Posts

Showing posts from April, 2012

பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டம்!

  பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின், தமிழர்களின் போராட்டமாக  இடங்கை-வலங்கைப் போராட்டத்தை சொல்லலாம்! 

          இந்த போராட்டம்,ஒன்றிரண்டு வருடங்களில் நடந்து முடிந்த போராட்டம் இல்லை.900 -ஆண்டுகளுக்கும் மேலாக,வாழையடி வாழையாக,  உழைக்கும் மக்களின் வாரிசுகளுக்கும், ஆதிக்கத்தை நிலைநாட்டி,அடக்கி ஒடுக்கும்" பிராமணீயம்" என்ற பாசிசத்துக்கும்  இடையில் தொடர்ந்து நடந்த போராகும்!
  இடங்கை-வலங்கை போராட்டம் கி.பி.11 -ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 -ஆம் நூற்றாண்டு வரையில் நடந்ததாக தமிழகத்தில் காணக்கிடைக்கும்  பல  கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த போராட்டத்தின் தொடக்க காலம் எனபது  கி.பி.பத்தாம் நூற்றாண்டு என்பதை அறிய முடிகிறது!


         'இடங்கை-வலங்கை சாதி வரலாறு ' எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னை பல்கலைக்கழக  நூலகத்தின் பலன்சுவடிகள் பிரிவில் காணப்படுகிறது!  இச்சுவடியானது,இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த,  98  சாதிகள்  கரிகால சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும் வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கை சாதியினர் என்று கருதப்…

நக்கன் பரவை என்னும் ஆடல் மகள்,அனுக்கியர்!

நக்கன் பரவை  என்னும் ஆடல் மகள்,அனுக்கியர் மீது ராஜேந்திர சோழன்  கொண்ட காதல்{?} தமிழகத்தை  பிராமணர்களின் ஆதிக்கத்தில்  கொண்டுவருவதற்கு  பெரிதும் உதவியுள்ளது!


    நக்கன் பரவை என்ற ஆடல் மகளிர்,அனுக்கியர் தனது   காதல் என்ற அஸ்திரத்தால் கங்கை முதல் கடாரம் வரை  வென்ற மாமன்னன்  ராஜேந்திரனை, எளிதில் வீழ்த்திய விந்தையை  தமிழக வரலாற்றில், அறிந்தவர்கள் குறைவுஆகும்!  

     திருவாரூர் கோயில் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கும் ( பல கல்வெட்டுகளில்) இவரை தெய்வமாகவும் ஆகியுள்ளதுடன்,ஒரு பட்டத்து ராணிக்கும் கிடைக்காத சிறப்புகளை இவளுக்கு கிடைக்கும்படி செய்துள்ளனர். 
காரணம், இந்த ஆடல்மகளிரான  நக்கன் பரவை என்பவர்,விருப்பத்தின்படி ராஜேந்திரசோழன்  தனது 18  -ஆவது ஆட்சியாண்டில், திருவாரூர் தியாகேசர்  கோயிலை  கற்றளியாக (கற்கோவிலாக-  கி.பி.  1028 -யில்) எடுத்திருந்தான்!
     திருவாரூர்   கோயிலுக்கு  பரவை நாச்சியாரும் வீதி விடங்கன் கருவறையின் வெளிப்புற  உபனாதி ஸ்தூபி வரையும்  உட்புறம் முழுவதும்  பொன் தகடுகள்  போர்த்த, தனது பங்குக்கு 20643  பொன் கழஞ்சும்,மகாமண்டபத்தின் விதானத்  தூண்கள்  அத்தனையையும்  செப்புத…

பிராமணர்களின் நலனில் ராஜேந்திர சோழனின்!

  ராஜராஜ  சோழன்  உயிருடன்  உள்ளபோதே  ராஜேந்திர சோழன் கி.பி.1012 -யில் அரசனாகி உள்ளன்! அவன்  அரசனாகஆவதற்கு  பிராமணர்களின்  பங்களிப்பும்,உதவியும்  இருந்துள்ளது எனபது வரலாற்றில்  இருந்து அறியும்வகையில்  சான்றுகள் உள்ளன.
      குந்தவை நாச்சியார் மதம் மாறிய பின்பு, பிராமணர் தங்களது நலனைக் காக்க  ராஜராஜன்  உதவ மாட்டான் என்பதை அறிந்து, ராஜராஜனை அரச பதவியில் இருந்து ஒதுக்கி,அவன் மகன் ராஜேந்திர சோழனை  அரசனாக்கி உள்ளார்கள்!  ராஜராஜனும் அவனது மனைவி திரிபுவன மாதேவியும் "ஹிரணிய கர்ப்பம்" புகுந்த செயலும்  அதன் காரணமாக  நடந்த செயலாகவே  விளங்குகிறது!

