அரசமாதேவியின் மூக்கை அறுத்த நாயனார்!

       ஆவூர் என்ற ஊரைச் சேர்ந்த சிவனடியார் அவர். வேளாளர் குலத்தில் பிறந்தவர்.இவர், தினமும் சிவ லிங்கத்துக்கு,  பூக்களை  கொண்டுபோய்  போட்டு,  வழிபட்டு வரும் வழக்கமுடையவர்! அப்படி ஒருநாள்  பூக்களைக்  கோவிலுக்கு கொண்டுபோனார் !    பூக்களில்  சில சிதறி,  தரையில் விழுந்து இருந்தன.( தமிழர் வாழ்வியலில்  'பூசை' என்றால், ' பூ வைத்து  வழிபடு' என்றுதான் பொருள்!)

    கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்தார்,  பல்லவ அரசரின் மனைவியான அரச மாதேவியார். கீழே பூக்கள்  சிதறிக்  கிடந்ததை பார்த்தார். 'அரசி என்றாலும் அவளும் பெண்தானே? ' பூக்கள் மீது ஆசையிருக்காதா? ஆசையை  அடக்கமுடியாமல், சிதறிக் கிடந்த பூக்களில் ஒன்றை  குனிந்து எடுத்தார். அதன் வாசனையை நுகர்ந்தார்.

       இதைக் கவனித்துவிட்ட  சிவனடியாருக்கு வந்ததே கோபம்.! "எப்படி  பூசைக்கு எடுத்து வந்தப் பூவை  நீ,நுகரலாம்?" என்று கேட்டு , "பூவை நுகர்ந்த  உன் மூக்கை  அறுக்கவேண்டும்" என்று கூறி,  அரச மாதேவியின் மூக்கை அறுத்து எறிந்தார்! 

       பாவம்!   மூக்கறுபட்ட  அரசியானவர், தனது கணவர் ஆளும் நாட்டில், இந்த சிவனடியார்  இப்படி  அக்கிரமம்  பண்ணிவிட்டாரே!, இது என்ன கொடுமை!! என்று, வலியுடனும், வேதனையுடனும்  அவமானப்பட்டு கொண்டும், நடந்ததை  தனது  கணவனும் ,அரசனுமான  பல்லவனிடம்  போய்  முறையிட்டார்! 

      அந்த அரசன்  சிவனடியாரை அழைத்து விசாரிப்பான்,தனக்கு நியாயம் கிட்டும், நிச்சயம் அந்த சிவனடியாரை தனது கணவர்  தண்டிப்பார்  என்று நம்பிக்கையுடன் போய்  முறையிட்டார்!

      அந்த அரசன், என்ன செய்தான் தெரியுமா?  சிவனடியாரை  தண்டிக்கவில்லை, கண்டிக்கவில்லை! மாறாக, சிவனடியாரிடம், "அடியாரே, பூசைக்கு உரிய பூவை  முகர்ந்ததால் , எனது மனைவியின்  மூக்கை அறுத்து  தண்டிதீர்கள். முகர்வதற்கு   முன்  அந்த பூவை, அவளது  கையல்லவா எடுத்திருக்கும்? அந்த கையை  துண்டிக்காமல்  விட்டுவிட்டீரே! " என்று கேட்டு, "நீங்கள் தர மறந்த  தண்டனையை, உங்கள் சார்பாக நானே தருகிறேன்" என்று  கூறி, அரசமாதேவியின்  கையைத் துண்டித்து விட்டான்! 

    இவ்வாறு,அரசமாதேவியின்  மூக்கை  அறுத்த அந்த புண்ணிய சீலனின், சிவனடியாரின் செயல்  போற்றத் தகுந்தது, என்று சிவன் தரிசனம் தந்து
 அவரை பெருமைப் படுத்தினாராம்!   அதனால், அவரை     நாயன்மாராக ஆக்கி உள்ளார்கள்! அரசமாதேவியின்   மூக்கை அறுத்து,  அந்த செயற்கரிய செயலை  செய்து, நாயன்மாராக  ஆனவர்  பெயர் என்ன தெரியுமா? "செருத்துணையார்" அறுபத்து  மூவரில் இவரும் ஒருவர்! 

        சரி,மூக்கை அறுத்தவரை நாயன்மாராக ஆக்கிவிட்டால்  போதுமா? 

