திருமழபாடி கோயிலிலும் குந்தவை மதம்மாறிய சான்று!

        ராஜராஜன்ஆட்சிக்  காலத்தில், பதினாறு சிறு நாடுகள் அடங்கிய 
வள நாடாக விளங்கிய பகுதி திருமழபாடி ஆகும். இந்தவூரில்  அமைந்த கோயிலை  ராஜராஜன் கற்கோவிலாக எடுத்து,தனது ஆட்சிகாலத்தில் புதுப்பித்து உள்ளான்.என்பதை இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகள் அறிவிக்கின்றன .இந்த கோயில்   மற்றும்  அமைந்துள்ள ஊரில்  தொல்லியல்துறையினரால் ஆய்வுகள் செய்யப்பட்டும் உள்ளது.

     கல்வெட்டு ஆய்வாளரும்,திருமழபாடி  குறித்து,  "ஊரும் கோவிலும்" என்ற நூலைஎழுதிஉள்ளவருமான,'சேக்கிழார்அடிப்பொடி''முதுமுனைவர்' தி.ந.இராமச்சந்திரன்    என்பவர்,  "சோழர் குல மலைமுடி ஆகிய ராஜராஜனின் ஆட்சியில்,மழபாடியின் புகழ் பேரரசு எல்லையையும் கடந்து பரவியது" என்று  குறிபிடுகிறார்.


    திருமழபாடியில்  உறையும் இறைவனுக்கு  இப்போது," வைத்தியநாதர்"  என்ற பெயர் விளங்கிவருகிறது.  இவ்வூருக்கு அருகில் கொள்ளிடத்தின் தென்கரையில்  வைத்தியநாதபுரம் என்ற ஊரும் உள்ளது.    ஆனால், இந்த கோயிலில் உறையும் இறைவன்பெயர்,  'ஜுனேஸ்வரர்' என்று 1944 -ஆம் ஆண்டு இக்கோவில் தேவஸ்தானத்தால்  வெளியிடப்பட்ட திருமழப்பாடி கோயில் வரலாறு என்ற நூல் குறிபிடுகிறது.!

     1920 -ம் ஆண்டுக்குரிய கல்வெட்டு ஆண்டறிக்கையிலும் இக்கோவில் இறைவன் "ஜுனேஸ்வரர்"  என்றே குறிக்கப்பட்டு உள்ளது.

   இந்த ஜுனேஸ்வரர் சன்னதியின் பின்புறம் சோழர்கள் காலச் சிற்பங்களை,கல்வெட்டுக்களை மறைக்கும் விதத்தில்  புதிதாக  நிறுவப்பட்டு உள்ளது. இந்த கோயிலின்  மூன்றாம் பிரகாரத்தில்  உள்ள சுந்தராம்பாள் சன்னதியில்   சில துண்டு கல்வெட்டுகளும் காணபடுகின்றன. (அதாவது கல்வெட்டுகள் சிதைவுக்கு ஆளாகியுள்ளன!)

    இந்த கோயில் குந்தவையின் நேரடிக்  கட்டுப்பாட்டில் அல்லது அவரது  அபிமானத்துக்கு உரிய கோயிலாகவும் இருந்துவந்த கோயில் என்பது அறியவருகிறது.

        இந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தான், குந்தவை நாச்சியார்,குட ஓலைத் தேர்தலைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார் என்பதையும் அறிவிக்கிறது! இந்த ஊரில்," ஜீனாலயம்" ஒன்றை குந்தவை கட்டி இருந்தார் என்றும் ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது.


   இந்த கோயில் அமைந்துள்ள ஊரைச் சுற்றி சில காம கோட்டங்கள் இருந்துவந்தன என்பதை, ராஜராஜனின் கல்வெட்டு ஒன்றின்மூலம் அறியமுடிகிறது. (காம கோட்டங்கள் எனபது  அக்கால அரசகுலப் பெண்கள் தாங்கும் இடம் எனவும்,பெண்தெய்வ கோவில்கள் என்றும்  கூறுகிறார்கள்) இவ்வூரில் இருந்த மனை ஒன்று ,"காமக்காணி அனந்த நாச்சன் என்பவனுக்கு சொந்தமானதாக்" ( எஸ்.எல்.எல்.வீ.-660 ) கூறப்படுவதால், காம கோட்டத்தின் பாதுக்காப்பை அல்லது பணியையோ இந்த அனந்த நாச்சன் என்பவன்,கவனித்து வந்தான் என்பதை அறியலாம்.

     திருமழபாடி வளநாடு அடங்கியிருந்த பகுதியில்  கண்டராதித்தம் என்ற ஊர் உள்ளது. அருகில புதுக்கோட்டை என்ற சிற்றூரும் அதன் அருகில் கொள்ளிடக்கரையில்,  அகன்ற மண்மேடு உள்ளது. 

