ராஜராஜேஸ்வரம் கோயிலும்,சிறப்புகளும்!

       தண்+செய்+ஊர்  என்பதே தஞ்சாவூர் ஆயிற்று ! காவிரியின் கருணையால் குளிர்ந்த நிலபரப்பு  உள்ள தஞ்சையை  முத்தரையர் மன்னனிடம் விஜயாலய சோழன் கி.பி.850 -யில்  கைப்பற்றி சோழநாட்டின் தலைநகராக்கினான் ! 

        விஜயாலன் தொடங்கி, ஆதித்யன்,பராந்தகன்,கண்டராதித்தன், அரிஞ்சயன்,   சுந்தரசோழன்,ஆதிய கரிகாலன்,உத்தமசோழன், ராஜராஜசோழன், இவனது மகன் ராஜேந்திர சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை 176-ஆண்டுகள் தஞ்சை சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது! 

      ராஜராஜன் தனது காலத்தில் கட்டியதே,பிரகதீஸ்வரர்  கோயில் என்று பிராமணர்களால்  பெயர்மாற்றப் பட்டுள்ள,பெரு உடையார்கோயில் என்ற  ராஜராஜெச்வரம் கோயிலாகும்! கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, "தட்சிண மேரு " என்று குறித்து வந்தது!  "தென் கயிலாயமலை"  என்று பொருள்! 

     இக்கோயிலின் முதல் கோபுரவாயிலுக்கு,  "கேரளாந்தகன் திருவாயில்" என்று பெயர்! காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக  வைக்கப்பட்டது!  இரண்டாவது கோபுரவாயிலுக்கு  ராஜராஜன் திருவாயில் என்று பெயர்!  இதனை சுற்றி திருசுற்று மாளிகை  என்ற அமைப்பு இருந்தது! அதனை ராஜராஜனின் ஆணையின்படி,அவனது படைத்தளபதி,  "கிருஷ்ணன் ராமன் "என்பவன் கட்டியதாக மூன்று இடங்களில் கல்வெட்டு உள்ளது.

       கருவறைக் கோபுரத்துக்கு பெயர்  "தட்சிணமேரு" என்னும் ஸ்ரீ விமானம் 216 -அடி உயரம் உள்ளது!   அண்மையில் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று இந்த ஸ்ரீ விமானத்தின் மேல் ராஜராஜன் செப்பு தகடுகளைப் போர்த்தி,பொன் சுருக்கினான் {பொன்னால் மூடியிருந்தான் } என்று விவரிக்கிறது! இன்னொரு கல்வெட்டு 12 - உயரமுடைய கலசத்துக்கு எவ்வளவு பொன் கொடுத்தான் என்று விவரிக்கிறது!

  "உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார் ஸ்ரீ விமனது செம்பின் ஷ்துபித் தறியில்  வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின   தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்து   தொள்ளாயிரத்து ,இருபத்தாறு கழஞ்சு" என்று கல்வெட்டு கூறுகிறது! 

கோயிலில் உள்ள பொன்னும் நகைகளும் ஆடவல்லான்,தில்லையம்பதி என்ற அளவுக் கல்லால் நிறுத்தப்பட்டு   அளவு செய்யப்பட்டுள்ளது!


      ராஜராஜன் கொடுத்த பொன்னால் ஆன ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கைத்தேவர்,பொன்னால் செய்யப்பட்ட சேத்ரபாலர் வெள்ளியால் ஆன வாசுதேவேர்கள், உள்ளிட்ட பலவும்,  பொன் கலங்கள் மொத்த எடை 41559 -கழஞ்சு, வெள்ளிகலங்கள் மொத்த எடை  50650 -கழஞ்சு, அணிகலன்கள் மொத்த எடை 10200 -கழஞ்சு ஆகியவைகள் ராஜராஜன் கொடுத்துள்ளதாக  கல்வெட்டுக்கள் தெரிவிகின்றன! ( ஆதாரம் சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்,ஆசிரியர் வித்துவான் வே.மகாதேவன்,பக்கம்-,7 , 11 ,) அதாவது ராஜராஜசோழன் தஞ்சை கோயிலுக்குக் கொடுத்த பொன் 90 கிலோ, 910 -கிராம், வெள்ளி 110 - கிலோ,795 - கிராம்,அணிகலன்கள் 22 -கிலோ, 312 -கிராம்   என்று வித்துவான் வே.மகாதேவன் தெரிவிக்கிறார்!

