Posts

Showing posts from March, 2012

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

Image
.உத்தமசோழன்  காலத்தில் ராஜராஜனும் குந்தவையும்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும்  அவர்களுக்கு  இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு  சீடர்களாக  (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள்  தென்னிந்தியாவுக்கு  இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்தனர் என்றும்  அவர்களது பாதுகாப்பில்  குந்தவையும் ராஜராஜனும்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும்  முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்
.
      திருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத்  தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா  அமைந்துள்ளது என்பதையும்  இந்த நத்தர்வலி அவர்கள்  குந்தவை நாச்சியாரை தனது  மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு  தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட  பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்!


     குந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை  அறிந்திருந்த  இந்துமதவாதிகள்  குறிப்பாக பிராமணர்கள்  அவரது இஸ்லாம் மத  ஈடுபாட்டினை கேலிசெய்யும்  சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது  அழைக்கப்பட்டு வரும்  ஊரில்  குந்தவை கட்டிய ரவிகுல மா…

தாலாட்டுப் பாடல்களில் குந்தவைக் குறிப்புகள்!

சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் குந்தவை நாச்சியார் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டபோது, சோழக்குடிமக்களும் அவரிடம்  அன்பு கொண்டோரும் அவரை சமாதானபடுத்தவும்அவர் எடுத்த
 முடிவை மாற்றிக்கொள்ளவும்  அல்லதுபரிசீலனை  செய்யுமாறு கேட்டும்,  அவர் இல்லையென்றால் எங்களது  நிலை என்னவாகுமோ,என்ற ஏக்கம்,
பரிதவிப்பு, இயலாத நிலை ஆகியவைகளைஅவருக்குஎடுத்துரைக்கும்  
வகையில்,தங்களது  கவலை மற்றும் அச்ச உணர்வினைத்
தெரிவிக்கும் வகையில்,    சமயபுரம் மாரியம்மன்  தாலாட்டுப் பாடல்கள் உள்ளதையும்,  அப்பாடல்கள் குந்தவையின்   பெருமைகளையும், அவரது இருப்பையும்  கூறுவதாக உள்ளதைக் காணலாம்!


"நாடி வந்தாள், தஞ்சை நகர் புகுந்தாள்,
நல்லவற்குத் தாயாக,தீயவருக்கு தீயாக
மாரிவந்தாள், உருமாறி வந்தாள்!
சமயபுரம் அவளின் படைவீடாம்,
புன்னைவனம்  நம் புகழிடமாம்
கண்ணபுரம் அந்த அன்னையகம்"


"பத்தாத பத்தினியே, பாரளந்தோன் தங்கையரே
என்டேன்றோர் பங்கில் ஒளியமாய் நின்றவளே,
அண்டம் தொழில் நாயகியே யாரிவர் உன்புதுமை
அன்னையே உந்தனோட அற்புதத்தைக் கண்டு எழுதி, 
 என்னால் எடுத்துரைக்க இயலுமோ தாயாரே,
கண்ணனூர் வீற்றிருந்து   கம்பாதி ரரீரோ"


" திர…

குந்தவையின் மதமாற்றமும் சமயபுரமும்!

குந்தவை நாச்சியார்,  இஸ்லாம் மதத்துக்கு  மாறிய  இடம்," சமயபுரம்"  எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து  கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய  குறிப்புகள் காணப் படுகிறது!  சமயபுரம் "கோயில் தல வரலாறும்"  அதனை  உறுதிபடுத்துவதாகவே உள்ளது!

        சமய பு(ர)றம் என்ற பெயர்,  காரணப் பெயராக  இருப்பதையும் காணலாம்!  குந்தவை இதுநாள் வரை  தான் சார்ந்து இருந்த..  மதத்தை  புறம் தள்ளி, புதிய மதத்தை  தழுவிக் கொண்டதால்  சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது  எனத் தோன்றுகிறது! 

    இந்த ஊருக்கு   கண்ணபுரம், கண்ணனூர் ,விக்கிரமபுரம்,மாகாளிபுரம்  என்று பலபெயர்களில்  குறிக்கப் பட்டு வந்துள்ளது!

           இந்த இடம் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், 15 -வது கி,மீ.யில்  உள்ளது. மேலும் இந்த இடம்  ஸ்ரீரங்கம், அருகிலும் அமைந்துள்ளது.! 

          சமயபுரம் கோயில் நிர்வாகம்  ஆங்கிலேயர்  ஆட்சிகாலம் வரை ஸ்ரீ ரங்கம் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது! 
     ஆதியில்  ஸ்ரீ ரங்கத்தில்  எழுந்தருளியுள்ள  இந்த அம்மன்,உக்கிரமாக இருந்ததால், ஸ்ரீ ரங்கம் அய்யரின் உத்தரவுப்படி  சமயபுரம் பகுதியில் காட்டி…

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?

