தில்லைக்கு பொன்கொடுத்த குந்தவை!

   குந்தவை, "தில்லை நாதர்" கோயிலுக்கு,சிதம்பரம் கோயிலுக்கு  பொன்கொடுத்ததை,தென்னிந்திய கோயில் சாசனம் பாகம் ஒன்று,பக்கம் முப்பத்தி மூன்று  குறிப்பிடுகிறது!   

 " நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு
 நாற்பத்து  நாலா  மாண்டில் 
மீனநிகழ    ஞாயிற்று வெற்றி பெற்ற 
உரோகணி நாள்  இடபப் போதில் 
தேனிலவு பொழில் தில்லை நாயகர்தம் 
கோயிலெலாம் செம்பொன் வேய்ந்தாள்
ஏன்அவரும்   தொழுதேத்தும் ராசராசன்
குந்தவைப் பூ விந்தை யாளே ' "

  -என்று  அந்த கோயில் சாசனம் தெரிவிக்கிறது! 

( குந்தவை நாச்சியார்  தஞ்சை,சிதம்பரம் கோயிலுக்கு மட்டுமே பொன் கொடுத்தவர் இல்லை! அவர் ராஜராஜன் ஆட்சியில் பல சமயத்தினருக்கும் பல்வேறு அறக்கொடைகள்  கொடுத்துள்ளார்! தவிர, தஞ்சை கோயிலைக் கட்டுவதற்கு முன்பே கோயில், ஜீனாலயம், விண்ணகர் என்ற பெயரில் கோயில்கள் கட்டியும்,மடங்களுக்கு அறக்கொடைகள் தந்தும் உள்ளார்! இதுகுறித்த விரிவான பதிவு  வெளியிடவுள்ளேன்!)
               
   ஆதித்ய சோழன் கொங்கு நாட்டில் இருந்து கொண்டு வந்த," மாற்றுயர்ந்த"  பொன்னால், பொன்னம்பலம் என்ற சிதம்பரம்   கோயிலை வேய்ந்தான் என்று சேக்கிழார் சொல்லுகிறார்! 
   மணலில் கூத்தனான    காலிங்க ராயன் என்ற விக்கிரம சோழன் என்பவன், இப்பொன்னம்பலத்தை பொன்னால் வேய்ந்தான் என்று சிதம்பரம் கோயில் கல்வெட்டு கூறுகிறது!
   அதே கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் பொன் வேய்ந்தான் என்று கூறுகிறது!

   ஆக, சோழர்கள் ஆட்சியில் பலரும் இந்த கோயிலுக்கு பொன் கொடுத்திருகிறார்கள்! அவை கோயிலில் இருந்த கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப் பட்டு வந்தது, அரசு காரியங்களுக்கு செலவிடப்பட்டு வந்தது! என்றுவிளங்குகிறது!  இறைவனுக்கு கொடுத்தார்கள், கோயிலை தங்கத்தால் போர்த்தி இருந்தார்கள் என்று  கருதுவது, தவறாகும் !

 காரணம், அந்த பொன்னை,சேர்ந்து,பிராமணீயம் "சுவாகா' " செய்துவிட்டது !  என்ற சந்தேகம்  ஏற்பட்டு,  உண்மையாக நடந்திருக்கும் வாய்ப்பு  உள்ளது, என்று  நம்பத் தோன்றும் ! பிராமணர்கள் ஏன் கோயிலை கைப்பற்றவும், ஆக்கிரமிக்கவும், ஏன்  அதீத கவனம் செலுத்தி வந்தனர் என்ற,உண்மையும் எளிதில் நமக்கு விளங்கும்!

      இல்லையில்லை , பிராமணர்கள் பாவம்!, பழிபாவத்துக்கு அஞ்சுபவர்கள்! எந்த உயிரையும் கொள்ள மாட்டார்கள் என்று இன்னும் உண்மையிலேயே நீங்கள் நம்புபவர்களாக  இருந்தால்,   "எண்ணாயிரம் சமணர்கள் கழுவிலேற்றியது,  உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்களை அறியாதவர்" என்றுதான் பொருளாகும்! 

      சமணமத, புத்தமத வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்களை இந்துமதம் எப்படியெல்லாம் கொடுமைசெய்து, கொலைகள் செய்தது என்ற விளக்கத்தை பிறகு தரும்பொது,  ஒருவேளை  அது போன்றவர்கள் தெளிவு பெறலாம்!

