தமிழரின் மூதாதையர் வழிபாடும்,சிவவழிபாடும்!

     இந்து மதத்தில் இப்போது சொல்லப்படும்," சைவம்" என்ற பிரிவு வழிபாட்டு முறையானது, தமிழர்களின் வாழ்வியலில் அவர்கள் கடைப்பிடித்து வந்த தங்களது மூதாதையர் வழிபாட்டிலிருந்து பிறந்த ஒன்றுதான்!
   (அப்போ,சமணம் இல்லையா? புத்தம் எங்கே போனது? என்று தயவு செய்து கேட்க்காதீர்கள்!முக்கியமாக படித்துறை கணேஷ். அதுபற்றி தனியாக பதிவுகள் வரும்!}

     தமிழர்கள் தங்களது இனத்தில் வீரப்போர் புரிந்து, தியாகசெயலில் ஈடுபட்டு, உயிர் துறந்ததவர்களுக்கு நடுகல் பொறித்து,அவர்களது தியாகத்தை தொடர்ந்து நினைவு கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்! 

   தமிழ் வேந்தர்கள்,பெருங்குடிமக்கள் இறந்த பொது, அவரை புதைத இடத்தில், நினவு கற்கள் நட்டும், சிறியதும் பெரியதுமான  கட்டிடங்களை  எழுப்பியும் அவரை போற்றி, வழிபட்டு, மரியாதை செலுத்தி, வந்தனர்! இவ்வாறு செய்வது அவர்களை நினைவு கூறுவதுடன், தாங்கள் செய்யும் செயல்களுக்கு இறந்த தமது முன்னோர்கள், துணையாக இருப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்து வந்ததுதான் காரணமாகும்!  இறந்த தனது முன்னோர்களைப் போல, தாங்களும் வீரத்துடனும், உயரிய குணங்களுடன்  நடந்துவர வேண்டும் என்ற என்னத்தை, உந்துதலை அவைகள் தருவதாகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர்!  

     காலமாற்றத்தில்  இறந்தவர்களின் நடுகற்கள் சிவனாகவும், இறந்தவர்களை புதைத இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள்," கோயிலாகவும் " மாறுதல் அடைந்தன! கோயில்களாக மாறுதல் அடைந்து,அரசர்கள் காலத்தில் அவைகள் பல்வேறு அலுவல்களை கவனிக்கும் இடங்களாகவும்  ,   அறப்பணிகள் நடந்துவரும் இடங்களாகவும், பல்வேறு வகையான அலுவல்கள் நடைபெறும்   இடங்களாகவும் விரிவடைந்தும், அரசின் நிதியும், போக்கிசமும் வைத்து பராமரிக்கும், பாதுகாக்கும் இடங்களாகவும்  ஆனபோது, கோவில்களைப் பாதுகாப்பாற்றும் அவசியம் அரசர்களுக்கும், குடிமக்களுக்கும் ஏற்பட்டது! 
  

   அதைப்போலவே  கோவில்களை கைப்பற்றவும்,ஆக்கிரமிக்கவும், தகர்க்கவும் வேண்டிய போர்த்தந்திர,ராஜாங்க நடவடிகைகள்,அவசியம்   எதிரி அரசர்களுக்கு ஏற்பட்டது! 
    
  ஒரு அரசனுடைய கட்டுப்பாட்டில் இருந்த கோயில்கள் மீது, மற்றொரு அரசன், எதிரி அரசன்  தாக்குதல் நடத்துவதற்கு, மிக முக்கிய காரணங்களாக  மூன்று காரணங்களைச் சொல்லலாம்! 

     ஒன்று  அந்நாட்டு அரசனின் மூதாதையர் நினைவிடம், அரசனது வழிபாட்டுக்கு உரிய இடம் என்பதால் அவனை அவமதிக்கும் செயலாக கருதுவது ! 

    இரண்டு, முக்கிய அலுவல்கள் நடக்கும், ஆவணங்கள்,பாதுக்காத்து வைக்கப்படும் கோயில்களில் இருந்து அவைகளை அழித்து, நிர்வாகத்தை சீர்குலைப்பது!

     மேலே சொன்ன இரண்டையும்,   உடனடியாக போருக்குள்ளான நாடு சரிசெய்துவிடாது தடுக்கவும், சரிசெய்ய தேவைப்படும் நிதியை, பொக்கிசத்தை,கைப்பற்றி கொள்ளவது, அவற்றை தங்கள் நாட்டு மக்களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளவது ஆகிய மூன்று காரணிகளே  எனலாம்! 

