நக்கன் பரவை என்னும் ஆடல் மகள்,அனுக்கியர்!

        நக்கன் பரவை  என்னும் ஆடல் மகள்,அனுக்கியர் மீது ராஜேந்திர சோழன்  கொண்ட காதல்{?} தமிழகத்தை  பிராமணர்களின் ஆதிக்கத்தில்  கொண்டுவருவதற்கு  பெரிதும் உதவியுள்ளது!


    நக்கன் பரவை என்ற ஆடல் மகளிர்,அனுக்கியர் தனது   காதல் என்ற அஸ்திரத்தால் கங்கை முதல் கடாரம் வரை  வென்ற மாமன்னன்  ராஜேந்திரனை, எளிதில் வீழ்த்திய விந்தையை  தமிழக வரலாற்றில், அறிந்தவர்கள் குறைவுஆகும்!  

     திருவாரூர் கோயில் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கும் ( பல கல்வெட்டுகளில்) இவரை தெய்வமாகவும் ஆகியுள்ளதுடன்,ஒரு பட்டத்து ராணிக்கும் கிடைக்காத சிறப்புகளை இவளுக்கு கிடைக்கும்படி செய்துள்ளனர். 
காரணம், இந்த ஆடல்மகளிரான  நக்கன் பரவை என்பவர்,விருப்பத்தின்படி ராஜேந்திரசோழன்  தனது 18  -ஆவது ஆட்சியாண்டில், திருவாரூர் தியாகேசர்  கோயிலை  கற்றளியாக (கற்கோவிலாக-  கி.பி.  1028 -யில்) எடுத்திருந்தான்!

     திருவாரூர்   கோயிலுக்கு  பரவை நாச்சியாரும் வீதி விடங்கன் கருவறையின் வெளிப்புற  உபனாதி ஸ்தூபி வரையும்  உட்புறம் முழுவதும்  பொன் தகடுகள்  போர்த்த, தனது பங்குக்கு 20643  பொன் கழஞ்சும்,மகாமண்டபத்தின் விதானத்  தூண்கள்  அத்தனையையும்  செப்புத்தகடுகள்  போர்த்தவும்  42000  -பலம் செம்பும்  கொடுத்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

" கோப்பரகேசரி வன்மரான
 உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவருக்கு யாண்டு
 இருபதாவது உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர் அனுக்கியார் 
பரவை நங்கையார் ஷத்திரிய சிகாமணி வளநாட்டு 
திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார் 
வீதி விடங்கத் தேவர் திருக்கற்றளி எடுப்பித்து
உடையார் வீவிடங்க தேவர் 
அனுகியார் பரவை நங்கையார் யாண்டு 
௧௮ (18 ) வது நாள் ௩௮ (38 )முதல் 
நாள் ௧௯௯ (199 )  வரை உடையார் 
வீதி விடங்கர் கோயிலில் குடத்திலும் 
பத்மத்திலும்  கம்பிலும் சிகரத்திலும் வாய் 
மடையிலும் நாலு நாசியிலும் உள் குட்டதிலும் 
ஆக பந்தயம் கழன்சொடு ஆயிரத்து 
 ஒன்றினாலும் முக்கழ்ன்சோடு
ஆயிரத்து நானூற்றிமுப்பத்தெட்டினாலும் 
 இரு கழன்சொடு இரண்டாயிரத்து ஒரு
 நூற்று ஒரு பத்தெட்டினாலும்...." என்று கல்வெட்டு தொடர்ந்து விவரிக்கிறது!

      இவைகள் எல்லாம் நக்கன் பரவை  என்னும் ஆடல் பெண்ணுக்கு,எப்படி வந்தது?  எனபது  சர்சைக்குரிய ஒன்று! ஆயினும்,அதனை கோவிலுக்கு கொடுத்ததாலேயே  பரவை நாச்சியார், பிராமணர்களின் போற்றுதலுக்கு உரியவராகி,தெய்வமாக வழிபாடும் நிலைக்கு  ஆளாக்கப்பட்டு உள்ளார்! 

