கிருமி கண்ட சோழனும், ராமானுஜரும்!

         ராஜராஜன் மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கும்  பிறந்தவன் நரேந்திரன் என்பவன். இவனுக்கு ராஜேந்திர சோழன் தனது இரண்டு மகள்களில் இளையவரான,அம்மங்கை தேவியை மணம் செய்து கொடுத்திருந்தான்! ராஜேந்திரனின் மகள் அம்மங்கை தேவியின் மகன்  குலோத்துங்க சோழன் என்ற பெயரில்  ராஜேந்திர சோழனின் மகன் இரண்டாம்  ராஜராஜனுக்குப் பிறகு  சோழநாட்டின் அரசனான். இவனது ஆட்சிக்காலம் கி.பி.1070 - 1120 -  என்று வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு உள்ளனர்! 


        குலோத்துங்க சோழன் என்ற விருதுபெயருடன் சோழ அரியணை ஏறிய இவனுக்கு," கிருமிகண்ட சோழன்" என்று பெயர் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன! எந்த காரணத்துக்காக  கல்வெட்டுகள் இவனை கிருமி கண்ட சோழன் என்று விளக்கவில்லை!

    ஆயினும் இவனது ஆட்ட்சிகாலத்தில் தான்  வைணவத்தை தூக்கி நிறுத்த பெரும் முயற்சிகள் செய்துவந்த ராமானுஜர் சிதம்பரம் கோயிலில், திருமாலின் சிலையை நிறுவ முயற்சித்த செயலும், அதனை சைவ பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் தடுத்தும்,எதிர்த்தும் வந்த செயலும் நடைபெற்றது! 


         நம்ம கமல் ஹாசனார்,தசாவதாரம் என்ற தனது  திரைபடத்தின் தொடக்கத்தில்  திருமாலின் சிலையை  கோவிலில் இருந்து  அகற்றபடுவதை  தடுப்பார்! நெப்போலிய அரசன்,அந்த சிலையோடு அவரையும் சேர்த்து கடலில் தள்ளுவது போல காட்சியை அமைத்திருப்பார்!  உண்மையில்  அப்படியெல்லாம் எதுவும் நடைபெறவில்லை! யார் கேட்பார்கள்! யாருக்கு தெரியும் இந்த கதை என்பதுபோல  கமல் ஹாசனார், வைணவத்தின் மீது  மக்களை ஈர்க்கவும்,சைவத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் விதமாக  தனது நடிப்பை காட்டியிருப்பார்! 


      நடந்தது என்னவென்றால், சமணர்களை  ஒதுக்கிவிட்டு, ராஜேந்திர சோழன் காலத்திலேயே  சிதம்பரம் கோயில்  சைவ பிராமணர்களின்  கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டிருந்தது!   சைவ பிரிவினரின் கட்டுபாட்டில்  சிதம்பரம் கோயிலும் அதில் இருந்த ஏராளமான  பொன்னும் பொருளையும் அவர்கள் மட்டுமே அனுபவிப்பதை போறாத, வைணவதாசரான ராமானுஜர்,  வம்படியாக  சிதம்பரம் கோயிலுக்குள்  திருமால்(அரங்கநாதர்) சிலையை வைத்து, அதனை வைணவர்களின் கட்டுப்பாடிற்கு கொண்டுவர  ஏற்பாடு செய்தார்! இதனால் கோபமுற்ற சைவ பிரிவினர்கள்  ராமானுஜரின் அடாத செயலை  அரசன் குலோத்துங்கனது   கவனத்துக்கு எடுத்துச் சென்றார்கள்! 

        கோயிலுக்குள் குழப்பத்தை விளைவித்து,நாட்டில் கலகத்தை மூட்டும்  நாசகாரர்களைக்  கண்டறிந்து,தண்டிக்கும்படி  குலோத்துங்க சோழன்  கட்டளை  இட்டான்! அவனது உத்தரவுப் படி, சிதம்பரம் கோயிலில் வைக்கப் பட்ட அரங்கநாதர் சிலை அப்புறப் படுத்தப்பட்டது! 