     மேலே சொன்ன காரணிகள்  ஒருநாட்டோடு  போர் தொடுக்கும் எந்த நாட்டுக்கும்  பொதுவான காரணிகளாகும்! 

     இந்த காரணிகள், தமிழக அரசர்கள் வட இந்திய அரசர்களுடன் போரிட்ட போதும், வடவர்கள் தமிழரசர்கள் மீது போரிட்டபோதும், இந்து மத அரசன் மற்றொரு இந்துமத அரசனோடு போரிட்டாலும், இந்துமத அரசன் முஸ்லிம் அரசனோடு போரிட்டாலும், முஸ்லிம் அரசன் இந்து அரசனோடு போரிட்டாலும்  நடைபெறும் பொதுவான காரணிகள் ஆகும்! 

     கங்கை கொண்ட சோழன், ராஜேந்திர சோழனுக்கும்,காந்தளூர் சாலை கலமறுத்து அருளிய ,ராஜராஜனுக்கும்,  தஞ்சையை  அழித்து நாசமாக்கிய கி.பி.1218 -லில் )மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும், (கி.பி.1311 -லில்} தென்னகத்தின் மீது படையெடுத்த ,மாலிக்காபூருக்கும்    பொருந்தும்! 

      போரிடும் அரசர்களின்  இந்த பொதுவான காரணங்களை, வரலாற்றில்            " பிராமணீயம்" என்ற பாசிச வரலாற்று ஆய்வாளர்கள், பாசிசவாதிகள்,   "முஸ்லிம்கள் கோயிலை தரை மட்டமாக்கினார்கள், இந்து கோயிலை இடித்தார்கள்"  என்று மத சாயம் பூசிவருகிறார்கள்! 

    மாறவர்மன் சுந்தரபாண்டியன்,  மாலிக்காபூருக்கு முன்பே தஞ்சை கோவிலை சேதப் படுத்தியதற்கு  என்ன காரணம்?  என்று சொல்லுவதில்லை!

   கோயில்கள் எதற்காக கட்டப் பட்டன? எதற்காக தாக்குதல்களுக்கு ஆளானது?   எனபது குறித்து  உண்மையான காரணங்களைச் சொல்லாமல் தங்களது ஆதிக்கம், இன மேன்மைக்கு ஏதுவாக,    வரலாற்றை  தவறாகவும், திரித்தும் சொல்லிவருவது, " பாசிசம் என்ற பிராமணீயம்" தான்! {படித்துறை கணேஷ் கவனிக்கவும்}

   பாசிசம் என்ற பிராமணீயம்  பிற அரசர்கள் போல, நேரடியாக எந்த அரசு மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை! ஆனால் நடத்தப்படும் போர்களுக்கு, தாக்குதல்களுக்கு பின்னணியில் அது இருந்து வருகிறது ! 

   அதுமட்டுமில்லை, ஒரு  அரசு வீழ்ச்சி அடைந்தாலும்,அது வீழ்ச்சி அடைவதில்லை, மாறாக வெற்றிபெற்று வருகிறது! பிராமணீயம் என்ற பாசிசத்தின் மிக நுணுக்கமான  வலைப் பின்னலுக்கு,  வெற்றிபெற்ற எந்த அரசர்களும்,  தப்புவதில்லை! 

அது எப்படி என்பதையும், "அதிகார நந்தி", மற்றும் விடுபட்ட அனைத்தையும் அடுத்தடுத்து பார்க்கலாம்!

    

Comments

 1. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படும் கொடுஞ்செயல்களை விட சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

  இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?  சொடுக்கி ////////// இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன், ////////// படிக்கவும்.


  .

  ReplyDelete
  Replies
  1. "இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படும் கொடுஞ்செயல்களை விட சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்." காரணம் மதமா? பாசிச வெறியா?

   "மதமான பேய் என்னை பிடியாதிருக்க வரம் வேண்டும்"! என்ற வள்ளலாரை சிந்திக்கத்தான் சொல்லுகிறேன்! அவரையும் இம்சித்தவர்கள் யார் என்று கேட்கிறேன்!

   அடுத்து நீங்கள்,
   "இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?"

