பிராமணர்கள் ஆதிக்கத்தை தடுத்த ராஜராஜ சோழன்!

      உத்தம சோழனால்  ஆதரிக்கப்பட்ட  பிராமணர்களின்  ஆதிக்கத்தை  ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது,தடுக்கும்  செயல்களில் ஈடுபட்டு  வந்துள்ளான்!

         தனது அண்ணன்  ஆதித்ய கரிகாலனைக்  கொன்றவர்களை  கண்டுபிடிக்காமலும்,கண்டுபிடித்து  தண்டிக்காமலும்,கொலையாளிகளை நாட்டிற்கு  அறிவிக்காமலும்  இருந்த நிலையை உணர்ந்து, ஆட்சிக்குவந்த  இருஆண்டுகளில்  கண்டுபிடித்து, அவர்களது  சொத்துக்களைப் பறிமுதல்  செய்து, "திருவநேந்தேசுவரத்து" கோயிலுக்கு  ஒப்படைக்கும்  பணியைச் செய்தான்!

       இந்த பணியை ராஜராஜனின் ஆணைக்கு  இணங்கி, " கோட்டையூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும்,புள்ளமமங்கலத்து சந்திர சேகரனும் செய்தனர்"  என்று( Epigrapic india volume XXI. No.27) தெரிவிக்கிறது! 

        ராஜராஜனின்  மெயகீர்த்தியாக (புகழ்ந்துரைக்கும் ) பாடல் ராஜராஜனின் வெற்றிகளைப் பற்றி கூறுகிறது!
       அதில் இடம் பெற்று உள்ள"  காந்தளூர் சாலை கலமருத்தருளிய"   எனபது  பிராமணர்களின் பொறுப்பில் இயங்கிவந்த  இடம் எனவும், அங்கு பிராமணர்களுக்கு  ஆட்சி,அதிகாரம் குறித்த பயிற்சி( இன்றைய ஐஏஎஸ்,ஐபிஎஸ்  போல)அளிக்கப்பட  கல்விசாலை எனவும், தனது ஆட்சியில் பிராமணர்கள்  தன்னிச்சையாக  இதுபோன்ற பள்ளியை நடத்துவதை தடுக்கவும்,பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கவும்தான்  காந்தளூர் சாலையின் மீது  படைஎடுத்தான்.  இந்த இடம் சேர நாட்டில் இருந்தது! என்றும்  அதனாலேயே,  ராஜராஜனின் மெய்கீர்த்தி  அதனைப் போர் என்று கூறாமல்  "காந்தளூர் சாலை களம் அறுத்து அருளிய" என்று  கூறப்பட்டு உள்ளது என்று தனது  சோழர்கள் சமயம் என்ற நூலில்  டாக்டர் .ஆ.பத்மாவதி  அவர்கள்  குறிபிடுகிறார்.!

        பிராமணர்களின்  ஆதிக்கத்தைத்  தடுக்க,  ராஜராஜன்  அவர்கள் அறியாதபடி பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்தான்.ஆதலால்  ராஜராஜனுக்கு  அவனது இறுதிகாலத்தில் அந்தணர்களின் ஆதரவு  குறைந்தது  என்று  தனது சோழர்கள் நூலில்  கே.எ.நீலகண்ட சாஸ்திரியும்  குறிபிடுகிறார்!
          ராஜராஜனது  ஆட்சியில்  மக்களின் நலனை முன்னிட்டும், அந்தணர்களின்  ஆதிக்கத்தைக் குறைக்கவும், நிர்வாகத்தை  எந்த சிக்கலும்  இன்றி  நடத்தவும்  செய்த  செயல்களில்  ஒன்றாகவே,குட ஓலைத் தேர்தலும்  உள்ளது!

         இந்த குடவோலைத்  தேர்தல் மூலம்  தனது  ஆட்சிப்பகுதியை  நேரடியாக  ராஜராஜனால்  நிர்வாகம்  செய்ய முடிந்தது!
   குடவோலைத் தேர்தலை நியாயமாக நடத்தவும், நியாயமாக நடப்பதைக் கண்காணிக்கவும்  தனது நம்பிக்கைக்கும்,  மரியாதைக்கும்  உரிய  சகோதரி  குந்தவை நாச்சியாரை  நியமித்து இருந்ததை  திருமழபாடி  கோயில் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.!
 
         குட ஓலைத்  தேர்தல் மூலம்  தேர்வுபெற்றவர்களும், அரசு அலுவலர்களும்  கோயிலுக்கு  வரும்  வருவாயை  கண்காணித்தும், தணிக்கை செய்தும்  வந்ததன் மூலம்  பிராமணர்கள்  கோயிலின் ஏகபோக அதிகாரத்தை  பெறுவது  தடுக்கப்பட்டது! அதுமட்டுமின்றி, தவறு செய்யும் பிராமணர்களுக்கு  தண்டனையும்,அபராதமும் வழங்கப்பட்டதையும்  திருப்பனந்தாளில் உள்ள ஒரு  கல்வெட்டு  அறிவிப்பதில் இருந்தும்  அறிகிறோம்!


