பிராமணர்களின் நலனில் ராஜேந்திர சோழனின்!

       ராஜராஜ  சோழன்  உயிருடன்  உள்ளபோதே  ராஜேந்திர சோழன் கி.பி.1012 -யில் அரசனாகி உள்ளன்! அவன்  அரசனாகஆவதற்கு  பிராமணர்களின்  பங்களிப்பும்,உதவியும்  இருந்துள்ளது எனபது வரலாற்றில்  இருந்து அறியும்வகையில்  சான்றுகள் உள்ளன.
      குந்தவை நாச்சியார் மதம் மாறிய பின்பு, பிராமணர் தங்களது நலனைக் காக்க  ராஜராஜன்  உதவ மாட்டான் என்பதை அறிந்து, ராஜராஜனை அரச பதவியில் இருந்து ஒதுக்கி,அவன் மகன் ராஜேந்திர சோழனை  அரசனாக்கி உள்ளார்கள்!  ராஜராஜனும் அவனது மனைவி திரிபுவன மாதேவியும் "ஹிரணிய கர்ப்பம்" புகுந்த செயலும்  அதன் காரணமாக  நடந்த செயலாகவே  விளங்குகிறது!

          ராஜேந்திர சோழன் அரசனான பிறகு, பிராமணர்களுக்கு  அவனது தாயாரான  "திரிபுவன மாதேவி" பெயரில்  சதுர்வேதிமங்கலத்தை  உண்டாக்கி,   ஐம்பத்தொரு   கிராமங்களையும்  அதற்கு  உரிய நிலங்களையும் இறையிலி நிலங்களாக்கி,( இறையிலி நிலம்-அரசுக்கு எந்த வரியும்  கொடுக்காமல்  அனுபவிக்கும் நிலங்கள்) 1080 -பிராமணர்களுக்கு தானமாக  கொடுத்துள்ளான்! 

      இந்த நிகழ்ச்சியை  கரந்தைச் செப்பேடுகளின்  மன்னர் மரபுப் புகழ்ச்சி( பிரசஸ்தி )செய்யுள் 67 ,68 -ஆகியவை கூறுகிறது!
       மதுராந்தகன் (ராஜேந்திரன்),"தனது தாயின் பெயருள்ள அக்ரகாரத்தை அய்ம்பதொரு கிராமங்களோடு  கூடினதாகச் செய்தான்" 
       மதுராந்தகன் (ராஜேந்திரன்),"நாளும் விழாக்கள் நிறைந்த தனது நாட்டில்,நிலைத்த செல்வம் படைத்த பல ஆசிரமங்களை அந்தண சிரேஷ்டர்களுக்கு அன்புடன் கொடுத்தான் " என்பதில்  இருந்து   பிராமணர்களின் நலனில் ராஜேந்திர சோழனின் பங்களிப்பு,அக்கறை  குறித்து நாம் அறிந்துகொள்ள  முடிகிறது! 
       " கரந்தைச் செப்பேடுகளின் பத்தாவது ஏடு, நித்தவினோத வளநாட்டு வீரசோழ வளநாட்டு திரிபுவனமதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும்  பெயரால், யாண்டு எட்டாவது முதல் பிரமதேய இறையிலி செய்து" என்று கூறுவதில் இருந்து, அந்தபகுதி சோழநாட்டின் எந்தபகுதி என்பதும்  எப்போது கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்கிறது!
      அதாவது,ராஜராஜன் இறந்து ஐந்து ஆண்டுகளிலேயே  ராஜேந்திர சோழன் பிராமணர்களின் ஆதரவாளனாக முழுமையாக ஆகிவிட்டான் என்பதை  உணர்ந்து கொள்ளலாம்! 