     போகட்டும், சிதம்பரம் கோயிலைக் கைப்பற்ற  பிராமணர்கள் செய்த சதிவேளையானது,  "புளியரை என்ற கோயில் தலபுராணம் "மூலம் தெரிய வருகிறது!

        சிதம்பரத்தில் இருந்து சிவனது சிலையை யாரும் அறியாவண்ணம், எடுத்துகொண்டு தென் திசையில் பயணம் செய்து, குற்றாலமலைச் சாரலில், திரிகூட மலை,   அருகே  மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டின் வழியே சென்று அங்கிருந்த பிக்கப் பெரிய புளியமரத்தில் இருந்த பொந்தில் மறைத்து வைத்துவிட்டு,   மீண்டும் தில்லை அம்பலத்திற்கு  திரும்பி வந்து, ஒன்றும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டனர் என்றும், இவர்கள் மறைத்து வாய்த்த சிலையை, அந்த புளியமரத்தில் இருந்து, அந்த தோப்பு உரிமையாளர் கண்டெடுத்து,   அதை வைத்து கோயில் கட்டினார் என்றும், இந்த கோயில் அமைந்துள்ள  புளியரை கோயில்  தலபுராணம் கூறுகிறது!  இந்த கோயில் தெய்வத்துக்கு சதாசிவம், தட்சிணா மூர்த்தி  என்று பேர்கள் இருந்து வருகிறது! 

     புளியரை தலபுராணம் உண்மையாக இருந்தால்,   சமணர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கருவூலத்தை கைப்பற்ற,சமணர்கள் மீது  பழிசுமத்தி, அவர்களை  கருவூலப் பொறுப்பில் இருந்து நீக்கவும்,   அவர்களை தண்டிக்கவும், சிவலிங்கத்தை  அப்புறப்படுத்துவது, அரசனுக்கு கோபமூட்டும் செயல்  என்று தெரிந்து " பிராமணீயம்" என்ற பாசிச வெறி கொண்ட பிராமணர்கள்  அல்லது அவர்களது ஏவல் ஆட்கள்  இதனை   செய்திருக்கலாம் ! 

       பிராமணர்களின் திட்டம் பலித்து, சமணர்கள் வெளியேற்றப்பட்டு, அல்லது அவர்கள் தண்டிக்கப் பட்ட பின்னர்தான்  பிராமணீயத்தின் திருவிளையாடல், நடராஜரின் நாட்டிய கச்சேரி, எல்லாம்   அரங்கேறி, சிதம்பரமகியிருக்க வேண்டும்!  இதைதான் "சிதம்பர ரகசியம்" என்கிறார்களோ,என்னவோ!?
   
 சிதம்பரம் கோயிலை தங்களது ஆதிக்கத்தில்  பிராமணர்கள் கொண்டுவந்த மேலே குறிப்பிட்ட அடாத செயல் ஒன்றை  கண்டுகொண்டதால், அல்லது எதிர்த்ததால் தான்  சிவனடியாராக  இன்று காட்டப் படும் " நந்தனார்" சிதம்பரம் கோயிலில் எரித்து கொள்ளப்பட்டு         இருக்கக்கூடும்!    என்று தெரிகிறது.

    அவர், தீண்டத்தகாதவர் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்ய முயன்றதால்,  எரியூட்டப் பட்டார்!  எனபது, தவறான கருத்தாக தோன்றுகிறது! 
    காரணம்  அந்நாளில் தீண்டாமையும், சாத்தியவெறியும்  கோயில்களில் நிலவி வரவில்லை! தொழில்களின் அடிப்படையில்  மனிதர்கள்  பிரிக்கப் பட்டு இருந்தனர். ஆயினும், கோயிலில்   எல்லோருமே சென்றுவரும் சூழலே நிலவி வந்தது!இதுவும் கூட சிதம்பர ரகசியங்களில் ஒன்றுதான்! 


   இறைவன் முன் அனைவரும் சமம் என்று காட்டுவதற்காகதான்  சட்டையை கழட்டி விட்டு போவதாக  , நந்தனார்  என்ற சட்டையே போடாத, தீண்டதகதவர்  கோயிலுக்கு போனதால் பிராமணர்கள் எரித்துக் கொன்றார்கள்  என்பதை எப்படி ஏற்பார்கள்? தவிர இன்றுவரை  சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுர வாயில்  திறக்கப்படாமல் உள்ளதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? இவைகள் எல்லாம் பிராமணீயத்தின் அதாவது பாசிச கொடூரங்களின் வெளிப்பாடு என்பதை எப்படி மறுக்கப் போகிறார்கள்  என்று தெரியவில்லை!