          ராஜேந்திர சோழன் அரசனான பிறகு, பிராமணர்களுக்கு  அவனது தாயாரான  "திரிபுவன மாதேவி" பெயரில்  சதுர்வேதிமங்கலத்தை  உண்டாக்கி,   ஐம்பத்தொரு   கிராமங்களையும்  அதற்கு  உரிய நிலங்களையும் இறையிலி நிலங்களாக்கி,( இறையிலி நிலம்-அரசுக்கு எந்த வரியும்  கொடுக்காமல்  அனுபவிக்கும் நிலங்கள்) 1080 -பிராமணர்களுக்கு தானமாக  கொடுத்துள்ளான்! 
      இந்த நிகழ்ச்சியை  கரந்தைச் செப்பேடுகளின்  மன்னர் மரபுப் புகழ்ச்சி( பிரசஸ்தி )செய்யுள் 67 ,68 -ஆகியவை கூறு…

பிராமணர்கள் ஆதிக்கத்தை தடுத்த ராஜராஜ சோழன்!

உத்தம சோழனால்  ஆதரிக்கப்பட்ட  பிராமணர்களின்  ஆதிக்கத்தை  ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது,தடுக்கும்  செயல்களில் ஈடுபட்டு  வந்துள்ளான்!
         தனது அண்ணன்  ஆதித்ய கரிகாலனைக்  கொன்றவர்களை  கண்டுபிடிக்காமலும்,கண்டுபிடித்து  தண்டிக்காமலும்,கொலையாளிகளை நாட்டிற்கு  அறிவிக்காமலும்  இருந்த நிலையை உணர்ந்து, ஆட்சிக்குவந்த  இருஆண்டுகளில்  கண்டுபிடித்து, அவர்களது  சொத்துக்களைப் பறிமுதல்  செய்து, "திருவநேந்தேசுவரத்து" கோயிலுக்கு  ஒப்படைக்கும்  பணியைச் செய்தான்!
       இந்த பணியை ராஜராஜனின் ஆணைக்கு  இணங்கி, " கோட்டையூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும்,புள்ளமமங்கலத்து சந்திர சேகரனும் செய்தனர்"  என்று( Epigrapic india volume XXI. No.27) தெரிவிக்கிறது! 
        ராஜராஜனின்  மெயகீர்த்தியாக (புகழ்ந்துரைக்கும் ) பாடல் ராஜராஜனின் வெற்றிகளைப் பற்றி கூறுகிறது!
       அதில் இடம் பெற்று உள்ள"  காந்தளூர் சாலை கலமருத்தருளிய"   எனபது  பிராமணர்களின் பொறுப்பில் இயங்கிவந்த  இடம் எனவும், அங்கு பிராமணர்களுக்கு  ஆட்சி,அதிகாரம் குறித்த பயிற்சி( இன்றைய ஐஏஎஸ்,ஐபிஎஸ்  போல)அளிக்கப்பட  கல்விசாலை எனவும், தனது…

கல்வெட்டுகளில் அறியாதார் செயலும் அறிந்தாரின் அலட்சியமும்!

 கல்வெட்டுகள் அழிவுக்கு காரணமாக  அத்துறையில் உள்ளவர்கள் சொல்லும் குற்றசாட்டு,கல்வெட்டுகள்  கோயில் பணிகளை செய்யும்போது, பணியாளர்களின் தவறாலும்,கவனக் குறைவாலும் சிதைந்தும்,சேதமடைந்தும் விடுகின்றன என்பதாகும்!
    இவ்வாறு சேதமடைந்து விடுவதை  கல்வெட்டு ஆய்வாளர்கள்  அறியாதார் கை பட்டு கல்வெட்டுகள் சேதமடைந்ததாக  குறிபிடுகின்றனர்!
     இவ்வாறு அவர்கள் சொல்லுவதில்  உண்மை இல்லை.  அவ்வாறு சொல்வது  உள்நோக்கமுடன் சொல்வதாகும்! தங்களது கடமையை சரியாக செய்யவில்லை என்று அவர்களே தரும் ஒப்புதல் வாக்குமூலமாகவும்,தமிழர்களின்  வரலாற்றில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுவதாகவும்  கருதலாம்!   