  ஸ்ரீ ரங்கம்  கோயிலில்உள்ள இரண்டாம்  பிரகாரம், ஈசானிய மூலையில்  துலுக்க நாச்சியார்  சன்னதி  உள்ளது.!

         இங்கு,இன்றுவரை   இஸ்லாமியர்கள் வழக்கப்படி,  கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது!

         வைணவ  சன்னதியில்  துலுக்க  நாச்சியாருக்கு  ஏன் சன்னதி? துலுக்க நாச்சியார்  யார்? என்று கேட்டால் , வைணவர்கள்  சொல்லும் கதை  கேலிக்கு இடமளிக்கும்  கதையாகும்!

        இங்கே இருந்த  அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி  நினைவாக,   அவருக்கு  சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில்  வைணவர்கள்  வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று  எடுத்துகொண்டாலும்  முஸ்லிம்கள்  அந்தகாலத்தில்  இருந்தார்கள் எனபது உறுதியாகிறது!)அந்த துலுக்க நாச்சியாரை  டெல்லி  சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை  எடுத்துச் சென்றுவிட்டாராம்.

      ஆச்சாரியார்....  அதுதாங்க,   நம்ம  ராமானுஜ தாசர்  டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக்  திரும்ப கொண்டுவந்து  பிரதிஷ்ட்டை  செய்து வழிபட்டு வந்தனராம்!  "கோயில்  ஒழுகு"  கூற…

குந்தவை குறித்த, பிராமணீயத்தின் வக்கிரம்!

         குந்தவைநாச்சியார், சோழப் பேரரசில்  மிகுந்த  செல்வாக்கோடு  விளங்கிவந்தார்! சோழ பேரரசில்  உள்ள மக்கள்  அவரை  தெய்வமாகவே  எண்ணி வழிபட்டு வந்துள்ளனர்! அவரை மட்டுமின்றி, பொதுவாக  அரச குலத்தைச் சேர்ந்தவர்களை,  "தெய்வாம்சம் பொருந்தியவர்கள்"  என்று கருதியும்,"இறைவனாக" பாவித்து, வணங்கிவந்துள்ளனர்.


             ராஜராஜன்  உடம்பில்  சங்கு,சக்கர குறிகள் இருந்ததாகவும்,  'இரண்டாம் மனுவே'  பிறந்து வந்ததாகவும்  கூறி, உடையார்,திருமால், பெருமாள்,தேவர்  என்று பலபெயர்களில்  போற்றி வந்துள்ளதை வரலாறு அறிவிக்கிறது! 

      குந்தவை நாச்சியார், சமயபொறையுடன்,எல்ல சமயத்தவர்களுடனும்  பேதம் பாராட்டாமல்,  நடந்துகொண்டும், அவர்களுக்கு உதவிகள் செய்தும் வந்துள்ளார்!  அப்படி அவரிடம் உதவி பெற்றவர்களில்  இஸ்லாமியரும்  இருந்தனர்!

      இஸ்லாம் ஞானியார்  தபலே ஆலம் பாதுஷா  என்கிற,  "நத்தர் வலியாரை" தனது  ஆன்மீக குருவாகவும், அரசியல்  வழிகாட்டியாகவும்  குந்தவை  ஏற்று கொண்டிருந்தார் !  அவரது  சீடர்களுடனும்  அவருக்கு தொடர்பு  இருந்துவந்தது.இவர்களில் அனந்தபூர் மாவட்டம்   

         ராஜராஜ…

தாதாபுரம், ராஜராஜபுரமாக இருந்தபொழுது !

திண்டிவனதிலிருந்து புத்தனேந்தல்...அங்கிருந்து சிங்கேனிகுப்பம்( செங்கழுநீர் குப்பம்} செல்லும் வழியில்,கீழ்மலையனுருக்கு அருகில்ஒரு மைல் தூரத்தில்   உள்ளது  தாதாபுரம் என்ற ஊர் .

      இது  ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்  பேரூராக,நகரமாக  விளங்கிவந்த ஊர். ராஜராஜனின்  சகோதரி  குந்தவை நாச்சியார்  இந்த ஊரில்  கோயில்கள் கட்டி உள்ளார். அதுவும் தஞ்சைக் கோயிலை  ராஜராஜன் கட்டுவதற்கு முன்பே கட்டியுள்ளார். இந்த ஊருக்கு   தனது  தம்பியின் பெயரை," ராஜராஜபுரம்" என்று பெயரை வைத்து,அவனது புகழைப் பரப்பி உள்ளார்!