      அரசனின் கோபத்தை அறிந்த  வைணவ தாசர்  ராமானுஜர், மாட்டினால் அதோகதிதான் என்று பயந்து, மேலகோட்டைக்கு(மைசூர் பக்கம்)  ஓடிவிட்டார்!  மன்னன் குலோத்துங்கன்  இறக்கும்வரை  அவர் சோழநாட்டுப் பக்கமே திரும்பவில்லை! குலோத்துங்கன் இறந்தபிறகுதான்  சோழநாட்டில் காலடி எடுத்துவைத்தார்! 
மக்களுக்குள்  இப்படி தங்களது சுயநலம்,ஆதிக்க ஆசை,ஆகியவற்றின் காரணமாக  குழப்பங்களை ஏற்படுத்தியதை தடுத்தால் தானோ,என்னவோ, குலோத்துங்க சோழனுக்கு கிருமி கண்ட சோழன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்  போல தெரிகிறது! 

    சோழர்கள் நூல் எழுதிய  கே.ஏ. நீல கண்ட சாஸ்திரி  குலோத்துங்க சோழனைப் பற்றிக் கூறும்போது  என்ன சொல்கிறார் தெரியுமா?  இவனை கிருமிகண்ட சோழன் என்று மக்கள் வெறுத்து ஒதுக்கினார்கள் என்கிறார்! கிருமி யார் என்று பார்த்தால்,ராமானுஜர் என்று தெரிகிறது!  

   இந்த நிகழ்ச்சியைத்தான் ,   நம்ம கமல் ஹாசனார்,  தனது "தசாவாதாரம்" திரைபடத்தில் தனது  சாதிய பற்றுதலால், கற்பனைகள் கலந்து... காட்டி இருக்கிறார்! 

    இந்த காட்சிகள் வரும்போது, பின்னணியில் அவர் பேசும் வசனமும்கூட  தவறானதாகும்! இசுலாமும் கிருத்துவமும்  இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்பு, சைவமும் வைணவமும்  தங்களுக்குள்  போரிட்டுக் கொண்டன, தாக்கிக் கொண்டன! என்பதுபோல அவர் பேசும் வசனத்தில் உண்மை இல்லை! சைவமும் வைணவமும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட  முற்பட்டு,  மோதிக்கொள்ளும் முன்பே, இசுலாம்  தமிழகத்துக்கு வந்துவிட்டிருந்தது! 

      ராஜ ராஜனின்  ஆட்சியில்  இசுலாமியர்கள்  சோனகர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தனர்! அதுமட்டுமின்றி,அவனது ஆட்சியில் அதிகாரிகளாக பணிபுரிந்தும் வந்தனர்! சோனகன் சாவூர் பரஞ்சோதி என்பவன், ராஜராஜன் காலத்தில்  ஓலை நாயகமாக அதாவது, செப்பேடுகள்,அரசின் உத்தரவுகளை, அவை சரியாக  எழுதப்பட்டு உள்ளனவா என்று கண்காணிக்கும் உயர்ந்த பொறுப்பில்  இருந்தான் என்று எசாலம் செப்பேடு  கூறுகிறது! இவன்  தஞ்சை கோயிலிக்கு தனது சார்பில்  சில கொடைகளையும் கொடுத்துள்ளான்! 

       கமல் ஹாசனார்  சொல்லும் கதை,ராஜராஜனுக்குப் பிறகு,ராஜேந்திர சோழனுக்குப்  பிறகு, இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த  குலோத்துங்க சோழன்காலத்தில் நடந்த கதையாகும்!நமது  வரலாற்றை திரிப்பதில், அவாள்களுக்கு உள்ள அக்கறை அளவுகூட,  நம்மவாளுக்கு.. நம்ம வரலாற்றை அறிந்துகொள்ள  அக்கறை இல்லை! 

