புருஷா மிருகமும், இந்துமத ஆன்மீக பொய்யுரைகளும்!

      எமது தமிழினத்தின் இணையற்ற  சிந்தனையாளர்களில், சிறந்த ஒருவன் திருவள்ளுவன்.! அவன் சொல்லுகிறான்.   அவனது குரலாக  அவனது திருக்குறள்  சொல்லுகிறது,...

" எப்பொருள் யார்யார்  வாய்க்கேட்பினும் அப்பொருள் 
 மெய்ப்பொருள் காண்பது அறிவு." என்கிறான்!

       நம்மவர்கள்,  மெய்பொருள் காண்பதை பல்வேறு அளவீடுகளில்  காண்கிறார்கள் என்று தோன்றுகிறது! 
      தாங்கள் இதுவரை கண்டது, கேட்டது, உண்மை என்று நம்புவது... ஆகியவற்றிற்கு எதிராகவோ,மாற்றுக் கருத்துக்களோ,சிந்தனையோ  வெளிப்படும்போது,  அதுகுறித்து  எவ்வித சிந்தனை இன்றி,உடனடியாக  நிராகரிக்கும் போக்கையே,  பெரும்பாலோர் கையாள்கின்றனர்!

        ராமானுஜர் குறித்த எனது பதிவு,    இதுவரை ராமானுஜர் குறித்து  அவரவர் கற்பனை செய்து கொண்டிருந்த,நம்பிக்கைக்கு மாறாக  இருந்துள்ளது என்பதை அறிகிறேன்! 

    எனவே,ராமானுஜர் குறித்து,  எனக்குத் தெரிந்த எல்லா விவரதையும்  தரலாம் என்றுதான்  முதலில் நினைத்தேன்! ஆயினும் நான் சொல்லுவதை  நம்பக்கூடிய  சாத்தியங்கள் குறைவு என்பதால், சில தகவல்களை மட்டும்  சொல்லுகிறேன்! 

    ஸ்ரீ பெரும்புதூர் ஊரில்  சொமையாஜீயர்  -பூமி பிராட்டியார் தம்பதிகளுக்கு பிறந்த ராமானுஜர்,கி.பி.1017 - யில்  பிறந்து கி.பி.1137 -வரை  120 -ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது! ஸ்ரீ ரங்கத்துக்கு கி.பி.1042 -யில் முதன்முறையாக வருகை தந்தார் எனவும் அவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்படுகிறது! 

    சோழ மன்னன் செயலால், (குலோத்துங்க சோழன்)மைசூர் நோக்கிப் பயணம் செய்து ,அங்கேயே பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். மைசூரில் தங்கியிருந்த போது, ஹோய்சால மன்னன்,' பிட்டி தேவா'  என்ற மன்னனை  விஷ்ணுவை வழிபடும் மன்னனாக மாற்றி,அவனுக்கு,' விஷ்ணுவர்த்தன்' என்று கி.பி.1098 -யில்  பெயரிட்டு உள்ளார்! 

      பிறகு  அங்கிருந்து தனது சீடர்களுடன் திருநாராயண புரத்துக்கு சென்றதாகவும்  சொல்லபடுகிறது! "யதுகிரி","யாதவகிரி" என்றும் அழைக்கப்பட்டு வந்த திருநாராயணபுரத்தின் இன்றைய பெயர்தான்,
"மேலக்கோட்டை" என்பதாகும்!  
  ( இவைகள் குறித்த ஆதாரநூல்கள் உள்ளன.), 

        ராமானுஜர் பற்றிய சர்ச்சையை, ஸ்ரீ ரங்கம் பற்றி பதிவிடும்போது  பார்ப்போம்.    ஸ்ரீ ரங்கம் கோயில் ஒழுகு பற்றியும் கூட பிரஸ்தாபிக்கலாம்!

      இப்போது இந்துமத்தின், ஆன்மீகத்தின் பெருமைகளில் ஒன்றைப் பார்ப்போம்! அருமையான வாழ்க்கைக்கு(பிராமணர்களுக்கு ) அது உதவிடும் வழியைப் பார்ப்போம்!

