ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?

          ஸ்ரீ ரங்கம்  கோயிலில்உள்ள இரண்டாம்  பிரகாரம், ஈசானிய மூலையில்  துலுக்க நாச்சியார்  சன்னதி  உள்ளது.!

         இங்கு,இன்றுவரை   இஸ்லாமியர்கள் வழக்கப்படி,  கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது!

         வைணவ  சன்னதியில்  துலுக்க  நாச்சியாருக்கு  ஏன் சன்னதி? துலுக்க நாச்சியார்  யார்? என்று கேட்டால் , வைணவர்கள்  சொல்லும் கதை  கேலிக்கு இடமளிக்கும்  கதையாகும்!

        இங்கே இருந்த  அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி  நினைவாக,   அவருக்கு  சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில்  வைணவர்கள்  வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று  எடுத்துகொண்டாலும்  முஸ்லிம்கள்  அந்தகாலத்தில்  இருந்தார்கள் எனபது உறுதியாகிறது!)அந்த துலுக்க நாச்சியாரை  டெல்லி  சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை  எடுத்துச் சென்றுவிட்டாராம்.

      ஆச்சாரியார்....  அதுதாங்க,   நம்ம  ராமானுஜ தாசர்  டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக்  திரும்ப கொண்டுவந்து  பிரதிஷ்ட்டை  செய்து வழிபட்டு வந்தனராம்!  "கோயில்  ஒழுகு"  கூறும்  நம்பமுடியாத  கற்பனைக் கதை என்று  நீங்கள்  நூறுசதம்  நம்பலாம்!

      ஏனெனில்,ராமானுஜர் காலத்தில், எந்த சுல்தானும்  டெல்லியில் ஆட்சி செய்யவில்லை!  தவிர, தென்னகத்துக்கு  டெல்லியில் இருந்து  அவர் காலத்தில்  யாரும்  படையெடுத்து வரவும் இல்லை!

       மாலிக்காபூர்  படையெடுத்து வந்தது கி.பி.1323  -யில் என்று கூறுகிறார்கள்! அதுவும்  அவர் ஸ்ரீ ரங்கம் கோயில் பக்கமே வரவில்லை  என்றும்  கூறுகிறார்கள் ! மேலும் ராமானுஜர் வாழ்ந்த காலம்  தென்னகத்தில்  முஸ்லிம்  படையெடுப்பு  நடைபெற்றதாக எந்த வரலாற்றுத் தகவலும்  இல்லை. இதில் இருந்தே,  ஸ்ரீ ரங்கம்  கோயிலில் உள்ள துலுக்கநாச்சியாருக்கும்  கோயில் ஒழுகு  கூறும் கதைக்கும்  எந்தவொரு  தொடர்பும் இல்லை என்பதை  தெளிவாக  உணரலாம்! 

   மேலும்  துலுக்க நாச்சியார், பற்றிய  செய்திகள்  ஸ்ரீ ரங்கம் கோயில்  ஒழுகு நூலில்  ஆச்சாரியார்களின்  வரலாறுக்கு  முன்பே இடம்பெற்று  உள்ளது. அதாவது  ஆச்சாரியார்களுக்கு  முன்பே, ஸ்ரீ ரங்கத்தில்  நடந்த நிகழ்ச்சி என்பதை  அறிவிக்கும்  வண்ணம் உள்ளது! இதில் இருந்து  துலுக்க நாச்சியார்   கதையும், வரலாறும்  முற்பட்டகாலத்தில் நடந்தவை என்பதை  விளங்கிக் கொள்ளலாம்.!

  ஸ்ரீ ரங்கம் கோயிலில் உள்ள  துலுக்க நாச்சியார்  யாராக  இருக்கும்?


    "சோழர்கள் காலத்தில்  மன்னர்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்னும் கருத்து  நிலவியது. சோழ  மன்னர்களை அவர்களது  ஆட்சிக்கு  உள்பட்ட சோழ ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருந்த  மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே  எண்ணிப் பேரன்பு  கொண்டு  ஒழுகி வந்தனர்"  
          ( தி.வை.சதாசிவ பண்டாரத்தார். பிற்கால சோழர் சரித்திரம் 3 -வது தொகுதி. பக்கம்-10)

          அதாவது  சோழ அரசன்  ராஜராஜனை  திருமாலாக  சோழப் பேரரசில்  உள்ள மக்கள்  வழிபட்டு வந்தனர்! அவர்கள் கட்டிய கோயிலில்  மன்னன், அரசமாதேவியின் சிலைகளை  வைத்தும் வழிபட்டு வந்தனர்!  அரசமகளிரும், சோழ அரசில்  செல்வாக்கு மிக்கவரும்  ஆன குந்தவை நாச்சியாரையும் அவ்வாறே  வழிபட்டு வந்தனர்! 