      இந்த அகன்ற மண் மேட்டுக்கு,  "நத்தர்பார்" என்றும் "நத்தர் மேடு" என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு,நத்தன் என்ற அரசன் வாழ்ந்த வாழ்ந்த இடம் என்றும் இங்கு பிடாரிக் கோயில் இருந்ததாகவும் பேசப்படுகிறது.

       நத்தன் மேட்டில்' புதையல் குடம், வைரக் கிரீடம்' ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக  பேசப்படுகிறது. இப்பகுதியில்  கேணி,கட்டிடப் பகுதிகள் முதலியன இருந்தன என்றும் இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.!

         கி.பி.1740 - ஆண்டில் அரியலூர்  மழவராயரால் வெளியிடப்பட்ட "திருமழப்பாடி செப்பேடும்" இந்த பகுதியை, "நத்தன் மேடு" என்றே குறிப்பிடுகிறது.

       இவை யாவும்  குந்தவையின் வளர்ப்புத் தந்தையான, " நத்தர் வலி" என்பவருடன் குந்தவை இங்கு தங்கியிருந்ததை உறுதியாக்குகின்றன! 

     . இதுமட்டுமின்றி, இப்போது "வைத்தியநாதர்" கோயிலாக விளங்கிவரும்  இந்த கோயிலில்,  ஒருபகுதியில் புத்தகம் வைத்து வழிபட்டு வருவது,   அந்த நாளைய வழக்கமாக இருந்து வந்தது ! என்று 'திருமழபாடி ஊரும் கோவிலும்' என்ற நூல் குறிப்பிடுகிறது.


     எனவே, இந்த கோயில் முன்பு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திவந்த இடமாக இருந்து, பின்பு  "வைத்தியநாதர்" கோயிலாக மாற்றப்பட்டு உள்ளது எனபது விளங்குகிறது.


   இஸ்லாமியர்களே,   தங்கள் வழிபாட்டு இடங்களில்" குரானை" வைத்து வழிபாடு  நடுத்தி வருகிறார்கள் என்பதும், அவர்களில் ஒருபிரிவினர் வைத்தியம்  (ஆயுர்வேதம்,யுனானி ) முதலியவற்றை தொன்று தொட்டு செய்துவருகின்றனர் என்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும்!


   மேலும் சோழர்கள் கால,  கல்வெட்டுகளை  சிதைத்தும், கல்வெட்டுகளையும், சிற்பங்களை மறைக்கும் வகையிலும் கட்டிடப் பணிகளை செய்து உள்ளதும் கூட இதனை உறுதிப் படுத்துகிறது!

   இவைகளும்  கூட  குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதம் தழுவியதை உறுதிப் படுத்துகிற சான்றாகவும்  விளங்கி வருவதையும் அறியலாம்!

           ஸ்ரீ ரங்கம் கோயின்  குடஒழுகு  குந்தவை,இஸ்லாமியர்கள் குறித்துக் கூறுவதையும் பார்க்கலாம்!

,

Comments

 1. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!

  Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

  ReplyDelete
  Replies
  1. than you for your kind information sir! I call you later!

   Delete
 2. அய்யா ஓசூர் ராஜன்,

  இந்த பிராமணர்கள் அயோக்கியர்கள் என்று அனைவரும் அறிவர், அதே சமயத்தில் இந்த முஹமதிகள் ஒன்றும் குறைந்தவர்களில்லை.

  குந்தவை முஹமதிய மதத்தில் இணைந்திருக்கலாம்..அது அன்று. ஆனால் இன்று அந்த முஹமதிய மதத்தில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்களில்லை. குறிப்பாக தமிழ் இணையத்தில்....

  ReplyDelete
  Replies
  1. நான் முஸ்லிம்கள் உத்தமர்கள் என்பதற்காகவோ, அவர்களுக்கு வக்காலத்து வங்கியோ,எழுதவரவில்லை. தமிழகவரலாற்றை எதற்காக,எப்படிஎல்லாம் சிதைத்தார்கள். பிராமணீயத்தின் ஆக்கிரமிப்பு தமிழர்களின் பெருமையை,வரலாற்றை ,வீரத்தை சீரழித்த விதம் குறித்து எழுதுகிறேன்.! பிராமணீயம் குறித்து எழுதினால், முஸ்லிம் ஆதரவாளன் என்று கற்பனை செய்துகொள்ளவது நீங்கள்தான்!

