தந்தையின் காலை வெட்டி நாயனாரானவர்!

    மாடு மேய்ப்பதுதான்  அவரது தொழில், கறவை மாடுகளின் பாலை  விற்பனை செய்வதன்  மூலம் கிடைக்கும் வருவாயே  குடும்பம் நடத்த  ஆதாரம். வயதாகி விட்டது, மாடுகளை  முன்புபோல அவரால்  மேய்ச்சலுக்கு அழைத்துப் போக, முடியவில்லை! 

     தனக்குப் பின்  தன்னையும்,குடும்பப் பொறுப்புகளையும் காக்கும் பொறுப்பு  மகனுக்குத் தானே? என்று நினைத்தாரோ, என்னவோ, இனிமேல்  நீயே இந்த மாடுகளை  மேய்ச்சலுக்கு  கொண்டுபோ, நன்கு பார்த்துக்கொள், கறவை மாடுகளிடம் இருந்து  பாலைக் கறந்து, குடங்களில் சேகரித்து வா! என்று மகனின் உதவியை நாடுகிறார்,  அந்த முதியவர்! 

     மகன் பொறுப்பாக நடந்து கொள்வான், மாடுகளை நம்மைப் போல பராமரிப்பான், பாலைக் கொண்டுவருவான், பணமாக்கலாம், வருவாயில் குடும்பம் வறுமை இன்றி நடக்கும் என்ற நம்பிக்கையும் கனவும்,எதிர்ப்பார்ப்பும் அவருக்கு! 

      இளைஞரான மகனும், தந்தையின்  பேச்சுக்கு கட்டுப்படுவதாக  தலையசைத்தான்! மாடுகளை மேச்சலுக்கு கூட்டிப் போனான், திரும்பி வந்தான்!  

      மாடுகள் திரும்பி  வந்தது, பாலை கறந்தாயா?  மகனைக் கேட்டார்!  அவன் மவுனமாக  இருந்தான்! சரி கறக்க, மறந்து இருப்பான், அனுபவமில்லை!   என்று நினைத்து கொண்டார்! 

    தானே  சிரமம் பார்க்காமல்,  பாலைக் கறந்து கொள்ளலாம்  என்று நினைத்து  மாடுகளிடம்  சென்று பாலைக் கறக்க முற்பட்டார்.  பாலைக் காணோம்!, பசுவின் மடியில்  இருந்தால் தானே?,   பால் சுரக்கும! எல்லா கறவைகளுக்கும்  இதே நிலைதான்! ஒன்றிலும் பாலைக் காணோம்!

       மகனைப் பார்த்தார்,  பாலைக் கறந்து யாருக்காவது,  கொடுத்து விட்டானா?  இவனே.. குடித்துவிட்டானா?  தெரியவில்லை! சரி, போகட்டும் நாளைக்குப் பார்க்கலாம், என்று விட்டுவிட்டார்! 

  அடுத்த நாளும்,அதே கதைதான்! நாட்கள் நகர்ந்தது, நடப்புகளில் மட்டும்  எந்த மாற்றமும் இல்லை!

     கிழவர் பார்த்தார். சரி, என்னதான் நடக்கிறது? பால் எப்படி கிடைக்காமல் போகிறது ? என்று பார்த்து விட  முடிவு செய்து, ஒருநாள் மகனை மாடுகளுடன் மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு, அவனறியாமல்  பின்தொடர்ந்து சென்று, நடப்பவைகளை மறைந்து  இருந்து  பார்த்தார்! 

      மகன் பாலைக் கறந்தான், கறந்த பாலை, குடங்களில் சேகரித்தான்,  மணலால் சிவலிங்கம் செய்த மகன், கறந்த பாலை   மணல் லிங்கம் மீது  கொட்டி,  பாழ் படுத்தினான்! 

       பதறினார் தந்தை, துடித்துப்போனார் ! மகனின்   முட்டாள்தனத்தைப் பார்த்து, கோபப்பட்டார்.!  அவனிடம் ஓடி சென்று,  தடுக்கப் பார்த்தார், கறந்து வைத்த...   பால் குடங்களில்,அவரது கால் இடறியது, பால் தரையில் கொட்டியது! 

        பார்த்தான் மகன். மணல் சிவலிங்கத்துக்கு,  'அபிசேகம்' செய்ய வைத்திருந்த பாலை, தரையில் கொட்டும்படி செய்து விட்டாரே!, அவர் தந்தையை இருந்தால்தான்  என்ன? அவரை தண்டிக்காமல்  விட முடியுமா?  பெற்ற தந்தை என்றும் பாராமல், தட்டிவிட்ட காலை  வெட்டிவிட்டான்!  

