குந்தவை குறித்த, பிராமணீயத்தின் வக்கிரம்!

         குந்தவைநாச்சியார், சோழப் பேரரசில்  மிகுந்த  செல்வாக்கோடு  விளங்கிவந்தார்! சோழ பேரரசில்  உள்ள மக்கள்  அவரை  தெய்வமாகவே  எண்ணி வழிபட்டு வந்துள்ளனர்! அவரை மட்டுமின்றி, பொதுவாக  அரச குலத்தைச் சேர்ந்தவர்களை,  "தெய்வாம்சம் பொருந்தியவர்கள்"  என்று கருதியும்,"இறைவனாக" பாவித்து, வணங்கிவந்துள்ளனர்.


             ராஜராஜன்  உடம்பில்  சங்கு,சக்கர குறிகள் இருந்ததாகவும்,  'இரண்டாம் மனுவே'  பிறந்து வந்ததாகவும்  கூறி, உடையார்,திருமால், பெருமாள்,தேவர்  என்று பலபெயர்களில்  போற்றி வந்துள்ளதை வரலாறு அறிவிக்கிறது! 

      குந்தவை நாச்சியார், சமயபொறையுடன்,எல்ல சமயத்தவர்களுடனும்  பேதம் பாராட்டாமல்,  நடந்துகொண்டும், அவர்களுக்கு உதவிகள் செய்தும் வந்துள்ளார்!  அப்படி அவரிடம் உதவி பெற்றவர்களில்  இஸ்லாமியரும்  இருந்தனர்!

      இஸ்லாம் ஞானியார்  தபலே ஆலம் பாதுஷா  என்கிற,  "நத்தர் வலியாரை" தனது  ஆன்மீக குருவாகவும், அரசியல்  வழிகாட்டியாகவும்  குந்தவை  ஏற்று கொண்டிருந்தார் !  அவரது  சீடர்களுடனும்  அவருக்கு தொடர்பு  இருந்துவந்தது.இவர்களில் அனந்தபூர் மாவட்டம்   
 
         ராஜராஜனின் இளமைக்காலத்தில்  உத்தம சோழனால் தனக்கும்  தம்பி ராஜராஜனுக்கும்  ஆபத்து ஏற்படாமல்  காப்பாற்றியவர்கள், பாதுகாத்தவர்கள்   இசலாமியர்கள்  என்ற நன்றிப் பெருக்கில்  குந்தவை, இசலாமியர்களுடன் பழகி வந்தாலும் , சோழப் பேரரசில்  உள்ள மக்களும் ஏனைய  பிற சமயதினர்கள்  அதனை  பெரிதாக, ஒரு பொருட்டாக  கருதமால்,   அவரிடம் அனுப்பு கொண்டு  இருந்துவந்த  நிலையில்,  பிராமணர்கள்களால,அவ்வாறு  இருக்கமுடியவில்லை. காரணம் பிராமணீயம்  பெண்களை குறித்து கொண்டிருந்த  மோசமான மதிப்பீடு, மற்றும்  கணவனை இழந்த  பெண்களைக் குறித்த அதனது  பார்வையும்தான்!
 
        பேரரசின் செல்வாக்கு உள்ள  பெண்ணாக இருந்தாலும், அவர் எத்துனைதான்   மக்களுக்கு  சேவை செய்பவராக இருந்தாலும் கூட, பெண்,அதுவும் ஒரு விதவைப் பெண் என்ற கருத்தோட்டதுடனேயே , இந்துமதம்  என்கிற பிராமணீய  மதம் அவரைப் பார்த்து வந்துள்ளது  எனபது, குந்தவை தாதாபுரத்தில்  கட்டிய  கோயிலில்  இடம் பெற்றுள்ள  சுதை உருவங்கள், நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன.!


          குந்தவை கட்டிய ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் கோயில் விமானத்தின் நடுவில்  சாலைகளும், கர்ணக்கூடுகளும்   உள்ளவாறு அமைக்கப்பட்டு உள்ளது.!  இவைகளில் பல்வேறு சுதை உருவங்கள் வடிவமைக்கப்பட்டு  உள்ளன.