   பாசிசத்தைப் பற்றி, பிராமணர்களின் ஆதிக்க வெறியைப் பற்றி, பேரரசன் ராஜராஜன்  முழுமையாக அறிந்து வைத்திருந்தான் என்று வரலாறு  தெரிவிக்கிறது!
 
   "பிராமணர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க,   அவர்கள் அறியாதபடி ராஜ ராஜன்,   தனது ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டான்! அதனாலேயே  அவனது இறுதிக் காலத்தில்  பிராமணர்களின் ஆதரவு அவனுக்கு கிட்டாமல் போயிற்று !" என்று சோழர்கால சமயம் நூலில் அதன் ஆசிரியர் டாக்டர்.பத்மாவதி   குறிப்பிடுகிறார்! 

     எனவே, சிதம்பரம் நடராஜர் கோயில் பிராமணர்களது கட்டு பாட்டில்,  ராஜராஜனது  ஆட்சிக்கு  பிறகே  வந்திருக்க வேண்டும் என உறுதியாக   நம்பலாம்! அதன்பிறகே, திருசிற்றம்பலம்  திருசிதம்பரமாக மாற்றப்பட்ட சம்பவங்கள்  நடந்துள்ளன என்று அறுதியிடலாம்!

   சிற்றம்பலம்- சிறு+அம்பலம்  ( சிறிய அரங்கு, மேடை, வெளியிடம் என்று பொருள்களைத் தரும்) சிதம்பரம்-சித் + அம்பரம் ( சித்தம் +உள்ளே)என்று பொருளாகும் ! பிராமணர்களின் சித்தத்தின் உள்ளே இருந்த ஆசையின் விளைவால்  இந்த பெயரை வைத்து, பிறகு எல்லோரும்  ஏற்றுக் கொள்ளும்படி வேறு பொருளை கற்பித்து உள்ளார்கள் என்று தெரிகிறது!   

   இதனை உறுதிப் படுத்தும் விதமாக உள்ளது  சிதம்பரம் கோயிலில் உள்ள  ராஜராஜனது உருவத்தை, "அதிகார நந்தி"   என்று கூறி வருவது! அது குறித்தும் பார்க்கலாம்!

 

Comments

 1. கிடைக்கும் வரலாற்று ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் இன்றிருக்கும் ஒவ்வொரு பார்ப்பானும் கொலைகார தலைமுறையின் வாரிசு எனதான் சொல்லனும். நாஜி இட்லர் பாணியில் அந்த காலத்திலேயே சமணர்களையும் பவுத்தர்களையும்ர (கழுவிலேற்றி) இனவழிப்பு செய்து வந்திருக்கானுங்க.

  இந்த பதிவில் மேலும் பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டேன்.

  பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன் தமிழரே.

  ReplyDelete
 2. திரு ஓசூர் ராஜன் அவர்களே, பல நூற்றாண்டு கால தமிழக வரலாற்றில் தமிழர்களின் அதிகார பங்களிப்பு என்ன ? அதாவது ராஜரீகமான அதிகார காரியங்களில் தமிழர்கள் பங்கேற்கவே இல்லையா? அல்லது தமிழர்கள் அரசின் உயர் பதவிகளில் இருப்பதை அரசர்களே விரும்பவில்லையா? அவ்வளவு வரலாற்று சிறப்பும், கலை பண்பாட்டுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், வியாபார சிறப்பும் கொண்ட தமிழகத்தில் (நினைவிருக்கட்டும் அரசியல், சமூக , தனிமனித வாழ்வியல் ஒழுக்கங்களை உலகிலேயே தலைசிறந்த முறையில் வழங்கிய திருவள்ளுவர் உள்பட) பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த ஜாதியும் அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லையா? பார்ப்பனர்கள் சொல்வதுதான் வேதம் என்று சிந்தித்துப் பார்க்கத் தெரியாமல்
  அப்படியே ஒப்புக்கொள்ளுமளவுக்கு தமிழ் புத்திஜீவிகள் இருந்தார்களா? அப்படியெல்லாம் இல்லை இவையெல்லாம் பார்ப்பனர்கள் வரலாற்றைத் திரித்து அல்லது எரித்து செய்த சூது என்று நம்பவேண்டுமென்றால் உலகுக்கே வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்த தமிழ் சமுதாயம் எந்த இடத்தில் இடறி பார்ப்பனீயத்தை அரியணையில் ஏற்றியது என்பன போன்ற வரலாற்றுக் குறிப்புகள் இருந்தால் அதையும் கொடுத்தால் ஊகங்களுக்கு இடமில்லாமல் உண்மைகளை ஒப்புக்கொள்ளலாம். நான் பார்ப்பனீய பக்தன் அல்லன் என்பதை என் பதிவுகளைப் படித்து தாங்கள் விளங்கிக் கொள்ளலாம். நடுநிலையான குற்றச்சாட்டுகளுக்கு நடுநிலையான சரித்திரச் சான்றுகளை ஐயம் திரிபற கொடுங்கள். நினைவிருக்கட்டும் இசுலாமிய ஆட்சியில் இருநூற்றாண்டுகள் மத மாற்றப் பிரச்னைக்கு ஆளான முதல் சாதியினர் பார்ப்பனர்கள் தான் . இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் தமிழக வரலாற்றில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் பார்ப்பனர்கள் என்று நம்பவைக்க முயற்சிப்பது இயற்கை கொடுத்த சிந்தனைச் செல்வத்திற்கு உள்நோக்கத்துடன் வலிந்து போட்டுக்கொள்ளும் அசிங்க முக்காடு.