      இவ்வாறு ராஜேந்திர சோழன் ஆனதால்,அல்லது ஆக்கப்பட்டதால்  பரம்பரையாக தனது முன்னோர்கள் தலைநகராக  ஆண்டுவந்த தஞ்சையை கைவிட்டு, தனது பத்தாவது ஆட்சியாண்டு முதல்,  இன்று பெரம்பலூர் மாவட்டம்,உடையார்குடி  வட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை புதிதாக உருவாக்கி, அங்கிருந்து ஆட்சிசெய்து  உள்ளான்!

தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு  மாற்றியதன் மூலம் விசயாலய சோழன் தொடக்கி முதலாம்  ஆதித்தன், முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன்,சுந்தர சோழன்,அதித்ய கரிகாலன், மதுராந்தக உத்தம சோழன், ராஜராஜ சோழன் என்று  சோழர்களின் தலைநகராக 176 -ஆண்டுகள்  வடக்கே துங்கபத்திரை ஆறு,வடகிழக்கே ஒரிசா மாநிலத்து கலிங்கம் , கிழக்கே வங்கக்கடல், தெற்கே பன்னீராயிரம் என்னும் லட்சத் தீவு, மாலத் தீவு வரை விரிந்து பரவியிருந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கிய தஞ்சையின் தனிச்சிறப்பு குன்றியது!,
       அதன் விளைவு, பொன்னால் போர்த்தப்பட்ட பொற்கிரி, தட்சிண மேரு,பெரிய கோயில்  என்ற " ராஜராஜெச்வரம்"  கோயிலின்  பொன்னும்,கருவூலமும், ஏராளமான செல்வங்களும்  பொக்கிஷங்களும்  பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்கு  வந்துள்ளது!

        பாதுகாப்பற்ற  நிலையைத் தஞ்சை அடைந்ததால், பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1218 -யில் படையெடுத்து வந்து,தஞ்சையை முழுமையாக அழிக்க முடிந்தது!  சோழனின் அரண்மனை தரைமட்டமாக இடிக்கப்பட்டது!தஞ்சைக் கோயிலை சேதப்படுத்தவும் முடிந்தது!

        மாலிக்காபூர் வருவதற்கு(முன்பே,தஞ்சை தனது அதிகாரத்தை பிராமணர்களிடம் இழந்து,பாண்டியனிடம் இழந்து விட்டிருந்தது! தஞ்சைத்   தரணிபிராமண ஆதிக்கத்தால் பஞ்சை பூமி ஆகிவிட்டது!

     ஆனால், இவைகள்  யாவும் வரலாற்றில் விரித்து, கூறத்தான் யாரும் முன்வரவில்லை! காரணம்,பிராமணீயத்தின் திருவிளையாடல்கள், குறித்து  நமக்கு  தெரிந்துவிடும் வாய்ப்பு உள்ளதாலும், அப்படி தெரிய நேரிட்டால்   முஸ்லிம்களை  ஆக்கிரமிப்பாளர்கள்,  இந்துமத விரோதிகள், என்று பிராமண  ஆதிக்கத்தை விரும்புவோர்களால்  முஸ்லிம்களை   காட்ட முடியாது என்பதாலும்தான்!!


      பிராமணீயம் என்ற பாசிசத்தின் செயல்திட்டங்களில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளும்  தந்திரங்களில் ஒன்று,பெண்களை  கருவிகளாக பலவழிகளில் பயன்படுத்தி வருவதாகும்! 

    " கி.பி.1012 -யில் நன்றி கேட்ட பார்ப்பன வேதியக் கயவர், தமக்கு முதன்முதலில்  மாபெரும் கோயில் கட்டிக் கொடுத்து உதவிய முதலாம் ராஜராஜ சோழன் உயிரோடு இருக்கும்போதே,அவனை அரியணைவிட்டுக் கீழே இறக்கிவிட்டு, அவன் மகனை  ஆரிய மாயையில் மூழ்கி மயக்கி, முதலாம் ராஜேந்திர சோழன் என்று புகழ்ந்து கூறி அரியணை ஏற்றி ஆசீர்வதித்துப் பகட்டான பட்டாபிஷேகம்  செய்துவைத்து ,தங்களது பணப்பெட்டிகளையும்  நிரப்ப முற்பட்டனர்! "  என்று எஸ்.டி.விவேகி என்பவர் தனது "வேதமும் விஞ்ஞானமும்" என்ற நூலில்( பக்கம் 104 யில்) கூறுகிறார்!