கல்வெட்டு துறை,தொல்லியல் துறைகளில் ஆய்வுக்கும், பராமரிப்புக்கும் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது! அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு, முறையாக தங்களின் பணிகளை செய்யாதவர்களே, தமிழின வரலாற்றில் அக்கறை  இல்லாதவர்களே, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே..  அதிகமாக மேற்கண்ட துறைகளை ஆக்கிரமித்துக்கொண்டு, உள்ளதால் ஏற்பட்ட நிலையிது என்று  தோன்றுகிறது!

      அப்படி  உள்ளவர்களின் அலட்சியத்தால்,அவர்களின் தனித்த விருப்ப…

அழிவுக்கு ஆளான கல்வெட்டுகள் !

வரலாற்றை பின்வரும் தலைமுறைக்கு சரியாக தெரிவிக்க உதவுவது கல்வெட்டுகள் .அத்தகைய கல்வெட்டுகளில் பலவும் தமிழகத்தில் சிதைவுக்கும் அழிவுக்கும் ஆளாகியுள்ளது!
கல்வெட்டுகள் சிதைவு,அழிவு போன்றவற்றால்  உண்மையான வரலாற்றை அறிந்துகொள்வது..  அறிதாகப்பட்டு  உள்ளது!  இதன் விளைவாக வரலாற்றை தவறாகவும்,திரித்தும்  கூறும் நிலை ஏற்பட்டு உள்ளது! கல்வெட்டுகள் அழிவுக்கு காரணங்கள்  என்ன? என்று  பார்ப்பதற்கு முன்பு,தமிழகத்தில் அழிவுக்கு ஆளான கல்வெட்டுகள் சிலவற்றை அறிந்துகொள்வோம்!

      காட்டு மன்னார் கோயிலுக்கு (இந்த கோயில் கருவறையில் உள்ள  கல்வெட்டுதான் ஆதித்த கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்கள் யார்,அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பற்றி கூறுகிறது} நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள," மேலக்கடம்பூர்"  என்று அழைக்கப்படும் ஊரில்  "அமிர்தகடேஸ்வரர்  "கோயிலில் படியெடுக்கப்பட்ட  நான்கு கல்வெட்டுகளுக்கு இடையில் ,சில  துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன.!

       இந்த துண்டுக் கல்வெட்டில் ஒன்று  உத்தமச் சோழனைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் கல்வெட்டாகும்.! இக்கல்வெட்டு கூறும் செய்தியை அறிந்துகொள்ளக் கூடாது என்றோ…

வரலாற்றை அறிய உதவும் கல்வெட்டுகள்!

Image
நமது பதிவர்களில் சிலர் இந்த வரலாற்று ஆய்வுதொடரில்;ஆதாரம் எங்கே?   என்றுகேட்டு கருத்துரை இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்!
உண்மையில் ஒவ்வொரு  பதிவும்  ஆதாரத்துடன் இடப்பட்டு வருவதை அவர்கள் அறியாமல்,அல்லது ஏதோ காரணத்தால்  ஏற்றுகொள்ள மறுத்து இவ்விதம் நடந்து கொள்கின்றனர்! 
ஒரு வரலாற்று ஆய்வுக்கு ஆதாரம் இன்றியமையாதது! ஆதாரங்கள் எனபடுவது, கல்வெட்டுகள்,கோயில் தலவரலாறு,செப்பேடுகள்,  இலக்கிய நூல்கள், புதை படிமங்கள், அகழ்வாராய்ச்சி, கண்டெடுக்கப்படும்  சிலைகள்,காசுகள், முதுமக்கள் தாளிகள்,முன்னோர் பயன்படுத்திய கருவிகள், இடம்,காலசூழல்,ஆகியவற்றை உள்ளடக்கியது!
நான் ஆதாரமாக அவைகளைக் குறித்தே வருகிறேன்! சிலர் இன்னும் ஒருபடி மேலே போய்,ஹோசூர் ராஜன், "கரிகாலன் கல்வெட்டு இது" என்று அவரே தயாரித்து   காட்டினாலும் காட்டுவார் என்கிறார்கள்! கல்வெட்டுகள் குறித்த அவர்களது பார்வையும் அறியாமையையும் எண்ணி  வருத்தப்படலாம்! 
உண்மையில் அவர்கள் கூறுவதுபோல,  யாரும் புதிதாக கல்வெட்டுகளை உருவாக்கி அவற்றை ஆதாரமாக காட்டிவிட முடியாது. !
காரணம், கல்வெட்டுகள் காலத்துக்கு ஏற்றபடியும்  அதில் எழுதப்பட்டுள்ள   கிரந்த எழுத்து…

குந்தவை மதம் மாறியது எப்போது?

