கல்வெட்டுகளில் அறியாதார் செயலும் அறிந்தாரின் அலட்சியமும்!

 கல்வெட்டுகள் அழிவுக்கு காரணமாக  அத்துறையில் உள்ளவர்கள் சொல்லும் குற்றசாட்டு,கல்வெட்டுகள்  கோயில் பணிகளை செய்யும்போது, பணியாளர்களின் தவறாலும்,கவனக் குறைவாலும் சிதைந்தும்,சேதமடைந்தும் விடுகின்றன என்பதாகும்!
    இவ்வாறு சேதமடைந்து விடுவதை  கல்வெட்டு ஆய்வாளர்கள்  அறியாதார் கை பட்டு கல்வெட்டுகள் சேதமடைந்ததாக  குறிபிடுகின்றனர்!
     இவ்வாறு அவர்கள் சொல்லுவதில்  உண்மை இல்லை.  அவ்வாறு சொல்வது  உள்நோக்கமுடன் சொல்வதாகும்! தங்களது கடமையை சரியாக செய்யவில்லை என்று அவர்களே தரும் ஒப்புதல் வாக்குமூலமாகவும்,தமிழர்களின்  வரலாற்றில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுவதாகவும்  கருதலாம்!   

         கல்வெட்டு துறை,தொல்லியல் துறைகளில் ஆய்வுக்கும், பராமரிப்புக்கும் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது! அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு, முறையாக தங்களின் பணிகளை செய்யாதவர்களே, தமிழின வரலாற்றில் அக்கறை  இல்லாதவர்களே, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே..  அதிகமாக மேற்கண்ட துறைகளை ஆக்கிரமித்துக்கொண்டு, உள்ளதால் ஏற்பட்ட நிலையிது என்று  தோன்றுகிறது!

      அப்படி  உள்ளவர்களின் அலட்சியத்தால்,அவர்களின் தனித்த விருப்பத்தால், "கல்வெட்டுகள் அழிவு" வேண்டுமென்றே, கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டு  வருகிறது!   எனபது நமக்கு   அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்! 

        அதாவது, "அறியாதவர் கைபட்டு", கல்வெட்டுகள் சிதைவுக்கு ஆளானாலும்  அதனைக் கண்டுகொள்ளாமலும், கண்டும் காணாமலும் இருந்துவரும்  மேற்கண்ட துறையினரின்  அலட்சியத்தால், தமிழர்களின் உண்மையான வரலாற்றைக் கூறும் கல்வெட்டுகள் சிதைவுக்கு ஆளாகி உள்ளன   எனலாம்!


     இதனை வேறு விதமாக கூறவேண்டும் என்றால்," கல்வெட்டுகள் பற்றி நன்கு அறிந்தாரின் கை பட்டே"  கல்வெட்டுகள் சிதைவுக்கு ஆளாகி உள்ளன" என்று கூறலாம்!

      தமிழர்களின் அறிவும்,செயல்திறனும், வருமுன் காக்கும் செயலும் பற்றி,இன்று தமிழர்களே அறிந்துகொள்ளும்  செயலாக,சான்றாக  தமிழக மன்னர்கள் காலத்தில் ஆக்கப்பட்ட  கல்வெட்டுகளை  பாதுகாக்க  அவர்கள் கடைப்பிடித்து வந்த  முறைகளைச் சொல்லலாம்! 

      கல்வெட்டுகளை  பின்வரும் சந்ததியினரும் அறிந்துகொண்டு, தங்களது விருப்பத்தின் பேரில் ஆட்சியை திறம்பட நடத்தி வரவேண்டும் என்ற எண்ணத்தில் கல்வெட்டுகளை  வெட்டி வைத்த,நமது முன்னோர்களான  ஆட்சியாளர்களும்,மன்னர்களும் அவ்வாறு வெட்டி வைத்தக் கல்வெட்டுகள்,     கோயில்கள் அழிவு படும்போதோ, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போதோ, காலமாற்றத்தால்  சேதமடையும்  சூழல்  உள்ளதையும்  உணர்ந்து இருந்தார்கள்!  

         அவ்வாறு உணர்ந்திருந்த  அவர்கள்,  பிற்காலத்தில்  கல்வெட்டுகள் சேதமேற்படும்  நிலை ஏற்பட்டாலும் கூடகல்வெட்டுகள் குறித்து பின்வரும்  சந்ததியினர்  தெரிந்துகொள்ளவேண்டும்  என்ற நோக்கத்தில் ஒரு    ஏற்பாட்டையும்   செய்து வைத்து இருந்தார்கள்!  