    "ஆரிய மாயையில் மூழ்கி,மயக்கி"  என்று குறிப்பிடுவது  பெண்களை ராஜேந்திரனுடன் பழகவிட்டு,அவர்களின் மூலம் தங்களது நோக்கத்தை பிராமணர்கள்   நிறைவேற்றி
வருவதை என்று  அறியலாம்!

         பிராமணர்களின் நோக்கத்தை நிறைவேற்றும்  ஆரிய மாயையாக,   இருந்த  பரவை நாச்சியார் என்பவளின் தூண்டுதலால், விருப்பத்தின் பேரிலே... கட்டப்பட்டதுதான்,  திருவாரூர், "தியாக(?)ஈஸ்வரர்" கோயிலாகும்!

        இந்த கோயிலில் பட்டத்து  அரசியைப் போல, ராஜேந்திர  சோழன் பரவை நாச்சியாருடன் சென்று ஒன்றாக வழிபட்டனர்! 

       அதுமட்டுமின்றி, அவர்கள்  நின்று வழிபட்ட இடத்தில்  விளக்கு வைத்து  வழிபட,நிவந்தம் அளித்து,ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது!

       அதாவது, கள்ள உறவு வைத்துள்ள பெண்ணின் கைப்பாவையாக  சில பெரிய மனிதர்கள் செயல் பட்டு வருகிறார்களே?!  அத்தகைய   சூழ்நிலைக்கு உதாரணமாக  பரவை நாச்சியார்,ராஜேந்திர சோழனின் உறவை  சொல்லலாம்! 

     அதிகாரத்தைத் தக்கவைக்கவும்,தொடர்ந்து அதிகார மையமாக பிராமணர்கள்  இருந்துவரவும் விரும்பி, பிராமணீயம்   செய்துவந்த  சேவைகளில் இதுவும் ஒன்று!  எஸ் .டி விவேகி என்பவர்   தனது நூலில்   குறிப்பிட்டு   உள்ள   ஆரிய மாயை  என்பதும்   இதுதான்!
 

    

Comments

 1. arputhamaana paetthal .
  better you consult a psychiatrist.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கட்டிவைத்து இருந்த மனக்கோட்டை தகர்வதும்,உங்கள் நம்பிக்கைகள் பொய்யாவதும் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை உங்கள் கருத்துரை மூலம் அறிகிறேன்! என்ன செய்வது பிரதர்? உண்மைகள் தாமதமாகதானே வெளிவருகிறது!

   Delete
 2. /// பிராமணீயம் என்ற பாசிசத்தின் செயல்திட்டங்களில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளும் தந்திரங்களில் ஒன்று,பெண்களை கருவிகளாக பலவழிகளில் பயன்படுத்தி வருவதாகும்! ///

  ஆக அந்தக்காலத்திலேயே -------- பெண்களை கூட்டிகொடுத்துள்ளார்கள் அப்படிதானே! அட என்ன சேவகம் பாருங்களேன். யோசிக்கவேண்டிய விஷயம் . உள்ள வரலாற்றை நீங்க சொன்னா டாக்டரை பார்கசொல்லுது ஒரு கூட்டம் பின்ன எப்படி தமிழன் முழிப்பன்.

  நன்றி தொடரட்டும் தங்களது பணி.

  மகாராசா

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகராசா ! ராஜாதி ராஜாக்களை எல்லாம் ஆதிக்க சக்திகள் ஆரிய மாயையில் மூழ்க வைத்த, "பிராமணீயம்" குறித்த எனது பதிவுக்கு... வருகை தந்து, கருத்துரை இட்டதற்கு நன்றி!

