் கி.பி.11 -ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 -ஆம் நூற்றாண்டு வரையில் நடந்ததாக தமிழகத்தில் காணக்கிடைக்கும்  பல  கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த போராட்டத்தின் தொடக்க காலம் எனபது  கி.பி.பத்தாம் நூற்றாண்டு என்பதை அறிய முடிகிறது!


         'இடங்கை-வலங்கை சாதி வரலாறு ' எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னை பல்கலைக்கழக  நூலகத்தின் பலன்சுவடிகள் பிரிவில் காணப்படுகிறது!  இச்சுவடியானது,இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த,  98  சாதிகள்  கரிகால சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும் வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கை சாதியினர் என்று கருதப்பட்டார்கள் என்று கூறுகிறது.(ஆதாரம்: தமிழ்நாட்டு வரலாறு,சோழப் பெருவேந்தர் காலம்)

      தென்னிந்திய வரலாறு என்ற நூலில்,  ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்  அவர்கள், "இடங்கை-வலங்கைப் பாகுபாடு  எவ்வாறு தொடங்கியது  எனபது மர்மமாக  இருக்கிறது என்றும் பழைய காலத்தில் இருந்தே  இப் போராட்டம் இருந்தது" எனவும் குறிபிடுகிறார்! 

       அவரே,தனது சோழர்கள் என்ற வரலாற்று ஆய்வு நூலில்,இவ்விரு வகுப்பினருக்கும் நடந்த பூசல்களால் தெருக்களில் அடிக்கடி  ரத்தவெள்ளம் ஓடியது.கரிகாலன் காலத்தில் தோன்றியதாக ஒரு புராணம் கூறுகிறது என்றும் குறிப்பிடுகிறார்! 

        நடக்காத,நம்ப இயலாத  கதைகளை,புராணங்களை,   உண்மையாக நடந்த வரலாறுகள் போலவும்,நடந்த உண்மையான வரலாற்றை,உண்மைகளை புராணங்கள்,என்றும் திரித்து கூறுவதும்  பிராமணீயத்தின்  செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது !

      ஆகவே, கரிகாலன் காலத்தில்தோன்றியதாக ஒரு புராணம் கூறுகிறது என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் சொல்வதில் இருந்து,  இடங்கை-வலங்கைப் போராட்டம்  கி.பி.பத்தாம் நூற்றாண்டில், ஆதித்ய கரிகாலன் காலத்தில், ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால் கொல்லப்பட்டு, இயற்கை நீதிக்கு  எதிராக, உத்தம சோழன் அரசனாகப்பட்ட  சூழ்நிலையில் தொடங்கியது என்பது விளங்குகிறது! 

        உத்தம சோழன் அரசன் ஆக்கப்பட்ட முறையை  எதிர்த்த,   அதனை ஏற்க இயலாத, உழைக்கும் மக்கள், ஆதித்ய கரிகாலன்ஆதரவுப்  படைகளுக்கும், உத்தம சோழனின் ஆட்சியை ஏற்றுகொண்ட  பிராமணர்கள், அவர்களது ஆதரவாளர்களுக்கும்  இடையில் ஏற்பட்ட மோதல்கள்,போராட்டங்களே..  இடங்கை-வலங்கைப் போராட்டத்தின்  தொடக்கம் எனபது இதனால்  எளிதாக  விளங்குகிறது! 
      ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு பின்பு,எதிர் வினையாக  தொடங்கிய  போராட்டம்  கி.பி.10 -ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் ஆட்சிக்கு வந்தபோது, அவனது ஆட்சித் திறத்தால், அவனது மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் பிற நாடுகளுடன் நடந்த போர்களால், சிலகாலம் அமைதியடைந்து இருந்துள்ளது! 

           போர்கள் முடிவுக்கு வந்து, போர்களற்ற காலங்களில், பிராமணர்களின் ஆதிக்கத்தை  ஏற்க முடியாத  உழைக்கும் மக்களும்,பிராமணர்களது  ஆதிக்கத்தால் உரிமை இழந்த மக்களும் மீண்டும் கிளர்ந்து எழுந்து போராடத் தொடங்கியுள்ளார்கள் என்பதும் பிராமணர்களின் அதிகாரத்தை தடுக்க முனைந்து, உள்ளார்கள் என்பதும் விளங்குகிறது!