        இந்த சுதை உருவங்களில்  ஒரு பெண் உருவம்,இரண்டு கால்களை அகற்றியவாறு,ஆடைகளின்றி நிற்பதாக ,  ஒரு சுதைஉருவம் உள்ளது!          
      இவ்வாறு உள்ள அந்த பெண்ணுருவத்தை, குல்லாய் அணிந்த ஒரு போர்வீரன்  அமர்ந்தநிலையில்  உற்றுப் பார்த்தபடி ஒரு உருவம் செய்யப்பட்டு உள்ளது . இந்த உருவங்களுக்கு     அடுத்து, இந்த காட்சியை  சந்தோசப்பட்டு பார்த்து, ஒரு சிவகணம் சங்கு ஊதுவது போல ஒரு சுதை உருவம்  உள்ளது. அடுத்து  ஒயிலாக  நிற்கும் ஒரு மங்கையின் உருவமும்,தாடியுடன் உள்ள முனிவரும், அந்த முனிவரை வணங்கி நிற்கும் இரண்டு  பெண்ணுருவமும், ரவிகுலமானிக்க ஈஸ்வரத்து, விமானப் பகுதியில் இடம்பெற்று உள்ளன.   (  ஆதாரம்.குந்தவைக் கலைகொயில்கள்.நூல் ஆசிரியர், புலவர். முத்து.எதிராசன்.M.A,பக்கம் -114 ,சென்னை,செகர்பதிப்பகம் வெளியீடு.) 

         குந்தவை கட்டிய கோயிலில், குல்லாய் அணிந்த போர்வீரன், ஆடை யற்ற அணங்கு,  ஒருத்தியை உற்று நோக்குவது, இந்துமத பாசிச வாதிகளின் இஸ்லாமிய  வெறுப்புணர்வை  காட்டுகிறது! 


     மேலும் குந்தவையின் இஸ்லாம் மதத் தொடர்பை  சுட்டி, அதனை மறைமுகமாக, அவரது ஒழுக்கக் கேடாகவும்,அவரது நடத்தையை, கேலிசெய்யும்  பிராமணீய வக்கிரமாகவும்  எண்ணத் தோன்றுகிறது! 

     தமிழகத்தில், ராஜராஜனது  ஆட்சியில்  குந்தவை  கட்டிய கோயில்கள், மடங்கள், அறச் சாலைகள்,  ஆதூலச் சாலைகள்  யாவும்  இன்றும்  இருக்கின்றன. 

         ஆனால்,  அவைகள்  குந்தியம்மன் பெயரிலும், திரவுபதை, கோயில்களாக  பிராமணீயம்  மாற்றியும்  வரலாற்றை மறைத்தும்  காட்டி வருகிறது., 

       ஐந்து ஆண்களுக்கும்  பத்தினிகளான( ?}இவர்களுக்கும்  தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? பஞ்சபாண்டவர்களில்  தருமவழியில் நின்றவன்  என்று கூறப்படும் யுதிஷ்டிரனுக்கு  தமிழகத்தில் கோயில் இல்லை.!


       ஆனால் அவனது, தாயுக்கும், மனைவிக்கும்  கோயில் கட்டியது யார்? அப்படி என்ன பெருமை அவர்களுக்கு?  எதுவும் இல்லை. அவர்களுக்கும் தமிழகத்துக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை! 

      உண்மையைச் சொன்னால், ஸ்ரீ வில்லிபுத்தூரார்  பாரதம் எழுதுவதற்கு முன்பு, இவர்களைப் பற்றிதமிழர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை! ஆனால், வில்லிபுத்தூரார் பாரதம் எழுதுவதற்கு  முன்பே, நூற்றாண்டுகள்  இடைவெளிக்கு முன்பே,  வாழ்ந்த  குந்தவை நாச்சியாரின்  வரலாற்றை  மறைக்க வேண்டிய தேவையும் அவசியம்   பிராமணீயர்களுக்கு  இருந்துள்ளது எனபது விளங்குகிறது! 

 
       குந்தவை குறித்த வரலாற்றை, மறைக்க,"பிராமணீயம்" ஏன்  அக்கறை  காட்டுகிறது ? ஏன், ராஜராஜன்  தனது அந்திம காலத்தில்,"இரணிய கர்ப்பம்" என்ற சாதிமாற்ற  சடங்கினைச்  செய்யும் சூழல் ஏற்பட்டது?  என்பதெல்லாம்  பார்க்கவேண்டி இருக்கிறது!

