தாலாட்டுப் பாடல்களில் குந்தவைக் குறிப்புகள்!

   சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டபோது, சோழக்குடிமக்களும் அவரிடம்  அன்பு கொண்டோரும் அவரை சமாதானபடுத்தவும்அவர் எடுத்த
 முடிவை மாற்றிக்கொள்ளவும்  அல்லதுபரிசீலனை  செய்யுமாறு கேட்டும்,  அவர் இல்லையென்றால் எங்களது  நிலை என்னவாகுமோ,என்ற ஏக்கம்,
பரிதவிப்பு, இயலாத நிலை ஆகியவைகளைஅவருக்குஎடுத்துரைக்கும்  
வகையில்,தங்களது  கவலை மற்றும் அச்ச உணர்வினைத்
தெரிவிக்கும் வகையில்,    சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் உள்ளதையும்,  அப்பாடல்கள் குந்தவையின்   பெருமைகளையும், அவரது இருப்பையும்  கூறுவதாக உள்ளதைக் காணலாம்!


"நாடி வந்தாள், தஞ்சை நகர் புகுந்தாள்,
நல்லவற்குத் தாயாக,தீயவருக்கு தீயாக
மாரிவந்தாள், உருமாறி வந்தாள்!
சமயபுரம் அவளின் படைவீடாம்,
புன்னைவனம்  நம் புகழிடமாம்
கண்ணபுரம் அந்த அன்னையகம்"


"பத்தாத பத்தினியே, பாரளந்தோன் தங்கையரே
என்டேன்றோர் பங்கில் ஒளியமாய் நின்றவளே,
அண்டம் தொழில் நாயகியே யாரிவர் உன்புதுமை
அன்னையே உந்தனோட அற்புதத்தைக் கண்டு எழுதி, 
 என்னால் எடுத்துரைக்க இயலுமோ தாயாரே,
கண்ணனூர் வீற்றிருந்து   கம்பாதி ரரீரோ"


" திரிசூல நாயகி தெய்வ கபாலனி
என் தீவினைபோக்க வருவாய்
அருலோங்கும் அருள்திரு அரங்கனின் தங்கையே"


"ஆன்றதவ முனிவர்கள் மன்னர்கள் பக்தர்கள்
வழிபட்டு வந்த தாயே
தஞ்சை வளர் மாறியே தாரணி புகழ் சக்தியே,
தஞ்சமே தாள் பணிந்தேன்"
"குமரிக் குடிலை சங்கரி போற்றி
குங்குமம் அணிந்த குந்தவை போற்றி
திகம்பரி திருநிலை நாயகி போற்றி
கண்ணனூர் அமர்ந்த கௌமாரியே போற்றி"


"அருள்சித்தர் பாபாவு ஆகிய திருமன்னர்கள்
வழிபட்டு வந்த தேவி;
கருணையின் உருவம் நீ,
கண்கண்ட தெய்வம் நீ,
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே,
சமயபுரத் தெல்லைவிட்டு, தாயரே வாருமம்மா!
கண்ணபுரத்தாலே ,காரண சௌந்தரியே;
கண்ணபுரத் தெல்லைவிட்டு  காரணியே வந்தமரும்!"


"சத்தியங்கள் பூச்சொரிய சமயபுரம் நின்றவளே,
சங்கடங்கள் போக்க;சடுதியில் வாருமம்மா!
ஜாதி,ஜனம் காக்க, சமயபுரம் கண்டவளே!
கைதொழுவார் கரம் காக்க  கண்ணனூர் நின்றவளே,
கண்ணீர் மலர்தொடுத்து,கனத்த பூசை செய்திடுவோம்!"


கரகம் கொண்டுவந்தோம், காலி..முகம் பார்க்கலையே!
திருநீறு பூசிக்கொண்டு தேடிவந்தோம்,பார்க்கலையே!"

   இப்படியே மாரியம்மன்  தாலாட்டு, காளியம்மன் பாடல்கள்  உள்ளன. இவைகள்  ஏதோ,நானே  வலிந்து எழுதியதோ, நம்ம பதிவர்கள் சொல்லுவதுபோல கற்பனையாகவோ,ஞான திருஷ்டி  மூலமோ சொல்லவில்லை! சமயபுரம் கோயில் நிர்வாகம் மூலம் வெளியிடப்பட்ட,சமயபுரம் கோயில் தலவரலாறு நூலில் உள்ளதையே தந்துள்ளேன்!