      குந்தவை நாச்சியார்,தம்மையாக எழுந்தருளுவித்த, திருமேனி,போன்மாளிகைத்துஞ்சிய தேவர் திருமேனி,ஆடவல்லான் நம்பிராட்டியார் திருமேனி,உமாபரமேச்வரி,தஞ்சை விடங்கர் திருமேனிஎன்றும்  7282 -கழஞ்சு, பொன்னும்(15 .929 -கிலோ  ) 3413  முத்து, நான்கு பவளம்,நான்கு ராஜவர்தம்,70767 -வயிரம்,1001 - மாணிக்கம் கூடிய நகைகள் கொடுத்துள்ளார்,தவிர ராஜராஜனின் மனைவியர்களும் தங்கள் பங்குக்கு,கிலோகணக்கில் தங்கமும்,அணிகலன்களும் கொடுத்து உள்ளானர்!  சொலக் குடிமக்களும் கொடுத்துள்ளனர்! அனைத்தையும் எல்லோரும் அறியும்படி, ராஜராஜன் கல்வெட்டில் வெட்டிவைக்கும்படி உத்தரவும் இட்டிருந்தான்!

    "பாண்டிய குலாசனி ஸ்ரீ வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுபிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார்க்கு 
நாம் குடுத்தனவும்,  நம் அக்கன் குடுத்தனவும்(குந்தவை) நம்பெண்டுகள் (மனைவியர்)குடுத்தனவும் மற்றும் கொடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்திலே கல்லில் வெட்டுக"  (தெனிந்திய கல்வெட்டுத் தொகுதிபாகம் 2 ,கல்.ஒன்று)


     ஸ்ரீ விமானம்  முழுவதும்  பொன் பூசப்பட்ட  தகடுகளால் அணிசெய்து காட்சியளித்த  ராஜராஜேஸ்வர கோபுரத்தை  கற்பனை செய்து பாருங்கள்!  இவைகள் யாவும் இன்று  காணமல் போய்விட்டது!
காரணம் இவைகள் இருந்ததே, தெரியாமல் பிராமணீயம் மறைத்து வந்ததுடன்,இவைகள் காணாமல் போக காரணமாகவும் இருந்துள்ளது! 
  

     போகட்டும், இந்த கோயிலில்  ஐம்பது பிடார்கள் தேவாரம் ஊதவும்,நானூறு ஆடல்மகளிர்கள் என்று ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு   மேல் பணிபுரிந்தனர்!  கோயிலில் நிலையாக இரண்டு கருவூலங்கள் மன்னனிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் முதலீடாகப் பெற்ற பொருளை,  வணிகர்களுக்கும் ஊர்சபைகளுக்கும், தனியார்களுக்கும் பணிரண்டரை சதம் வட்டி விகிதத்தில் கடன் அளித்து,பொது வங்கியாக திகழந்தது! 

       மன்னர்களாலும்,மக்களாலும் அளிக்கப் பட்ட பலகோடி  கணக்கான, மதிப்புள்ள  பொன்,ரத்தினங்கள்,நகைகள்,தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடை,மதிப்பு,ஆகிய துல்லிய கணக்குகளோடு பதிவு செய்யப்பட்டு,காக்கப்பட்டது! 

       இந்த கோயிலுக்கு சொந்தமாகவும், நிரந்தர வருமானத்துக்கும்  தமிழகம் மட்டுமின்றி  இலங்கை,கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களும்  இருந்தன!

          இந்த கோயிலைக் கட்டிய  தலைமை சிற்பி வீர சோழன் குஞ்சரமல்லனான,ராஜராஜ பெருந்தச்சன் . அவனது உதவியாளர்கள் நித்தவினோதப் பெருந்தச்சனும்,இலத்தி சடையன் பெருந்தச்சன்  என்பவர்கள்! 

    இக்கோயில்  மண்டபத்தில் ராஜரானது வாழ்க்கை வரலாறு நாடகமாக நடத்தப் பட்டு வந்தது! ராஜராஜனின் முன்னிலையில் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டு  நடத்தப்பட்டு வந்த  நாடக நூலும்,சமஷ்கிருததில் இருந்த காப்பிய நூலும்  கூட   இன்று காணாமல் போய்விட்டது!   இப்படி, பிராமணீயம்  காணாமல் செய்துவிட்ட காரியங்கள்... நமது செல்வங்கள் மட்டுமல்ல, வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும்,நமக்கு இருந்த வீரமும்,விவேகமும், புகழும் என்று எத்தனையோ உண்டு! 
   
         சிதம்பர ரகசியம் தெரியுமா? அதனையும் பார்ப்போம்! தில்லையம்பதியில் பிராமணீயம் செய்த தில்லுமுல்லுகள்  பற்றி, அடுத்து பார்ப்போம்! ,Comments

 1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 3. தொடரட்டும் உஙகள் பணி,கிழியட்டும் அவாள் துணி. வாழ்த்துக்கள் ராஜன். அன்புடன் பாலாஜி கண்ணன்.

