ஸ்ரீ ரங்கம் கோயில் தரும் செய்திகள்!

      ஸ்ரீ ரங்கம்  கோயில் விருத்தாந்தம் கூறுவதைப் பார்ப்போம்.
"நம்பெருமாள் புறப்பட்டருளின பின்பு அற்றபற்றர்  வாழும் அந்தணீர் அரங்கம்  என்றும் நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றும் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம்  எண்ணும்படியான கோயிலானது அழகு அழிந்தது" எனக் கோயில் விருத்தாந்தம் கூறுகிறது.


     இக்குறிப்பு, 'நம்பெருமாள் என்கிற சிற்பசிலையை  எடுத்துச் சென்றபிறகு கோயிலின் அழகு குறைந்துவிட்டது' என்பதை அறிவிக்கிறது.! இவ்வாறு ஏன் அறிவிக்கிறது? நம்பெருமாள் என்ற சிலையை ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? என்ற கேள்விக்கு  விடையும்  இருகிறது!


    ஸ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் நிகழ்ச்சி.. .   " பின்னும் அங்கே வந்து ஆக்கிரமித்தவன் செய்தபடி திட்டக் கொடிமதிப் பிடிங்கி கண்ணனுரிலே(இன்றைய சமயபுரம்) தனக்கு   ஆவரணமாகக் கட்டுவித்து,பின்னையும் அங்கே உபத்ரவங்களைப் பண்ண, உபக்கரமிக்க அவ்வளவிலே சிங்கபிரான் என்னும் பேரையுடையோராய்  பெருமாள் திருவிளையாட்டமான அழகிய மணவாளர் காணிய பிராமணர்ஆய், தமிழ் விரகரான ஒருவர், துருஷ்கன் வாசலிலே காரியம் ஆராய்ந்து நின்று, அவன் நினைத்தபடி ஒன்றும் செய்யாமல் அவனுக்கு அனுகூலமாகவே சொல்லிக்கொண்டு மதில்கள், மாளிகைகள், கோபுரங்கள்,துன்னு மணிமாடங்கள்,சாலைகள் தொடக்கமானவற்றையும் செம்போனாய வருவரரனைய கோயில் மணியனாரையும் காத்து.. ரஷித்துகொண்டு  போந்தார்" என்று கூறுகிறது! . 


      குந்தவை மதம் மாற்றதின்  விளைவாக,   திருவரங்கம் கோயிலுக்கு முஸ்லிம்களும் வரயிருப்பதை பற்றிய பிராமணர்களின்  அச்சத்தையும்    இதனால்  ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட குழப்பங்களையும் சொல்வதை அறியலாம்!


          ஸ்ரீரங்கம் கோயிலுக்கு  குந்தவையின் இஸ்லாம் மாற்றத்தின் விளைவாக சமயபுரம் பகுதியில்  இருந்து, முஸ்லிம்கள்    ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரப்போவதை, முஸ்லிம்களிடம் பிராமணர்கள் அனுப்பியிருந்த ஒற்றன் மூலமே தெரிந்துகொண்டு, முஸ்லிம்கள்  வருவதற்கு முன்பே பெருமாளையும் நாச்சிமார்களையும்   அங்கிருந்து அப்புறப்படுத்தி,  எடுத்துக்கொண்டு காட்டிற்குள் (கண்ணனூர் எனப்பட்ட சமயபுரம் காட்டிற்கு)சென்றுவிட்டார்கள்.!
    நம்பெருமாள்  புறப்பட்டருளின என்றுதானே  உள்ளது? நீங்கள் எடுத்து சென்றுவிட்டார்கள் என்கிறீர்களே? நாச்சிமார்களையும் என்று சேர்த்துச் சொல்கிறீர்களே? என்று கேட்கவும்  சிலர் இருப்பதால்  கூடுதலாகவும்  சிலவிவரங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது!

        ஸ்ரீரங்கம் கோயிலொழுகு,"ஸ்ரீ ரங்க நாச்சியாரையும் சில பரிகாரங்களையும்  கூட்டி அனுப்பி,(சிலபரிகார விக்கிரங்கள்) பெரியபெருமாள் குலசேகரன் படிக்கல்  திரைப்பரிமாறி, முன்னதாக விக்கிரத்தைவைத்துக் கதவைப்பூட்டி,நாச்சியார் சன்னதியிலேயும் அந்தப்படி பண்ணி, மர்மஷ்தானங்கள் எல்லாம்  திரேதானம் பண்ணி,தாம் திருலோகத்தில் வர..  துலுக்கரும்  திரையில் புகுந்து,விக்ரஹத்தைக்  காணாமல்,பன்றியாள்வானை அபசாரப்பட்டு..... ", என்று நடந்த விவரங்களை விவரித்துக்கொண்டே போகிறது! 
 