   நான் எங்கே அய்யா, அப்படி சொன்னேன்? நீங்கள் தவறாக புரிந்துகொண்டு, என்னைக் கேட்கிறீர்கள்! எந்த மதமும் அப்படி வலியுறுத்துவதில்லை!

   ஆனால், ஆதிக்க வெறியும்,பாசிச குணமும் உள்ள எல்ல மன்னர்களும், மனிதர்களும் தங்களது மததத்துவத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்! அவர்களை,கண்டித்து,தண்டிப்பதற்கு பதிலாக ஆதரித்தும், அவர்களை ஏற்றுக்கொண்டும் வருவது, சரியா? என்று சிந்திக்கத்தான் சொல்லுகிறேன்!

   Delete
 2. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

  Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

  ReplyDelete
 3. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
  அன்பின் சகோதரர் ஓசூர் ராஜன்,

  //போரிடும் அரசர்களின் இந்த பொதுவான காரணங்களை, வரலாற்றில் " பிராமணீயம்" என்ற பாசிச வரலாற்று ஆய்வாளர்கள், பாசிசவாதிகள், "முஸ்லிம்கள் கோயிலை தரை மட்டமாக்கினார்கள், இந்து கோயிலை இடித்தார்கள்" என்று மத சாயம் பூசிவருகிறார்கள்!
  மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாலிக்காபூருக்கு முன்பே தஞ்சை கோவிலை சேதப் படுத்தியதற்கு என்ன காரணம்? என்று சொல்லுவதில்லை!//

  வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள் கூட தமது "சோமநாதபுரம்: கதையும் வரலாறும்" என்ற நூலில் இத்தகைய கோயில்கள் கொள்ளையடிப்பு பற்றி தெளிவாக எடுத்து சொல்வார்கள். ஆனால் பிராமணீயம் தமக்கு ஏற்றார் போன்று வரலாற்றை மாற்றி எழுதி விட்டது. அதை தான் நமது பெரும்பாலான இந்திய சகோதர சகோதரிகள் உண்மை என்று நம்பவும் செய்கிறார்கள். மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு ஒரு நீதி, மாலிக் காபூருக்கு ஒரு நீதி என்று தெளிவாக பிராமணீயம் கொள்கை வகுத்து வரலாற்றை எழுதியது மிக பெரிய மோசடியாகும். இதை நம் நாட்டின் அறிவு ஜீவிகள் கணக்கில் எடுத்துக் கொண்டு உண்மையான வரலாற்றை எழுத முறபட வேண்டும்.

  ReplyDelete
 4. அன்பின் ராஜன், நீங்களாக என்னை எப்படி பிராமணித்திற்குள் வரையரைக்கமுடியும்? எடுத்துக்காட்டப்படும் தவறுகள்
  உண்மையிலேயே தக்க சான்று களுடன் தான் தரப்படுகுன்றனவா என்று கேட்டுத் தெரிந்துகொள்வது எனக்கு திராவிடம்
  கற்றுத் தந்த பாடம். பெருமாளை கருப்பண்ண சாமி (கருப்பு அண்ணாசாமி = கருமைநிறத்திலான உமையின் அண்ணன் ),
  சிவனை சுடலைமாடன் , பிள்ளையாரைப் பெரியசாமி என்றும், முருகனைச் சின்னச்சாமி என்றும் ஐயப்பனைப் பால்முநீச்வரன் என்றும் பாமரத் தமிழனைப் போல அழைத்தால் தான் இறைவனுக்கு அருகில் இருப்பதாக நானும் உணர்கிறேன். என்னுடைய கேள்விகளுக்கு நியாயமான அளவில் பதில் தந்தால் போதும், என் நோக்கத்தை தவறான உள்நோக்கமிருப்பதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.

  ReplyDelete
 5. // காலமாற்றத்தில் இறந்தவர்களின் நடுகற்கள் சிவனாகவும், இறந்தவர்களை புதைத இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள்," கோயிலாகவும் " மாறுதல் அடைந்தன! //
  தஞ்சை கோயிலும் இப்படி ஆனதுதானா? :)

  ஆண் பெண் யோனிகள் தான் சிவலிங்கம் என்று பிரச்சாரம் செய்யும் திராவிடவாதிகள் சண்டைக்கு வந்துவிட போகிறார்கள். :)
  இறந்தவர்களை தமிழர்கள் இன்றும் வணங்குகிறார்கள்.இருப்பினும் உங்கள் கூற்றில் தவறு உள்ளதாகாத்தான் உணர்கிறேன்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?