குந்தவை அடக்க தர்காவில் திருவிளக்கு வழிபாடு !

       குந்தவைக்கு மந்தாகினி என்று மற்றொரு பெயர் இருந்தது! உத்தமசோழன் ஆட்சிகாலத்தில்  தனது தம்பியுடன்  தலைமறைவாக  இருந்தபோது,  மந்தாகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளார்! இந்த பெயர் அரசகுலத்தினர்  உள்ளிட்ட சிலருக்கே தெரிந்த பெயர் ஆகையால், இந்தபெயரில்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவருவது  எளிதாகவும் இருந்துள்ளது எனபது விளங்குகிறது!

நெல்லிக் குப்பம், எம்.ஏ.ஹைதர் அலி என்பவர்  இஸ்லாமிய பெருமக்களும், பல் நூல்களை எழுதிய இஸ்லாமிய அறிஞராவார்! திருச்சி நத்தர் குறித்தும்  நூல்  எழுதியுள்ளார்! இவர், குந்தவையின் மற்றொரு பெயரான  மந்தாகினி என்ற பெயர் குறித்து,"அரபு மொழி லிபியில் மந்தாகினி என்பதை, மீ  ம் மீ  ம்  தால் (ஜால்) கியாப்நூன் என்ற ஐந்து எழுத்துக்களால்  எழுதவேண்டும். "மந்தாகினி" என்ற பெயரை மேற்சொன்ன விதத்தில் எழுதி வந்துள்ளார்கள் . அரபு மொழி லிபியான  மேற்சொன்ன  ஐந்து எழுத்துக்களும்  ஹூருப்  என்னும் எழுத்துக்களுக்கு முன்புள்ள எழுது வடிவமாகும். ஹூருப் வடிவத்துக்கு  முன்பிருந்த அரபு மொழி லிபியில் மந்தாகினி என்ற  பெயர் விளங்கிவிளங்கிவந்தது..என்று  கருத்து தெரிவித்துள்ளார்! 

      குந்தவை  இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே  இறந்து, இஸ்லாமிய முறைப்படியே  அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர்  அடக்கம் செய்யப்பட்ட  தர்காவில், "இந்துமத வழிபாட்டு  முறைகளில்  முக்கிய  இடத்தைப் பிடித்துள்ள  விளக்கில்  நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற "    வழக்கம் இன்றும் தொடர்ந்து  நடந்துவருகிறது!

குந்தவை அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்காவில் உள்ள திருவிளக்கு 


     இஸ்லாமியர்களின்  வழிபாடுகளில்,  'விளக்குபூஜைகள்  முக்கியத்துவம் பெறுவதில்லை'  என்பதிலிருந்தும்,  குந்தவையின்   அடக்க சமாதி உள்ள தர்காவில்,  விளக்கு  ஏற்றி வழிபாடு நடப்பதில்  இருந்தும்,   குந்தவை இஸ்லாம் மதத்தைத்  தழுவிக் கொண்டாலும் கூட, அவர் மேல் மதிப்பும் மரியாதையும்  வைத்திருந்த, இஸ்லாம் மதத்தைத் தழுவாமல், தொடர்ந்து இந்து மதத்திலேயே  நீடித்துவந்த மக்களும்  தங்களது வழிபாட்டு முறையிலேயே,  அவரை  போற்றி,வந்துள்ளனர்  எனபது விளங்கும்!

       இவ்வாறு,  இந்துமதத்திலேயே  நீடித்து வந்த மக்களின்  வம்சாவளியினர், அதாவது இந்துமத  சமுகத்தில்  உள்ளவர்கள், குந்தவையின் சமாதி உள்ள தர்காவில்,  ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்  கந்தூரி என்ற  உரூஸ்  நிகழ்ச்சியில்,  இந்துமதத்தில் திருவிழா நடத்தப்படும்போது, தேர்  செய்து, வீதிவலம் வருவது போலவே, கந்தூரி நிகழ்ச்சியிலும் தேர் அமைத்து  வீதி வலம் நடத்திவரும் நிகழ்ச்சியும்  ஆண்டுதோறும் நடந்துவருகிறது! 

குந்தவை அடக்கம் செய்யப்பட்டு உள்ள தர்காவின்  உருசில் இந்து சமயத்தவர் பங்கேற்று  செய்யும் தேர் ஊர்வலமும்,தேரும். 


