சோழ அரசர்களதுகருவூலமும் ,சமணப் பண்டாரர்களும்

     கருவூலம் என்பதை அந்நாளில் பண்டாரம் என்று குறித்து வந்துள்ளார்கள்! இந்த பண்டாரங்களில் பணிபுரிபவர்கள், பொறுப்பு வகிப்பவர்கள்  பண்டாரதர்கள் என்று  அழைக்கப் பட்டு வந்தனர்! இவர்கள் பின்பற்றிய சமயம் சமண சமயம் ஆகும்! இவர்களில் ஒரு பிரிவினர், ஆதாவது ஆடையின்றி திரிந்த பண்டாரர்கள்,திகம்பர சாமியார்கள்,சமணர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனர்!

  "நாட்டிலோ,ஊரிலோ,கோயிலிலோ அமைக்கப் படும் கருவூலமாகிய பம்டாரத்தினைப் பொறுப்புடன் தலைமையேற்று  நடத்தும் அதிகாரியைப் பண்டாரத்தார்" {பண்டாரி)என்று பெயர் பெறுவார்(கல்வெட்டு கலைச்சொல் அகர முதலி-சி.கோவிந்த ராஜன்) 

    பொன்னம்பலம்,தில்லை,என்று தமிழ்ப் பெயர் வழங்கி வந்த,இன்றைய சமஸ்கிருதப் பெயர் கொண்ட, சிதம்பரம் கோயில்  கருவூலமாக, பொன்,பொருள் குவித்து வைத்து பாதுகாக்கும்  பண்டகசாலையாக இருந்துவந்தபோது அதனை  பாதுகாத்து, பராமரித்து, பொறுப்புகள் வகித்துவந்தவர்கள் சமணர்களாகிய பண்டாரர்கள்தான் !

     இவர்கள் சிதம்பரம் கோயில் கருவூலத்தை பாதுகாத்து,அதில் உள்ள பொன்,ரத்தினங்கள்,அணிகலன்கள்,முதலியவற்றை கொடுத்தவர்,கொடுத்த பொருள், அதன் தரம்,நிறம்,குறி,எடை,மதிப்பு ஆகியவற்றை அறிந்து விபரமாக கணக்குப் புத்தகத்தில் குறித்து வைத்து,கொண்டு பணியாற்றி வந்தார்கள்! ( பண்டாரப் புத்தகம்- கணக்குப் புத்தகம்) இவ்வாறு பணியாற்றி வருபவர்களுக்கு கொடுக்கும் ஊதியம், " பண்டார வாடை" என்றும், மானிய நிலம்  "கணிமுற்றுட்டு" என்றும் கல்வெட்டுக்கள் குறித்துள்ளன!

   இந்தசமணர்கள்,அரசின் நிர்வாகத் தேவைக்கான பொன்,முதலையவற்றயும்,அப்பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து பெறப்படும் நெல் முதலிய உணவ பண்ண்டங்களையும் ஆண்டு முழுவதும் பெற்று வரவு வைத்தும் உத்தரவுப்படி கொடுத்து செலவுக் கணக்கு எழுதியும் பணிபுரிந்து வந்துள்ளார்கள்!

  "அய்பதின்மர்க்கு  பேரால் நிசதம்   நெல்லு முக்கரணி  நிவந்தமாய் ராஜகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்தே   பெறவும்"  தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி-2 ,கல்-65 .)

" இத்தேவர் பண்டாரத்துக்கு பண்டாரியாக திருகொவலூர் சபையார் ஆட்டைவட்டம் இருவரையும் இடுவதாகவும்"  (  தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி-7 , ,கல்-558 .)  

      இப்படி ஆதாரமாக கல்வெட்டு வரிகள் நிறைய உள்ளன!. பொன்னம்பலம்,(அதாங்க சிதம்பரம் }   கருவூலமாக  இருந்தது என்பதை புரிந்து கொண்டாலே   போதும் என்று நினைக்கிறேன்!

    இந்த கோயில்முக்கிய கருவூலமாக சோழர் ஆட்சியில் இருந்த காரணத்தால்  சோழ மன்னர்களுக்கும், குடி மக்களுக்கும் ,முக்கியமானதாக சோழர் ஆட்சியில் இருந்துவந்தது! இங்கே சோழர்கள்  முக்கிய கருவூலத்தை அமைக்க காரணம், இந்த பகுதி  சோழ நாட்டின் மையப்பகுதி என்பதொருகாரணம்!
               
      மற்றொண்டு சோழ மன்னர்களின் {முன்னோர்களது,}பூர்விக வாழ்விடம் என்பதாகும்! 