     இன்றைக்கு 1008  - ஆண்டுகளுக்கு முன்பு,கி.பி.1004 -இல்  தான் கட்டிய கோயில்களில்  குடமுழுக்கு வைபவங்கள் செய்து,மக்களின் வழிபாட்டுக்கும்,நாட்டிற்கும் அர்பணித்து  உள்ளார்!  ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயில்  கி.பி.1010  -இல் வழிபாட்டுக்கு வரும் முன்பே  குந்தவை கட்டிய கோயில்களில்  வழிபாடுகள் நடந்துள்ளன.


   குந்தவைக் கட்டிய,  'ஸ்ரீ ரவிகுல மாணிக்க ஈஸ்வரம்'  என்ற  கோயிலும்,  இப்போது,சிவன் கோயிலாக கூறபடுகிறது. 'ஸ்ரீ விண்ணகர் ஆழ்வார்  திருகோயிலும் , இன்று  கரிவரதராஜர்  என்ற பெயரில் விஸ்…

உலகமே போற்றவேண்டிய, " தமிழச்சி" குந்தவை! ,

   இன்றைக்கு நாம் உதாரணமாக  காட்டும் எந்தவொரு  பெண்ணையும் விட  சிறப்பும்,செயலாற்றலும், அன்பும், கருணையும், சமயபொறையும்,  அறிவும், ஆட்சித் திறனும்  கொண்டிருந்தவர்,  ராஜராஜனின்  சகோதரி  "குந்தவை நாச்சியார்"  என்று  உறுதியாக    சொல்லமுடியும்! 

     ராஜராஜன்  தனது ஆட்சிக்காலத்தில்  போற்றிய இரண்டு  பெண்மணிகள்  செம்பியன் மாதேவியாரும்  அவனது சகோதிரி குந்தவை நாச்சியாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும்  உறுதிபடுத்தி உள்ளனர்!

     ராஜராஜன்  தனது அக்காள் குந்தவை நாச்சியார் மீது  அளவற்ற அன்பு கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில்   குந்தவை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த கொடைகளை, ராஜராஜெச்வரம்  கோயில் கல்வெட்டில்  "நான் குடுதனவும்,நம் அக்கன் கொடுத்தனவும்,நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுத்தார் கொடுத்தனவும் கல்லிலே வெட்டுக" என்று  உத்தரவிட்டு இருந்தான் என்பதையும்  குந்தவை நாச்சியார்,  "சிதம்பரம் கோயிலுக்கு  பொன் வேய்ந்தால்" என்பதையும்  முன்பே பதிவுகளில் குறித்து இருக்கிறேன் !

    ராஜராஜன்  ஆட்சிக்கு வரும்வரை  அவனைப் பேணிப்பாதுகாத்து  மட்டுமின்றி  அவன் அறிவில் சிறந…

புருஷா மிருகமும், இந்துமத ஆன்மீக பொய்யுரைகளும்!

Image
எமது தமிழினத்தின் இணையற்ற  சிந்தனையாளர்களில், சிறந்த ஒருவன் திருவள்ளுவன்.! அவன் சொல்லுகிறான்.   அவனது குரலாக  அவனது திருக்குறள்  சொல்லுகிறது,...

" எப்பொருள் யார்யார்  வாய்க்கேட்பினும் அப்பொருள் 
 மெய்ப்பொருள் காண்பது அறிவு." என்கிறான்!

       நம்மவர்கள்,  மெய்பொருள் காண்பதை பல்வேறு அளவீடுகளில்  காண்கிறார்கள் என்று தோன்றுகிறது! 
      தாங்கள் இதுவரை கண்டது, கேட்டது, உண்மை என்று நம்புவது... ஆகியவற்றிற்கு எதிராகவோ,மாற்றுக் கருத்துக்களோ,சிந்தனையோ  வெளிப்படும்போது,  அதுகுறித்து  எவ்வித சிந்தனை இன்றி,உடனடியாக  நிராகரிக்கும் போக்கையே,  பெரும்பாலோர் கையாள்கின்றனர்!

        ராமானுஜர் குறித்த எனது பதிவு,    இதுவரை ராமானுஜர் குறித்து  அவரவர் கற்பனை செய்து கொண்டிருந்த,நம்பிக்கைக்கு மாறாக  இருந்துள்ளது என்பதை அறிகிறேன்! 

    எனவே,ராமானுஜர் குறித்து,  எனக்குத் தெரிந்த எல்லா விவரதையும்  தரலாம் என்றுதான்  முதலில் நினைத்தேன்! ஆயினும் நான் சொல்லுவதை  நம்பக்கூடிய  சாத்தியங்கள் குறைவு என்பதால், சில தகவல்களை மட்டும்  சொல்லுகிறேன்! 

    ஸ்ரீ பெரும்புதூர் ஊரில்  சொமையாஜீயர்  -பூமி பிராட்டியார் தம்பதிகள…