       நம்பெருமாள் ஆகிய சிலைகள்  கோவிலில் இருந்து சென்றுவிட்டபிறகு, அதாவது அப்புறப்படுத்திய   பிறகு,  ஸ்ரீ ரங்கம் கோவிலின் அழகு குறைந்துவிட்டது  என்பதையே, "நம்பெருமாள் புறப்பட்டருளின பின்பு அற்றபற்றர்  வாழும் அந்தணீர் அரங்கம்  என்றும் நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றும் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம்  எண்ணும்படியான கோயிலானது அழகு அழிந்தது" எனக் கோயில் விருத்தாந்தம் கூறுகிறது. !


    இதன்மூலம் ,  ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முஸ்லிம்கள் வருவதை முன்கூட்டியே  தெரிந்துகொண்டு, அவர்கள் வருவதற்கான நோக்கத்தை முறியடித்து,சாமர்த்தியமாக  அந்தணர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ள இயலுகிறது! . இதனையே,   ஸ்ரீ ரங்கம் கோயில் வரலாற்றை விவரிக்கும் "யதீந்தர பிரவணப் பிரபாவம்"  என்ற நூலும் தகவலாக தருகிறது!


     குந்தவை  கி.பி.1006 -க்கு பிறகு இஸ்லாம்  மதம் மாறியபோது, ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த   இந்த  நிகழ்ச்சியை   பெரும்பாலோர்  கி.பி.1323 -லில்   மாலிக்காபூர் படையெடுப்பின் போது நடந்ததாக  தவறாக சித்தரித்தும்,புரிந்துகொண்டும் வருகின்றனர்!


.      இதன் மூலம் குந்தவையின் மதமாற்றம் குறித்த வரலாறு மறைக்கப்பட்டு விடுவதுடன், முஸ்லிம்கள்  ஆக்கிரமிப்பாளர்கள்  ஆகவும், இந்து சமயத்தினரின்  வழிபாட்டு இடங்களை இடித்தவர்கள்  போலவும்  தவறான கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.! 


        இவையல்லாம் பிராமணீயம் என்ற பாசிச சக்திகளின் திட்டமிட்ட செயல்திட்டங்களின்  ஒருபகுதியாகும்! சமய நல் இணக்கத்துக்கு எதிராக, இந்துசமய  மக்களை  உணர்வூட்டி, முஸ்லிம்களின்மீது வெறுப்புணர்வை வளர்த்துவரும்  செயல்களுக்கு  வரலாற்றையும்  ஆதாரமாக பயன்படுத்தி, உண்மையற்ற வரலாற்றை,தங்களுக்கு ஆதரவான வரலாற்றை உருவாக்கி வருவதுடன், உண்மையான தமிழர்களின் வரலாற்றையும் பொய்யான  இதுபோன்ற  சித்தரிப்புகளால்,மறைத்தும்,இருட்டடிப்பு செய்தும் வந்துள்ளார்கள் என விளங்குகிறது!


        ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு கூறும்  செய்தி  குந்தவை நாச்சியாரின் மதமாற்றத்தை  அடுத்து  நடந்த நிகழ்ச்சியல்ல...,உண்மையில்  அது  மாலிக்கபூர்  படையெடுப்பின் போது நடந்த  நிகழ்ச்சிதான்  என்று பிடிவாதமாக  நினைப்பவர்களுக்கும், வாதிப்பவர்களுக்கும்  தெளிவுபடுத்த  வேண்டியுள்ளது!

       ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு  நூலானது,  ஆதியில் இருந்து கோயிலில் நடந்த நிகழ்சிகளை வரிசைக்கிரமமாக  சொல்லிவருகிறது!  கோயிலில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ள  நிகழ்ச்சி,மேலே நான் குறிப்பிட்டு உள்ள நிகழ்ச்சிகுறித்து,  திருவரங்கம்   கோயிலின்  பல்வேறு ஒழுகு  நூல்களும்,உரை நூல்களும்  முகமதியர்களைப் பற்றி வர்ணித்துவிட்டு, அதன்பிறகே  ஆச்சாரியார்களின் வரலாறுகளைப் பற்றி  குறிப்பிடுகின்றன. 


