தாதாபுரம், ராஜராஜபுரமாக இருந்தபொழுது !

                                                                                                                                                                                                                                                                                    திண்டிவனதிலிருந்து புத்தனேந்தல்...அங்கிருந்து சிங்கேனிகுப்பம்( செங்கழுநீர் குப்பம்} செல்லும் வழியில்,கீழ்மலையனுருக்கு அருகில்ஒரு மைல் தூரத்தில்   உள்ளது  தாதாபுரம் என்ற ஊர் .

      இது  ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்  பேரூராக,நகரமாக  விளங்கிவந்த ஊர். ராஜராஜனின்  சகோதரி  குந்தவை நாச்சியார்  இந்த ஊரில்  கோயில்கள் கட்டி உள்ளார். அதுவும் தஞ்சைக் கோயிலை  ராஜராஜன் கட்டுவதற்கு முன்பே கட்டியுள்ளார். இந்த ஊருக்கு   தனது  தம்பியின் பெயரை," ராஜராஜபுரம்" என்று பெயரை வைத்து,அவனது புகழைப் பரப்பி உள்ளார்!
                          
     இன்றைக்கு 1008  - ஆண்டுகளுக்கு முன்பு,கி.பி.1004 -இல்  தான் கட்டிய கோயில்களில்  குடமுழுக்கு வைபவங்கள் செய்து,மக்களின் வழிபாட்டுக்கும்,நாட்டிற்கும் அர்பணித்து  உள்ளார்!  ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயில்  கி.பி.1010  -இல் வழிபாட்டுக்கு வரும் முன்பே  குந்தவை கட்டிய கோயில்களில்  வழிபாடுகள் நடந்துள்ளன.


   குந்தவைக் கட்டிய,  'ஸ்ரீ ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்'  என்ற  கோயிலும்,  இப்போது,சிவன் கோயிலாக கூறபடுகிறது. 'ஸ்ரீ விண்ணகர் ஆழ்வார்  திருகோயிலும் , இன்று  கரிவரதராஜர்  என்ற பெயரில் விஸ்ணு கோயிலாக கூறபடுகிறது.   ஸ்ரீ  குந்தவை ஜீனாலயமும்  கட்டி  தனது தம்பியின் பெயரை விளங்கச் செய்துள்ளார்.

       குந்தவை ஜீனாலயம்  சமணர்களின் கட்டுபாட்டில் விளங்கி வந்தது. இன்று ஜீனாலயம் அழிந்துவிட்டது. அது இருந்த இடத்தில கட்டிடத்தின் செங்கல்களும்  ஓடுகளும்  காணக் கிடைகின்றன,   இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள பழைய கிணறு ஒன்றில் இரண்டு ஜைனத் திருமேனிகள் கிடைத்தன. அவைகள்  சென்னை அருங்காட்சியில் படிமக்கூடத்தில்  வைக்கப்பட்டு உள்ளன.

        இந்த ஊருக்கு அருகில்  இரண்டு கல் தொலைவில்  கிழக்கே உள்ள சமணர்கள் குன்றில்,  சமணர்கள் சிலர் இன்றும் வந்து,ஆண்டுக்கு ஒருமுறை  வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்!  சமணர்கள் குன்று, இன்று சாமான் குன்றாக  பெயர்மாறி விட்டது!   குந்தவை கட்டிய ஜீனாலயம்  கற்கள்  இந்த ஊர்  ஏரியின் களிங்குகளுக்கும், மதகு போன்ற பகுதியின் பயன்பாட்டுக்கும்,  சிலரின் தனிப்பட்ட சொந்த உபயோகத்துக்கும்  பயன்படுத்தப் பட்டு உள்ளது!  

       ஸ்ரீ குந்தவை ஆழ்வார்  விண்ணகரம்  என்ற கரிவரதராஜர் கோயிலில்   பத்து கல்வெட்டுகள்  வெட்டப்பட்டு காட்சி அளிக்கிறது,இதில் உள்ள படிமங்கள், சிலைகள் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் திருத்தப்பட்டு உள்ளன.

     ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்  என்பதை,குந்தவை தனது சகோதரன் ஆதித்ய கரிகாலன் நினைவாக  எடுபித்த கோயிலாக தெரிகிறது. மேலும் சோழர்கள் குலம், "சூரியக் குலம்" என்றும் சொல்லபடுகிறது. இதில் இருந்த, சூரியன் சிலை அல்லது  ஆதித்த  கரிகாலனின்  சிலை,   கைகால் சிதைக்கப்பட்டு, தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் இருந்துள்ளதை கண்டறியப்பட்டது! 

       கோயில்களை  உள்ள செப்பு பிரதிமம்,சிலைகள், முதலியவற்றை திருத்தி உள்ளனர். காரணம்  குந்தவையின் அறிய செயல்களையும்,அவளது வரலாற்றில் நடந்த பல அதிர்ச்சி,மற்றும் ஆச்சிரியமான  செய்திகளை   மறைக்கவும், பிராமணர்கள்   வரலாற்றை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளவும், கோயில்களை பிராமணர்கள் தங்களது ஆதிக்கத்தில்  தொடர்ந்து  வைத்து வரவும்தான்!

  பெருமாள் கோயிலாக  இப்போது  அழைக்கப்படும் கோயிலை   இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்  ஸ்ரீ குந்தவை விண்ணகர தேவர் என்றும்,ஸ்ரீ குந்தவை  விண்ணகர ஆழ்வார் என்று மட்டுமே குறிப்பிடுகின்றன . 