    குலோத்துங்க சோழனுக்கு பயந்து,  மைசூருக்கு  ஓடிய ராமானுஜர் தான், திருப்பதி  மலைமீது  இருந்த,   பழங்குடியினரின் வழிபாட்டுக்கு உரிய.. வன தேவதை, (காளி)சிலையைத் திருத்தம் செய்து, திருமாலாக ஆகியவர்!  அந்த கதையைத்தான், இந்துமதம் எங்கே போகிறது என்ற நூலில்  தத்தேதரார். எழுதியிருக்கிறார்! 
Comments

 1. i am afraid, without analysing history, you have started again your garbage.
  1. Muslims present not evidenced in any where during chola regime.
  2. Ramanuja is the first reformer who included all in sri vaishnavism
  3. there is no fact which says tirupathi belongs to schehduled tribe worshipers.
  if you want to write , write with facts and figures otherwise you will be branded as garbage with nonsensical writing

  ReplyDelete
  Replies
  1. sorry brother! I having solid evidences! ramanuja convert one king in hindu when he is in mysore!

   Delete
  2. Good Joke that you have found a solid evidence of Ramanuja's misdeeds probably 1000 years after he died.
   By now you should have received a nobel prize in carbon dating living in Hosur.

   Delete
 2. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று தைர்யமாக சொல்லி அதை முதலில் செயலில் செய்துகாட்டிய ஆசார்யன் இராமானுசன் இந்தியாவின் முதல் புரட்சிவீரன் ,அவரை கிருமி என்றுசொன்ன உமது மனநிலையை பற்றி எனக்கு சந்தேகம் வருகிறது.

  ReplyDelete
 3. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று தைர்யமாக சொல்லி அதை முதலில் செயலில் செய்துகாட்டிய ஆசார்யன் இராமானுசன் இந்தியாவின் முதல் புரட்சிவீரன் ,அவரை கிருமி என்றுசொன்ன உமது மனநிலையை பற்றி எனக்கு சந்தேகம் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆண்டவன் முன்னால அனைவரும் சமம் என்று சொன்னாப் போச்சா? எதனை பேரை பிராமணர் அல்லாதவர்களை பிராமணர்கள் ஆகவோ , அல்லது ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்யும் அர்சகர்களாகவோ ராமானுஜர் ஆகியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? எனது முந்தைய பதிவைப் படித்து விட்டுதானே இந்த பதிவை படித்தீர்கள்?   காந்தி பிறந்த கத்தியவார் மாவட்டத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அதிகம் இருந்தது! காந்தி, தீண்டத்தகாதவர்களை "அரிஜன்" என்று அடையாளம் செய்தாரே, தவிர அவர்களை அழைத்துக் கொண்டுபோய் அரியின் கோயிலுக்குள் விடவில்லை! வரலாற்றை திரிக்கும் வைணவம் சொல்வதை நம்பும் உங்களுக்கு, என்போன்றவர்களின் மனநிலை குறித்து சந்தேகப்படத்தான் தோன்றும்!

   Delete
 4. This is the usual tamil writing for uneducated/half educated masses with lots of sensational anecdotes . It is not backed by any indepth knowledge or study of the history.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஆளுங்க அரைகுறை ஆடையுடன் இருந்து , ( காவி,கசாயம் போட்டுகொண்டு,) அந்த ஆண்டவன் கனவில் வந்து அருளியது!

   இதை நாரதருக்கு சொல்ல, நாரதர் சுகாச்சாரியருக்கு சொல்ல என்று கதை விட்டால் உண்மையான அறிவாகவும், வரலாறாகவும் உங்களுக்கு தோன்றும்! நான்தான் காரண காரியங்களுடன் சொல்கிறேனே ! எப்படி நம்பத் தோன்றும்?

   Delete
  2. You need to have more maturity and better understanding of life,spirutuality,Hinduism, world history to have a broader perspective. Otherwise the half baked outcome is seen in all your articles.

   Delete
  3. வாழ்கையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நம்பச் சொல்லும், இந்துயிசம்,ஆன்மிகம் தேவையில்லை! அறிவும் ஆய்வும் போதும் என்கிறேன்!

   ஆடு மேயத்தவனும்(இயேசு},மாடு மேயத்தவனும் (கிருஷ்ணனும்} தான் ஞானிகளாக ஆனார்கள்!