        குந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில்  பிறந்தவர் என்று,திருச்சி  மாவட்டம், லால்குடி வட்டம், "பாச்சில்" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது!
    வேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,"மேல்பாடி"என்ற ஊர் உள்ளது!

      பொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின்  பாட்டனாரான  அரிஞ்சய சோழன் " படைவீடு" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, "ஆற்றூர் துஞ்சின தேவர்" என்றும், "ஆற்றூர் துஞ்சின பெருமாள்" என்றும் வரலாற்றில்  குறித்து வருகிறார்கள் !


     ( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.)   அரிஞ்சய சோழன்  படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில்  இறந்தார். அவர் இறந்த  மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த  இடத்திலேயே  அவரது   நினைவாக,அரிஞ்சய சோழனின்  பேரன், ராஜராஜன்  ஒரு கோயிலைக் கட்டினான்! இன்று அக்கோயில் "அவனீச்வரம் கோயில்&…

குந்தவை அடக்கமான இடம் எது?

Image
   ஸ்ரீ ரங்கம் கோயிலொழுகு கூறும் செய்திகள், சமயபுரம் கோயில் தலபுராணம் கூறும் செய்திகள், ஸ்ரீ ரங்கம் கோயில்,சமயபுரம் கோயில் அமைவிடங்கள்  ஆகிய அனைத்தையும்  ஒருங்கே ஆராய்ந்தால் குந்தவை  நாச்சியார்  மதம் மாறிய இடம்,சமயப்புரட்சி செய்த இடம்  சமயபுரமாக  இப்போது அழைக்கபட்டுவருகிறது  என்பதையும் ஆதியில்  சமயபுரத்தின் பெயர்  கண்ணனூர்,கண்ணபுரம் என்றே"கோயில் புராணம்"  சொல்வதையும் கருத்தில் கொண்டு  ஆராய்ந்தால்,  குந்தவையின் மதமாற்றத்துக்கு பிறகே, இப்பெயர் வந்திருக்கும் என்பதையும் நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்!

         குந்தவை இஸ்லாம் மதத்துக்கு  மாறி,  இஸ்லாமிய பெண்ணாகவே  இறந்துள்ளார்.! அவர் இறந்து, அடக்கம் செய்யப்பட்டுள்ள  சமாதியும் கூட திருச்சியிலேயே தான்  இருக்கிறது!


          அவரது   சமாதி, இஸ்லாமிய ஞானியும்,குந்தவையின் வளர்ப்பு தந்தையுமான   "ஹஜரத் தபலே ஆலம் பாதுஷா, நத்தார் வலியாரின்"  அடக்க இடமான  தர்காவிலேயே குந்தவையும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்!  இன்றும் இவரது  சமாதி, நத்தாரின்  தர்காவில் இருந்து வருகிறது!

குந்தவை நாச்சியார் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி, நத…

ஸ்ரீ ரங்கம் கோயில் தரும் செய்திகள்!

  ஸ்ரீ ரங்கம்  கோயில் விருத்தாந்தம் கூறுவதைப் பார்ப்போம்.
"நம்பெருமாள் புறப்பட்டருளின பின்பு அற்றபற்றர்  வாழும் அந்தணீர் அரங்கம்  என்றும் நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றும் தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம்  எண்ணும்படியான கோயிலானது அழகு அழிந்தது" எனக் கோயில் விருத்தாந்தம் கூறுகிறது.


     இக்குறிப்பு, 'நம்பெருமாள் என்கிற சிற்பசிலையை  எடுத்துச் சென்றபிறகு கோயிலின் அழகு குறைந்துவிட்டது' என்பதை அறிவிக்கிறது.! இவ்வாறு ஏன் அறிவிக்கிறது? நம்பெருமாள் என்ற சிலையை ஏன் எடுத்துச் செல்லவேண்டும்? என்ற கேள்விக்கு  விடையும்  இருகிறது!


