இறைவன் முன் அனைவரும் சமமா? ஏற்குமா பிராமணீயம்?

  "இறைவன் முன் அனைவரும் சமம்"  என்று  இன்றைய சைவ,வைணவ பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்  பலரும் கூறிவருகிறார்கள்! இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை நான் ஏற்றுகொள்கிறேன்!  நான் எற்றுகொள்வதில்   என்ன பெருமை ,சிறப்பு இருக்கிறது? அனைவரும் சமம் என்பதை  இறைவனின் இடைத்தரகர்களாக  இன்றும் இருந்து வருகிற, இயங்கி வருகிற பிராமணர்கள் எற்றுகொள்கிறார்களா? எனபது குறித்து சிந்திக்க வேண்டும்! 


அவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஏன் என்றும் சிந்திக்க வேண்டும்! அனைவரும் இறைவன் முன்பு  என்றில்லை, பிராமணர்கள் என்கிற மனிதருக்கு முன்  சமமில்லை  என்பதை  நடைமுறையில் இன்றுவரை  செயல்படுத்தி வருகிறது பிராமணீயம்!

இந்த லட்சணத்தில்  ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது, அதனால் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவித வழக்கம் இருக்கிறது என்றும் சட்டை அணியாமல் போவதற்கு காரணம் அந்த கோயிலில் உள்ள சக்தி நமது உடம்பில் படுவதற்கு தான் என்றும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதற்காகத்தான்  என்று நாம் எண்ணிக் கொண்டு, அல்லது பார்பனீயம் நமக்கோ,நமது முன்னோர்களுக்கோ,சொல்லிவந்ததை, அல்லது நாமாக ஏற்றுக்கொண்ட சமாதானத்தை  உண்மையென்று நம்பி வருகிறோம்!


  இன்றுவரை  இறைவன் இருக்கிறானோ, இல்லையோ,அது வேறுவிசயம்! ஆனால் இறைவன் உறைவதாக  சொல்லப்படும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அப்படி உள்ள அந்த கோயில்களில்,இறைவனால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து மனிதர்களும்  சென்றுவர  முடிகிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்! அவ்வாறு மனிதர்கள் அனைவரும் இறைவன் உள்ளதாக நம்பும் ஆலயங்களுக்குள்  சென்றுவர முடியாத நிலைக்கு  என்ன காரணம்? தடி செய்ய  யார் காரணம்? அல்லது எந்த சக்தி  காரணம்  என்று  ஆராய்ந்தால்  அந்த சக்தி பிராமணீயம் என்ற பாசிசம்தான் என்பதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்!

  பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களை ஆக்கிரமிக்கும் வரை, கோயில்களை தங்களது  கட்டுப்பாட்டில் கொண்டுவரும்வரை  கோயில்களில் அனைவரும் சென்றுவர தடிஎதும் இருந்ததில்லை!  காரணம் கோயில்கள் எனபது பல்துறைகான,பொது இடங்களாக விளங்கிவந்ததும்,  அந்த நோக்கத்துக்காகவே  கோயில்கள் கட்டப் பட்டு இருந்தன என்பதும்தான்! 

 பிராமணீயம் என்கிற பாசிசம்  கோயில்களை தங்களது ஆதிக்க இடன்காலக ஆகிய பிறகே,ஆண்டவன் கூட  தீண்டாமை  பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது! பிராமணீயம்  ஏற்படுத்தி உள்ளது! 
    இதனை நமக்கு  உணர்த்துவதே, நந்தனாரின் கதை! அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவராக இன்று காட்டப்படும் திருநாளைப் போவார்  என்ற  நாயன்மாரின் ( இயற்பெயர்}உண்மைப் பெயர் நந்தனார் என்பதாகும்!

      இவரை பிராமணீயம்  தனது ஆதிக்கத்தில்  கோயில்களைக்  கொண்டுவந்ததை  ஜீரணிக்க முடியாமலும்   எதிர்கவும் இயலாத நிலையில் அல்லாடியவர்! பிராமணீயம் இவரைத் தாழ்த்தப்பட்டவராக  அறிவித்து, கோயிலுக்குள் நுழையத்  தடை விதித்திருந்தது!   இது  கோயிலில் உள்ள சிவனுக்கும்  தெரியும் என்கிறார்கள்! 

      ஆதனூரில் புலையர் குலத்தில்,பிறந்த இவருக்கு சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம்!  தனது வாழ்நாளில் ஒரு நாளாவது,தில்லைக்குப்  போய், (சிதம்பரம்)   நடராஜரை தரிசித்துவிட வேண்டும் என்ற ஆசைகொண்டவர்!    இந்த (வேண்டாத? )ஆசை எழும்போதெல்லாம் அவராகவே  நாளைக்குப் போகலாம்  என்று தனது மனதுக்குள்  எண்ணிக் கொண்டு நாளைக் கடத்திவந்தார்! 