      நடராஜர், சிதம்பரம் என்பவைகள்  பின்னாள் நிறுவப்பட்ட பெயர்கள்,! ஆதியில்  சமணர்களின் கட்டுப்பாட்டில்,பராமரிப்பில்இந்த இடம்,கோயில்  இருந்து வந்தது  என்று புரிந்து கொண்டால் போதும் !

    ஏன்னெனில், இந்த இடத்தின் ரகசியங்களில் மற்றொன்று  அது சமணர்களின் பிடியில் இருந்து விடுவித்து,பிராமணீய பாசிசம் தனது ஆதிக்கத்திற்கு கொண்டுவந்த மாபெரும் மோசடி,துரோக நாடகமே ,நான் சொல்லவந்த   சிதம்பர  ரகசியம் ஆகும்! 

     ஏனெனில், "பிராமணீயம் ஆதாயம் இல்லாத எந்த செயலையும், ஆதிக்கமில்லாத எந்த இடங்களையும் விரும்புவதில்லை!"

    இந்த இடத்தை பிராமணீயம் விரும்பிக் கைப்பற்றிக் கொள்ள காரணமே, இங்கிருந்த ஏராளமான செல்வம்தான்! அதுவும் சமணர்களின் கட்டுப்பாட்டில் அது இருந்துவந்தால்  பொறுத்துக் கொள்ளுமா?

  திருநாவுக்கரசரால் மதம் மாற்றப்பட்ட மகேந்திரவர்மன் ( கி.பி.ஏழாம் நூற்றாண்டு) என்ன செய்தான் தெரியுமா? திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து,அக்கற்களைக் கொண்டுவந்து திருவதிகை என்ற இடத்தில் குணபர ஈஸ்வரம் என்ற கோயிலைக் கட்டினான்! பல்லவர்கள் கால வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது!

     சமணர்களின் வழிபட்டு இடங்களில் உள்ள கற்களையே, வழிபாட்டு இடங்களையே விட்டுவைக்காத," பிராமணீயம் "...  பொன்னம்பலம், அதுவும் சமணர்கள் கட்டுப்பாட்டில் இருந்த  கருவூலம்!  அதனை பார்த்தும் பாராமல், போனால் போகட்டும், என்று விட்டுவைத்திருக்குமா ?

      விட்டுவைக்கவில்லை, அதனையும் கைப்பற்றி, தனது ஆதிக்கத்தில் கொண்டுவந்தது!   என்பதற்கான  நிரூபணம் ஆகத்தான்,  இன்றைய சிதம்பரம் கோயில் நிலையும், கோயில் நடராஜரும், அவரின் நாட்டிய நர்த்தனங்களும், கோயில் கதைகளும் நமக்கு   வெளிச்சமிட்டு வருகிறது!

  பிராமணீய  இக்கோயிலை  கைப்பற்ற என்ன செய்தது?  என்பதை  மற்றொரு சிவன் கோயில் தலவரலாறு  தெரிவிக்கிறது ! 

      தல வரலாறுகளை   ஏற்றுக் கொள்பவர்கள், உண்மை என்று நம்புபவர்கள், விளக்கம் அளிப்பவர்கள்  இதனையும் ஏற்று கொள்கிறார்களா?    இல்லை  மறுக்கிறார்களா? என்பதை  பார்ப்போம்! 


Comments

 1. // கருவூலம் என்பதை அந்நாளில் பண்டாரம் என்று குறித்து வந்துள்ளார்கள்! இந்த பண்டாரங்களில் பணிபுரிபவர்கள், பொறுப்பு வகிப்பவர்கள் பண்டாரதர்கள் என்று அழைக்கப் பட்டு வந்தனர்! இவர்கள் பின்பற்றிய சமயம் சமண சமயம் ஆகும்! //


  பண்டாரத்தார்கள் அனைவரும் சமணர்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம்? கருவூலத்தை பாதுகாப்பதும், பஞ்ச காலத்திலும் மற்ற காலங்களிலும் அவற்றை பிரித்து தருவதே இவர்கள் தொழில்.

  ஒரு காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் சமணர்களாக இருந்திருக்கலாம்.(பண்டாரத்தார் மட்டும் சமணம் என்று பொருள் கொள்ள கூடாது) பின்பு அவர்கள் பிராமணர்களால் இந்துக்களாக மாற்றப்பட்டிருக்கலாம். (அப்படியா? ).இன்று அவர்கள் இசுலாமியர்களாகவும், கிருத்துவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். அப்பொழுது தமிழனின் மதம் என்ன?

  ReplyDelete
  Replies
  1. yes,my dear friend,please continue the connection i will give you,and clear yuor doubt!

   Delete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடரவும்.