    திருவாதவூர்,திருமறைநாதர்க் கோயில் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோயிலாகும்! இந்த கோயிலுக்கும் எப்போதோ பிறந்த, எப்போதோ நடந்ததாக சொல்லப்படும்,   மகாபாரதத்து  கதாபாத்திரங்களில்  ஒருவனான, "பீமனுக்கும்" என்ன சம்பந்தம் இருக்க முடியும்? 
     அனால் இருக்கிறது என்று கோயில் வரலாறு  சொல்கிறது! அப்படி கோயில் வரலாறே சொல்லிவிட்டதென்றால்,  கண்ணைமூடிக் கொண்டு, காதைப் பொத்திக்கொண்டு, கேட்டுக்கொண்டு நாம்  வரவேண்டும்! 

      இல்லை என்றால் நமக்கு ஆன்மிகம் பற்றி என்ன தெரியும்?, இந்து மதம் பற்றி என்ன தெரியும்?, வரலாறு அதுவும் உலக வரலாறு பற்றி என்ன தெரியும்? நமது புராண,இதிகாசப் பெருமைகள் பற்றி எதுவும் தெரியாத, " ஞானசூனியம்" நாமென்றும், நமது மனநிலையில் கோளாறு என்றும்  ஞான திருஷ்டியால் கண்டுணர்ந்து, உடனே கண்டுபிடித்து  சொல்லிவிடுவார்கள்!

     கோயில்கள்  கற்றளிகளாக,கற்களால் நேர்த்தியாகவும், உறுதியாகவும்  கட்டப்பட்ட காலம்  பல்லவர்கள் காலத்தில் இருந்துதான்! இந்த பல்லவர்கள்காலத்துக்குப் பிறகு வந்த சோழர்கள் கட்டிய கற்கோயில் ஆன திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்கு பீமன் எப்போது வந்தான்? எதற்காக வந்தான்? என்று பார்ப்போம்! அதாவது  கோயில் தல வரலாறு கூறுவதைப் பார்ப்போம்! 

      திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்குஇடது புறம் மிகபெரிய தீர்த்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு,பொதுமக்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு  வந்தது! இந்த தீர்த்தத்தில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  ! நீரின் அளவைக்காட்ட  இரண்டு கல்தூண்களில் குறியீடுகள்  செய்யப்பட்டு, அவைகள்  குறுக்காக  இரண்டு கல்தூண்களின்   உதவியுடன் இணைக்கப்பட்டு உள்ளன! 

    நீரளவைக் காட்டிட அமைக்கப்பட்ட இந்த கல்தூணின் மேல்புறம்  விசித்திரமான, சிற்ப உருவம் கல்லால் செய்யப்பட்டு, கல்தூண்களின் மேலே காட்சி தருகிறது. இந்த உருவத்துக்கு   பெயர் என்ன தெரியுமா? 

      புருஷா மிருகமாம்!  மிருகத்தின் உடலையும், மனித தலையையும் கொண்டிருக்கும் இவ்வுருவத்தின் தலையானது, தலையில் தொப்பியுடனும்,சரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட  தடி,மீசையுடனும் காட்சிதருவதை காணலாம்.

        புருஷாமிருகம் பற்றி  கோயில் வரலாறு என்ன சொல்கிறது  என்றால், பஞ்சபாண்டவர்கள்  ராஜசூய  வேள்வி நடத்தியபோது, வேள்வி இடையூறின்றி  நடப்பதற்காக  பாண்டவர்களில் ஒருவனான, பீமன் இந்திரலோகத்துக்கு போய்,அங்கிருந்து இந்த புருஷாமிருகத்தை அலைத்துவந்ததாக கூறுகிறது! 
  இந்த புருஷா மிருகத்தின் பாதுகாப்பில் ராஜசூய வேள்வி வெற்றிகரமாக முடிந்ததாகவும் அதனைத்து தொடர்ந்து, திருமாலால் இந்தவூரிலே ஸ்தாபிக்கப் பட்டதாகவும்  பொதுமக்கள்  இதனைக் காவல் தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர்  என்கிறது கோயில் வரலாறு. 


திருவாதவூர் கோயில் தீர்த்தத்தில் உள்ள புருஷாமிருகம்:


  இந்திரலோகத்தில் இருந்து பீமன் அழைத்து வந்ததாகவும்  திருமாலே நிறுவியதாகவும் கூறும் புருஷாமிருகம்  முஸ்லிம்களை வெறுக்கும் பிராமணீயம்  என்ற பாசிசத்தின்  வேலை ஆகும்! 