        இவைகள் எல்லாம்  தமிழகத்தில், இஸ்லாம், இந்துமதம்  என்ற  சமயங்களின்  நல்லிணக்கத்துக்கு, ஒற்றுமை உணர்வுக்கு  உதாரணமாக திகழ்ந்து வருவதைக்  காட்டுகிறது!

    இஸ்லாம் மதம்,   உழைக்கும்  மக்களிடம், சமூகத்தில் தாழ்ந்த நிலையில்  இருக்கும் மக்களின்  பார்வையில் ஏற்றுக்கொள்ளபடும்  நிலையைக் காட்டுவதையும் உணரலாம்!

   " தமிழக வைணவ அலை பிற அலைகளைத் தாண்டி இந்திய மாநிலமெங்கும்  பரவியதற்கு இஸ்லாத்தின் துணை வலிமையே  பெரிதும் காரணம் என்பதில் ஐயமில்லை."  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"  என்ற கொள்கையில் தமிழரினும் வீரிய உரமுடையோர்  இஸ்லாமியர் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்,  அதன் அரசியல்  தாக்குதலை விட   பண்பாட்டுத் தாக்குதலே  வடதிசை மாநில வாழ்வை  17 -ம் நூற்றாண்டிலிருந்து  பெரிதும் அசைக்கத்  தொடங்கிற்று  என்பதில் ஐயமில்லை. தமிழக வைணவ அலை அதனை எதிர்த்துத்  தற்பண்பு பேணும் காப்புக் கருவியாகவும் அதனுடன் இணைந்து தளர்ச்சியைப் போக்கும் மறுமலர்ச்சிப் படையாகவும்  புதுத் தேசியமாகவும் இயங்கிற்று. இவ்வலையைப் பல இடங்களில் இஸ்லாம்,  பகை அலையாக  கருதாமல் எதிர்கொண்டு தழுவிற்று என்பதற்கு பல சான்றுகள் காணலாம்
.
     இஸ்லாத்தை எளிதில் வரவேற்றவர்கள் இஸ்லாம் வரும்வரை  சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவராக  இருந்த பழங்குடியின மக்களே. அவர்களிடையே தென்னாட்டுச் சைவ வைணவ இயக்கங்கள் பலரைப் பக்தர்களாக்கியது போல ,வடதிசையிலும்  வைணவ அலை துளசி தாசர் போன்ற பல  பக்த மணிகளை தோற்றுவித்தது.அத்துடன் இஸ்லாமிய மரபே கபீர் தாசர்  மூலம் வைணவ அலையின் வைரமணி  ஒன்றை அளித்தது. இலக்கியத்தில் 12 -ம் நூற்றாண்டிலேயே  அமீர்குஸ்ரு வடதிசையின் உருவிலா மொழியில் கவிதைக் கனவு கண்டு,மொழி உருவான காலத்தில் உருது,இந்தி,பஞ்சாபி ஆகிய மொழியாளர்களின் பொது மூலக் கவிஞனானான்.அரபு நாட்டிலும் பலம் பாரசீகத்திலும் வளர்ந்த" மறைஞான "இயக்கம் (சூபிகள் இயக்கம்)தென்னாட்டு அறிவுச் சமய ஒளியுடன்  கலந்து, சிற்றாறும்   தன்பொருனையும்  போல எளிதில் இணைவதையும் இங்கே குறிப்பிடலாகும்.  வைணவமும் இஸ்லாமும் கலந்து உருவாகிய புதிய ஒளிகளுள் 18 -ம் நூற்றாண்டில் சீக்கிய சமய முதல்வரும் இலக்கிய முதல்வருமான் குருநானக் ஒருவர். 19 -ம் நூற்றாண்டில் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி கூடச் சைவ அலையும்,இஸ்லாமிய எதிர்ப்பலையும் சேர்ந்து உருவாக்கிய புத்தொளியே யாவர்." (ஆதாரம்: தென்னாட்டு போர்க்களங்கள், இரண்டாம் பதிப்பு , பக்கம்,330 -331 ,பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்,M.A,L.T.,பூம்புகார் பதிப்பகம்,சென்னை-600108 )

       வைணவம் வளர்ச்சிக்கும்  இஸ்லாம் துணை நின்றது, இஸ்லாம் வைணவத்தை  தனது பகையாக  கருதவில்லை, இரண்டும் இனிதே வடதிசையில்  வளர்ச்சியடைந்தன என்றும், இஸ்லாத்தை தமிழகத்திலே எளிதில் வரவேற்று ஏற்றுகொண்டவர்கள்  சமூகத்தில் தாழ்த்தப்பட்டோராக கருதப்பட்டவர்கள் என்பதும் மேற்கண்ட  ஆசிரியரின்  கூற்றில் இருந்து  அறியவருகிறது!