     கல்வெட்டுகள்  சேதமடைந்தாலும் அக்கல்வெட்டுகளில்   உள்ளதை   அப்படியே   பிறிதொரு கல்வெட்டில்   எழுதிவைத்து( படியெடுத்து)  வரவேண்டும் என்றும்  அவ்வாறு   பழைய கல்வெட்டை புதிதாக  எழுதும்போது மறக்காமல் "இதுவொரு பழங்கற்படி"  என்று  அக்கல்வெட்டிலேயே  எழுதி தெரிவிக்கவும்   ஏற்பாடு செய்து  உள்ளார்கள்! 

  "இது பழங்கற்படி, இந்த ஸ்ரீ விமானத்திலே எறவெட்டினமையின் முன்னிவாசகம் வெட்டிக் கிடந்ததனைக்கல்லால் உபயோகம் இல்லாமையில் தவிர்ந்தது"(ஆதாரம் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி-10 , கல்-72 )

       கல்வெட்டுகள் அழிவு படும் போது, அவைகள் பின்னமடையும் பொது, கல்வெட்டில் உள்ளதை மறவாமல்,புதிய கல்வெட்டில் ஆக்கிவைத்த தமிழனின் புத்திக்கூர்மையை  பாராட்ட தோன்றும் நமக்கு... இவைகளை அறிந்திருந்தும்," பழங்கற்படி என்ற முறை இருப்பது அறிந்தும்"   அவ்வாறு படிஎடுக்காமல்,கல்வெட்டுகளைப் பாதுகாக்க முன்வராமல்,  உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்லத் தோன்றும்?
    

     கல்வெட்டுகள் அழிவுக்கும், சேதத்துக்கும்  காரணம்  எது? அல்லது என்ன? என்றுதானே  கேட்கத்தோன்றும்!

      தமிழர்களின் உண்மையான வரலாற்றை..,   தமிழர்கள் அறிந்துகொள்வது  எனபது, தங்களது  ஆதிக்கத்துக்கு,இன மேன்மைக்கு, தங்களது நலத்துக்கு  நல்லதல்ல என்ற பாசிச சக்திகளின் எண்ணமே காரணமாகும்! 

    தவிர,வரலாற்றை தங்களது மேன்மைக்காக  திரித்தும், மாற்றியும் எழுதிவரும் நிலைக்கு,  எதிராக  கிடைக்கும் கல்வெட்டுகளால்,   தங்களது கடந்தகால மோசடிகள்,தவறுகள் அம்பலமாகிவிடும்  என்ற எண்ணம்தானே காரணம்?!
  
     கல்வெட்டுகள் அழிவுக்கு  பின்னணியில்  இருந்துவருவது,  எது? அது...  பிராமணீயம்  என்பதுதானே? 

        தமிழர்களின்  இன இழிவுக்கு, இன அழிவுக்கு, நாகரீக வளர்ச்சிக்கு, பொருளாதார முன்னேற்றத்துக்கு,தமிழரினஒற்றுமைக்கு,வாழ்வுக்கு, வரலாறுக்கு,கல்விக்கு,இலக்கியத்துக்கு,ஒழுக்கத்துக்கு,ஏன்? அனைத்துக்கும்   எதிராக உள்ளது பிராமணீயம் என்ற  பாசிசம்தான்!

             பிராமணீயம் என்ற பாசிசத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல், அதனை எதிர்த்து போராடாமல்,பாசிச சக்திகளின்,சாதிகளின்  வீச்சும், வீரியமும் பற்றி எண்ணாமல் உள்ளவரை தமிழர்களின் பெருமையை  தமிழர்களே அறிய முடியாது! அதுமட்டுமல்ல,தமிழர்களின் பெருமையை  அவர்கள் அறியாமல் உள்ளது போல, தமிழர்களின் பெருமையை  தமிழர்களே  அறியாமல்உள்ள நிலையில், தமிழர்களின் பெருமையை 
 பிற இனத்தவரும்,பிற நாட்டவரும் எப்படிஅறிந்துகொள்வார்கள்?!

          வரலாறு இவ்வாறு நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் ஏராளமாகும்!  அவைகளையும் அடுத்து  பார்ப்போம்!!Comments

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?