   இந்த உலகத்தில் ஆயிரம் கோடி, பக்த கோடிகள், ஆடம்பர வாழ்க்கை வாழும் எந்த இந்துமத ஆன்மீகவாதிகளாலும்,அவர்களது போதனை,வலிகாட்டியாலும் யாரும் ஞானம் அடையவில்லை! அப்படி நீங்கள் ஞானம் அடைந்தவர்கள் உண்டு என்று நீங்கள் நினைப்பது நமது அறியாமை என்றும் கண்மூடித்தனமான நம்பிக்கை என்றும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்!

   பிறரின் மீது வெறுப்பையும், துவேசத்தை வளர்க்கும் எந்த மதமும், ,ஆன்மீகமும் மக்களது வாழ்கையை சீர்படுத்த முடியாது! சீர்குலைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

   Delete
 5. பின்னூட்டமிடும் அம்பிகள் தமிழில் எழுதினால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.
  பாப்பார கமலின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியதற்கு நன்றி. இது போன்ற பன்னாடைகளுக்கு உடலுழைத்து பிழைப்பதற்கு திறமை இல்லை எனறால், இப்படித்தான் எதையாவது உலறிக்கொட்டி பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைப்பான்கள். அதாவது அந்த காலங்களில் செய்த அதே தொழிலை தொடர்ந்து இப்போதும் செய்து வருகிறான்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. பல புதிய தகவல்கள். நீங்கள் எழுதும் போது அடியில் புத்தகத்தின் பெயரையும் கொடுத்தால் பதிவின் நம்பகத் தன்மை இன்னும் கூடும்.

  ReplyDelete
 7. Dear Tamil friends
  I am not an Amby and in fact a big fan of periyar. All our tamilians should grow up and be smart . If we waste our time in simple sensational politics and news like this we will continue to be exploited and end up like our poor srilankan Tamil brothers. We are only emotional and not smart. Use the brain .

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பிரச்சனையும் தனித்தனியாக பார்ப்பது, பிரச்சனைக்கு தீர்வைத் தராது! தமிழர்களின் ஒட்டு மொத்த பிரச்னைக்கு காரணமே, 'பாசிசம்' என்பதுதான்!

   பாசிச{பிராமணீயம்) குறுக்கீடுகளாலேயே,தமிழனுக்கு காவேரி நீர் பங்கீட்டில் நியாயம் கிடைக்க வில்லை! முல்லைப் பெரியாறு தீர்ப்பு அமல் படுத்தப்படவில்லை! புதிதாக அணை கட்டுவதாக.. கேரளாகாரன் சொன்னால், மதிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை!

   கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதற்குள் பாலாறில் ஆந்திரா அணை கட்டுகிறது! இத்தனைக்கும் மேலாக தமிழக மீனவர்கள், சிங்கள ராணுவத்தால் கொல்லபட்டால் மதிய அரசு கண்ணை மூடிகொள்கிறது! . இங்குள்ள தமிழக தலைவர்கள் கரடியாக கத்தினாலும் எதுவும் நடப்பதில்லை!

   ஈழத்து படுகொலைக்கு எது காரணம்? சிங்கள வெறியன் ராஜபகஷே மட்டுமா? இல்லை, பிராமணீயம் என்ற பாசிச ஆட்சியாளர்கள் கூடத்தான் !

   தமிழனுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் கோயில்களில் இருந்து பிராமணர்களை வெளியேற்றிவிடுவோம் என்று நமது தலைவர்களை சொல்ல வையுங்கள். ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழர்களின் எல்ல பிரச்னையும் சாதி மோதல், மத மோதல், உள்பட தீர்வுக்கு வருகிறதா,இல்லையா என்று தெரிந்துவிடும்! ஏனெனில், பிராமணீயம் தனது ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு, இன நலனுக்கு ஆபத்து என்றால் மட்டுமே உடனடியாக நடவடிக்கை எடுக்கும். !

   நமக்கு தலைவலி வந்தால் நாம்தான் மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும் எனபது போல இல்லை நமக்கு வரும் தொல்லைகள் ! நமது தொல்லைகளுக்கு யார் காரணமோ,அல்லது எதுவெல்லாம் காரணமோ, அவைகளுக்கு நம்மால் தொல்லை ஏற்படும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினால் தவிர, நமது தொல்லை நீங்காது! நான் சொல்வதுபோல நடந்தால், அவர்கள் மருந்து சாப்பிடுவார்கள்! ஆனால் நமது தலைவலி போயி போய்விடும்!

