அழிவுக்கு ஆளான கல்வெட்டுகள் !

       வரலாற்றை பின்வரும் தலைமுறைக்கு சரியாக தெரிவிக்க உதவுவது கல்வெட்டுகள் .அத்தகைய கல்வெட்டுகளில் பலவும் தமிழகத்தில் சிதைவுக்கும் அழிவுக்கும் ஆளாகியுள்ளது!

       கல்வெட்டுகள் சிதைவு,அழிவு போன்றவற்றால்  உண்மையான வரலாற்றை அறிந்துகொள்வது..  அறிதாகப்பட்டு  உள்ளது!  இதன் விளைவாக வரலாற்றை தவறாகவும்,திரித்தும்  கூறும் நிலை ஏற்பட்டு உள்ளது! கல்வெட்டுகள் அழிவுக்கு காரணங்கள்  என்ன? என்று  பார்ப்பதற்கு முன்பு,தமிழகத்தில் அழிவுக்கு ஆளான கல்வெட்டுகள் சிலவற்றை அறிந்துகொள்வோம்!

      காட்டு மன்னார் கோயிலுக்கு (இந்த கோயில் கருவறையில் உள்ள  கல்வெட்டுதான் ஆதித்த கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்கள் யார்,அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பற்றி கூறுகிறது} நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள," மேலக்கடம்பூர்"  என்று அழைக்கப்படும் ஊரில்  "அமிர்தகடேஸ்வரர்  "கோயிலில் படியெடுக்கப்பட்ட  நான்கு கல்வெட்டுகளுக்கு இடையில் ,சில  துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன.!
 
       இந்த துண்டுக் கல்வெட்டில் ஒன்று  உத்தமச் சோழனைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் கல்வெட்டாகும்.! இக்கல்வெட்டு கூறும் செய்தியை அறிந்துகொள்ளக் கூடாது என்றோ,அல்லது அறியமுடியாதபடி ஒருபகுதி கல்வெட்டு துண்டாக்கப்பட்டு  உள்ளது.! (கடம்பூரில் சோழர்களுக்கு ஒரு அரண்மனை இருந்ததாக தெரிகிறது. இங்கேதான் ஆதித்த கரிகால சோழன் படுகொலை செய்யப்பட்டதாக  அமரர் கல்கி.தனது பொன்னியின் செல்வனில் கூறி இருக்கிறார்!)

     கடம்பூருக்கு அருகில் உள்ள செட்டித்தாங்கல் ஊரில் காளியம்மன் கோயிலில் உள்ள வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்ய சோழனைப் பற்றிய கல்வெட்டு அமைந்துள்ளது. ஆகவே,அளிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் முக்கியத்துவத்தை  உணரலாம்!


  அகத்தியான்பள்ளி  அகஸ்தீஸ்வரர்  கோயிலில் 1904 -லில் கல்வெட்டு ஆய்வாளர்கள்  ஆய்வு செய்தபோது,  இருந்த ஐந்து  கல்வெட்டுகள் பின்பு உடைக்கப்பட்டு சிமென்ட் பூசப்பட்டு  அழிக்கப்பட்டு உள்ளன.!தற்போது அந்த கோயிலில் கல்வெட்டுகள் இல்லை!
   திருவாரூர் மாவட்டம், "திருவீழி மிழலை வீழி நாதர் "  கோயிலில் முதலாம் பராந்தகன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் காலம் வரை  101  கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகளில் மன்னர்கள் பெயரை அறிய முடியாதபடி பல கல்வெட்டுகள் உள்ளன.
  
 வடகாடு கோயிலூர் திருவுசாத்தனமுடைய  'நாயனார்" கோயிலில் கி.பி.7 -ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கருவறையில் கல்வெட்டுகள் காணப்படவில்லை. காரணம் பிற்காலத்தில் கருவறை புதுப்பிக்கப்பட்டு,கல்வெட்டுக்கள் அப்புறப்படுத்தப்பட்டு  உள்ளபடியால்,வரலாற்றுத் தொடர்ச்சியை அறிய இயலாத நிலை ஏற்படுத்தப் பட்டு உள்ளது. விக்கிரம சோழன் காலத்தில் இருந்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன  !