   Delete
 3. வணக்கம்! எனது சொந்த ஊர் திருமழபாடி. எனது ஊரைப் பற்றி பதிவும் எழுதியுள்ளேன். நீங்கள் இந்த பதிவில் திருமழபாடி சிவன் கோயில் முன்பு முஸ்லிம் வழிபாட்டுத் தலமாக இருந்தது என்று சொல்லும் தகவலை, நான் கேள்விப் பட்டதே இல்லை. அதே போல குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார் என்ற தகவலும் புதுச் செய்தியாக உள்ளது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது ஆதாரங்களைத் தந்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. ஆதாரங்களைத் தந்துதானே எழுதுகிறேன்? அந்த ஆதாரங்கள் சரியா,இல்லையா என்பதை கோயில்,கல்வெட்டுகள் திருமழபாடி ஊரைப்பற்றிய நூல்கள் ஆகியவற்றைப் பார்த்தும், படித்தும் சரியென்றோ,தவறென்றோ சொல்லவேண்டியது நீங்கள்தான்!

   Delete
  2. இந்த பொய்யினால் நாட்தைக் கொடுப்பவர்கள் கஜினி முகமதுவின் வாரிசுகள் இவர்கள்

   Delete
 4. வணக்கம் சகோ இளங்கோ

  நம்ம ஓசூர் இராஜன் கிட்டே பல பேர் பல்விதமாக கேட்டாலும் கொடுக்காத ஆதாரத்தை நீங்கள் கேட்டா கொடுக்கப் போகிறார்?.

  "சரி முயற்சி உடையார் இக்ழ்ச்சி அடையார்".

  இருந்தாலும் அனைவரும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

  ஆதாரம் இருந்தால் கொடுக்க மாட்டாரா?

  வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்?

  சிந்திக்க மாட்ட்டீர்களா?

  சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!!!!!!!!!!!

  ஆகவே யாரும் அவரை ஆதாரம் கேட்காதீர்கள்.பாவம் அவருக்கு மன‌தில் என்ன தோன்றுகிறதோ எழுதட்டும்.ஒரு மர்ம புனைவு கதை படிக்கிறோம் என்ற நோக்கில் மட்டும் படியுங்கள்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னைப்பற்றிய தவறான கருத்து இது! ஆதாரம் என்பவைகளை கொடுத்து வருகிறேன்! நீங்கள் அதனை சரிபார்த்து ஒப்பிட்டு கருத்து சொல்லுங்கள்! நன்றி!

   Delete
 5. இவரிடம் ஆதாரம் கேட்பதற்குச் சும்மா இருக்கலாம். ஆதாரம் எங்கே என்றால் தனது முந்தைய பதிவில் சொல்லியிருப்பதைக் காட்டுவார் அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் அது தான் கொடுத்துவிட்டேனே சரிபாருங்கள் என்பார். பத்து நாட்களுக்கு முந்தைய பதிவில் சொன்னது இன்று சொல்வதற்கு ஆதாரம்...முந்தைய பதிவுக்கு ஆதாரம் அதுதான் பதிவே போட்டிருக்கிறாரே போதாதா???

  சில காலம் சென்று தமிழகத்துக் கோவில்கள் அனைத்தும் இசுலாமிய வழிபாட்டுத்தலங்கள் என்று ஒரு கும்பல் கிளம்பும் அதற்கு ஆதாரம் கேட்டால் ஓசூர் ராசன் பதிவு போட்டிருக்கிறாரே என்பார்கள்... ஓசூர் ராசன் எந்தப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றார்? இது வரை எத்தனை ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்டுள்ளார்?

  இது இசுலாமைப் பரப்ப பெட்ரோ டாலரில் விரிக்கப்பட்டுள்ள மனோதத்துவ வலை.

  மாறிப்போய்ச் சேர்ந்து குல்லா போட்டுக்கொண்டாலும்.... நீ மொஹாஜிர் ஒரிஜினல் முஸ்லிம் இல்லை ஆகவே ஒரு படி கீழே தான் என்பார்கள். ஷியாக்களும் சுன்னிகளும் வெட்டிக் கொண்டு சாவதும், அஹமதியாக்களை இன்னபிற முசுலிம்கள் அழிக்கத்துடிப்பதும் current affairs. இவர்கள் நிழலில் அண்டிப்பிழைக்கும் ஓசூர் ராசன் தக்க ஆதாரங்களுடன் உண்மை மட்டுமே பேசுவார் என்று எதிர்பார்ப்பது மெக்காவின் தலைமை ஹாஜியாக ஒரு தமிழன் வருவது போலத்தான். சாத்தியக்கூறுகள் சிறிதுமில்லை.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நேசன் உங்களது கருத்துக்கள் தவறு! ஆதாரம் கட்டவில்லை எனபது நொண்டிச் சாக்கு ! சரி, ஆதாரம் என்று நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? எதையெல்லாம் ஆதாரமாக நீங்கள் ஏற்பீர்கள் என்று சொல்லுங்கள்!அவசியம் தருகிறேன்!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?