 

Comments

 1. வரலாறு பற்றிய பதிவு என்பதால், அதனுடைய Source அல்லது எந்தப் புத்தகத்திலிருக்கும் தகவல்கள் இது என்பதை ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட வேண்டும்.

  சுப்பன் கொசுவை அடித்தான். - இது வரலாறு.
  பல நாள் பட்டினி கிடந்த அந்த அப்பாவி கொசுவை சுப்பன் கொடூரமாக அடித்தொழித்தான் - கொசுவை சப்போர்ட் செய்யும் வரலாறு வெர்ஷன் 1
  கீழ் சாதிக்காரனான சுப்பனை, கடித்து துன்புறுத்த வேண்டும் என்ற தீய நோக்கில் வந்த கொசுவை, சுப்பன் லேசாக தட்டி விட்டான். அது கீழே விழுந்து இறந்தது - சுப்பனை சப்போர்ட் செய்யும் வரலாறு வெர்ஷன் 2

  இந்த வரலாறு எந்த வெர்ஷனை சார்ந்தவை என்பதை அறிய, இத்தகவல் உள்ள புத்தகங்களை மேற்கோள் காட்டினால், படித்து தெளிவு பெற வசதியாக இருக்கும் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கபிலனைக் காணோமே, என்று நினைத்தேன்! வந்துவிட்டீர்கள்! குந்தவையின் கலைக் கோயில்கள் என்ற நூலின் 144 -வது,பக்கம்,புலவர் முத்து.எத்திராஜன்,ஆசிரியர், சேகர் பதிப்பகம் வெளியீடு எனபது எல்லாம் ஆதாரம் இல்லையா? சரி,ஒருநடை தாதாபுரம் கோயிலுக்குப் போய், நேரிலேயே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால், மா.சந்திரமூர்த்தி, நடன.காசிநாதன், போன்ற கல்வெட்டு ஆய்வாளர்களிடம் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்! புருஷா மிருகம் போட்டோ போட்டிருந்தேனே? அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே, ஏன்...கபிலன்?

   Delete
 2. pappanargal than ellathukum kaaranan. Aavaga kuda irundhe kuli parikkuravaga. Rajarajan iraniya karbam senjadhuku pinnadi neraya secret iruku namaku aadhulam theriyuradhu romba kastam.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அய்யா ஓசூர் ராஜன் அவர்களே உங்கள் வரலாறு ரொம்ப புதுமையாக இருக்கிறது. எதோ ஒரு மலை குகையில் ஜிப்ரீல் என்ற வானவர் வந்து ஏற்கனவே புழக்கத்தில் இருந்த யூத மற்றும் கிருஸ்துவ வேதங்களை கலந்தடித்து கொடுத்து இதுதான் குரான் என்று தன சொந்த கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்த திரு முகமதுவைபோல நீங்கள் இப்போது பழக்கத்தில் இல்லாத பிராமணீயம் என்கிற சொல்லை வைத்து தீவிர திராவிட அரசியல்வாதிகள் போல ஒன்றிரண்டு குறிப்புகளை வைத்துகொண்டு எதோ ஜல்லி அடிப்பது ஏன் என்று தெரியவில்லை.சோழ நாட்டில் இஸ்லாம் என்கிற வாதமே எங்கும் கேள்விபடாத ஒரு புனைகதை போல உள்ளது. பிராமணீயம் பாசிசம் என்று வீர முழக்கங்கள் வேறு இதில்.கடைசியில் இந்தியாவுக்கு வாளுடன் வந்த ஒரு காட்டுமிராண்டி மதத்தை உயர்த்தி காட்டுவதற்காக இத்தனை கதைகளையும் கண்டு பிடித்து ஒரு மாபெரும் நவீன வரலாறையே எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்தில் இஸ்லாம் மீது உங்களுக்கு உள்ள பாசம் நன்றாகவே தெரிகிறது. இஸ்லாம் பற்றி யார் எந்த மூலையில் இருந்து விமர்சனம் செய்தாலும் உடனே இது யூத கிருஸ்துவ சதி என்று துள்ளி குதிக்கும் முஸ்லிம் நண்பர்கள் போலவே நானும் கேட்கிறேன் யாராவது அரேபிய ஷேக் உங்களுக்கு பணம் கொடுத்து இப்படி எழுதி வை என்று சொல்லிவிட்டானோ? பிராமணீய பாசிசம் இப்போது வெற்று பேச்சு. நாம் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ள நேரம் வந்து விட்டது. உலகம் முழுவதும் பரவி வரும் ஒரு பாலைவன மத தீவிரவாதமே இப்போதைய நம் எதிரி. தயவு செய்து வரலாற்றை திரித்து புது கதை கட்டாதீர்கள். நலம்.