    ஸ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் நிகழ்ச்சி.. .   " பின்னும் அங்கே வந்து ஆக்கிரமித்தவன் செய்தபடி திட்டக் கொடிமதிப் பிடிங்கி கண்ணனுரிலே(இன்றைய சமயபுரம்) தனக்கு   ஆவரணமாகக் கட்டுவித்து,பின்னையும் அங்கே உபத்ரவங்களைப் பண்ண, உபக்கரமிக்க அவ்வளவிலே சிங்கபிரான் என்னும் பேரையுடையோராய்  பெருமாள் திருவிளையாட்டமான அழகிய மணவாளர் காணிய பிராமணர்ஆய், தமிழ் விரகரான ஒருவர், துருஷ்கன் வாசலிலே காரியம் ஆராய்ந்து நின்று, அவன் நினைத்தபடி ஒன்றும் செய்யாமல் அவனுக்க…

திருமழபாடி கோயிலிலும் குந்தவை மதம்மாறிய சான்று!

  ராஜராஜன்ஆட்சிக்  காலத்தில், பதினாறு சிறு நாடுகள் அடங்கிய 
வள நாடாக விளங்கிய பகுதி திருமழபாடி ஆகும். இந்தவூரில்  அமைந்த கோயிலை  ராஜராஜன் கற்கோவிலாக எடுத்து,தனது ஆட்சிகாலத்தில் புதுப்பித்து உள்ளான்.என்பதை இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகள் அறிவிக்கின்றன .இந்த கோயில்   மற்றும்  அமைந்துள்ள ஊரில்  தொல்லியல்துறையினரால் ஆய்வுகள் செய்யப்பட்டும் உள்ளது.

     கல்வெட்டு ஆய்வாளரும்,திருமழபாடி  குறித்து,  "ஊரும் கோவிலும்" என்ற நூலைஎழுதிஉள்ளவருமான,'சேக்கிழார்அடிப்பொடி''முதுமுனைவர்' தி.ந.இராமச்சந்திரன்    என்பவர்,  "சோழர் குல மலைமுடி ஆகிய ராஜராஜனின் ஆட்சியில்,மழபாடியின் புகழ் பேரரசு எல்லையையும் கடந்து பரவியது" என்று  குறிபிடுகிறார்.


    திருமழபாடியில்  உறையும் இறைவனுக்கு  இப்போது," வைத்தியநாதர்"  என்ற பெயர் விளங்கிவருகிறது.  இவ்வூருக்கு அருகில் கொள்ளிடத்தின் தென்கரையில்  வைத்தியநாதபுரம் என்ற ஊரும் உள்ளது.    ஆனால், இந்த கோயிலில் உறையும் இறைவன்பெயர்,  'ஜுனேஸ்வரர்' என்று 1944 -ஆம் ஆண்டு இக்கோவில் தேவஸ்தானத்தால்  வெளியிடப்பட்ட திருமழப்பாடி கோயில் வரலாறு…

குந்தவை அடக்க தர்காவில் திருவிளக்கு வழிபாடு !

Image
குந்தவைக்கு மந்தாகினி என்று மற்றொரு பெயர் இருந்தது! உத்தமசோழன் ஆட்சிகாலத்தில்  தனது தம்பியுடன்  தலைமறைவாக  இருந்தபோது,  மந்தாகினி என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளார்! இந்த பெயர் அரசகுலத்தினர்  உள்ளிட்ட சிலருக்கே தெரிந்த பெயர் ஆகையால், இந்தபெயரில்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவருவது  எளிதாகவும் இருந்துள்ளது எனபது விளங்குகிறது!

நெல்லிக் குப்பம், எம்.ஏ.ஹைதர் அலி என்பவர்  இஸ்லாமிய பெருமக்களும், பல் நூல்களை எழுதிய இஸ்லாமிய அறிஞராவார்! திருச்சி நத்தர் குறித்தும்  நூல்  எழுதியுள்ளார்! இவர், குந்தவையின் மற்றொரு பெயரான  மந்தாகினி என்ற பெயர் குறித்து,"அரபு மொழி லிபியில் மந்தாகினி என்பதை, மீ  ம் மீ  ம்  தால் (ஜால்) கியாப்நூன் என்ற ஐந்து எழுத்துக்களால்  எழுதவேண்டும். "மந்தாகினி" என்ற பெயரை மேற்சொன்ன விதத்தில் எழுதி வந்துள்ளார்கள் . அரபு மொழி லிபியான  மேற்சொன்ன  ஐந்து எழுத்துக்களும்  ஹூருப்  என்னும் எழுத்துக்களுக்கு முன்புள்ள எழுது வடிவமாகும். ஹூருப் வடிவத்துக்கு  முன்பிருந்த அரபு மொழி லிபியில் மந்தாகினி என்ற  பெயர் விளங்கிவிளங்கிவந்தது..என்று  கருத்து தெரிவித்துள்ளார்! 

      கு…