     இந்த பாடல்களில், பாரளந்தோன்  (ராஜராஜன்} திரிலோகம்  சேர,சோழ பாண்டிய மூன்று நாடுகளின் அரசன், தஞ்சை தரணி, அரங்கனின் சகோதரி, குந்தவையின்  பெருமை  முதலிய பலவும் இடம்பெற்றுள்ளதை காணலாம்! மேலும் பலமன்னர்கள் போற்ற வாழ்ந்தவர், வழிபாடும் நிலையில்  இருந்தவர் என்பதுடன், அருள் சித்தர்  பாபாவு ஆகிய திருமன்னர்கள்  வழிபட்டு பட்டுவந்ததாகவும்  குறிக்கபடுகிறது! இந்த பாபாவு என்பவர்,இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப, சுந்தர சோழன் காலத்தில் வந்தவர்.பாபா பக்ருதீன் என்பவர். சிஸ்தான் நாட்டின் (இன்றைய துருக்கி நாட்டின் ஒருபகுதி) மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ஷாபக்ருதீன் என்பதாகும்! இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பவந்த, இவர்  திருச்சியில்  இருபத்து நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். உத்தமசோழன் காலத்தில்,குந்தவை நாச்சியார், ராஜராஜனின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிய இஸ்லாமியர்களில் ஒருவர்! பிறகு, இஸ்லாம் மார்கத்தை  பரப்பவேண்டி,  உத்தம சோழன் படைகளுக்கும்  இவருக்கும் செஞ்சியில்  போர் நடந்ததாக  இவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது! பிறகு, இஸ்லாம் மார்கத்தை  பரப்பவேண்டி,தமிழகத்தை விட்டு சென்ற  இவரது  அடக்க இடம், சமாதி,(தர்கா-பாபா பக்ருதீன் சுகர்வாதி தர்கா என்றபெயரில்) ஆந்திரமாநிலம், அனந்தப்பூர் மாவட்டம்,  பெனுகொண்டா என்ற நகரத்தில்  உள்ளது!திருச்சியில் உள்ள தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்கு  இங்கிருந்து இஸ்லாமிய பக்கீர்கள் ஆண்டுதோறும் வருவது இன்றுவரை நடந்துவருகிறது!


      உமையவள், "ஞானசம்பந்தருக்கு பாலுட்டினாள்"  என்றால் அது நடைமுறையில் சாத்தியமா? உமையவள் ஊட்டியது ஞானபாலா? அல்லது தாய்பாலா?  அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இல்லை ஆதாரம் காட்டமுடியுமா? என்று கேட்டகாத,    நம்ம " நம்பிக்கைத் திலகங்கள்"ஆன்மீக அற்புதங்களை  திறந்த வாயை மூடாமல்  கேட்டுக்கொள்ளும் ஆன்மீக ஜீவிகள்,   வரலாற்றில்  இருட்டடிக்கப் பட்டு, வெளிச்சமிடப்படாத  தகவல்களை..  உள்ள ஆதாரங்களுடன், காரண காரியங்களுடன், நான் விளக்க வருவதை,எனக்கு கொஞ்சமும் நேரம் கொடுக்காமல், தாங்களாகவே  ஒரு முடிவுக்கு வந்து ,தங்களுக்கு தோன்றியபடி  விமர்சனம் செய்வது எனக்கு வியப்பை அளிக்கிறது! 

போகட்டும்  உள்ள ஆதாரங்களை  வரிசையாக  பார்வைக்கு  வைப்போம்!


Comments

 1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பாடலின் இடையில் 'ஜாதி, ஜனம்' போன்ற செத்துப்போன சமஸ்கிருத வடமொழியின் சொற்கள் உள்ளனவே. . ? புரியவில்லை.

  ReplyDelete
 2. அந்த கால மொழிசொற்கள், கூறுவதாக இருக்கலாம்!