    அடக்க. அடக்க... ஆசைஎன்பது,    அடங்காமல்  அதிகரிக்கும் குணமுள்ளது என்பார்களே? அப்படி  நந்தனாரின் ஆசை  அடங்காத ஆசையாக  ஒருநாள்  அதிகமானதால்  என்ன நடந்தாலும் சரி, தில்லை நடராஜரைப் போய்  தரிசித்துவிடுவது  என்று  தீர்மானித்து, தெற்கு வாயில்  வழியே,  சிதம்பரம் கோயிலுக்குள் செல்லும்  இவரை, தீயில் மூழ்கி எழுந்துவந்தால்,உனது தீட்டு அகன்றுவிடும், தீண்டாமை போய்விடும்! அதன்பிறகு  நீ தாராளமாக தில்லை நடராஜரை தரிசிக்கலாம் என்று பிராமணர்கள் கூறி, நந்தனார்மீது  நெய்யை ஊற்றி, எரித்து விடுகின்றனர்!  இறந்தபின்  சிவதரிசனம் அவருக்கு கிடைகிறது!

       இதனை,  பெரிய புராணம்  எப்படி சொல்கிறது  தெரியுமா? சிவனே,நந்தனாரின் கனவில் வந்து தில்லைக்கு வருமாறும்  தீயில் மூழ்கி எழுமாறும் வந்து சொன்னாராம்! அதேபோல, தில்லைவாழ் அந்தணர்கள் (அந்தகன் என்றால் எமன்,குருடன் என்றும் பொருளுண்டு!)   கனவில் வந்தும் சிவன்,நந்தனாரை  தீயில் மூழ்கிஎழுவதற்கு,  ஏற்பாடுகள் பண்ணுமாறு  சொன்னாராம்! 

      அப்படி சிவன் கனவில் சொன்னார் என்றால்," இறைவன் முன் அனைவரும் சமமில்லை" என்று இறைவனே  சொன்னதாகத் தானே? பொருளாகிறது! கனவில் வந்து அந்தணர்களுக்கும் சொன்ன இறைவன், "அந்தணர்களே! என் அடியவர்களில் ஒருவனான  நந்தனார் நாளை  என்னை ர்தரிசிக்க வருகிறார்! நீங்கள் அவரை பணித்து, சேவித்து எனது தரிசனத்துக்கு  அழைத்துவாருங்கள் என்று சொல்லி இருக்கலாமே? "ஏன் சொல்லவில்லை? 

 சிவன் கனவில் வந்து அந்தணர்களிடம் நந்தனாரை எரித்து விடுங்கள் என்றும் சொல்லவில்லை! நந்தனாரிடமும் சொல்லவில்லை! இறைவனைக் காணும் அதீத பக்தியால், கோயிலுக்குச் சென்ற நந்தனாரை,அந்தணர்கள் எரித்துக் கொன்றுவிட்டு, கடவுளைக் குற்றவாளியாக்கி, இருகிறார்கள் என்கிறேன்! நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்! 

      அல்லது, அந்தணர்கள் செய்த ஏதோ ஒரு தகாத செயலைக் கண்டதால்தான்,    நந்தனாரை எரித்து கொன்றுவிட்டு, இப்படி கதைகட்டி உள்ளார்கள் என்றும் சந்தேகம் வருகிறது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 

      எனக்கு ஏன் அப்படியெல்லாம்  சந்தேகம் ஏற்படுகிறது?  என்றால்,  இதே தில்லை கோயிலில்,(சிதம்பரத்தில்)  நம்ம விஷ்ணு  பெரியவாள், "ராமானுஜர்," குலோத்துங்க  சோழன் காலத்தில் செய்தாரே  ஒரு புரட்சி?!  அதைக்கூட  நம்ம    கமல ஹாசனார்,  அவரோட 'தசாவதாரத்துல'    முதல்ல  காட்டினாரே?!  அந்த கதை பற்றி  அடுத்து பார்க்கலாம்!  

Comments

 1. Replies
  1. சிந்திக்க உண்மைகள்.பகிர்வுக்கு நன்றி.

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. DEAR BROTHER, THANK YOU FOR YOUR CONTINUE VISIT AND THE MORAL SUPPORT!
   RAJAN.

   Delete
 3. thanks for presenting rotten garbage in net.
  of course if we have such articles, then only we can realise and categorize good articles

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?