சேனாதிபதியின் ஜீவகாருண்யமும், சிவபக்தியும்!

       சோழ நாட்டின்  சேனாதிபதி  அவர்! நாட்டியம் ஆடும் குடியில், வேளாளர்   குலத்தில் பிறந்தவர்!   இவரது  முக்கிய பணி நாட்டைக் காப்பது, நாட்டின் மீது  எதிரிகள் யாரேனும் போர் தொடுத்தால்,போரிட்டு அவர்களை முறியடிப்பது  எனபது  உங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்  ஆக இருக்கும்! அவையெல்லாம் அவருக்கு  இரண்டாம் பட்சம்தான்!

    ஆனால், அவற்றைவிட மிக முக்கிய பணியாகவும்,தலையாய கடமையாகவும்  இவர் செய்துவந்தது,  சிவன் கோயில்களுக்கு   வரும் சிவனடியார்கள்  சாப்பிடாமல்  பட்டினி கிடக்கும் நிலை  ஏற்பட்டுவிடக் கூடாது என்று  நினைத்து,  அவர்களுக்கு எப்போதும்  உணவு கிடைக்கவேண்டும்!  என்பதற்காக, யாரையும் நம்பாமல் தனது பாதுகாப்பிலேயே, உணவுக்கு தேவையான  நெல்லைப் பதுக்கிவைத்து, பாதுகாத்து  வருவதுதான்! மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை  பதுக்கிவைத்தால், அது "குற்றம்" என்று  சேனாதிபதிக்கு தெரியாது போலும்! அல்லது அப்படி ஒரு சட்டம் அப்போது இல்லை போலும்! 

     இப்படி அந்த சேனாதிபதி  நெல்லையெல்லாம் பதுக்கிவைத்து, பாதுகாத்து வரும் நிலையில்,  போருக்குபோகச் சொல்லி.. சேனாதிபதிக்கு அரசன் கட்டளை வந்தது!  வேறுவழியில்லை, ஆதலால்  சேனாதிபதி போருக்கு போனார்! போர் நீண்டுகொண்டே போனது,உடனே  முடிந்த  பாடில்லை!

       இவரைப்போலவே, பலரும்,இளைஞர்களும்    நாட்டின் நிமித்தமாக   போருக்கு போனதால், விவசாயம் பொய்த்து, விளைச்சல் பாதித்து, சோழ நாட்டில் பஞ்சம்வந்துவிட்டது! சோத்துக்கே மக்கள் திண்டாடுகிறார்கள்! பெண்களும் குழந்தைகளும்  எத்தனை நாட்களுக்கு பட்டினி கிடக்கமுடியும்? அதனைப் பார்த்துக் கொண்டு,சகித்துக்கொண்டு மற்றவர்கள் இருக்கமுடியும்?


      சேனாதிபதியின் உறவினர்கள்  பார்த்தார்கள்,. யோசித்தார்கள்! நமது சேனாதிபதி,அதுவும்  நம்ம சொந்த பந்தம்! "கோடி கொடுத்ததும்  குடிபிறந்தார் தம்மோடு கூடிவாழ்தல் கோடிபெறும்" என்று கூறும் தமிழ் குடியில் வந்தவராயிற்றே! அவர்தான்  ஏராளமாய்  நெல்லைக் குவித்து வைத்துள்ளாரே! அதனை இந்த பஞ்சகாலத்தில் எடுத்து நாம் பயன் படுத்திக் கொண்டோம் என்றால்,   நமது சமயோசித அறிவை அவர் பாராட்டா விட்டாலும்  அவர் தவறாகவா நினைப்பார்?  சூழ்நிலை சரியானதும் அவருடைய நெல்லை  கொடுத்துவிட்டால் போயிற்று! என்று முடிவு செய்து, சேனாதிபதியின் நெல்லை எடுத்து  ஆளுக்கு கொஞ்சமாக  பகிர்ந்து கொண்டு  சாப்பிட்டார்கள்! பஞ்சத்தை ஒருவாறு சமாளித்து வந்தார்கள்!

போருக்குப் போன சேனாதிபதி  தெரும்பிவந்தார்! உறவினர்கள் நடந்ததை கூறினார்கள்! "வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம், வாடுகின்ற அன்பு மனம் கொண்டவரா," சேனாதிபதி?  இல்லை,  கொல்லாமை போன்ற அறத்தை,தருமத்தை,தத்துவத்தைக் கடைபிடித்த  சமண,பவுத்த மதப் பற்றாளரா,சேனாதிபதி? தமிழனாக பிறந்துவிட்டதாலேயே அவரிடம்   தமிழர்களின்  நன்னெறிகளை தான்  எதிர்பார்க்க முடியுமா? அவர் பற்று வைத்துள்ள,  சைவத்தின்   குணத்தை அல்லவா,காட்டுவார்? 


     சேனாதிபதிக்கு,  சிவனது  அடியார்கள்  சாப்பிட வேண்டுமே, என்று தான்  சேமித்து வைத்த நெல்லை,      பஞ்சம் வந்தால்தான் என்ன? சாப்பிட்டவர்கள்  உறவினர்களை இருந்தால்தான் என்ன?    வந்ததே கோபம்! தனது உறவினர்களை எல்லாம்  கொன்று குவித்து  விட்டார்! சேனாதிபதி ஆயிற்றே? போர் கலை தெரிந்தவர்  அவர்! எனவே  கொல்லுவதற்கு, சொல்லியா தரவேண்டும்! 


  இத்தகைய ஜீவகாருண்ய செயலைச் செய்தவரை  சிவன்  சும்மா விடுவாரா? தரிசனம் தந்து, அவரை  நாயன்மாராக ஆக்கிக் கொண்டுள்ளார்!    இந்த ஜீவகாருண்ய   நாயனாரின் பெயர், "கொட்புலி"யாராம்!


    எவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன? எவன் செத்தால் என்ன ? அது பற்றி  சிவனுக்கு என்ன கவலை?  அவரைப் பொறுத்தவரை  அவருக்கும், அவரை சார்ந்து உள்ள பிராமணர்களுக்கும் சேவை செய்கிறவர்களை,  "நாயன்மாராக" ஆக்கிக் கொள்வதுதானே, பிராமணியத்தின்   நல்ல  சேவையாகவும், தேவையாகவும் உள்ளது !  அத்தகைய செயல்களை தொடர்ந்து  மதத்தின் பெயரால் பிராமணீயம்  ஊக்கபடுத்தி,செய்யவும் வைத்து வருகிறது! 

      பிராமணீயம்"  சொல்லும் நாயன்மார்களது  வரலாறு,மனித தன்மையற்ற,கொடூர குணங்களை நியாய படுத்தி  வருகிறது!அன்பு,கருணை,மனிதநேயம்,நீதி,தர்மம் என்ற தமிழர்களின்  உயர் பண்புகளுக்கு எதிரானது!
 
    

Comments

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நாயன்மார் கதை தமிழர் பண்புக்கு எதிரானது என்ற தங்களின் கருத்து 100% சரியானது.

    ReplyDelete
  3. இதையெல்லாமா இத்தனை நாளாக வணங்கினேன்

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?