  ReplyDelete
  Replies
  1. உலகுக்கே வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்த தமிழ் சமுதாயம் எந்த இடத்தில் இடறி பார்ப்பனீயத்தை அரியணையில் ஏற்றியது,போன்ற வரலாற்றுக் குறிப்புகள்,நடுநிலையான சரித்திரச் சான்றுகளை ஐயம் திரிபற,தரப் போகிறேன்!, please continue,and follow me!

   Delete
 3. (பெருமளவு பார்ப்பனீயத்தால் அவமானம் அடைந்தவர்கள் என்று நினைத்திருந்தால்) மதம் மாறுவதால் அரச பதவிகள் கிடைக்கும் என்றால்
  பெருவாரியான ஜாதி இந்துக்கள் இசுலாமிற்கு மாறியிருப்பார்கள்.
  வெள்ளையர்கள் ஆட்சியில் பெருமளவு
  ஜாதி இந்துக்கள் கிறித்தவர்களாக மாறியிருப்பார்கள். ஆக சமூக ரீதியாக சாதி இந்துக்கள் பார்ப்பனர்களுக்கு தாம் ஒரு படி கீழ் என்று நினைத்திருக்க வில்லை .
  மாறாக வெள்ளைக்காரர்கள் காலத்தில் தான் சுதந்திரப் போராட்டம் பார்பனர்கள் மற்றும்
  சில சாதி இந்துக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்று வெள்ளையர்களால்
  அடையாளம் காணப்பட்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் வெள்ளையர்களாலேயே ஊக்குவிக்கப்பட்டன.
  பிரித்தாளும் சூழ்ச்சியில் தேர்ந்த வெள்ளையர்கள் அதற்குத் தகுந்த சரித்திரங்களை உண்டாக்கினார்கள். இதன் ஒரு சாட்சியாகத் தான் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான ஜஸ்டிஸ் கட்சி இந்தியாவிற்கு சுதந்திரம் தேவையில்லை என்றும் , வெள்ளையர்களே ஆட்சி செய்யலாம் என்று பரங்கிகளுக்கு பல்லக்கு தூக்கியது.

  ReplyDelete
 4. பார்ப்பனர்களைத் தவிர வேறு எவருமே அரசாட்சியில் அதிகார மையத்தில் ஆட்சி செய்யவில்லை என்று சொன்னால் தமிழர்கள் வீர வரலாறு என்ற பதமே இனி அர்த்தமில்லாமல் போகும். அல்லது பார்ப்பனர்களோடு மற்ற உயர் சாதி இந்துக்கள் பிரதிபலன் கருதி அதிகாரப் பகிர்வில் அடக்குமுறை செய்திருந்தால் மொத்தப் பழியையும் பார்ப்பனர்கள் மீது போடுவது எந்தவிதத்தில் நியாயம்.