  ReplyDelete
 4. Really interesting to read. But i don't know how much is true. Anyways your writing creates eagerness towards our history. Kindly refer some reference books for our visitors to know about cholaas.

  ReplyDelete
  Replies
  1. வித்துவான் வே.மகாதேவன்,சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்,சேகர் பதிப்பகம்,சென்னை,

   ,சி.கோவிந்தராஜன்,சி.கோ.தெய்வநாயகம் எழுதிய கரந்தைச் செப்பேடுகள் தொகுதி,மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளியீடு,
   சி.கோவிந்தராஜன்எழுதிய கல்வெட்டு கலைச் சொல் அகர முதலி,மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளியீடு,கா.அப்பாதுரையார் எழுதிய தென்னாட்டுப் போர்களங்கள்,பூம்புகார் பதிப்பகம்,கே.எ.நீலகண்டசாச்திரியாரின் சோழர்கள்,ஒன்று,இரண்டு தொடுதிகள்,போ.வேல்சாமி எழுதிய கோயில் -நிலம்- சாதி, டாக்டர் பத்மாவதி எழுதிய சோழர்கால சமயம், டாக்டர்.ராம் கரணசர்மா எழுதிய இந்திய நிலமானிய முறை, ம.சந்திரமூர்த்தி தொகுத்த தமிழ் நாட்டு சிவாலயங்கள்-மூன்று தொகுதி,புலவர் முத்து.எதிராசன் எழுதிய குந்தவையின் கலைக் கோயில்கள், குடவாயில் பாலசுபிரமணியன் எழுதிய ராஜராஜேஸ்வரம் தி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர்கள் வரலாறு, கா.கைலாசபதி எழுதிய பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் மா.ராஜமாணிக்கனார் எழுதிய கல்வெட்டுகளில் அரசியல்,சமயம் என்று பலநூல்கள் உள்ளன.

   Delete
 5. சார் உங்களை பத்திரமா பாத்துக்குங்க. ஏன்னா, வரலாற்று ரீதியில் நீங்க பாப்சுக்கு வைக்கிற ஒவ்வொரு பயங்கர வெடிக்கும் சேத்து வைத்து உங்களை ஏதாவாது செய்திட போரானுங்க. இந்த அகில உலகித்திலும் அழிக்கிறதுக்கு என தனி சிறப்பு கடவுளை உருவாக்கி வைத்திருக்கற ஒரு நூதன கற்பனை மதத்தை கண்டு பிடித்திருக்கும் ஜந்துக்கள். உங்களது தளத்தை பாதுகாப்பாக வைத்தக் கொள்ளுங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் 'தமிழச்சி'யின் பகுத்தறிவாளர் தளத்தை முழுதும் அழிச்சிட்டானுங்க.

  தொடர்ந்த பணிக்கும் உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. " இறைவன் ஒருவன் உண்டு,

   இவரிவர் வாழ்க்கை இந்த

   முறையிலே போகும் என்ற

   முடிவுற்ற கணக்கும் உண்டு!" -என்பார் கண்ணதாசன்! என்ன வேடிக்கை என்றால் அவர்,"அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதினார்! நான், "இந்துமதத்தின் அனர்த்தங்களை" எழுதிவருகிறேன்!


   நன்றி மாசிலா! நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்! நல்லதையே எப்போதும் நினைப்போம்!

   Delete
  2. " இறைவன் ஒருவன் உண்டு,

   இவரிவர் வாழ்க்கை இந்த

   முறையிலே போகும் என்ற

   முடிவுற்ற கணக்கும் உண்டு!" -என்பார் கண்ணதாசன்! என்ன வேடிக்கை என்றால் அவர்,"அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதினார்! நான், "இந்துமதத்தின் அனர்த்தங்களை" எழுதிவருகிறேன்!


   நன்றி மாசிலா! நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்! நல்லதையே எப்போதும் நினைப்போம்!

   Delete
  3. " இறைவன் ஒருவன் உண்டு,

   இவரிவர் வாழ்க்கை இந்த

   முறையிலே போகும் என்ற

   முடிவுற்ற கணக்கும் உண்டு!" -என்பார் கண்ணதாசன்! என்ன வேடிக்கை என்றால் அவர்,"அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதினார்! நான், "இந்துமதத்தின் அனர்த்தங்களை" எழுதிவருகிறேன்!


   நன்றி மாசிலா! நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்! நல்லதையே எப்போதும் நினைப்போம்!

   Delete
 6. romba super sir sarithiratthil maraikka patta pala visayangalai tholurithu kaatti vitteergal. muslimgalaku adharavana unmaiyana karuthukalai veliyittu irukireegal. ithai avana padamaaga edukka nan virumbugiren ungalai thodarbu virumbugiren.my num 9894242758

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?