    "அந்தணரும் வேளாளரும் வாரவரி   வசூளிப்பதிநின்றும்  நிறுத்திக்கொள்ள  வேண்டும் .பொய்கணக்கு  எழுதியும்  தரவுகள  ஊழியர்களின்  பயனைப்  பெற்றும்  அரசினர்  மற்றும்  ஜீவிதகாரர்கள்  பயனைப்  பெற்றும்  அரசு  அலுவலர்களுக்கு  அச்சமுதாயத்தினரைப்  பற்றிப்  பொல்லாங்கு  கூறி ,எவரும்  நாட்டுக்குத்  தீங்கு செய்யக்கூடாது  " என்று  முடிவு  எடுக்கப்  பட்டது .
(கல்வெட்டில் வாழ்வியல்  நூலில் அ. கிருட்டிணன் பக்கம்-163 )


        "தன வகுப்பைச் சேராதவர்கள் கொடைகள் மற்றும் வாழ்வியல் அடிப்படை உரிமை நலன்களை எவரேனும் விலைக்கு விற்றாலோ,விலைக்கு பெற்றாலோ அரசு வரியான ராஜசாகரம்  என்னும் வரியைத் தவிர பிறவரிகளை மக்களிடையே வசூலிப்போர் நாட்டுத் துரோகிகளாக கருதப்பெற்றனர்."  (கல்வெட்டில் வாழ்வியல்  நூலில் அ. கிருட்டிணன் பக்கம்-162  )

            கோயில்கள்  அந்தணர்கள் என்னும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில்  வந்துவிட்டப் பிறகு, பிராமணர்கள் தங்களது ஆதிக்கம்,மற்றும் தங்கள்  இன நலத்தை  தொடர்ந்து  தக்கவைத்துக் கொள்ள எண்ணி, பிற சமுதாயத்து மக்களை, குறிப்பாக உழைக்கும்     கீழ்தட்டு  மக்களை அடக்கி  ஆளாவும், அடிமைப் படுத்தவும்  தங்களது அதிகாரத்தை  பயன்படுத்தி வந்துள்ளார்கள் !

            அதாவது, பரம்பரையாக   அரசர்களால் பிற இனமக்களுக்கு  வழங்கப்பட்ட  வாழ்வியல் உரிமைகளையும்  அவர்களுக்கு  கொடுத்த  நிலம் ,பொன் ,பொருள்   முதலியவைகளை விலைகொடுத்து  வாங்கியும், அம்மக்களை   விற்பனை செய்யும்படி நிர்பந்தித்தும்  அம்மக்களின்   வாழ்வுரிமையைப்   பறித்து  உள்ளார்கள் . மேலும்  அரசு பணியாளர்கள்,  பிற சமய  மக்களுக்கு  கிடைக்க  வேண்டிய  பயன்களை கிடைக்க விடாதபடி  செய்தும்  முன்பே கொடுத்திருந்த  அவர்களது உரிமைகளும்,அதன் வழியே கிடைத்து வந்த பயன்களையும் முறையாக    கொடுக்காமல்,    கொடுத்து வருவதாக    பொய்க் கணக்கு எழுதியும், முறைகேடுகள்  செய்து வந்துள்ளார்கள்! 

        பிராமணர்கள்  அவ்வாறு  ஏமாற்றி  வருவதை  தெரிந்து கொண்டு, அது பற்றி நியாயம் கேட்ட    மக்களைப்  பற்றி,அரசனிடமும்  பிற அலுவலர்களிடமும்   பொல்லாங்கு  சொல்லி,அவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்து    பழிவாங்கி வந்துள்ளார்கள்.!

            பிராமணர்கள் இவ்வாறு பொதுமக்களை  ஏமாற்றுவது, முறைகேடுகள் செய்வது,பொல்லாங்கு கூறுவதைத்  தடுக்க வேண்டி, பிராமணர்களால் பாதிக்கப்பட்ட  மக்கள், ஊர் சபைகளில்  ஒன்றுகூடி,  மேற்கொண்ட  முடிவுகளை  கூறும்  கல்வெட்டு  வரிகளே  மேற்சொன்னவைகள் ஆகும்!

          பிராமணர்களின்  கொடுமைகளை  தடுக்க  உழைக்கும் மக்கள் மேற்கொண்ட  மேலே சொன்னது போன்ற  செயல்களாலும்  பிராமணர்களை  கட்டுப் படுத்த முடியாத  நிலை  ஏற்பட்டபொழுது, பொதுமக்கள்  வெகுண்டு, போராட்டம்  நடத்தி  உள்ளார்கள்!   உழைக்கும் மக்களின்  இந்த எதிர்ப்புணர்வால்  பிராமணர்கள்  தங்களது  நிலையை  கைவிடவில்லை. பொதுமக்களை  ஒடுக்கும் செயல்கள்,   பிராமணர்களின் அடக்குமுறையும்  பிற இனமக்களை  பாதிக்கும்  செயல்களும்  நின்றுவிடாமல்  தொடர்ந்து வந்துள்ளது என்பதையே, இடங்கை-வலங்கை போராட்டம்  கி.பி.11 -ஆம் நூற்றாண்டு  தொடங்கி, 19 -ஆம் நூற்றாண்டுவரைஇடங்கை-வலங்கை போராட்டாம் நீடித்து  வந்துள்ள  வரலாறு  நமக்கு  உணர்த்துகிறது!