      அவர் செய்ய மறந்த செயலை, அதுதாங்க, பூவை எடுத்த அரச மாதேவியின் கையை வெட்டி எறிந்த,  பல்லவ அரசனது  செயல் மட்டும் என்ன சாதாரண செயலா?
    அவரை சும்மா விட்டுவிட முடியுமா? முடியாது இல்லையா!? ஆகவே, அவரையும்  அறுபத்து மூவரில், ஒரு நாயன்மாராக ஆக்கி உள்ளார்கள்!, சாதனைகளுக்கு தகுந்தபடி பரிசளிக்கும், சிவனடியார்கள் ஆக்கும்  நமது பிராமணீயம் !  இந்த நாயன்மாரின் பெயர்தான், "கழற்சிங்க நாயனார் " !

     'கட்டிய மனைவியை, காப்பாற்றுவேன், இன்ப,துன்பங்களில் அவளுக்கு துணையாக இருப்பேன்'  என்று  அக்கினியின் முன்பு, வேத மந்திரங்கள் ஓதி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, "மங்கள  சூத்திரம்"  அதாங்க... தாலி{!} கட்டிவைக்கும்,     சடங்குகளை  செய்துவரும்  "பிராமணீயம்"   யாரை  நாயன்மாராக  ஆக்கி இருக்குது  பாருங்கள்!

       அறுபத்து மூன்று  நாயன்மார்களில்  அடுத்து,  அதி மேதாவியான, ஒரு  நல்லவரை, மாதா,பிதா, குரு,தெய்வம்  என்று  போற்றி, வணங்கக் கூறும், வழிபட சொல்லும்  நமது பெருமைமிக்க...  இந்து மதத்தின்,    பெருமையை  காப்பாற்றும், "பிராமணீயம்"  நாயன்மாராக  ஆக்கி இருக்கிறது!" 

  நாயன்மாராக  ஆவதற்கு  அவர்  செய்த செயலைப் பார்ப்போம்!

Comments

 1. கூட்டிக் கொடுத்த நாயனார் கதைகளெல்லாம் கூட உண்டு, 63 நாயன்மார்கதைகளில் பாதிக்கு பாதி காலத்திற்கு ஒவ்வாத ஒன்று

  ReplyDelete
  Replies
  1. காலத்துக்கு ஒவ்வாததை கண்டித்து, அகற்ற வேண்டுமா? அல்லது ஐதீகம்,சடங்கு, வழக்கம் என்று ஏற்றுக்கொண்டு, தொடர வேண்டுமா?

   போனால் போகட்டும்! இருந்துவிட்டு போகட்டும்,நமக்கென்ன வந்தது? நமக்கென்ன நஷ்டம் அதில்? என்று சமூக அவலங்களை கண்டும் காணாமல், தெரிந்தும் கண்டிக்காமல் இருந்தால் அவைகளை சீர்செய்வது எப்படி? எப்போது?
   - உங்கள் வருகைக்கு நன்றி,கோவி.கண்ணன்!

   Delete
 2. //போனால் போகட்டும்! இருந்துவிட்டு போகட்டும்,நமக்கென்ன வந்தது? நமக்கென்ன நஷ்டம் அதில்? என்று சமூக அவலங்களை கண்டும் காணாமல், தெரிந்தும் கண்டிக்காமல் இருந்தால் அவைகளை சீர்செய்வது எப்படி? எப்போது?
  - உங்கள் வருகைக்கு நன்றி,கோவி.கண்ணன்!//

  பழங்கதைகளை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை, கண்ணப்ப நாயனார் பற்றி மற்றும் மிகுதியாக நினைப்பார்கள், எல்லா மதங்களிலுமே ஆபாசக் குப்பைகள் உண்டு, ஆனால் அதைப் புறந்தள்ளிச் செல்லும் வாய்ப்பு இந்துக்களுக்கு மட்டுமே உரிமையாக உள்ளது, இந்த நாயனார் புராணக் கதைகளெல்லாம் வெறும் ஏட்டளவில் தான் போற்றப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை எனபது உங்கள் நம்பிக்கை! அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிலைகள் பல சிவன் கோயிலில் வைக்கப் பட்டுள்ளன, பலராலும் வணங்கப்பட்டு வருகின்றன!

   இவர்கள் யார்? எப்படிப் பட்டவர்கள் எனபது வணங்குபவர்கள் தெரிந்து கொண்டா வணங்குகிறார்கள்? தெரிந்தால் வணங்கதொன்றுமா? குறிப்பாக பக்தியில் கேள்விகேட்காமல் மூழ்கி இருக்கும் நமது தமிழ் பெண்கள்!