       ராஜராஜன் காலத்தில் புதிதாக தனது மனைவி பெயரில் உருவாக்கப்பட்ட ஊர்,  "சோழமாதேவி"  என்ற ஊராகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் இருந்து தெற்க்கே சூரியூர்  செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள ஊராகும்! 

         கிராம சபை கூட்டங்கள்,ஊர்வாரியங்கள் குடவோலைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட,  அரசு சார்ந்த பணியாளர்கள் ஒன்றுகூடி விவாதிக்கவும்,செயலாற்றவும் வேண்டி கட்டப்பட்டு  இருந்த," வீர சோழ விண்ணகரம்"  தற்போது இல்லாமல் அழிந்து விட்டது!

       இந்த கோயிலைச் சேர்ந்த ஆண்சிர்ப்பம் ஒன்றும்,பெண் சிற்பம் ஒன்றும் ஊரின் நடுவில் சாலையில் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,அவைகள் 10 -ஆம் நூற்றாண்டுச் சிற்ப்பங்கள் எனத் தொல்லியல்  துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது! இவ்வூரில் உள்ள "கைலாய உடையார்" கோயிலில் உள்ள ஒரு  கல்வெட்டு,"வீர சோழ விண்ணகரம்" என்ற இடத்திற்கு உணவுக்காக  220 -கலம் நெல் அளக்க முடிவு செய்திருந்ததைக் குறிபிடுகிறது!

       திரிசிராப்பள்ளி மலையில்,  தாயுமானவர் கோயில் அருகில் கல்படுக்கைகள் காணப்படுகின்றன.  இங்குள்ள "சிறா" என்ற பெயருடன் தொடங்கும் கல்வெட்டு, சிதைந்த நிலையில் காணப்படுகிறது! இங்கேதான், முதலாம் மகேந்திர வர்ம பல்லவன், சமணத்தில் இருந்து சைவத்தில் சேர்ந்தது பற்றிய கல்வெட்டு ஆதாரம் கிடைகிறது.! இஸ்லாம், கிருஸ்தவம் முதலிய சமயங்களும் இப்பகுதிக்கு வந்து தங்கித் தளைத்து பற்றிய செய்திகளும் காணபடுகின்றன.! 

     திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலானது "மதுரைக் கொண்டப் பரகேசரிவர்மனாகிய பராந்தகச் சோழனின் தொன்மையான கல்வெட்ட்க்கள் உடைய கோயிலாகும். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பல துண்டுகளாக  சிதறுண்டு,ஆங்காங்கே  பிரகாரத்தில் பதியப்பட்டு உள்ளன. 

          புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு   அருகில் உள்ள  பூலன்குரிசி மலைச்சரிவில்  கண்டெடுக்கப்பட்ட  மூன்று கல்வெட்டுகளில் மிகவும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும்,முழுவதும் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டும் உள்ளது.

        இக்கல்வெட்டுகள்  பிராமணருக்கு வழங்கப்பட்டு இருந்த பிரம்மதேய நிலத்தை அவர்களிடம் இருந்து மீட்டு,பிறமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விபரத்தை அறிவிக்கும் கல்வெட்டாகும்! இக்கல்வேட்டானது, சோழர்களின் ஆட்சிப் பகுதியான கூடலூர் நாட்டுப் பிரம்மதாயமாக சிற்றையூர்(இன்றைய ஆந்திராவின் சித்தூர் )அதனை தொடர்ந்தக்  கடையவயல்" என்ற நிலப்பரப்பை பிராமணர்களிடம் இருந்து பறித்து,பவுத்தக் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டதை  அறிவிக்கும் கல்வெட்டாகும்.!