  ReplyDelete
  Replies
  1. காரிகன், ராஜராஜனும்,அவன் அப்பன் சுந்தர சோழனும்,பாட்டன் அரிஞ்சய சோழனும், இன்னும் பலரும் பிறநாட்டு மன்னர்களோடு போரிட்டு,சோழநாட்டை பேரரசாக ஆக்க போராடினர்! இந்த போரில் பிராமணர்கள் மட்டுமா? பங்கு கொண்டார்கள்? சரி, குதிரை,யானைப் படைகள் இல்லாமலா போரிட்டார்கள்.? இந்த குதிரைகள் எங்கிருந்தெல்லாம் வந்தது? அவைகளில் அரபிய குதிரைகள் இடம்பெறவில்லையா? அராபிய குதிரைகளை இன்றைய தரகு முதலாளிகளும், பார்ப்பன பனியாக்களும் அப்போது கொண்டுவந்து அரசர்களிடம் விற்பனை செய்யவில்லை! பாரசீகர்களும், அங்கிருந்து வந்த முகமதியர்களும் தான் கொண்டுவந்து விற்பனை செய்துவிட்டு, இங்கிருந்து, முத்து,பொன், வாசனை திரவியங்கள் முதலியவற்றை கொண்டுபோனார்கள்.
   முகமதியர்களை குதிரை வியாரம் செய்பவர்களை,குதிரையை பரமரிப்பவர்களை ராவுத்தர், என்றும் அவர்கள் லப்பீக் என்ற வார்த்தையை உபயோகபடுதியதால், லப்பை என்றும், மரக்கலங்களில் வந்தவர்கள் ஆதலால் மரைக்காயர்கள் என்றும் அழைத்தனர். மேலும் சோனகன், அஞ்சுவண்ணத்தார் என்றும் அழைத்தனர். முகமது நபிகளால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கம் நூறு ஆண்டுகளிலேயே பிறநாடுகளுக்கு பரவும் சூழல் ஏற்பட்டு விட்டது.
   தென்னகத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே அவர்களின் வழிபாட்டு தளம் தொடங்கபட்டுவிட்டது.

   காரிகன், நீங்கள் நம்பும் பிராமணீயத்தை விட உண்மைகள் வலிமையானவை.! பாலைவனமாக, தமிழகத்தை ஆக்குவது இன்றும் பிராமணீயம் என்ற பாசிச குணம்தான்! அதற்க்கு எதிரானது இஸ்லாம் என்பதாலேயே, பிராமணீயம் "இஸ்லாமை" குறிவைத்து பொய் பிரசாரம் செய்து உங்களைப் போன்றவர்களின் சிந்தனையை தடுமாறவைத்து வருகிறது!

   தனது தவறுகளை மறைக்க, பாசிசம் அதற்க்கு தேவைப்படும் பொது எதிரியாக உலகம் முழுவதும் நிறுத்துவது இஸ்லாம் என்பதையே! இந்திய பாசிஸ்ட்டுகளும் இதனையே செய்து வருகிறார்கள்.
   திருடன் தன்னைத் தற்காத்துக்கொள்ள'திருடன்...திருடன்.. என்று கூவிக்கொண்டே ஓடுவது போல, பிராமணீயம் இஸ்லாமை மக்களிடம் காட்டி வருகிறது!