  ReplyDelete
 5. இசுலாமியர்கள் ஆட்சியில் (தேடித் தேடி கோவிலை இடித்தவர்கள் ) தில்லைஸ்தானம் எப்படி பார்ப்பனர்கள் அதிகாரத்தின் கீழ் மிளிர்ந்தது என்று புரியவைத்தாலும் புண்ணியமாய்ப் போகும். நினைவிருக்கட்டும் இசுலாமியர்கள் ஆட்சி மதுரையையும் தாண்டி விரிந்திருந்தது

  ReplyDelete
 6. Dear Mr.Rajan please answer and clarify all my queries without avoiding

  ReplyDelete
 7. மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைடூரியத்தை வாங்கிக்கொண்டு கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர் பார்ப்பனக் கூட்டம் :

  13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்

  பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது. நான் சொல்லுவது வரலாற்றுச் செய்தி. அந்த துலாபாரம் எங்கே நடந்தது என்றால் உங்கள் ஊர் பக்கத்தில், திருச்சியில் நடைபெற்றது.

  திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா? -

  சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது.

  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமா வோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.

  அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்தார் என்றால் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான்.

  இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக-சக்கரவர்த்தியாக ஆண்டான்.

  ஒரு அய்யர் வருவார். இந்த மாதிரி இடத்தில் அய்யர் எப்பொழுதும் வருவார். நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும் என்றார்.

  பெருமாளுக்கு துலாபாரம்

  சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தார். உடனே பயம் வந்திடுமில்ல. யாருக்கு வரும்? பணத்தை அதிகமாக சேர்த்தவனுக்கு, அல்லது ஆசை அதிகமாக இருக்கிறவனுக்கு வரும்.

  இந்தப் பயமும், ஆசையுமே பக்திக்கு அடிப்படை காரணம். அவர்களுக்கும் ஆசை வந்தது. பெருமாளுக்குத் துலாபாரம் செய்யலாம் என்று வந்தார்கள்.

  கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா? சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.

  அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப் பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக் காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.

  ஆனால், அவன்-சுந்தரபாண்டியன் சொன் னான், நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன் இங்கே யாரோ ஒரு தோழர் சொன்னார், எடைக்கு தங்கம் தந்துவிட்டோம். அடுத்து வைரம் தருவோம் என்று சொன்னார்கள்.

  இந்த மாதிரி எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம், மரகதம் எல்லாம் தருகிறோம் என்று சொன்னார். உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது. எப்படி கெட்டிக்காரத்தனமாக செய்கிறார் பாருங்கள். நம்மாள்கள் இவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மாள்கள் முன்னேற முடியாததற்குக் காரணமே இது தான்.

  மன்னன் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது.

  அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது. ஒரு பட்டர் மன்னரைப் பார்த்து, மன்னா! என்று கேட்டார். இவன், என்ன? என்று கேட்டான்.

  எதற்காக மன்னன் துலாபாரம் செய்வது?

  நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக் காகவும்தான் என்று சொன்னான்.

  ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

  போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக்கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.

  இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?

  பார்ப்பானின் வேலையைப் பாருங்கள்

  பார்ப்பான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள். நம்மாள்களும் என்ன செய்வார்கள்? செயலாளராக பார்ப்பானைத்தான் வைத்துக் கொள்வார்கள். மந்திரியாக ஒரு பார்ப்பானைத்தான் வைத்துக்கொள்வார்கள்.

  போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட்காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான்-பயந்து போய் விட்டான்.


  continued .....

  ReplyDelete
 8. பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போகிறான்.


  பெரிய எம்ப்டன் பட்டர்

  இன்னொரு பட்டர் இவனைவிட எம்ப்டன். அவன் என்ன சொன்னான்? மன்னா என்று சொன்னான். இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.

  சரி, நல்லா பண்ணுங்கோ; திவ்யமா பண்ணுங்கோ. ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான். இப்பொழுது புரிந்துகொண்டீர்கள் அல்லவா? சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.

  போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?

  போர்க்களத்திற்கு யானை மீது போனேன் என்று சொன்னான். யானை என்றால் சாதாரண யானை என்று நினைக்காதீர்கள்.

  எனது சொந்தக்காரர் ஊர் மதுரை. மதுரையில் உள்ள ஒரு பெருமாள் கோயிலுக்காக யானையை வளர்க்கிறார். நான் கேட்டேன். ஏண்டா நம்மாள்கள் எல்லாம் ஆடுதானே வளர்ப்பார்கள். நீ யானை வளர்க்கிறாயே என்று கேட்டேன். இல்லை இல்லை; கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்பதற்காக செய்கிறேன் என்று சொன்னார். தெருவிலே போகிற யானை என்ன மாதிரி இருக்கும்?