  அதாவது, ஆச்சாரியர்களில்  மூத்தவரும் முன்னவரும், முதலாமவரும்  "ராமானுஜர்"  தான் என்பதை  யாரும் மறுக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்! 
       அத்தகைய ராமனுஜரின்  காலம்  கி.பி.1017 -கி.பி.1137 வரையான  120 -ஆண்டுகள் என்றும் சொல்லபடுகிறது! ஆச்சாரியர்களில்  மூத்தவரான ராமானுஜர் மற்றும் உள்ள ஆச்சாரியார்களின்  வரலாற்றுக்கு முன்பே,முஸ்லிம்களைப் பற்றி  ஸ்ரீரங்கம் கோயில் நூல்கள்  குறிப்பிடுகின்றன .  என்றால்  அதற்க்கு முன்பே திருவரங்கத்துக்கு  வந்த சோதனை மற்றும்  முஸ்லிம்களின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது என்றுதானே பொருளாகும்! 

        மேலும்    மாலிக்காபூர் படை எடுப்பின்போது  திருவரங்கம் கோயிலில் நடந்ததாக  இருந்தால்,  கோயிலொழுகு நூல்கள்  முஸ்லிம்கள்  பற்றிய செய்திகளை ஆச்சாரியர்களின் வரலாற்றுக்குப் பின்புதான்  சொல்லியிருக்கும்!  
     இதில் இருந்தே,திருவரங்கம் கோயிலில் முஸ்லிம்களின் வருகையும் குழப்பமும்  மாலிக்காபூர் படையெடுப்பின்போது  நடந்ததல்ல என்பதையும்  அது  குந்தவையின் மதமாற்றத்தின் விளைவாக நடந்த குழப்பங்கள் என்பதையும்  அறிந்துகொள்ளலாம்! 

     குந்தவை மதம் மாறியதன்  எதிரொலியாக  இன்றும்  மதுரை அருகில் உள்ள  வண்டியூரில் உள்ள துலுக்க நாச்சியார் கோவிலில், பெருமாள் உற்சவத்தின்போது  ,  உற்சவ   மூர்த்தியான  "திருமால்" துலுக்க நாச்சியார் கோவிலில், தங்கிச் செல்லும் ஐதீகம்  நிலவி வருகிறது!

      

Comments

 1. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

  Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
 2. ஆனால் விகடன் கற்றதும் பெற்றதும் வில் சுஜாதா வேறு மாதிரி கதை விட்டிருந்தார். இது பற்றி இன்னும் விரிவாக ஆதாரத்தோடு பகிருங்கள் ராஜன்.

  ReplyDelete
 3. யாராவது கோயிலொழுகு நூலை ஆராய்ந்தால் பன்னீராயிரம் ஆழ்வார்கள் திருமுடி திருத்திய செய்திதானே?

  அதற்கு வரலாற்று ஆய்வாளர் திருநெல்வேலி, சே.திவான் என்பவர் விடியல் வெள்ளி என்ற நூலில் மறுப்புரை எழுதி,அதுவும் தொகுக்கப்பட்டு "மாலிக்கபூர்" என்ற தலைப்பிலேயே புத்தகமாக வந்துவிட்டது!

  பன்னீராயிரம் ஆழ்வார்கள் எனபது வடுகவாளி பன்னீராயிரம்(பன்னீராயிரம் ஊர்களைக்கொண்ட பரப்பு) என்ற இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து ஸ்ரீ ரங்கம் வந்தவர்! ஹர்ஷவர்தனாரால் நாடுகடத்தப்பட்டு,தென்திசைக்கு வந்தவர்களின் வாரிசு. ராஜராஜனின் பாட்டனாரால் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களின் வழித் தோன்றல்!

  அந்த கதையை இங்கு சொன்னால், பலரும் வருத்தபடுவார்கள்! ஆகவே,நாகரீகம் கருதி தவிர்த்துவருகிறேன்.

  நான் மதித்து வந்த சிறந்த எழுத்தாளர்களில் அமரர் திரு சுஜாதாவும் ஒருவர்!

  ஒருவகையில் இந்தவரலாற்றையே, பலரும் குற்றம் சொல்லும் வகையில் சஸ்பென்ஸ் வைத்து எழுதுவதற்கு அவரும் காரணமென்பேன்.பொதுவாக வரலாற்றை சுவாரசியமாக சொல்வது கடினம் என்பதால் துப்பறியும் நோக்கில் செய்வதற்கு காரணம் அவர் யுக்திதான்!