   Delete
 5. "திருடன் தன்னைத் தற்காத்துக்கொள்ள 'திருடன்... திருடன்...' என கூவிக்கொண்டே ஓடுவது போல, பிராமணீயம் இஸ்லாமை காட்டி வருகிறது"
  சரியான பதிலடி.
  தமிழர்களாகிய நாம் நம் பெருமைகள், அடையாளம் இழந்து பிளவுண்டு சிதறிப்போனதின் காரணங்களை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். இது நமது கடமை. வரலாறு எதுவுமில்லாத வந்தேறி பரதேசிகளுக்கு இதன் அருமை என்ன தெரிய போகிறது? வன்முறையை அடிப்படை இலக்கணமாக கொண்ட பாசிச பார்ப்பணீயத்திற்கு மற்ற மதத்தினரிடம் வன்முறையை தூண்டிவிட்டு கலவரம், அட்டூழியங்கள், அநியாயங்கள் செய்வதே தொழில்.
  என்ன செய்வார்கள்? சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

  ReplyDelete
 6. Hosur Rajan has already set in his views and not going to change. The whole problems of tamilnadu and sometimes the whole world is due to our poor Brahmins!.
  Just enjoy this reading as dhinathanthi news . Do not expect any evidence oy pay any seriousness to this half baked information.

  ReplyDelete
 7. Karunanidhi has been doing this blame for the past 50 years and taken care of his family well . Even got married to Brahmin family. But kept our poor Tamil brothers into non thinking no confident I'll informed idiotic state . Our Tamil brothers are now fit for only Tasmac and one rupee rice. Wake up hosur Rajan go and see the world on what is happening.

  ReplyDelete
 8. பதிவுகளை தொடருங்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. பிராமணீயம் ஒரு காலத்தில் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. அப்போது அது மக்களுக்கு செய்த பல தீமைகளை பின்னால் வந்த தமிழ் விரும்பிகள் இனம் கண்டு கொண்டு பிராமணீயத்தை வெறுக்க ஆரம்பித்தார்கள்.ஆதிக்கத்தில் இருந்து தற்போது ஒரு சாதாரண தெருவில் போகும் மனிதனால் கூட விமர்சிக்கப்படும் நிலையில்தான் பிராமணீயம் இப்போது உள்ளது.ஆங்கிலேயன் தமிழின் தொன்மையையும் மொழி சிறப்பையும் கோடி காட்டிவிட்ட பின், குருகுல கல்வி என்கிற பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத வழிமுறையை தன கல்வி முறையால் அவன் மாற்றி விட்ட பின் பிராமணீயம் நீர்துப்போயவிட்டது என்பதே உண்மை.இருந்தாலும் தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்யும் எல்லா சடங்குகளையும் செய்து கொண்டு அவர்கள் பாடல்களை கேட்டு கொண்டு அவர்கள் விளையாடும் விளையாட்டை வெறித்தனமாக ரசித்துக்கொண்டும் தங்கள் வாழ்கையின் முக்கால் வாசி பகுதிகளை இந்த வீழ்ந்து போன பிராமணீயம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணக்கில் அடங்காத மக்களை என்ன செய்ய போகிறீர்கள்? தமிழ் தாத்தா என்று சொல்லப்படுபவரே ஒரு பிராமணர்தான்.மேலும் எல்லா பிராமணர்களும் பாசிச மூளை கொண்டவர்களில்லை. பிராமணீயத்தின் ஆபத்து நீங்கி விட்டது. அது ஒரு செத்த பாம்பு போன்றது. இன்னும் ஏன் மக்கி போய்விட்ட ஒரு விஷயத்தை நூல் பிடித்து பார்கிறீர்கள்? இப்படி விமர்சிக்கும் பலர் தற்போது இருக்கும் நிலையில் பாசிச பிராமணீயம் அது ராஜ ராஜ சோழன் காலத்தில் செய்த துரோகம் என்று ஏன் எதோ மர்ம கதையாசிரியர்களைபோல திடுக்கிட வைக்கும் எங்கும் கேள்வி படாத கருத்துக்களை முன் வைக்கிறீர்கள்? விமர்சங்களை எதிர் கொள்ளவே அஞ்சும் தன் மார்கத்தை சேராதவனை கொலை செய்ய அனுமதி கொடுக்கும் மனிதனை தன் விருப்பபடி காவு கொடுக்கும் ஒரு பாலைவன மதத்தை நீங்கள் பிராமணீய பாசிச நோய்க்கு மருந்தாக விளம்பரப்படுத்துவதைதான் நான் விமர்சனம் செய்கிறேன்.நீங்கள் மனதளவில் ஒரு இஸ்லாமியராக இருப்பதாலேயே இஸ்லாம் மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்வது நலமன்று.சொல்லப்போனால் பிராமணீயத்தை விட இஸ்லாம் வெகுவாக பாசிச புத்தி கொண்டது.உங்களால் அதை விமர்சிக்க முடியாது. வெளியில் வர முடியாது. அறிவு பூர்வமாக சிந்திக்க முடியாது.அல்லாவால் எல்லாமே முடியும் என்று மட்டுமே நம்பும் ஒரு கற்காலத்து மனோபாவம் கொண்டவர்களின் கூடாரத்திலிருந்து வந்த பிற்போக்குத்தனம் உள்ள உலகின் இன்னுமொரு சிக்கல். .ராஜ ராஜ சோழன் ஒன்றும் பெரிய தமிழ் மன்னன் கிடையாது. அவனே வீழ்ந்து போனவன்தான். அவன் பெயரிலேயே தமிழ் இல்லை. அவன் காலத்தில் எவன் என்ன செய்தால் இன்டர்நெட்டில் விரல் பதித்து எழுதும் நமக்கென்ன? பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டிய பிராமணீயத்தை இன்னும் எதிரி போல படம் காட்டு வது எதற்கு என்பதே கேள்வி. முடிந்தால் உங்கள் பெயரில் உள்ள சம்ஸ்கிருத ஜா வை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.முகமது அல்லது இஸ்மாயில் என்று பெயர் வைத்துகொண்டு உங்கள் "வரலாற்று உண்மைகளை" தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அம்பி காரிகன்