  சுந்தரபாண்டியன் போர்க் களத்திற்குப் போன யானை பட்டத்து யானை. திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு உயர்ந்து நிற்கக் கூடிய பட்டத்து யானை. நல்ல ஓங்கி வளர்ந்துள்ள யானை.

  யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டி யன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல; யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.

  இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால்தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.

  யானை மீது வாருங்கள்

  பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.

  இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.

  மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.

  அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.

  இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.

  தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள்.

  ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு...!

  அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று. இப்படி கொட்டி நிறுத்து, சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.

  எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

  மன்னன் வைத்த ஒரு கோரிக்கை

  கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன்.

  யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக் கின்றார்கள். அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான்.

  கோயில் வளாகத்தில் என்னுடைய சிலை

  என்ன கேட்டான் தெரியும்களா? இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக்கொள்கிறேன் என்று கேட்டான்.

  உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.

  மன்னன் நினைத்திருந்தால் கோயிலை தரைமட்டமாக்கியிருப்பான்

  தொட‌ர்கிற‌து ......

  ReplyDelete
 9. சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது.

  இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

  அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.

  ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?

  கடைசி வரைக்கும் வைக்கவில்லை. அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள்.

  நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள்.

  அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது.

  நான்கணா கொடுத்தாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக் காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.

  நான் சொல்லுவது கதை அல்ல!

  நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. ஏதோ தொலைக்காட்சியில் வருகின்ற தொடர் இல்லை. எல்லாமே கல்வெட்டில் இருக்கிறது. சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது.

  யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரம் இல்லாமல் நாங்கள் யாரும் இந்த மேடையில் பேசமாட்டோம்.

  உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி

  SOURCE: viduthalai news.

  ReplyDelete
 10. Prof.Shri.Ramasamy, please try to answer my queries in specific. There can be selective reference of historical evidences to avoid great embarassments. But logical questions have to be answered when there are huge holes in the so called built up history. Please honour your great education and experience and answer without bias.

  ReplyDelete
 11. சுயமரியாதை இயக்கம் வலுப்பெற்று இடஒதுக்கீட்டின் வலிமையை உணர்ந்த ஒரு சாதாரண
  ஒடுக்கப்பட்ட தமிழனுக்கு இன்று இருக்கும் அறிவும் சிந்திக்கும் திறனும், செயல்படும் திறனும் கூடவா சர்வ வல்லமை பொருந்திய மறத் தமிழ் குலத்திற்கும் அதன் மன்னர்களுக்கும் இல்லாமல் போய் பார்ப்பனன்
  சொல்லிற்கு பல ஆண்டு கால சரித்திர காலம் முழுதும் பகடைக்காயாய் ஆடினார்களா? கொஞ்சம் நிதானத்துடன் அறிவுபூர்வமான விடை தாருங்கள்.

  ReplyDelete
 12. அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

  ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

  ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

  அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

  இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

  Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

  The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

  இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

  ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

  இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

  ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

  ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
  *********

  ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
  படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.

  >>>> குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். <<<<<

  .
  .
  .

  ReplyDelete
 13. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  1. >>>>> ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். <<<<<<


  சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
  2. >>>> பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” <<<<<<  இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .

  கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று.

  தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

  மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

  சுக்ரீவனிடம் - கடவுள் இராமன் கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

  சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

  கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

  மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.

  இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

  குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.


  கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.


  ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.


  சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

  ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.


  இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.

  இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.

  இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.


  ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.

  CLICK AND READ
  3. >>>>
  இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .
  <<<<<

  CLICK AND READ

  4.>>>>> பெண்குறி தொடும் ஆபாச பிள்ளையார்? வல்லபை என்னும் பெண்ணின் குறியில் விநாயகரே தன் தும்பிக்கையை செலுத்தும் கேவலம். <<<<<<


  5. >>>>>> தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். <<<<<<

  6 .>>>> உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள். <<<<<


  7. >>>>>நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் <<<<<<

  .
  .

  ReplyDelete
 14. உங்களது கட்டுரைகள் உண்மையும், ஆதாரமற்ற செய்திகளையும் கலந்து வெளிவருவதாகக் கருதவேண்டியுள்ளது.