 இவ்வாறு நீடித்து வருவதற்கு  காரணம், அரசனும்,ஆட்சியாளர்களும்  உழைக்கும் மக்களின் உரிமைப்போராட்டத்தைப்  பற்றி  புரிந்து கொள்ளாமலும்  அவர்களது கோரிக்கைகளை  எற்றுகொல்லாமலும்  இருந்து வந்ததும், அவ்வாறு  இருக்கும்படி "ஆரியமாயை"மூலம்  பிராமணர்கள், அரசர்களையும் ஆட்சியாளர்களையும் ஆக்கியிருந்த நிலையும் எனலாம்!


        " கிராமங்களில் அன்றாடச் செயல்பாட்டில் தலையீடு செய்தும், அதன் செயல்முறைகளை  தங்களுக்குச் சாதகமாக ஒழுங்கு படுத்தினர். கோயில்களிலும்,கோயில்களில் இருந்த கருவூலங்களையும்  தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த  நிலையை பிராமணர்கள் அடைந்ததும், தங்களை நிலச்சுவான்தார்கள் போல எண்ணிக்கொண்டு,அரசின் பெயராலும் ஆலயத்தின் பெயராலும் கிராம மக்களிடம் இருந்து, நிலவரி,வீட்டுவரி ஆகியவற்றைப்  பிரித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட குடிமக்களை  அரசின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்க முற்பட்டனர். இவ்வாறு, ஒடுக்கப்பட்ட மக்களை இடங்கையினர் என முத்திரைக்  குத்தினர். நிலமைக் கட்டுக்கடங்காமல் போகவே, புறக்கணிக்கப்பட்ட இடங்கைப் படையினர் சமயத்தின் பெயராலும்,அரசின் பெயராலும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்த  பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.பிராமணர்களுக்குப் பாதுகாப்பு அளித்த ஆலயங்களை  இடித்து தள்ளியதோடு,பண்டாரங்களையும் (கருவூலங்களையும்) சூறையாடினர். நில உடமையை எதிர்த்த இவர்கள் வரி கட்ட மறுத்தனர். பிராமணர்கள் தங்கிய இடங்களும் நிர்மூலமாக்கப் பட்டன." என்று  வலங்கை-இடங்கைப் போராட்டம் குறித்து டாக்டர்.அ.தேவநேசன் தனது 'தமிழக வரலாறு' நூலில்( பக்கம்-266 ,267 )கூறுகிறார்!


       "முதலாம் குலோத்துங்கன்(கி.பி.1070 -1120 )  சோழ அரசனாக  இருந்தபோது, கி.பி.1071 -யில் இடங்கை-வலங்கைப் போராட்டம் மிகக்கொடூரமாக நடந்தது.பிராமணர்கள் தங்கிய சதுர்வேதி மங்கலத்தை மக்கள் தீகிரையாக்கியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர்கள் ஆலயங்களைத் தவறான முறையில் தங்களுக்கு  சாதகமாகப் பயன்படுத்தியதால் சமூகத்தில் விரிசல்கள் ஏற்பட்டன" (ஆதாரம்:தமிழக வரலாறு,டாக்டர்.அ தேவநேசன்)


இடங்கை வலங்கைப்  போராட்டம் குறித்த பொதுவான தகவல்கள்:

       போராட்டம் குறித்த செய்திகள்  பொதுவாக ஏதாவது ஒரு கோயிலை மையமாக கொண்டே  குறிக்கப்பட்டு  இருக்கும்.


   அரசனுடைய அதிகாரிகள்,படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.


         பெரும்பாலும்  உழைக்கும்,உரிமைகோரும் மக்களின் பிரிவான இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்டதாக  செய்திகள் இருக்கும்.

          இவர்களைத் துன்புறுத்துபவர்களாக பிராமணர்கள்,வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும்,மற்ற உயர்சாதி நில உடமையாளர்களைப்  பற்றி ஓரளவும் குறிப்புகள்  இருக்கும்.


       சில கல்வெட்டுகளில் இடங்கை,வலங்கை இரு பிரிவினரும் இணைந்து, பிராமண,வெள்ளாள  நில உடமையாளர்களை  எதிர்த்ததாக  இருக்கும்.


           பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மை, அவர்களது  இன நலனும் ,சமய வெறியும்,காரணமாக  நடந்த இடங்கை-வழங்கிப்  போராட்டத்தில்  தமிழக அரசர் பலரும்  பிராமண ஆதரவாளர்களாகவே  செயல்பட்டு, உரிமை கோரிப் போராடிய, இழந்த உரிமையை கேட்ட  உழைக்கும் மக்களின்  போராட்டத்திற்கு எதிராக  நடந்துகொண்டும், பிராமணர்கள்,  நில உடமையாளர்களுக்கு  ஆதரவாக  செயல்பட்டும்வந்துள்ளார்கள். !

       உழைக்கும் மக்களை  அடக்கி, ஒடுக்கி,அடிமைப்படுத்தும்  பிராமணிய,  பாசிசசெயல்களுக்கு  ஆதரவாக இருந்துள்ளதை  இடங்கை-வலங்கைப் போராட்டம்  உணர்த்துகிறது!

Comments

 1. அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?