      பீமன் தமிழகத்துக்கு,அதுவும் திருவாதவூருக்கு  வந்தான் என்பதை எப்படி நம்ப முடியும்? மகாபாரத காலம் எங்கே? கற்றளியாக்கிய சோழர்கள் காலம் எங்கே? இரண்டும் ஒரே காலமா ? திருமால் நிறுவியதாக சொல்வது சரியா? 

     திருமால் என்று யாரைச் சொல்லுகிறார்கள்? எனபது குறித்து அடுத்து பார்க்கலாம்! 

Comments

 1. கல்லும் செம்பும் கடவுளா? PART 1

  கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்

  ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
  பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
  வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
  ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்

  அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
  அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்

  நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
  சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
  இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
  வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்

  உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
  புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

  கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
  கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்

  எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
  ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
  பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
  பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி

  சற்குருவை அறியாமல் உலகிலேதான்
  சண்டாளர் கல்லுகளைத் தெய்வ மென்று
  பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
  பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்

  நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
  சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்

  மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
  ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்

  சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
  தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்

  செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
  செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்

  வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
  மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
  சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
  துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
  திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
  சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
  விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
  விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
  - சங்கராச்சாரி உடலறி விளக்கம்

  கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
  கோபுரம் தேர் திருவாசல்
  கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
  கொத்துவே லைகளுக்குப் பார்த்தால்,
  சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு
  சாயலு மோகலீலைகளின்
  சாத்திர மன்மதன் நூல்கொக்கு வத்தினிற்
  சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
  விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
  சாமிகள் வைத்து யதனில்
  தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
  தட்சணம் புரியும் செயலால்
  கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
  கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
  கியானமோ அல்லதக் கியானமோ உங்கள்
  கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.
  - சங்கராச்சாரி உடலறி விளக்கம்
  கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்

  உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப் புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்

  ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்

  பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
  எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்

  SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950

  CONTINUES …..

  ReplyDelete
 2. கல்லும் செம்பும் கடவுளா? PART 2.

  அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
  கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்

  கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
  சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

  செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
  பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
  நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
  உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை

  கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
  கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
  குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
  குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்

  கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
  பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
  முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
  தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
  - திருமூலர் திருவிருத்தம்

  வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி, வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்

  SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950

  ReplyDelete
  Replies
  1. இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், இப்படி இந்துமதம் என்ற பெயரில் செய்துவரும் பார்பனீயத்தின் துரோகத்தை, தமிழர்களுக்கு எடுத்துச் சொன்ன சித்தர்களையும் வெக்கமின்றி, அவர்களும் இந்துமதமாக காண்பித்து வருகிறது! நம்ம தமிழர்களும் ஆரத்தி,ஆலாபனை, செய்து அவாள்களைப் போற்றிவருவதுதான்!
   சிந்திக்க உண்மைகள், பின்னூட்டதிற்கு நன்றி!

   Delete
 3. தமிழினத்தை இந்துமதம் எனும் மாயையின் பெயரில் சாதிவாரயாக பிரித்தாண்டு அழித்த வஞ்சக சூழ்ச்சிக்கார பாசிச பார்ப்பனர்கள் தாங்கள் இழைத்த அநீதி அக்கிரமங்களுக்கு பொறுப்பேற்று பொது மன்னிப்பு கேட்டு தண்டனைகள் பெறாதவரை அவர்களின் தில்லுமுல்லுகளை, கொலை, கொள்ளை, இனவழிப்பு, கேப்மாறித்தனம், ரவுடியிசம், குடி கெடுப்பது போன்ற அனைத்து பொறிக்கித்தனங்களை தினமும் தமிழினம் அறிய கொடுத்து வரவேண்டும்.

  அகழ்வாராய்ச்சியாளர்கள் மண்ணில் புதைந்த பண்டைய கால மறைந்த வாழ்வாதாரங்களை கண்டெடுத்து அழிந்த இனங்களின் தங்களது அழிவிற்கான காரணங்களை, மறைந்தவர்களின் வாழ்வின் பெருமைகளை அறிவிப்பது போலுள்ளது உங்களது எழுத்து. தமிழினத்தின் பெரும்பாலான ஆதிகாலத்து வாழ்வாதாராங்கள் கடலுக்கடியில் மூழ்கியிருந்நாலும் உங்களை போன்றவர்களின் சிரத்தையால் தரையில் இன்றும் மீதமுள்ள சில ஆதாரங்கள், எழுத்தாராதங்கள் மூலங்களை ஆராய்ந்து தொகுத்து கொடுப்பது இன்றிருக்கும் தமிழினம் தலை நிமிர உதவுகிறது.