   Delete
 2. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
  அன்பின் சகோதரர் ஓசூர் ராஜன்,
  வரலாற்றின் சுவாரசியங்கள் கூடிக் கொண்டே செல்கின்றன. சிதம்பர ரகசியத்தில் இவ்வளவு மர்மங்கள் இருப்பதை இப்போது தான் அறிய முடிகிறது. தஞ்சை மாவட்டத்தில் பண்டாரவாடை என்றொரு ஊர் இருக்கிறது. அந்த ஊர் நீங்கள் சொல்லுகிற இந்த வரலாற்றோடு தொடர்புடையதா?

  ReplyDelete
 3. எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத யுகங்களை வறலாராக எழுதிரஈர்கள் என்று தோன்றுகிறது.ஆதாரங்கள் இருட்ந்தால் கொடுங்கள்.இல்லையெனில் இவைகள் உண்மைகள் ஆகும் வாய்ப்பு இராது.

  ReplyDelete
  Replies
  1. ஆதாரங்கள் இல்லாமல் கொடுக்கவில்லை, நண்பரே! ஆதார நூல்கள் பற்றி கருத்துரையில் இரண்டு பதிவுகளுக்கு முன் கொடுத்துள்ளேன்! மேலும் ஆதாரங்களாக அடைப்பு குறிகளுள் கொடுத்து வருகிறேன்! ,பதிவுகளை முழுமையாக படிக்காமல் யூகம் என்றால், என்ன சொல்வது ?

   Delete
 4. dear friend you never answer any of my questions in any of your blogs. please try to answer my queries

  ReplyDelete
  Replies
  1. O.k GANESH PLEASE ASK ME ! BUT DON'T ASK ANY QUESTION OR QUERIES NOT RELATED AND NOT READ MY ISSUES COMPLETLLY.

   Delete
 5. சகோ ராஜன்,

  அற்ப்புதமாக இருக்கிறது உங்கள் பதிவுகள். நிறைய புது விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களது கருத்துக்கு நன்றி! சிராஜ்.

   Delete
 6. உங்களது கட்டுரைகள் உண்மையும், ஆதாரமற்ற செய்திகளையும் கலந்து வெளிவருவதாகக் கருதவேண்டியுள்ளது.

  1. கோவில்கள் அரசனது இருப்பிடமாகவும், செல்வத்தை சேமிக்கும் இடமாகவும் இருந்தது உண்மை. கோவில் என்பது ஆலயத்தை குறிக்கலாம். ஆனால், 'கோயில்' என்பது அரசனின் இருப்பிடத்தைக் குறிக்கும் (கோ = அரசன், + இல் = வீடு).

  2. சிதம்பரம் ஆலயம் சமணர்களுடையதோ இல்லையோ - ஆனால், அதுதான் சித்தர் திருமூலர் மறைந்த இடம் என்று கருதப்படுகிறது.

  3. சிதம்பரம் கோவிலில் பொற்கூறை வேய்ந்தவன் பராந்தகச் சோழன் என்றே குறிப்பிடப்படுகிறது. பொற்கூறை மண்டபம் இன்றும் இருக்கிறது.

  4. ராசராசன் பார்ப்பனர்களை எதிர்த்தான், தண்டித்தான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அந்தவகையில் பார்ப்பனக்கூட்டத்தை எதிர்த்த ஒரே மன்னன் அவன் என்று பெருமை கொள்ள முடியும்.

  5. சிதம்பரம் ஆலயத்தை பார்ப்பனர்கள் வஞ்சகமாகக் கைப்பற்றினர் என்பது உண்மை. மராட்டிய மாநிலத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் தீட்சிதர்கள் முதலில் மன்னனுக்கு கட்டுப்பட்டவர்களாகக் கூறிக்கொண்டுதான், சிதம்பரத்தை ஆக்கிரமித்தனர். அவர்களே சோழப்பரம்பரையினருக்கு சிதம்பரம் கோவிலில் முடிசூட்டினர்.

  "சோழனார்" என்று அழைக்கப்பட்ட பிச்சாவரம் அரச பரம்பரையினரிடம்தான் கடந்த நூற்றாண்டு வரை சிதம்பரம் கோவிலின் உரிமை இருந்தது. தினமும் கோவிலின் சாவியையும் கணக்குகளையும் அவர்களிடம் தீட்சிதர்கள் ஒப்படைத்து வந்தனர். இதற்காக தினமும் கோவில் சாவியை பல்லக்கில் வைத்து தூக்கிச்சென்றனர்.

  சுமார் 60/70 ஆண்டுகளுக்கு முன்புதான் - பிச்சாவரம் சோழனார்கள் பலவீனமடைந்ததால், தீட்சிதர்கள் தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கோவிலை எடுத்துக்கொண்டனர்.

  ReplyDelete
 7. ஹிந்தியாவே முடிவு செய்.
  தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

  -------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?