     திருச்சி மாவட்டம்,முசிறிவட்டத்தில்,  முசிறியிலிருந்து தண்டலைப் புதூர் செல்லும் சாலையில் 12 -கி.மி. தொலைவில் உள்ள ஊர், "தின்னகோணம்" என்ற ஊராகும்!   இக்கோவில் பராந்தக சோழன்(சுந்தரச் சோழன்) காலத்தில் கற்றளியாக கட்டப்பட்ட கோயிலாகும்!.

         இக்கோயிலுக்கு வெளியில் "பைரவர்" கோயில் என்ற தனிக்கோயில் உள்ளது. இங்குள்ள    திரிபுவன சக்கரவர்த்தி,      ராஜராஜனின்  11 -வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு பின்னமடைந்து,படிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.!  தின்ன கோணம் "பசுபதீஸ்வரர் கோயில்" அறநிலைய  ஆட்சித் துறையினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், "பைரவர்" கோயிலில் உள்ள கல்வெட்டுகளை எல்லாம் அழித்து,படிக்க முடியாமல் செய்துள்ளார்கள்! கல்வெட்டுகள் மேலே சுண்ணாம்பு பூசி இருக்கிறார்கள் ! 

       கல்வெட்டுகளில் அழிவுக்கும்,சிதைவுக்கும் ஆளான கல்வெட்டுகள் யாருடைய  ஆட்சிகால  கல்வெட்டுகள் என்று பார்த்தோமானால், அவைகள் பெரும்பாலும் சுந்தர சோழன்,ஆதித்ய கரிகாலன், ராஜராஜன் காலத்துக் கற்றளி கோயில் கல்வெட்டுகள் தான் எனபது, அதிர்ச்சியளிக்கும் உண்மையாக உள்ளது! 

      இவைகளும் கூட மேற்சொன்ன ஆட்சியாளர்களின் காலத்தில் நடந்த பலச் செயல்களை பின்வரும் தமிழ் மக்கள்  அறிந்துகொள்ளாமல், மறைக்க வேண்டிய அவசியத்தின் விளைவாகவே,காரணமாகவே    அழிவுக்கு ஆளாக்கப் பட்டுள்ளன என்ற ஐயப்பாட்டினை ஏற்படுத்துகிறது!

   மேலே கண்ட கல்வெட்டுகள் அழிவுக்கு வேறு காரணங்கள்  இருப்பின்  அவைகளைக் குறித்தும்  சிந்திக்க வேண்டி உள்ளது!

  

Comments

 1. UNGALATHU INTHA IDUGAYAY VALAISARTTHIL INAITHU ULLEN .  http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_15.html  NANDRI,

  GUNA

  ReplyDelete
 2. சிறப்பான பதிவு, நமது வரலாறு இன்னும் எந்தளவிற்கு மறைக்கப் பட்டிருகிறது என்பது தெரியவில்லை. இந்தளவிற்கு சிரத்தைக் கொண்டு பதித்ததக்கு நன்றி. பொன்னியின் செல்வன் படமாக்குபவர் யாராகயிருந்தாலும் இதை கருத்தில் கொள்வார்களா? இல்லை இவர்களும் ஒரு புதுக்கதை சொல்வார்களா?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி,இளங்கோ! ஆதிக்கத்தை விரும்பி தொடரும் எந்த சக்திகளும் தேவைக்கு ஏற்றார்போல, தங்களது தவறுகளை மறைக்கவும், தங்களை நியாயவானாக காட்டியும் வருவது இயல்பு! அதனால், தொடர்ந்து காலத்துக்கு தகுந்த மாதிரியும்,இடத்துக்கு ஏற்றாற்போலும் வரலாற்றை மட்டுமல்ல, எல்லாவற்றிலும் மாற்றங்களை செய்துகொண்டே வருவார்கள்! நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?