   Delete
 3. திரு ராஜன்! உங்களின் இந்த வலைப்பதிவு சில நாட்களுக்கு முன் தான் பார்த்தேன். வியப்பூட்டும் வகையில் சிறப்பாக உள்ளது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மூலமாக கவரப்பட்ட நான், ஓர் அறிவியலாளனாக தஞ்சாவூர் பெரிய கோயிலின், மேல் தளத்தை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தொல்லியல் துறையின் அனுமதியோடு பார்த்த அனுபவங்களை இங்கு சொல்ல வேண்டியுள்ளது. கோபுரத்தை தாங்கி நிற்கும் குறுகிய இடைவெளிகொண்ட இரண்டு சுவர்களுக்கு இடையே பரத நாட்டியத்தின் பல்வேறு அபிநயங்கள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் வருத்தமூட்டக் கூடிய வகையில் கடைசியாக செதுக்கப்பட்ட அபினயங்கள் முடிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. கோயிலைப் பற்றி தஞ்சையில் இன்றும் பல செவி வழி செய்திகள் நிலவுகின்றதாகவும், அதில் ஒன்று ராஜராஜன் தன் கடைசி காலத்தில் மிகுந்த சிரமப்பட்டதாகவும், பெரிய கோயிலின் மேற்குப்புற இரண்டாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு செவி வழி செய்தி நிலவுவதாகவும் அறிந்தேன். அங்கிருந்த பல அற்புதமான ஓவியங்கள் பூசாரிகள் பலப்பல ஆண்டுகளாக காட்டிய கற்பூர,எண்ணெய் புகைகளால் அழிந்து போனதால் பல வரலாறுகள் மறைந்து போனதாகவும் அழைத்து சென்ற அதிகாரி சொன்னார். இப்போது உங்கள் வலைப்பூவை படிக்கும் வழி பல தகவல்கள் கிடைக்கின்றது. அமரர் கல்கி மிகத் திறமையாக ஆதித்த கரிகாலனை வில்லன் போல் சித்தரித்து கதை விட்டதையும், கொலையாளி மந்திரவாதி பரமேசுவரனை ஒரு கோமாளி போல் சித்தரித்தது இப்போது புரிகிறது. மேலும் அவர் (அமரர் கல்கி) தன் மகனுக்குக் (இப்போதைய கல்கி இதழின் ஆசிரியர் என நினைக்கிறேன்) தன் கதா நாயகனான பொன்னியின் செல்வன் அருள்மொழியின் பெயரை வைக்காமல் ராஜேந்திரன் என்று வைத்ததற்கான காரணமும் இப்போது புரிகிறது! சிறப்பான பணி! உங்களுக்கு வரும் எதிர்ப்புகளே சிறந்த பரிசுகள் எனக் கருதி தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துக்கள்! Dr.திருமுகம்,மலேசியா

  ReplyDelete
  Replies
  1. விரிவான் தங்கள் கருத்துரைக்கும் ,வருகைக்கும் நன்றி அய்யா! தொடர்ந்து வாருங்கள்! வரலாற்றின் இன்னும் பல இருட்டுப் பக்கங்களை அறியலாம்!

   Delete
  2. Brahmins are like jews , you dont worry continue your shit work,

   They will always come up fast in all walks of life.

   Delete
 4. ///Brahmins are like jews , you dont worry continue your shit work,

  They will always come up fast in all walks of life.///

  Brahmins are not like Jews, but they are one of the tribe of Jews.
  Jews occupy Palestine - Brahmins occupy India.
  They will always come up by walking on other peoples head/life.

  ReplyDelete
  Replies
  1. Mr. Rajan, send me your email ID. Iwant to share some photo about rajarjeshwaram.

   Delete
  2. thank you brother! my email.id: www.aswinrajan6@gmail.com

   Delete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?