   பரவை நாச்சியார் என்ற  இந்த பெண்ணின் வீட்டிற்கு  இந்த கோயிலில் உள்ள இறைவன்  வீதிவிடங்கன்  சிவனடியாரும்  அறுபத்து மூவரில்  முக்கியமான ஒருவருமான  சுந்தரர்  என்பவருக்கு  தூது சென்று  தன் பொன்னடிகளை நோகச் செய்தது  எல்லாம் பெரிய புராணத்தில்  விரிவாக வெளிபடுத்தப்பட்டு இருக்கும்!
  
  ஆரூரான் கோயிலுக்கு ராஜேந்திரனும் பரவை நாச்சியாரும் கி.பி.1030 -யில் ஆரூர் வீதியில்  தேர்பவனி வந்து, இறைவனை தரிசித்தனர். இவர்கள் நின்று வணங்கிய  இடத்தை  (புனித இடமாக( ?)  கருதவும்} ஞாபகச் சின்னமாக   ஒரு குத்து விளக்கு ஏற்றியுள்ளனர்! 
    
   "உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியார் பரவை நங்கையும் நிற்குமிடத் தெறியும்  குத்து விளக்கொன்றும்" என்று இக்கோயிலில் உள்ள ராஜேந்திரசோழனின்  கல்வெட்டு அதனைத் தெரிவிக்கிறது! 

     அதாவது நக்கன்  பரவை நாச்சியாருக்கு ராஜேந்திர சோழன்  பட்டத்து ராணிக்கும் கொடுக்காத சிறப்பைக் கொடுத்து  கொண்டாடி இருக்கிறான்! கூடிக் கலந்து,கலவி செய்து வந்துள்ளான் என்பதை  இதன்மூலம்  நாமும் புரிந்துகொள்ள முடிகிறது!

      நக்கன் பரவை மீது இருந்த  காதல் மயக்கத்தால்,   ஒரு ஊருக்கு "பரவை புரம்" என்று  பெயரிட்டு  அங்கு  "பரவைஈச்வரம் "என்ற  கோயிலையும் ராஜேந்திரன்  கட்டியுள்ளான்  என்பதில்  இருந்தே,  அனுக்கியர் நக்கன் பரவையின்  மீது,   எந்த அளவு ராஜேந்திரன்  மையல்  கொண்டு இருந்தான்  என்பதனை  நாம் அறிந்து கொள்ளலாம்! 

       "பிறன் மனை  விழையாமை"  "கள்வத்தால் கள்வோம் எனல் " போன்ற திருவள்ளுவரின்  அறநெறியை,உயர் நெறியை  ராஜேந்திரனுக்கு   பிராமணர்கள்  போதிக்கவில்லை!  கோயில்கள் பிராமணர்களின்  ஆதிக்க இடங்கள் என்பதால்,"  எப்படியோ, தங்களது ஆதிக்கமும் செல்வாக்கும்  வளர்ந்தால் போதும்" என்ற நினைப்புடன்    ராஜேந்திரனின்  தவறான  செயலை கண்டிக்காமல்,தடுத்து நிறுத்தாமல்,அங்கீகரித்தும்,   அனுமதித்தும் வந்துள்ளனர்!
    
       தங்களது ஆதிக்கத்துக்கு  உதவிய  பெண்ணாக  பரவை நாச்சியார்  இருந்ததால், திருவாரூர் கோயிலில் இரண்டாம் பிரகாரம்  வடமேற்கு மூலையில் உள்ள "ஆனந்தேசம்"  என்னும் கோவில் மாடத்தில் " பரவை நாச்சியாரும் ராஜேந்திர சோழனும் உள்ள கற்சிலை",  கோவில் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது! 

      கண்டுபிடித்தவர்,  சோழர்களின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்த "முனைவர் குடவாயில் பாலசுபிரமணியன் "அவர்கள்! இவரால் கண்டுபிடிக்கப்பட்ட  ராஜேந்திரனின் படிமத்தைத் தவிர , ராஜேந்திரனின் உருவச் சிலை  ஒன்றுகூட  இன்று தமிழகத்தில் இல்லை!


        சரி.பரவை நாச்சியார் என்ற ஆடல்மகள், பணிப்பெண்,ராஜேந்திர சோழனுக்கு  அனுக்கியராக, காதலியாக  இருந்தார்!