        தஞ்சையில்  ராஜராஜன் கட்டிய  பெரிய கோவிலிலும்  கூட மக்கள் தன்னை வணக்கும் விதமாக  குந்தவை நாச்சியார், தம்மையாக  ஒரு திருமேனி  செய்து  அளித்துள்ளார்!(வித்துவான் வே.மகாதேவன்  அவர்கள் எழுதிய சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்)  

       ஸ்ரீ ரங்கமும் சோழர்கள்   ஆட்சிப் பகுதியில்  இருந்து வருவதுதான்! அங்குள்ள மக்களும்  குந்தவையை  வணங்கி இருப்பார்கள்  என்பதில்  சந்தேகமே இல்லை!   

    ஆனால்  ஸ்ரீ ரங்கத்தில்  இரண்டாம் பிரகாரத்தில், ஈசானிய மூலையில்   உள்ளதோ, துலுக்க நாச்சியார்  சன்னிதியாக உள்ளது! 

       குந்தவைதான்,    இந்த வைதீக  பிராமணர்களிடம்  உள்ள வெறுப்பு உணர்வால்,  பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்  முன்பு சமண மதத்தில் இருந்து,பிறகு சைவ மதத்துக்கு  மாறியதுபோல,(திருச்சிராப்பள்ளி மலையில்  மகேந்திர வர்மன்   சமணத்தில் இருந்து  சைவத்திற்கு மாறியது பற்றிய கல்வெட்டு காணக்கிடைகிறது)


      சைவ மதத்தை வெறுத்து, குந்தவையும்  இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டாரோ?  அப்படி அவர் மாறியதால்தான்...  குந்தவையை, இசுலாமியர்களுடன்  தொடர்பு  படுத்தி, கேலிசெய்து, தங்களது வக்கிரத்தை, ஆத்திரத்தை  பிராமணீயம்  வெளிப்படுத்தி  வருகிறதோ? 

       சரி, குந்தவை,  இசுலாம் மதம்  மாறியிருந்தால்...  அவர்மட்டுமா மாறியிருப்பார்?   அவருடைய ஆதரவாளர்களும்  கூட மாறியிருப்பார்கள் அல்லவா?! மேலும் , அவரது மனதை மாற்றவும், தடுக்கவும் கூட முயன்று இருப்பார்கள் அல்லவா? 

       அது மட்டுமின்றி, அவர் இசுலாம் மதத்துக்கு  மாறியது  எனபது,  எப்போது ? எங்கே நடந்திருக்கும்?  அதுகுறித்த ஆதாரங்கள்  உள்ளதா?  பிராமணீயம் அந்த ஆதாரங்களை  விட்டு வைத்திருக்குமா? இல்லை, எல்லாவற்றையும்  அழித்து இருக்குமா?  எல்லாவற்றையும்  எப்படி அழித்திருக்க முடியும் ?  

       எவ்வளவுதான்  திறமையாக  குற்றம் செய்பவர்களும்  கூட, எதாவது  சில தடயங்களை  தங்களை அறியாமல்  விட்டுவிடுவதில்லையா? அவைகளைக் கொண்டு, துப்பு துலக்கி,  குற்றவாளிகளை  கண்டுபிடிப்பதும், சமூகத்துக்கு  அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதும்  நடந்து வருகிறது!  

      பிராமணீயத்தின்  கண்ணில் பட்ட பிறசமய  இலக்கியங்கள், நூல்கள்  இன்றுவரை  கிடைகாமல்  போனது  தமிழர்களின் "துரதிஷ்டம் " என்று  இலக்கிய ஆய்வாளர்களும், வரலாற்று  ஆய்வாளர்களும்  சொல்லி வருகிறார்களே! 

       இதுபோன்ற,குந்தவையின் மதமாற்றத்தைப்  போன்ற வரலாற்றை  மறைக்கத்தான்  பிறசமய  நூல்கள் கிட்டாத நிலையை, " பிராமணீயம்"  ஏற்படுத்தி  இருக்கிறதா?

       பிறசமய நூல்களை  தேடிக் கண்டுபிடிக்க , ராஜராஜன்  செய்த முயற்சியை  தான், அவன்,  திருமுறைகளை  தேடிக் கண்டுபிடித்தான்,  அதனால் அவனை  "திருமுறைகண்ட  சோழன்" என்று  வரலாற்றில்  திசைமாற்றி  தவறாகசொல்லி வருகிறார்களோ ?என்றும்  கருத தோன்றுகிறது !


        இவ்வளவையும்  மீறி, குந்தவை  மதம் மாறியிருந்தால்,  அவர் மதம் மாறியது குறித்து  அறிந்துகொள்ள உதவும், பிராமணீயத்தின்  பார்வையில் இருந்து  தப்பிப் பிழைத்தும்  பிராமணீயம் அழிக்காமல்  விடப்பட்டும் உள்ள ஆதாரங்கள்  இருக்கலாம் அல்லவா? 