    ஆனால்    சைவசமயமானது  இஸ்லாம்,வைணவம் ஆகிய இரண்டுடன்,  
மோதல் போக்கையே,கடைபிடித்து வந்தது,  சைவசமயம் தன்னிலையைத்  தக்கவைத்துக் கொள்ளவும், சைவ சமயத்தை நிலைநிறுத்தவும்,  வேண்டி, அது  போராடவேண்டிய நிலை  தமிழகத்தில் ஏற்பட்டது!

      சைவத்தின் போராட்டத்தையும் அதன் விளைவுகளையும் குந்தவையின்  இஸ்லாம் குறித்த ஆதாரங்களுக்குப் பிறகு பார்க்கலாம்!


Comments

 1. திருவாளர் ஓசூர் ராஜனை பற்றி நான் முன்பு எழுதி இருந்த பல தகவல்கள் உண்மையாக மாறிவருகின்றன.ஆரம்பத்தில் பிராமணீய எதிர்ப்பு என்று தொடங்கியவர் இப்போது இஸ்லாமின் பிரசார பீரங்கியாக செயல் படதுவங்கிவிட்டார்.இதைதான் முன்பே எடுத்துக்கூறி இருந்தேன்.பார்ப்பனீய எதிர்ப்பு என்பது இஸ்லாமின் அபிமானம் என்கிற அளவுக்கு சிலர் எண்ணுவது ஆபத்தானது என்பதே என் நிலைப்பாடு.திரு மதிமாறன் என்பவரும் இப்படியே பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற போர்வையில் பலவித சால்ஜாப்புகளோடு கடைசியில் இஸ்லாம்தான் ஒரே வழி என்று முடிக்கின்றார்.ஓசூர் கண்டுபிடிப்பாளரின் தற்போதைய பதிவு அவரின் ஆசையை படம் போட்டு காட்டி உள்ளது. அதைப்பற்றி நிறைய விவாதிக்கலாம் என்றாலும் வழக்கம் போலவே தவறான கருத்து ஒன்றை அவர் தெரிவித்திருப்பதால் அதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.சீக்கிய மதம் உண்டானத்தின் காரணமே இஸ்லாமின் மதவெறிதான்.சீக்கியர்கள் ஏன் தங்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கிறார்கள்,ஏன் ஒரு சிறு கத்தியை அவர்களின் மத சம்பிராதயமாக வைத்திருக்கிறார்கள் என்று அவர்களிடமே கேளுங்கள்.சொல்வார்கள் ஏன் என்று.அதை நான் இங்கு எழுதினால் பல மூளை இல்லா மனிதர்களுக்கு கோபம் வரலாம்.இந்த லட்சணத்தில் குருநானக் அவர்கள் இஸ்லாம் அபிபானியாம்.இப்படி பஞ்சாப் பக்கம் போய் சொல்லிவிடாதீர்கள். தலை இருக்காது.திரு ஓசூர் கண்டுபிடிப்பாளருக்கு இஸ்லாம் கண்ணை மறைக்கிறது போலும்.

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பனீய எதிர்ப்பு என்பது இஸ்லாமின் அபிமானம் என்கிற அளவுக்கு சிலர் எண்ணுவதாக நீங்கள் நினைப்பது தவறு. தவிர நான் சீக்கியர்களின் மதம் பற்றியோ,குருநானக் பற்றியோ,எனது கருத்தை கூறவில்லை.பன்மொழிப் புலவர் அப்பதுரையாரின் ஆய்வையே மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன்! அவரது தென்னாட்டு போர்களங்கள் நூல் தமிழகத்தின் வரலாற்றை சொல்லும் சிறந்த நூலாகும்!

   Delete
 2. மந்தாகினி என்பது ஒரு ஊமைத்தாயின் பெயரல்லவோ

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?