     அவர்க்கு  சிலைவைத்து,சிறப்பு செய்து, தெய்வமாகியது  யார் தெரியுமா? ராஜேந்திர சோழனின்  மகன்தான்! அவனது பெயர், "விஜய ராஜேந்திர தேவர்" என்னும் "முதலாம் ராஜராஜன்"என்பதாகும்! 

      தனது தாயாருடன்  சேர்த்தோ, அல்லது தனியாகவோ, தனது தந்தைக்கு  சிலைவைத்து சிறப்பு செய்யாத  முதலாம் ராஜராஜன்,தந்தையின் காதலியான, " பரவை நாச்சியாருடன்  சேர்த்து,தந்தை ராஜேந்திர சோழனுக்கு   சிலைவைத்து,நிலங்கள் அளித்து வழிபட்டான்"  என்ற செய்தியை  ஆரூர் கோவிலில் உள்ள கல்வெட்டே தெரிவிக்கிறது! 

       பிராமணர்களின் ஆதிக்கமும் அனுசரணையும் இல்லாவிட்டால்  இப்படிஎல்லீம்  செய்ய முடியுமா? நடக்கமுடியுமா?


    முதலாம் ராஜராஜனுக்கும்  ஒரு அனுக்கியர் இருந்தார்!  "அதாங்க, 'காதல் பைங்கிளி', 'காதல் கள்ளி'  ஒருத்தி  இருந்தார்! 

          அவரது பெயர்,"பல்லவன் பட்டாலி  நங்கை என்பதாகும். 
அவரும் அற உள்ளமும், பக்திப் பெருக்கும் உள்ளவராம்! அவரது வேண்டுகோளுக்காகவும்  ராஜேந்திர சோழனின் மகனும்  வழித் தொன்றலுமான, விஜய ராஜேந்திர தேவர் என்னும் முதலாம் ராஜராஜன், எறத்தாழ ஒரு லட்சம்  செம்பொன் கொண்டு,  ஒருகோவிலை  பொன் தகடுகளால்   போர்த்தி இருக்கிறான்! 

          யாருக்காக? இதுவெல்லாம் யாருக்காக? "காதலுக்காக!" காதல்வழி கோவிலுக்காக, கோவில்  வழி பிராமணர்களுக்காக,பிராமணர்களின்  இன மேன்மை,ஆதிக்கம், சுக போகத்துக்காக!   என்று சொல்லலாமா?  
   
     சரி, இவைகள் எல்லாம் அரசனின் கூத்துகள்! ஆட்சியாளர்களின்  திருவிளையாடல்கள்!!
          பிராமணர்கள் ஆதிக்கம் பெறுகிறார்கள்! மக்கள் எப்படி இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு,கண்டும் காணாமல், சகித்துக் கொண்டா  இருந்தார்கள்?

             இல்லை! பொங்கிப் புழுங்கி கிடந்தார்கள்!நடப்பவைகளைப் பார்த்து,  ஒருகட்டத்தில்  தாளமுடியாமல்,  பயங்கரமாக எதிர்க்கத் தொடங்கினார்கள்! அப்படி எதிர்த்த போது,தமிழகத்தில் கோவில்கள் கூட இடிக்கப்பட்டன!  கோவில்களை மையமாக வைத்தே  போராடினார்கள்! எதிர்ப்பு தெரிவித்தார்கள் ! இதனால், மக்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் இடையில் நடந்த இந்த போராட்டத்தின்  விளைவாக, தெருக்களில்  ரத்த ஆறு ஓடியதாக  சரித்திரத்தில் குறித்து வைத்துள்ளார்கள்! 

      அந்த மக்கள் போராட்டமே,  வரலாற்றில் "இடங்கை,வலங்கைப் போராக" சொல்லப்பட்டு உள்ளது! 
 
   அடுத்து அதனைப் பாப்போம்!
(   படித்துறை கணேஷ் என்று நினைவு..இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளதாக சொல்லுகிறீர்கள்! தமிழர்கள்,நம் முன்னோர்கள்  எல்லோரும்  முட்டாள்களாகவா இருந்தார்கள் ? என்று கேட்டார். அவர் கேள்விக்கு பதிலும் அடுத்த பதிவுதான்! )

 

Comments

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?