   கன்னியாகுமரியில் ஒரு பிராமணனுக்கு காதுவலி வந்தால் காஷ்மீரில் உள்ள பண்டிட்டுக்கு கண்ணீரே வரும்! அவ்வளவு இனஉணர்வு அவர்களுக்கு!

   Delete
 8. திரு.பி.ஸ்ரீ .அவர்கள் எழுதிய ஸ்ரீ இராமானுஜர் என்ற நூலை தாங்கள் படிக்கவும்,அதில் இராமானுசர் செய்த சாதனைகள் புலப்படும்.இராமானுசர் வகுத்த சட்டதிட்டங்கள் கோயிலொழுகு என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது,அதில் திரு கோவில்களில் எல்லா சாதியினரும் எப்படி சமமாக பாவிக்கபடவேண்டும் என்று தீர்மானமாக சொல்லியுள்ளார்.நாலாம் வருணத்தில் பிறந்த நம்மாழ்வார்தான் எங்கள் குலதனம் என்று எல்லா ஆச்சாரியர்களும் சாதி வித்தியாசமின்றி முழங்கியுள்ளனர்.அந்தணர் குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் பெருமாளை பாடவில்லை,நம்மாழ்வார் என்ற சூத்திரனை தான் போற்றி கண்ணிநூன் சிறுதாம்பு என்ற பத்து பாசுரங்களை பாடியுள்ளார்.சக வைணவனை என்ன சாதி என்று கேட்பது தாயின் கற்பை சந்தேகபடுவதற்க்கு ஒப்பாகும் என்று வைணவம் திட்டவட்டமாக சொல்லுகிறது.

  ReplyDelete
  Replies
  1. the mythir society petron of His HIGHNESS THE MAHARAJA OF MYSORE Book (Council For The Year 1940-41) page No.430, giving message with reference From Guruparanpara-brabhava,

   "the tradional accounts of Ramanuja credit vishnuvardhana as having the helped the teacher in the construction of the temple at melkote or thirunarayanapuram,unearthing the structures of the old temple fallen into repair and buried under the earth(Guruparanpara-brabhava,anantacharya,pp.81-83.a full account of the excavation and construction of the temple)he roled over the entire yerritory of modern mysore as already shown. he defeated the chola generals and even threatened Kanci.all this tend to point out that kulothunga. I was probably responsible for initiating the persecution of the vaisnavas about the begining of the twelth century.
   In case the return of Ramanuja to chola territory must have been only after the death of kulothunga_I,in 1120 A.D.
   that ramanuja stayed for a considerable number of years in mysore attested by the Guruparampara which mentions his stay at thirunarayanapuram for over twelve years!
   (
   குருபரம்பரை பக்கம் 83 -யில் திரு நாராயணன் சன்னதியில் பன்னிரண்டு சம்வத்சரம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தர்சனார்த்தம் பிரசாதித்துக் கொண்டிருக்கிற நாளையிலே, ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கொயினின்றும்(sree Rangam) வந்து, உடையவர் திருவடிகளிலே தண்டம் சமர்பித்து... என்று கூறுகிறது!
   சரி. என்னதான் ஆதாரம் காட்டினாலும் நீங்க நம்பவாப் போகிறீர்கள்! நம்புவதற்காகவா ? ஆதாரம் கேட்கிறீர்கள்? சும்மாதானே!

   Delete
 9. ரொம்ப நாளைக்கு அப்புறம் ....ஹலோ அன்பின் ராஜன்,

  இவ்வளவு சரித்திரங்களைக் கரைத்துக்குடித்த தாங்கள் தமிழ்நாட்டில் பிராமணரைவிட (அதிகாரத்தில் அல்ல ) மிக அதிக சொத்துக்களைக் கட்டி ஆண்டு வரும் ரெட்டியார்களும், முதலிகளும், நாயக்கமார்களும் எப்படி ஐயா இட ஒதுக்கீட்டு அட்டவணையில் இடம் பிடித்தார்கள் என்று விளக்கினால் உங்கள் நோக்கம் உண்மையானது என்று புரியும் அல்லது உங்கள் நோக்கம் நக்கல் தான் என்று அர்த்தமாகிவிடும்