  தொடர்ந்து எழுதிவர ஊக்குவிக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மாசிலாவுக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு இயன்றவரை முயலுகிறேன்! எத்தனை ஆதாரம் காட்டினாலும், ஏற்காத அறிவுஜீவிகள் பற்றிதான் சிந்தனை செய்யவேண்டியுள்ளது!

   ஏனெனில், இன்னும் முக்கிய ஆய்வு,வரலாற்றில் நானறிந்தது பலவும் இனிமேல்தான் வரப் போகிறது!

   பல அதிர்சிகளும் ஆச்சரியங்களும் அதில் உள்ளன. சாதாரணமாக போடப்படும் பதிவுகளுக்கே, "தாம் தூம்" என்று துள்ளி குதிக்கும் பேர்வழிகள் எப்படி அதனை ஜீரணிக்கப் போகிறார்களோ? அஜீரண கோளாறுக்கு ஆளாகி, ஆங்கிலத்தில் அரைகுறை என்றும் வரலாறு தெரியாதவர் என்றும் மனநிலை சரியில்லாதவர் என்றும் வசைமாரி பொழிவார்கள்! போகட்டும்,.தமிழர்கள் கொஞ்சமேனும் சிந்தித்தாலே போதும்!

   Delete
  2. தாங்கள் எப்படி பிராமனர்கள் வகுத்தது எல்லாம் சரி இல்லை என்று கூறுகிறீர்களோ அது போல தான் தாங்களும் எல்லாம் அறிந்த அறிவு ஜீவி போல் தங்களையே பாவித்து அது தான் சரி என்று அடிகொளுகிறீர்கள். தங்கள் மாயையில் இருந்து சற்று வெளியே வந்து எல்லா திசைகளில் இருந்தும் அலசுங்கள், அப்போது தான் யதார்த்த விஷயங்கள் புரியும்.
   வீமன் அந்த கோவிலுக்கு வந்தான் என்றால், அது சோழர்கள் கட்டிய அந்த கல் குடிலுக்கு என்று அர்த்தமாகாது, மாறாக அந்த தளத்துக்கு வந்ததாகவே அர்த்தம் கொள்ளுதல் முறையாக இருக்கும்.
   இது தாங்கள் ஒருதலை பட்சமாக நோக்கும் விதத்திற்கு ஒரு சான்று, அவ்வளவே. எப்படி பிராமனர்கள் கூறியது தவறோ, அதே போல் தான் தங்களை போன்ற (குறை பாடுள்ள) முற்போக்குவாதிகளாக கருதும் மூடர்களும் தவறான வழி கொண்டு செல்லுகிறீர்கள்.
   அதே போல், தைரியம் இருந்தால் இஸ்லாமியர்களையோ கிருஸ்துவர்களையோ குறை கூறி பாருங்கள் தெரியும், உங்களை போன்ற போலி மத மறுப்பாளர்களின் யோக்யதை.
   இதற்காக என்னை வசை பாடலாம், அது தானே முற்போக்குவாதிகளின்(!!) வழக்கம், ஆனால் யதார்த்தத்தை மறுக்க முடியாது.
   தமிழும், சமயமும், தங்களை போல, தங்களை விட கொடூரமான, சவால்களை எதிர்த்து பல நூற்றாண்டுகள் திளைத்து ஓங்கி இருக்கிறது. மக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல, பெரியார் காலத்தை போல், என்ன சொன்னாலும் மண்டை ஆட்டுவதற்கு. கேள்விகளுக்கு, உங்களிடம் நிச்சயமாக பதில் இருக்காது - ஏனென்றால் இதை தவிர தங்கள் சிறு மூளைக்கு வேறு எதுவும் தெரியாது.
   மேலே கூறியவைகள் 'உங்கள்', 'தங்கள்' என்று வருவது அனைத்தும் போலி மத சார்பற்றவர்களை குறிக்கும்.

   Delete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?