  ஸ்ரீ ரங்கத்து அய்யங்கார் ஆன சுஜாதா, தனது இனத்துக்கு தன்னையறியாமலே செய்த கைமாறாக அதனை எடுத்துக்கொண்டேன்!

  'கள்ள சாணாத்தி' என்று ஒருகதையில் எழுதி,நாடர்கள் விழா நடத்துவதாக அழைத்து, மரியாதை செய்தது, அப்புறம் 94 -ஆம் ஆண்டுவாக்கில் கல்கியில், "ராஜராஜன் பூஞ்கிணறு" என்று வசந்த்,கணேஷ் என்று ஆரம்பித்து,(தொடக்கூடாத ஏதோ ஒருவிசயத்தை அவர் அறிந்ததால்,)ஒம்பது அத்தியாயங்களோடு, திடிரென்று எந்தவித அறிவிப்பும் செய்யாமல் நிறுத்தி விட்டதையும் அறிவேன்!

  பாருங்கள், பதிவை விட்டுவிட்டு,அதுபற்றிய கருத்து,உண்மைத்தன்மை, ஆகியவற்றை விடுத்தது, சுஜாதா பற்றி என்னதெரியும் என்று ஆரம்பிக்க போகிறார்கள்!

  ReplyDelete
 4. நன்றி ஓசூர் ராஜன்; இன்று நாம் வழிபடும் கோவில்/ தேவாலயம்/மசூதி இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படியே இருந்தன என யாரும் சொல்ல முடியாது. இன்று முஸ்லிம்களால் வழிபடப்படும் கபாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலை வழிபாடு நிலவியது. மேலும் அங்குள்ள புனித கல்லும் சிவலிங்க வடிவத்தை ஒத்துள்ளது. அதேபோல இந்த இந்து ஆலயங்களும் சமண பௌத்த தலங்களாக இருந்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆதித்தன் கரிகாலன்... வரலாற்றில் என்னை கவர்ந்த பெயர்! உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

   Delete
 5. ஆதித்தன் கரிகாலன்!

  //நன்றி ஓசூர் ராஜன்; இன்று நாம் வழிபடும் கோவில்/ தேவாலயம்/மசூதி இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படியே இருந்தன என யாரும் சொல்ல முடியாது. இன்று முஸ்லிம்களால் வழிபடப்படும் கபாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலை வழிபாடு நிலவியது. மேலும் அங்குள்ள புனித கல்லும் சிவலிங்க வடிவத்தை ஒத்துள்ளது. அதேபோல இந்த இந்து ஆலயங்களும் சமண பௌத்த தலங்களாக இருந்திருக்கலாம்.//

  கஃபாவில் நாள் ஒன்றுக்கு ஒரு சிலை வைத்து வணங்கியதை முகமது நபியும் மறுக்கவில்லை. முஸ்லிம்களும் மறுக்கவில்லை. அதற்கு முன்னால் இன்னும் 3000 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் இறைத் தூதர் ஆபிரஹாம் இதே கஃபாவில் ஓரிறைக் கொள்கையை போதித்தார். சிலை வழிபாடு பின்னர் வந்தது. அதைத்தான் முகமது நபி அப்புறப்படுத்தி திரும்பவும் ஓரிறைக் கொள்கையை நலை நாட்டினார். அது இன்று வரை தொடர்கிறது.

  ஆனால் இங்கு நண்பர் ராஜன் தரும் தகவலின் அடிப்படையில் பல வழிபாட்டத்தலங்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. பல கல்வெட்டுகளை மறைத்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கொவிலைப் பற்றிய சர்ச்சை தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்து கொவில்கள் முன்பு சமண கோவில்களாகவும், பவுத்த கோவில்களாகவும் இருந்ததை மறைத்து வரலாற்றில் பொய்யை ஏன் கலக்க வேண்டும் என்பதே நண்பர் ராஜனுடைய வாதம்.

  ReplyDelete
 6. நன்றி சுவனப்ரியன்; எனக்கும் அதே கேள்விதான் ஏன் இந்த பொய்யை கலக்க வேண்டும்? சமணர்கள் மற்றும் பௌத்தர்களை தீயிட்டும் நீரிட்டும் கொன்ற வரலாறுகள் ஏன் அனல்வாதம் புனல் வாதம் என பூசி மெழுகப்பட வேண்டும்? அந்த ஆதிக்க சக்திகளை நாம் புரிந்து கொள்ளவேன்டும்.
  இல்லாவிடில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் புலிகளை அழித்த தெய்வம் என்று ராஜபக்ஷ தமிழர்களால் வணக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?