  ReplyDelete
 3. வண்க்கம் நண்பர் ஓசூர் இராஜன்

  சென்ற பதிவில் கேட்ட கேள்விகளுக்கு இப்பதிவில் விடையளிக்க முயல்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

  நீங்கள் கூறும் ஆதாரங்களை சரிபார்ப்பது எங்கள் கடமையாகிறது.அது உண்மையாக் இருக்கும் பட்சத்தில் அதனை உறுதிப் படுத்துவதில் ஆட்சேபனை இல்லை.

  //சுந்தர சோழன் காலத்தில் வந்தவர்.பாபா பக்ருதீன் என்பவர். சிஸ்தான் நாட்டின் (இன்றைய துருக்கி நாட்டின் ஒருபகுதி) மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ஷாபக்ருதீன் என்பதாகும்! இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பவந்த, இவர் திருச்சியில் இருபத்து நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். உத்தமசோழன் காலத்தில்,குந்தவை நாச்சியார், ராஜராஜனின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிய இஸ்லாமியர்களில் ஒருவர்! பிறகு, இஸ்லாம் மார்கத்தை பரப்பவேண்டி, உத்தம சோழன் படைகளுக்கும் இவருக்கும் செஞ்சியில் போர் நடந்ததாக இவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது! பிறகு, இஸ்லாம் மார்கத்தை பரப்பவேண்டி,தமிழகத்தை விட்டு சென்ற இவரது அடக்க இடம், சமாதி,(தர்கா-பாபா பக்ருதீன் சுகர்வாதி தர்கா என்றபெயரில்) ஆந்திரமாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், பெனுகொண்டா என்ற நகரத்தில் உள்ளது!திருச்சியில் உள்ள தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்கு இங்கிருந்து இஸ்லாமிய பக்கீர்கள் ஆண்டுதோறும் வருவது இன்றுவரை நடந்துவருகிறது!//

  He is the person!!!!!!!!!!!!!

  http://babafakhruddin.tripod.com/index.html

  1.//Birth of Hazarat Baba Fakhruddin

  Hazrath Baba Fakhruddin was born on the 26 Th day of holy Ramzan and the auspicious occasion of Lailat-ul-Khadar in 564 Hijri (1169 CE).It is recorded in the book ‘Shahgada Qalandar’authored by Hazarth Syedna Usuf Qattal (R.A),Bibi Fatima Sagair, mother of Baba Fakhruddin conceived Baba after consuming the Jannati Niyamat given by Hazarath Khizr (AS).As foretold by Hazrat Khizr (AS),recitation of holy Quran was heard from the womb of Bibi Fatima Sagair during the month of Ramzan and Baba was born after the completion of recitation of Quran//

  .//Death

  On Thursday 12 th day of Jamada Al Akhir 694 Hijri' (1295 C.E),as foretold Syedul Aarifien Hazrat Baba Fakhruddin (R.A) passes away from this world after 40 days from this incident at the age of 130 years.//

  ஆகவே இவர் வாழ்ந்தது பொதுஆ (1169 to 1295) சுமார் 126 வருடங்கள்,சரி இருந்து விட்டு போகட்டும்,

  இபோது இராஜராஜனின் காலத்தை பார்ப்போம்!

  /The key dates of Raja Raja are difficult to come by, scholar N Sethuraman, concludes that he was born in circa 947 ACE, was crowned on 18 July 985 and died in 1014 in the Tamil month of Maka.[3]//

  இராஜராஜன் இறந்து 150+ வருடஙளுக்கு பிறகு பிறந்த பாபா எப்படி இராஜராஜனுக்கு உதவினாரா???????!!!!!!.

  இன்னும் நிறைய கேள்விகள் உண்டு.முதலில் காலக் கண்க்குகளை சரி செய்யுங்கள்.!!!

  Thank you

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள சார்வாகன், உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்கள் தெரிவித்த பாபா பக்ருதீன் இறந்த வருடம் ஹிஜ்ரி ஆண்டு சரியானதே! ஆனால் அவர் வாழ்ந்ததாக கூறப்படும் ஆண்டும் ஆயுளாக கூறப்படும் ஆண்டும் தவறானது! ஹிஜ்ரி ஆண்டுக்கும் ஆங்கில ஆண்டுக்கும் பதினேழு நாட்கள் வித்தியாசப்படும் லீப் ஆண்டு எனில் பதினெட்டு ஆண்டுகள் வித்தியாசப்படும்!