     அப்படி ஏதேனும் இருக்கிறதா?  இருக்கிறது!   இருப்பதாக  நான் கருதும்  ஆதாரங்களையும்  அவற்றுக்கான  காரண  காரியங்களையும்  அடுத்துப் பார்க்கலாம் !
                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

Comments

 1. அறிந்திராத பல உண்மை தக‌வல்களை அறிய தந்தமைக்கு நன்றி.

  தொடருங்கள்.
  ===================

  இன்று என்னுடைய பதிவு

  பாலக விபசாரிகள், கொடூரமாக தெருவில் கொல்லப்படும் ஆதிவாசி தொழிலாளிகள்.

  கதற கதற நொறுக்கப்படும் சிறுமி, கற்பழிக்கப்பட்ட பெண்கள். , மேல் சாதியினரால் நாக்கு அறுக்கப்பட்ட கீழ் சாதியினர்கள்.

  பிராமிணர்களின் எச்சில் இலை மேல் உருளும் கீழ் சாதியினர்கள். Brahmanism, communal fascism.

  நாம் திருந்துவது எப்போ?

  நாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா?

  இக்காரியங்களுக்கு எந்த மதத்தின் மீதாவது சாயம் பூச முடியுமா?


  CLICK >>>>> இதுதான் சுதந்தர இந்தியாவா ? கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ? TO READ <<<<<

  .

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 4. போடா லூசு உன்னோட கற்பனையல்லாம் ஏன் இப்படி தறிகெட்டு போகுதோ.. பிராமணியம் பிராமணன்னு லூசுத்தனம எழுதாம எதாவது உருப்படியா எழுது...

  ReplyDelete
 5. பல புதிய விபரங்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 6. துலுக்க நாச்சியார் சன்னிதி தொடங்கப்ட்டது1600 வருட வாக்கில். கோவிலுக்கு படை எடுத்து வந்த இஸ்லாமிய மன்னன் ( பெயர் நினைவில்லை) ரங்கநாதர் சிலையை தூக்கி சென்றான். அவன் மகள் அந்த சிலை அழகில் மயங்கி ரெங்கநாதர் மேல் காதல் கொண்டாள்.இதுவே நடந்தது, ஆதாரம் திருவரங்க கோவில் புராணம் - தமிழ்நாடு இந்த அறநிலையை துறை வெளியீடு.

  குந்தவை காலம் வேறு இந்த துலுக்க நாச்சியார் காலம் வேறு. தயவு செய்து பொய்களை மட்டும் வைத்து புராணம் எழுதுவதை நிறுத்தவும்.

  மேலும் தொடர்ந்தால் தகுந்த இடத்தில் புகார் அனுப்ப நேரிடும்.

  ReplyDelete
 7. இராமானுஜருக்கும் ,இராமானுஜ தாசருக்கும் வித்தியாசம் தெரியாத நீரெல்லாம் விமர்சனம் செய்யவந்த கொடுமையை என்னசொல்வது?மேலும் கோயிலொழுகு என்பது ஸ்ரீரங்க கோயில் வரலாறை கூறும் நூலல்ல,அது கோவிலில் கடைபிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களை சொல்லும் நூல்.முதலில் நன்றாக படியும் பின்னர் வாதுக்கு வாரும்.

  ReplyDelete
 8. மத வெறி பிடித்த VANJOOR நீயும் உன் கருத்துகளும். செங்கோடி என்பவர் உனக்காகவே ப்ளாக் நடத்துகிறார் அங்க போய் இதே ஒட்டற வேலை செய். அப்புறம் எனக்கும் ராமகோபாலனுக்கு என்ன தொடர்பு?
  நீயும் உங்க கூட்டத்துக்கு வேற வேலையே இல்லையா மத வெறி மத சண்டை மத தூசனம் .போய் புள்ள குட்டிகளை படிக்க வைய்,.

  ReplyDelete
 9. துலுக்கப் பதிவர்களின் ஆட்டம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் உங்களின் இந்தப் பதிவைக் கண்டு துலுக்கச்சிகளும் வருவார்கள்.

  பிராமணர்கள் எப்படி ஒதுக்கப் படவேண்டியவர்களோ அதேபோல் இந்த துலுக்கர்களும் ஒதுக்கப் படவேண்டியவர்களே.

  ReplyDelete
 10. james anand please listen seeman speech

  ReplyDelete
 11. Hi,

  can you stop spreading your non sensical stories.
  your entire article is full of garbage and stinking.
  LOL

  ReplyDelete
 12. ஐயா
  துலுக்க நாச்சியார் என்பவர் இஸ்லாமிலிருந்து இந்துவாக மாறியவர். விட்டால் இந்து மதமே இஸ்லாமிருந்து பிறந்தது என்பீர்கள் போல

  ReplyDelete
 13. இந்த மாதிரி லூஸுப்பதைவையெல்லாம் கல்வெட்டுல பதிச்சு வெச்சிடுங்க. உங்களுக்கு பின்னால வர்ற சந்ததியினர் படிச்சு இது தான் வரலாறுனு நெனச்சு இன்னும்...வாயில நல்லா வருது.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!