      அதாவது, சிவஅபராதம்  கண்ட  மகன்,  "கோலை" எடுத்தானாம், அது மழுவாக (கத்தியாக )மாறிவிட்டதாம்!   மழுவால் தந்தையாரின் காலை வெட்டி எறிந்து விட்டு, மீண்டும் சிவபூசையில்  ஈடுபட்டான்!

      . இவனது  இத்தகைய அன்பான  சேவையைக் கண்டு, 'சிவன்'  தான் அணிந்திருந்த கொன்றை மாலையை  அவனுக்கு சூட்டி, தொண்டர் நாயகனாக  அனுகிரகம்  செய்தாராம்! 

     சர்வ அதிகாரம்  செய்யும் தலைவர்கள்,   தங்களது திரைமறைவு வேலைகளைச் செய்ய, "தொண்டர்ப்படை" என்ற பெயரில் சிலரை, "அடியாளாக"  வைத்திருப்பது போல், சிவபெருமான்  இவனை, தொண்டர் நாயகனாகியுள்ளார்,  என்கிறார்கள்! 

       இந்துமதம்சொல்லும், "அன்பே சிவம்" என்பதற்கு, என்ன பொருள்? என்று தெரியவில்லை!
      "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று கூறுவது தவறா?  என்றும் தெரியவில்லை! 
        தந்தையின் காலை வெட்டிய, தறுதலைப் பிள்ளையை, சிவன் அடியாராக, நாயன்மாராக  ஆக்கிக் கொண்டான்!  அல்லதுசிவனின் பெயரில்," பிராமணீயம்" ஆகியதா? என்று சிந்திக்க வேண்டியிருகிறது! 

      இந்த தீர செயலை, அறிவான செயலைச் செய்த, "நாயன்மார்"  யார் தெரியுமா? 
 "சண்டேஸ்வர" நாயனார்தான் அவர்! அறுபத்து மூன்று நாயன்மார்களில்  இவருக்கு மட்டும்  சில இடங்களில் " தனி சன்னதியே" உண்டு!  
    "சண்டேசனுகிரக  மூர்த்தி" என்ற பெயரில், இவர் கடவுளாகவும்  வணங்கப்பட்டு வருகிறார்! 

      உங்கள் பிள்ளைகளுக்கு,  இவருடைய    அனுகிரகம், அருள் கிடைக்க வேண்டும் என்று  பிராமணீயம் எவ்வளவு  அக்கறை கொண்டுள்ளது 
பாருங்கள்! 

     எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!, "இந்த கதைகளை எல்லாம் தெரிந்து கொண்டு, கதாகாலாட்சேபம்,செய்யுற வங்களை  பிராமிய வாதிகள் என்பதா? தமிழர்கள் என்பதா? படித்தவர்கள் என்பதா? சிந்திக்கக் கூடியவர்கள் என்பதா? தமிழின துரோகிகள் என்பதா? அல்லது,சமூக வியாதிகள் என்பதா? விரோதிகள் என்பதா? 

   அப்புறம், இவைகள் எல்லாம் தெரிந்தோ,தெரியாமலோ, விட்டுக் கொடுக்க  முடியாமல், "வக்காலத்து வாங்கும்"  நம்ம பதிவர்களை எப்படி,எதில் சேர்ப்பது? என்றும் தெரிந்தாகணும்! தெரிந்தவர்கள்  சொல்லுங்கள்! 

     அட.., "சண்டாளப் பாவி" என்று    என்னை தயவு செய்து, திட்டாதீர்கள் !

       திட்ட வேண்டும் என்று தோன்றினால்,சண்டேஸ்வரரைத் திட்டுங்கள்! ஏனெனில், அவருக்கு காத்து கேட்காது என்று,  கைதட்டி... ஓசை எழுப்பி,வேண்டுகிற வழக்கமும் இருக்கிறது!  
  
    திங்கள் நாளில் திரும்பவும் வந்து விடுவேன்!  

Comments

  1. நாயனாரர்களின் வரலாறை இப்போது தான் தெரிந்துக் கொண்டேன் தொடரட்டும் உங்களின் எழுத்து பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மையில் சிவனும் நாயன்மாரும் செய்தது சரியல்ல. பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?