   இசுலாமியர்கள் பிறைக்கும் அடுத்த பிறைக்கும் இடைப்பட்ட காலத்தையே மாதமாக கருதுகிறார்கள் எனத் தெரிகிறது!

   நடப்பு ஹிஜ்ரி ஆண்டு 1433 -ஆகும்! இதில் இருந்து பாபா பக்ருதீன் இறந்த ஆண்டை கழித்தால், மீதம் வரும் ஆண்டுடன், பதினேழு நாட்களை ஒவ்வொரு ஆண்டுக்கும் சேர்க்கவேண்டும்! பிறகு அதனை ஆங்கில ஆண்டான 365 - நாட்களால் வகுத்து வரும் ஆண்டுடன் தற்போது நடந்துவரும் ஆங்கில ஆண்டை கழிக்கவேண்டும் அப்படி கழித்துப் பார்த்தால், வரும் ஆண்டுதான் பாபா பக்ருதீன் இறந்த ஆண்டாகும்! அதிலிருந்து அவர் வாழ்ந்ததாக கருதப்படும் ஆண்டை கணக்கிட்டால் வரும் காலமே பக்ருதீன் வாழ்ந்த காலமாகும்! காலக்கணக்கு சுந்தரசோழன், ராஜராஜ சோழன் காலத்துக்கு பொருந்துகிறது என்றே கருதுகிறேன்!

   Delete
 4. நண்பர் ஓசூர் இராஜன்
  நான் குறிபிட்ட
  விடயங்கள் தர்காவின் பிரசாரக் குழுவினரால் நடத்தப்படும் தளத்தின் சுட்டி.ஆகவே தவறாக் இருக்கும் வாய்ய்பு இல்லை.தவறு என்று சும்மா கூறினால் எப்படி?அவர் இந்த வ்ருடம் பிறந்தார் என இந்த புத்தக்த்தில் இந்த ஆய்வாளர் கூறியுள்ளார் என்றே கூறுவதுதானே சரி!.

  பிறகு ஹிஜ்ரி ,கிரிகாரியன் மாற்றம் என்னவோ பெரிய விடய்ம் போல் கூறுகிறீர்கள்,இணையத்தில் இந்த மாற்றத்திற்கு சுட்டிகள் உண்டு.அதில் குறிபிட்ட கிரிகாரியன் ஆண்டு கணக்குகள் சரியானதே

  You can verify the Hiri to Gregorian date conversion here

  http://www.islamicfinder.org/dateConversion.php

  1. பாபா பக்ருத்தீன் பிறந்த வருடம் எது?ஆதாரம் என்ன?

  2.அவர் இறந்தது நீங்களும் ஒத்துக் கொண்டது 694 ஹிஜ்ரி,(1294_1285 கிரிகாரியன்).ஹிஜ்ரி 564ல்(1169) பிறந்தார் என்றாலே 126 வருடம் ஒரு மனிதன் வாழ்ந்தார் என அர்த்தம் வருகிறது.ஒருவேளை 200+ வருடம் முன் பிறந்தால் மட்டுமே அவரும் இராஜராஜனும்[947 to 1014 CE] சம் கால்த்தவர் ஆவார்.அப்படி எனில் அவர் 325+ வருடம் உயிர் வாழ வேண்டும்.

  நீங்கள் வரலாறு எழுதுகிறீர்கள் ஓசூர் இராஜன்.நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஆதாரம் கொடுப்பது கட்டாயம் ஆகிறது.

  எப்படி தெளிவு படுத்துங்கள்.

  ReplyDelete
 5. நீங்கள் உண்மை என நினைப்பதை கூற முயல்வதற்கு உங்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.

  //பாரளந்தோன் தங்கையரே //
  //இந்த பாடல்களில், பாரளந்தோன் (ராஜராஜன்} திரிலோகம் சேர,சோழ பாண்டிய மூன்று நாடுகளின் அரசன், தஞ்சை தரணி, அரங்கனின் சகோதரி, குந்தவையின் பெருமை முதலிய பலவும் இடம்பெற்றுள்ளதை காணலாம்! //

  ராஜராஜன் குந்தவையின் தம்பி என்று நீங்களே முன்னர் பதிவுகளில் கூறியிருந்தீர்கள் அப்படி இருக்க

  இங்கே ராஜராஜனின் தங்கை ( //பாரளந்தோன் தங்கையரே //) என்று எப்படி குறிப்பிடுவார்கள்? இதன் மூலம் இது குந்தவை பற்றிய செய்தி அல்ல என்றுதானே தெரியவருகிறது?