  1. கோவில்கள் அரசனது இருப்பிடமாகவும், செல்வத்தை சேமிக்கும் இடமாகவும் இருந்தது உண்மை. கோவில் என்பது ஆலயத்தை குறிக்கலாம். ஆனால், 'கோயில்' என்பது அரசனின் இருப்பிடத்தைக் குறிக்கும் (கோ = அரசன், + இல் = வீடு).

  2. சிதம்பரம் ஆலயம் சமணர்களுடையதோ இல்லையோ - ஆனால், அதுதான் சித்தர் திருமூலர் மறைந்த இடம் என்று கருதப்படுகிறது.

  3. சிதம்பரம் கோவிலில் பொற்கூறை வேய்ந்தவன் பராந்தகச் சோழன் என்றே குறிப்பிடப்படுகிறது. பொற்கூறை மண்டபம் இன்றும் இருக்கிறது.

  4. ராசராசன் பார்ப்பனர்களை எதிர்த்தான், தண்டித்தான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அந்தவகையில் பார்ப்பனக்கூட்டத்தை எதிர்த்த ஒரே மன்னன் அவன் என்று பெருமை கொள்ள முடியும்.

  5. சிதம்பரம் ஆலயத்தை பார்ப்பனர்கள் வஞ்சகமாகக் கைப்பற்றினர் என்பது உண்மை. மராட்டிய மாநிலத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் தீட்சிதர்கள் முதலில் மன்னனுக்கு கட்டுப்பட்டவர்களாகக் கூறிக்கொண்டுதான், சிதம்பரத்தை ஆக்கிரமித்தனர். அவர்களே சோழப்பரம்பரையினருக்கு சிதம்பரம் கோவிலில் முடிசூட்டினர்.

  "சோழனார்" என்று அழைக்கப்பட்ட பிச்சாவரம் அரச பரம்பரையினரிடம்தான் கடந்த நூற்றாண்டு வரை சிதம்பரம் கோவிலின் உரிமை இருந்தது. தினமும் கோவிலின் சாவியையும் கணக்குகளையும் அவர்களிடம் தீட்சிதர்கள் ஒப்படைத்து வந்தனர். இதற்காக தினமும் கோவில் சாவியை பல்லக்கில் வைத்து தூக்கிச்சென்றனர்.

  சுமார் 60/70 ஆண்டுகளுக்கு முன்புதான் - பிச்சாவரம் சோழனார்கள் பலவீனமடைந்ததால், தீட்சிதர்கள் தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கோவிலை எடுத்துக்கொண்டனர்.

  ReplyDelete
 15. கோவில் என்பது அரசனது சொத்துக் கருவூலம் என்பது தான் உண்மை. அதனால் தான் ஒவ்வொரு படையெடுப்பின் போதும் கோவில்கள் உடைக்கப்படுவதும் பிறகு மீண்டும்
  புதுப்பிக்கப்படுவதும் அரங்கேறி வந்திருக்கின்றன. (இதை முழுமையாகத் தெரிந்து கொண்ட
  முகலாயர்கள் கோவில்களை தேடித் தேடி இடித்தார்கள். அது செல்வத்தைத் தேடித்தான் தவிர
  மதத்தை அழிக்கும் நோக்கத்தில் அன்று)