   Delete
  2. கோவி கண்ணா ரே ,

   “ஆரம்” “பிச்சா” ச்சா ?

   நரித்தனமாக பின்னூட்டம் இட்டு சூசகமாக‌ காழ்ப்புணர்வை கக்குவதன்றி வேறொன்றும் கற்கவில்லையா?

   எல்லா மதங்களிலுமே ஆபாசக் குப்பைகள் உண்டு. அப்படியா?

   இஸ்லாம் மார்க்கமும் இதில் அடங்களா?

   பதில் வருமா?.


   click to watch video

   ////////
   கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி
   ////////

   .
   .

   Delete
 3. மிஸ்டர் உண்மைகள்
  கோவி நத்திகர். ஏங்கே சிரிக்கிறீங்கே உண்மைதாங்கே சொன்ன நம்புங்கே மறுபடிக்கும் என்ன் சிரிப்பு...

  ReplyDelete
  Replies
  1. Haider bhai,
   Irundhalum ungalu kindal jasthi bhai..

   Delete
 4. பெற்ற பிள்ளையையே வெட்டிக்கறி சமைத்து சிவபெருமானுக்கு அமுதாக்கியவர்
  ஆனையில் தும்பிக்கைகளை வெட்டியெறிந்தவர்
  தன் பிள்ளையிறந்த இழவுவீட்டிலேயே விருந்து கொடுத்தவர் -
  இப்படி செய்யத்தகா குரூரச்செயல்களை செய்தவர்களை நாயன்மார்களாகப் போற்றுகிறது தமிழ்ச்சைவ மதம்.

  இவை மிகைப்படுத்தப்பட்டவைகள் இந்துக்கள் இதை நுண்ணிப்பாக கவனிப்பதில்லை; கவ‌னிப்பினும்க்கூட அதைப்புறந்தள்ளிவிடுவர் என்பதெல்லாம் சரிதான். ஆயினும் ஓசூரார் சொல்வதைப்போல அவர்கள் அனைவருக்கும் விழாக்கள் எடுத்து வணங்கப்படுகிறார்கள். அறுபத்துமூவர் விழா ஊர்வலத்தில் மயிலாப்பூர் சாலைகள் ஸ்தம்பித்துவிடும். எனவே இந்துக்கள் புற்க்கணிக்கிறார்கள் எனப்து உண்மையன்று. இந்துக்கள் மதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.

  இப்படி பண்ணலாமா என்று கேட்டால் கோபமடைவது ஏன்? என்பதும் புரியவில்லை.

  மதத்தின் பெயரால் எதையும் செய்யலாம் எனற எண்ணம் அன்று மட்டுமல்ல, இன்றும் சமூகத்தில் விஷ‌ச்செடியாக வேறூன்றி தழைத்துவருகிற்த என்பது கசப்பான உண்மை. ஓசூர் ராஜன் அனைத்தையும் வெளிச்சம்போட்டுக்காட்டட்டும். திருந்துபவர்கள் திருந்தட்டும் என்பதே கொள்கையாக இருக்கட்டும்.

  ReplyDelete
 5. இப்படி பண்ணலாமா என்று கேட்டால் கோபமடைவது ஏன்? என்பதும் புரியவில்லை. THANK YOU

  ReplyDelete
 6. இப்படி கொடுமையான காரியத்தை செய்தவர்களை போற்றுதல் அறிவுடமையாகாது. இவர்களை எப்படி இவர்கள் போற்றுகிறார்கள்? இந்த கதையின் மூலம் வெறியைத்தான் இவர்கள் பக்தர்களின் மனதில் விதைக்க முடியுமே தவிர அதை பக்தி என்று கூறுதல் எப்படி முறையாகும்.
  இந்த உண்மையை நானறிய காரணமாய் இருந்த உங்களுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. மலரை முகர்ந்து பார்த்ததுக்கு மூக்கை வெட்டுவது, கையால் எடுத்ததுக்கு கையை வெட்டுவது !! என்ன கொடுமை இது !! கோயிலுக்கு போய் இவங்க உருவத்த பாக்கிறதே பாவமையா.

  உங்கள் தளத்தில் பல புதிய தகவல்களை அறியக்கூடியவாறு உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?