    இக்கோயிலில் உள்ள ராஜராஜனின் இருபத்தி ஐந்தாண்டு  ஆட்சிக் கல்வெட்டு, "கோவி ராஜராஜ  கேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவருக்கு யாண்டு இருபத்தஞ்சாவது வேன்குன்றக் கொட்டது  நல்லூர் நாட்டு நகரம் ராஜராஜ புரத்து உடையார் பொன்மாளிகையில் துஞ்சின  தேவர் திருமகளார் ஸ்ரீ பராந்தகக் குந்தவைப் பிராட்டியார் இன்னகறது எடுப்பித் தருளினஸ்ரீ குந்தவை விண்ணகர் ஆழ்வார்க்கு"  என்று கூறுகிறது! 

    தஞ்சையிலும்  குந்தவை,தனது தந்தை  சுந்தரச் சோழன் பெயரில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து இருந்தார் எனத் தெரிகிறது! திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்  சாலையில்,திருவெறும்பூர் தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ள  ஊர்  சோழமாதேவி என்ற ஊராகும். இந்த ஊரிலும் ஸ்ரீ வீரசோழ விண்ணகரம் என்ற பெயரில் ஒரு ஆதூலச் சாலை(மருத்துவமனை)  நடந்துவந்ததாக  ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. எனவே, விண்ணகரங்கள், மருத்துவ மனைகளாக  இயங்கும் நோக்கத்தில்  கட்டப்பட்டு வந்துள்ளன. பிறகு, பெருமாள்,விஸ்ணு, திருமால்  கோயில்களாக  ஆக்கப்பட்டுள்ளன என்பதும், திருத்தப்பட முடியாத  சிலைகள், சிற்பங்கள்  பிராமணர்களாலும்  அவர்களது ஆதரவாளர்கள்  மூலமும்  அகற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளன எனபது விளங்குகிறது!    
       
     இந்த தாதாபுரத்துக்கு வடமேற்கில்  உள்ள ஊர்  தெள்ளாறு. இறைவன் பெயர்  மூலடநேச்வரர்.இங்கேதான்   வரலாற்று சிறப்பு மிக்க, " தெள்ளாற்றுப் போர் " சோழர்கள்  காலத்தில்  நடந்தது!  தாதாபுரத்தை  சுற்றி உள்ள  பல்வேறு ஊர்களில்  பல்வேறு சமயக் கோயில்கள் இருந்துள்ளன. 

   குந்தவை கட்டிய  கோயிலின்  கோபுரத்தில்,  அவரது  நடத்தையை  கேலிசெய்யும்,  பிராமணீயத்தின்  வக்கிரத்தை  வெளிபடுத்தும்  விதமாக  உள்ள சுதை உருவங்கள்  சொல்லும்  உண்மைகளை  அடுத்துப் பார்க்கலாம்! 
                                                                                                      .                                    

Comments

 1. Dear Sir,

  Thanks for your wonderful posts.

  I am interested in History and Archeology.
  Your posts provide a totally different story to
  what history I have read.

  1 suggestion - From your descriptions, I assume
  you would have visited various sites deep inside TN. If you have photographs (temples,
  inscriptions etc.,), request you to also publish them.

  Sudharsan

  ReplyDelete
  Replies
  1. THANK YOU SUDHARSAN, BUT YOUR REQUEST IS TOO DIFFICULT TO FULLFIL TO ME. BE'COZ, IT WAS SO EXPENSIVE,IN TIME,MONEY,AND OTHER MY WORKS. IN THE LAST AND FINISHING MY ISSUES I COULD DEFANATTLUY GIVE THE ALL PICTURS AND PHOTOGRAPHS!

   Delete
 2. மண்ணின் மைந்தர்களின் வழிபாட்டு தளங்கள், சிலைகள், பொதுப்பணி துறைகளின் தளங்கள், வாழ்வின் பெருமை கூறும் அனைத்து ஆதாரங்களையும் அழித்ததிலிருந்தே பாசிச பார்ப்பனத்தின் கீழ்தர புத்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டியத்தான். ஆப்கனிஸ்த காந்தகாரில் இருந்த வானளாவிய புத்தர் சிலையை மத வெறி தலைக்கேறிய தாலிபான் மடையர்கள் வெடி வைத்து தகர்த்து அம்மண்ணின் பூர்வீக நம்பிக்கை வழிபாட்டு ஆதாரங்களை அழித்து போலவே பரதேசி பார்ப்பன தலிபான்கள் அப்போதே இம்மாதிரியான ஈனச் செயல்களை செய்து அக்கிரமம், அநியாயம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனவழிப்பு, பொய், பித்தலாட்டம், சூழ்ச்சி, கயமைத்தனம் போன்ற அனைத்து ரக மனிதாபமற்ற செயல்களுக்கும் முன்னோடிகளாக இருந்து வந்துள்ளனர்.
  தமிழரினத்தை சூழ்ந்துள்ள இந்த மடத்தன பார்ப்பன பாசிசத்தை விரட்டியடிக்க வேண்டியது நம் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

  பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழரினத்தை சூழ்ந்துள்ள இந்த மடத்தன பார்ப்பன பாசிசத்தை விரட்டியடிக்க வேண்டியது நம் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
   மிக்க நன்றி.!

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?