  கோவில்களைப் பராமரிக்க பல சாதியினர் வேலையில் அமர்த்தப்பட்டனர். கணக்கப்பிள்ளை கணக்குகளை
  சரிபார்க்கவும், உடையார்கள் கோவிலின் மொத்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், முதலிகள் எல்லா நடைமுறைகளையும்
  மேற்பார்வை பார்க்கவும் இன்னும் இது போன்ற பல வகுப்பினர் ஒவ்வொரு வேலைக்கும் அமர்த்தப்பட்டனர். இவர்கள் எல்லாரையும் தாண்டி மன்னர்கள் தங்களது நம்பிக்கைக்குரிய ஆளாக உளவு சொல்ல நியமித்தது பார்ப்பனர்களைத் தான். அதனால் தான் பார்ப்பனர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்கள் சட்டை அணிந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு அருகிலேயே வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு, முழுநேர கோவில் பார்வையாளர்களாக அமர்த்தப்பட்டனர். கோவிலின் மற்ற சாதியினருடன் அவர்கள் பழகுவது வரையறுக்கப்பட்டது. மற்ற சாதியினருடன் திருமண உறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது (அதன் மூலம் அரசனின் சொத்து மறைமுகமாகக் கொள்ளையடிக்கபட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்). சாப்பாடு கூட கோவிலிலேயே அமைத்துத் தரப்பட்டது. மற்ற சாதியினர் பார்பனர் வாழ்விடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது.
  பார்பனர் மற்ற ஊரைத் தாண்டி வெளியே செல்வது தடை செய்யப்பட்டது. அரசனின் சொத்து விபரங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் ஆகையினால் போரில் கூட பங்கேற்பது தடை செய்யப்பட்டது. போர் நேரங்களில் கோவில்களில் இருந்த சுரங்கப்பாதை வழியாக சொத்துக்களை மற்ற இடங்களுக்கு மாற்றி வைக்கவும், பின் சாதகமான காலங்களில் அவற்றை திரும்ப கோவில்களில் கொண்டு வைப்பதும் அவர்களுக்கு மகத்தான கடமையாக இருந்தது. அரசனுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் ஆகையினால் மற்ற சாதியினர் அவர்களுக்கு தாமாக மரியாதை காட்ட ஆரம்பித்தனர் சற்றேறக்குறைய இப்போதும் பல திராவிட தலைவர்கள் பிராமணர்களை பட்டையக் கணக்காளர்கலாகவும் கம்பனி செகரேடரிகளாகவும் வைத்திருப்பதைப் போல. ஆகா பிராமணர்கள் இன்றளவும் பின்பற்றும் பல சாத்திரங்கள் அவர்களுக்கு சத்திரியர்களால் சட்டமாக வைத்த விஷயங்கள் தான். இவை எதையுமே புரிந்து கொள்ளாமல் எதோ பார்ப்பனர்கள் தான் சாதிக் கொடுமைகள் செய்து விட்டதைப் pola தையா தக்கா என்று குதிப்பதைப் பார்த்தால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

  ReplyDelete
 16. @tamilan,

  புராணத்தில் குறிப்பிடப்படும், இராமன் , கிருஷ்ணன், பாண்டவர்கள், கௌரவர்கள், இன்னும் பல கதாபாத்திரங்கள் சத்திரியர்கள் தான் என்னும் விஷயத்தை எண்ணத்தில் கொள்ளவும்

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே!...என்னும் விஷயத்தை எண்ணத்தில் கொள்ளவும்,படித்துறை.கணேஷ்!

   மன்னர்கள் எல்லாரையும் தாண்டி,பார்ப்பனர்கள் தான்...,ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
   ராசராசன் பார்ப்பனர்களை எதிர்த்தான், தண்டித்தான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

   Delete
  2. அன்புள்ள,படித்துறை கணேஷ், !

   ஒரு பதிவிலேயே ஓராயிரம் கேள்விகளுக்கு என்னால் எப்படி விளக்கமோ, பதிலோ தரமுடியும்? தவிர, எனது பதிவில் நீங்கள் கேக்கும் கேள்விகள் ,அல்லது நியாமான சந்தேகங்களுக்கு நிச்சயம் விளக்கம் தருவேன்! பொறுமையுடன் படியுங்கள்!   உங்களது பல கேள்விகள், சந்தேகங்களிலேயே பதிலும் விளக்கமும் இருக்கிறது! பிராமணீயம் என்ற பாசிசம் நமது மன்னர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எப்படியெல்லாம் வளர்ந்தது! தன்னை நிலை நிறுத்தி வந்தது, இன்றும் வருகிறது என்பதை சரித்திர,இலக்கிய, ஆதாரங்களுடன் கூறுவதே இந்த பதிவின் நோக்கம்!   நீங்கள் முஸ்லிம்கள்,கிருத்துவர்கள்,மதமாற்றம், வீரம்,தமிழர் பெருமை என்று அனைத்தையும் போட்டு குழப்புகிறீர்கள்! அவைகள் குறித்தும் நான் தொடர்ந்து பதிவுகள் இடுவேன்!
   தொடர்ச்சியாக...முடிந்தவரை கால வரிசையாய்... இப்பதிவுகள் தர உள்ளதால்,உடனுக்கு உடன் நான் பதில் தருவது பதிவுகளை பாதிக்கும் !
   உங்களது கேள்விகளை தொகுத்து வையுங்கள்! இறுதியில்நமது கச்சேரியை வைத்துக் கொள்ளலாம்!

   - அன்புடன், ஹோசூர் ராஜன்!

   Delete
 17. அன்பின் ஓசூர் ராஜன், நன்றி

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?