   ///பிராமணீயம் ஒரு காலத்தில் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. அப்போது அது மக்களுக்கு செய்த பல தீமைகளை பின்னால் வந்த தமிழ் விரும்பிகள் இனம் கண்டு கொண்டு பிராமணீயத்தை வெறுக்க ஆரம்பித்தார்கள்.ஆதிக்கத்தில் இருந்து தற்போது ஒரு சாதாரண தெருவில் போகும் மனிதனால் கூட விமர்சிக்கப்படும் நிலையில்தான் பிராமணீயம் இப்போது உள்ளது.///

   ஹா ஹா ஹா ஹா நல்ல ஜோக்

   தமிழகத்தில் தமிழர்கள் தான் பலஹீனமாக இருக்கிறார்கள் பிராமணியம் அப்படி நாங்க சொல்ல மட்டோம் அம்பி பார்ப்பனியம், பார்ப்பனியம், பிராமனியம் என்று சொன்னால் இங்கு நீ பிராமனின் தலையில் தலையில் இருந்து பிறந்ததாக சொல்லப்படுகிற ஆணவத்தை ஏற்றுக் கொண்டவர்களாக ஆகி விடுவோம்

   இதுல பம்பு செத்து போயிவிட்டதாம் அம்பி

   பிராமணியம் செத்து இருந்தால் இந்நேரம் சேது கல்வாய் திட்டம் எப்போதே வந்திருக்கும் கூடங்குளம் அனுமின் நிலையத்தை கட்ட ஒப்புதல் கொடுத்த செல்வி ஜெயலலிதாவை சேது கல்வாய் திட்டத்திற்கு ஓப்புதல் கொடுக்க சொல்லுங்கோ அம்பி

   Delete
 10. Well said. Unless Tamilians wake up from this mental state of blaming the problems as outside of their capability, it will be impossible to go to the progress attitude.

  A vast majority tamilians like Hosur Rajan with no knowledge of how the external world is progressing gets into this trap of tamil perumai, rajaran perumai,tamil cinema, kutthu pattu, Tasmac, etc etc. In fact Tamil is surviving because few people brought this into internet and globalised. Not because our politicians did sentamil manadu (:-).

  As long as we are in this state of praising Karunanidhi,Jayalalitha,vijayakanth,Prabhakaran with no ability to intelectualy think on what is good for us, we are jeopardising the lives of whole tamil young people.