  ReplyDelete
 10. இலங்கையில் யாராவது நண்பர்கள் இருந்தால் செப்பேடுகளின் அடிப்படையில் அற்புதமாகத் தொகுக்கப்பட்ட "மட்டக்களப்பு மான்மியம்" என்ற நூலை படிக்கவும், சைவர்களும் வைணவர்களும் எப்படி அரசர்களை ஒருவருக்கொருவர் சற்றும் குறையாமல் மயக்கி வந்திருக்கின்றனர் அதன்மூலம் குடிமக்கள் புலம்பும் புலம்பல்கள் என்று வரலாறு புரியும். (சமணர்களும், பவுத்தர்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல ) உங்களுக்கு பிராமணர்களைத் தவிர மற்றவர்களைக் குறை சொல்லப் பிடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் ஆனால் மற்றவர்கள் ஏதோ உத்தமர்கள் என்று படம் காட்டும் செலெக்டிவ் வரலாற்று அனீமியா நோய் பிடித்துத் திரியவேண்டாம்

  ReplyDelete
 11. பார்ப்பன என்று வெப் உலகத்தில் ஆரம்பிக்கும் 99 சதவிகித நபர்கள் காழ்ப்பு மன்னர்களாகவே
  இருக்கின்றனர்.. ஓசூரிலிருந்து ஓசை எழுப்பும் நீங்களும் அஃதே... உங்கள் கருத்தில் சாரமில்லை
  மாறாக காழ்ப்பு கொட்டிக் கிடக்கிறது..
  உங்கள் காழ்ப்பு என்பது பெரியார் காலத்து காழ்பு... ஆனால் பாலத்தில் கீழ்
  நிறைய தண்ணீர் ஓடிவிட்டதை நீர் உணரவில்லை... பெரும்பாலான உங்களைப் போன்ற
  காழ்ப்பு மன்னர்கள் பெரும்பாலும் கை வைப்பது கமல் மீது.... கமலிடம் ஏற்கவும்
  எதுவும் இல்லை...அதே சமயம் நிராகரிக்கவும் ஒன்றும் இல்லை.. அவர் ஒரு
  கமர்சியம் படம் எடுப்பவர் என்பதைத் தவிர ஒன்றம் மில்லை..ஒரு தமிழ்ப் படம் நேர்த்தியான
  வரலாற்றைச் சொன்ன தமிழ்ப் படம் எடுப்பது அரிது.. அதில் ஒரு கமர்சியல் படத்தில்
  சில நிமிடங்கள் நேர்த்தியாக ஒரு விசயத்தைச் சொன்ன கமலின் படத்தில் என்ன
  தப்பு கண்டுபிடித்தீர்..ஒரு வைணவன் கதாபாத்திரம் அது அந்தப் பாத்திரத்தின் பார்வையில் அப்படித்தான
  சொல்ல முடியும்.. உம் பார்வையில் எடுக்க வேண்டும் என்றால் நீர்தான் எடுக்க வேண்டும்...
  அதுவும் ரவிகுமார் முதலியாரை வைத்து... விசயம் என்ன...சிதம்பரத்தில் சிலை நிறுவப்பட்டது
  அது எடுத்து வீசப் பட்ட வரைதான் சரிதானே
  இதில் உமக்கு காரணத்தில்தான் பிரச்சனை... சம்பவத்தில இல்லையே.. அரைகுறைத்தனமாக
  அரைவேக்காட்டுத்தனமாக பேசிதிரிவதில் அர்த்தமில்லை..

  ReplyDelete
 12. முட்டாள்தனமான பதிவு.. சரித்திரத்தை அப்பட்டமாக மறுக்கும் இன்னொரு கிருமிகண்டனின் பதிவு..

  ReplyDelete
  Replies
  1. வைனவத்தை குறை கூற எவனுக்கும் தகுதி இல்லை

   Delete
 13. வைனவம் தாழ்த்தப்பட்ட மக்களை வுழர்த்யது ப்புராணம் தெரியுமா உனக்கு

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?