     திருப்பனந்தாளில் உள்ள அக்கல்வெட்டு,ராஜராஜனின் அரசியல் அதிகாரிகள்  கோயில் பண்டாரத்தை  கருவூலத்தை  தணிக்கைச் செய்தபோது, கோயில் அர்ச்சகர்கள் (பிராமணர்கள்) மூன்றுமுறை நகைகளையும் பரிகலங்களையும் திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசன் முன்னினையில் அவர்கள் விசாரிக்கப்பட்டு ,அர்ச்சகர்களுக்கு  ஐநூற்று நாற்பது காசு அபராதம் விதிக்கப்பட்டதை அக்கல்வெட்டு  தெரிவிக்கிறது!
   
    மேற்கண்ட கல்வெட்டு மூலம் ,பிராமணர்கள்  கோயிலில் உள்ள  பொன்,முதலானவற்றை  தன்னிஷ்டம் போல எடுத்து,(திருடி) பயன்படுத்தியும் வந்தனர்  எனபது தெரியவருகிறது! 


      கோவிந்த புத்தூரில் உள்ள கோயிலுக்கு விஜய மங்கலத்தை  சேர்ந்த  செத்தப்பெரரசன் வெண்ணைய ராம விட்டன் என்ற அதிகாரி, கோயில் பணியாளர்களிடம் அதிகாரம்  செலுத்தும் உரிமையைப் பெற்றிருந்தான்  எனவும் அவன் தனது அதிகாரத்துக்கு  கீழ்படிய மறுத்த பிராமணர்களுக்கு இருபத்தைந்து பொற்காசு  அபராதம் விதிக்கும் உரிமையுடையவனாக  இருந்தான் எனவும் ராஜேந்திரனின் எலாம் ஆட்சியாண்டு கல்வெட்டு அறிவிக்கிறது!


        ராஜேந்திரனின்  ஏழாம் ஆட்சியாண்டு எனபது,  ராஜராஜனின் இறப்புக்குப் பின்வரும் (கி.பி. 1017 ) நாலாம் ஆட்சி  ஆண்டாகும்! 

       ராஜராஜன் காலத்தில் அதிகாரிகள் பெற்ற உரிமைக்கு  கீழ்படிய பிராமணர்கள் மறுத்து உள்ளது  இதன்மூலம் தெரிய வருகிறது! 
         மேலும் ஆட்சியதிகாரத்தை  தங்கள்  விருப்பம்போல  பயன்படுத்தும் குண இயல்பு  உள்ள   பிராமணர்கள், தங்களை  பிறர் கட்டுபடுத்தி,கீழ்படிய  செய்வதை விரும்புவதில்லை!   என்பதையும் உணர்த்துகிறது !


       இவ்வாறு அந்தணர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க,  குட ஓலைத் தேர்தல், கோவில்களைக் கண்காணித்து, தவறுகள் செய்தது  தெரியவந்தால்  தண்டனை,அபராதம்  விதிப்பது  போன்ற செயல்களில்  ராஜராஜன்  ஈடுபட்டு வந்துள்ளது  அறியவருகிறது! 

    பிராமணர்கள்  அதனாலேயே    ராஜராஜன்  உயிருடன்  உள்ளபோதே, அவனது மகனான  மதுராந்தகன்  என்ற  பெயருடைய  ராஜேந்திரனை  அரசனாக்கி, அவனை  தங்களது ஆதரவாளனாக   ஆகியுள்ளனர்!

      உத்தம சோழன் போலவே,ராஜேந்திரனும்   பிராமணர்களின்  ஆதரவாளனாக ஆட்சி செய்து வந்ததால்,  பிராமணீயம்  என்ற பாசிசம்  தமிழகத்தை எளிதில் தன்வசப்படுத்த  முனைந்து, பல்வேறு  செயல்களை  செய்துவந்துள்ளது!


      பிராமணர்களின்  ஆதரவாளனாக தனது  தாயாரின் பெயரான  திரிபுவன மாதவி என்ற பெயரில்  சதுர்வேதி மங்கலமாக்கி, 1080 -   பிராமணர்களுக்கு 51 -ஊர்களுடன் சில புறநிலப் பகுதிகளையும்   சேர்த்து,   காவிரியின்  சுவையான நீர்பெருக்குவிளைநிலங்களை பிரமதேயமாக  கொடுத்து  தனது பிராமண   ஆதரவைத் தெரிவித்து உள்ளான்! இவனது இந்த  செயலை கரந்தைச் செப்பேடு  விரிவாக  தெரிவிக்கிறது!

  அடுத்தும் பார்க்கலாம்!
  

Comments

 1. Bravo Hosur Rajan! We need more people like you to enlighten Tamil people

  ReplyDelete
  Replies
  1. Very useful article. But, please avoid referring to the Brahmins as Andhanar.

   People who became ultra rich in Medieval Europe took over the word 'noble' to identify themselves personally and called themselves "Nobles". Soon they called the others 'Commoners'. Likewise, the Brahmins took over the already existing Tamil words like 'Andhanar', 'Iyer', etc., to identify themselves. Even in the era of Tiruvalluvar the word 'Andhanar' denoted only the virtuous saints and Siththars and not the 'Brahmins'. Subverting the history is the pastime of the Brahmins but, fortunately, there are adequate evidences, still available to call their bluff.

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?