  ReplyDelete
 11. அம்பி காரிகன்

  //பிராமணீயத்தை விட இஸ்லாம் வெகுவாக பாசிச புத்தி கொண்டது.உங்களால் அதை விமர்சிக்க முடியாது. வெளியில் வர முடியாது. அறிவு பூர்வமாக சிந்திக்க முடியாது.அல்லாவால் எல்லாமே முடியும் என்று மட்டுமே நம்பும் ஒரு கற்காலத்து மனோபாவம் கொண்டவர்களின் கூடாரத்திலிருந்து வந்த பிற்போக்குத்தனம் உள்ள உலகின் இன்னுமொரு சிக்கல்.///

  இது தான் R.ss மனநோய் தன்னை பற்றி விமர்சித்தால் பதில் சொல்லுவது ஒரு கொள்கைவாதிக்கு அழகு அதைவிட்டு விட்டு அவன் காட்டுமிராண்டி அவனை ஏன் விமர்சிக்க மாட்டேன்கிறாய் என்று படமெடுத்து சீறுவது எந்தவகையான நியாயம் பாம்பு சாகவில்லை இன்னும் விரியமாக படமெடுத்து நிற்கிறது இங்கும்

  ReplyDelete
 12. கிராதகன் என்கிற உங்கள் பெயரே பயங்கரமாக இருக்கிறது.இது கூட பிராமண மகாபாரத்தில் வரும் ஒரு பெயர்தான் போல.நான் பிராமணியத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை ஏனென்றால் பெரும்பாலான தமிழர்கள் அதை தங்கள் வாழ்கையில் கடை பிடித்து வருகிறார்கள் திருப்பதிக்கு போவது முதல் நெற்றியில் திருநீறு பூசுவது வரை. மதம் என்பதே போதைதான்.மேலும் நான் என் பதிவில் தெளிவாகவே சொல்லிவிட்டேன்.அது ஒரு செத்த பாம்பு என்று. உடனே நீங்கள் சேது கால்வாய் என்று அரசியல் பேசுகிறீர்கள்.முதலாவது சேது கால்வாய் திட்டம் திராவிட முழக்கம் செய்யும் திரு கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை மாநில அரசால் செயல் படுத்த முடியாது என்பது கொஞ்சம் போல அரசியல் தெரிந்த எல்லோருக்குமே தெரியும்.கிராதகன் இந்தியாவில்தான் இருக்கிறாரா?இது மத்திய அரசு செய்ய வேண்டிய கடமை.அப்படியே மாநில அரசு இதில் தலையிட்டு ஏதாவது செய்ய முடிந்தாலும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி ஏன் தன்னுடைய ஆட்சியின் போதே இதை செய்யவில்லை என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு வரலாம். இரண்டாவதாக பாசிச ஆர் எஸ் எஸ் சை நான் தீவிரவாத இஸ்லாமிய ஜிஹாத் கூட்டத்தோடு ஒரே வரிசையில் பார்ப்பவன். இரண்டும் ஒன்றே எனபதே என் கருத்து. திரு ஓசூர் ராஜன் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்கிற ரீதியில் பேசியதாலேயே நான் அந்த காட்டுமிராண்டி கூட்டத்தாரை பற்றி குறிப்பிட வேண்டி வந்தது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெடித்துக்கொண்டு இருக்கும் தற்போதைய பிரச்சினை பிராமணியம் இல்லை மாறாக இஸ்லாமிய தீவிரவாதம். இதைதான் நான் நிகழ கால விரோதியாக பார்க்கிறேன். ஆர் எஸ் எஸ் சை தடை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான இந்துக்கள் நினைக்கிறார்கள். இதே போல ஜிஹாத் பேசும் இஸ்லாமிய தீவிரவாத கும்பலை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் நண்பர்கள் விரும்புவார்களா? நீங்கள் பிராமணீயத்தை தாராளமாக எதிர்த்து போர் செய்யுங்கள்.அவர்கள் தங்கள் விஷ பற்களை காட்டினால் அதை பிடுங்க கூட செய்யுங்கள். அதற்காக தீவிர வாதத்திற்கு அனுமதி கொடுத்து உலகம் முழுதும் பயங்கரங்கள் நிகழ்த்தும் ஒரு மதம் பிடித்த மதத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து அதை வரவேற்காதீர்கள். திரு கிராதகன் அவர்களே வேடிக்கையாக பேசாமல் அம்பி தம்பி என்று உடனே ஜாதி வண்ணம் பூசாமல் மேலும் கோபம் கொள்ளாமல் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வையுங்கள்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?