  //திரிலோகம் சேர,சோழ பாண்டிய மூன்று நாடுகளின் அரசன்//

  நீங்கள் கொடுத்த பாடலில் திரிலோகம் எங்கு உள்ளது? திரிசூலம் தானே உள்ளது.
  ஐயா ஏன் இப்படி தவறாக புரிந்து கொள்கிறீர்கள்?திரிசூலம் என்பது என்னவென்று தெரியும் அல்லவா?

  பாரளந்தோன் என்று விஷ்ணுவின் அவதாரத்தை தானே குறிப்பிடுவார்கள் நீங்கள் அதை ராஜ ராஜனுக்கு ஒப்பிடுவது ஏனோ? அவர் பல நாடுகளை வென்றதால் நீங்களே இந்த முடிவிற்கு வந்துவிடீர்களா?
  முன்பின் தெரியாத பாபாவு பெயரை குறிப்பிடும் பொழுது ராஜராஜனின் பெயரை அவர்கள் இப்பாடலில் சேர்க்காமல் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

  //"அருள்சித்தர் பாபாவு ஆகிய திருமன்னர்கள்
  வழிபட்டு வந்த தேவி;//

  இவர் அவரை வழிபட்டதாக தானே கூறுகிறார்கள்...நட்பு பாராட்டியவர் என்று சொல்லாமல் வழிபட்டவர் என்று கூற காரணம்? இதில் பொருட்குற்றம் வருகிறது அல்லவா?
  இன்றும் இசுலாமிய பெண்கள் அந்த கோயிலுக்கு போவதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களும் இவரை போல வழிபடத்தானே போகிறார்கள்?


  //இஸ்லாம் மார்கத்தை பரப்பவேண்டி, உத்தம சோழன் படைகளுக்கும் இவருக்கும் செஞ்சியில் போர் நடந்ததாக இவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது! //

  இசுலாமை பரப்ப வேண்டி தமிழகத்தில் போர் நடந்ததா? இந்த போரில் யார் வெற்றி பெற்றார்கள்?
  உங்களது கூற்றின் மூலம் தமிழகத்தில் இசுலாம் வாளாலும் பரப்பப்பட்டது என்று பொருள் கொள்ளலாமா?


  //ஜாதி,ஜனம் காக்க, சமயபுரம் கண்டவளே! //

  இதன்படி மக்களை காப்பாற்றத்தான் அவர் இஸ்லாமியத்தை தழுவி இருக்க வேண்டும். (அவர் உண்மையாக மாறி இருப்பின்...இது குந்தவை பற்றியதாக இருப்பின் ).

  இருப்பினும் நீங்கள் ஆதாரமாக கூறியவை ஏதும் குந்தவையை குறிப்பிட வில்லையே? ஏன்?


  ராஜ ராஜனுக்கே மக்கள் கோயில் கட்டியதாக தெரியவில்லை அப்படி இருக்க குந்தவைக்கு கோயில் கட்ட அப்படி என்ன அவசியம்?

  தங்கள் பதில் அனைவருக்கும் உண்மையை விளங்க செய்யும் என்று நம்புகிறேன்.

  இக்கேள்விகளை கேட்பதின் நோக்கம் உண்மையை அறிய நானும் முயற்சிப்பதால் தான். தவறாக என்ன மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
  நன்றி

  ReplyDelete
 6. "பத்தாத பத்தினியே,// பாரளந்தோன் தங்கையரே//

  அதாவது பார் அளந்தவன் யார் என்று தெரியாமேல கதைவிடும் பாய் இந்த வராலாற்றை படி பார்-- உலகம் : அளந்தவன்-வாமனன்: (திருமால்) வருடாவருடம் திருவரங்கத்திலிருந்து (அண்ணன் வீட்டிலிருந்து) தங்கை (மாரியம்மனுக்கு) சீர் கொண்டு செல்வர் அதில் சில பொருட்கள் இல்லையென அந்த அம்மன் கோபித்துக்கொண்டு செல்வார் இது தான் கதை உனது இஸ்லாம் கதை விடாதே

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?