பிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது!

       மதுரையை திருமலை நாயக்கர் என்ற மன்னர் ஆட்சிசெய்ததை வரலாற்று  அறிவாளர்கள் அறிந்ததுதான்!  நாயக்கர்கள்  ஆட்சியானது  முற்றிலும்  இந்துமத சனாதனம், சாஸ்திரம், சடங்குகள் நிறைந்த  ஆட்சியாகவே இருந்து வந்தது!   யாகங்கள், வேள்விகள், பூஜைகள், ஜோதிடம், புனஷ்காரம்,போன்றவைகளாலேயே  மன்னனும்   மக்களும், நாடும் நல்லநிலையில் இருக்க முடியும் என்ற பிராமணர்களின் நம்பிகைகள்  அடிப்படையில்  நடந்துவந்த ஆட்சியாகும்.

        வேறுவகையில் சொல்வதென்றால், யார் மன்னனாக ஆட்சியில் இருந்தாலும்  அவர்களது ஆட்சியானது பார்ப்பன குரு, அமைச்சர், அல்லது ராஜகுரு  என்பவரது ஆலோசனையின் பேரில் நடந்துவந்த ஆட்சியாக இருந்தது!

        பிராமணர்களைத் தவிர யாரும் அதாவது "சூத்திரன் எவனும்  அவன் எத்தனை அறிவாளியாக இருந்தாலும், எத்தனை ஞானம் உள்ளவனாக  இருந்தாலும் அரசனுக்கு மந்திரியாக, ஆலோசனை சொல்பவராக இருக்கக் கூடாது" என்பது மனுதரும  சட்டமாகும். 

        அதைப்போலவே,' பிராமணன்  ஒருவன்  பஞ்சமா பாதகங்களை செய்தவனாக இருந்தாலும், செய்வதற்கு காரணமாகஇருந்தாலும், பிறவியால் அவன் பிராமண குலத்தில் பிறந்தவன்  ஆகையால்  பிராமணனைத்தான் அரசன் மந்திரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்  "சூத்திரன் ஒருபோதும்  அரச சபைக்கு உரியவன்  இல்லை " என்பதும் மனுவின் சட்டமாகும்.

   " ஜாதி மாத்ரோப ஜீவிவா காமம்ஷ்யாத் 
          பிராஷ் மணப்ருவ; 
     தர்மப்ரவக்தா, த்ருபதோ 
         நது சூத்திர:  கதாசன " என்கிறது .

     இந்த நியதிபடியே திருமலை நாயக்க  மன்னனுக்கும் "பிராமண குரு"ஒருவர் ஆலோசகராக இருந்தார். அவரிடம் பார்ப்பனன் அல்லாத ஒருவன்,  "ஷ்ஹஷ்ர சீஷா புருஷ "   என்ற வேத வாக்கியத்திற்கு பொருள் தெரிவிக்குமாறு கேட்டான். பார்பனன் ஒருவனைத் தவிர  வேறு யாரும் வேதத்தைப் படிக்கக்  கூடாது,என்று நினைக்கும் பார்ப்பன  குருவான அவரால் , அதுவும் அரசனையே ஆட்டிப் படைக்கும் அதிகார மையமாக விளங்கும் பிராமண குருவால் தாங்கிக் கொள்ள முடியுமா?  

        அவர் உடனே அரசனிடம் போய்,  ஒரு முகூர்த்த நேரம் [ஒருமணி நேர மட்டும் ] அவரது செங்கோலை  தன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்குமாறு கேட்டு  செங்கோலைப் பெற்றுக்கொண்டு வந்தார். {செங்கோல் எனபது அரசனின் அதிகாரத்தை,அரச உரிமையை நிலைநாட்டும்  அடையாளமாகும். }
 
          தற்காலிக அரசுரிமைப் பெற்ற பிராமண குரு,  தன்னிடம் வேத வாக்கியத்துக்கு   பொருள் தருமாறு  கேட்ட...  பிராமணன் அல்லாத  அந்த ஆளுக்கு தண்டனையைக்  கொடுத்தார்.   என்ன தண்டனை தெரியுமா? 

         அதிகம் இல்லை.. சாந்த சொருபிகளே!, ஜீவகாருண்ய  மக்களே!, அஹிம்சையைப் போதிக்கும், அன்புமயமான  நமது  இந்துமத சகோதரர்களே!,  வேதத்தின் பொருளைக் கேட்டவனைப் பிடித்துவருமாறு காவலர்களுக்கு  உத்தரவு பிறப்பித்து, அவன் வந்ததும் அவனது ஆசனத் துவாரத்தின் வழியே  ஒரு கழுவூசியை, அந்த மனிதனது  தலையில் அதாவது உச்சி மண்டைக்கு வெளியே  பத்து அங்குலம்  தெரியுமாறு ஏற்றசொல்லி.. தண்டனைக் கொடுத்தார்! 

           பிறகு, "இந்த சூத்திரப் பயல் வேதத்துக்கு பொருள் கேட்டான், சூத்திரனுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையானது தான்! " என்று அவனுக்கு கொடுத்த தண்டனைக்கு விளக்கம் கூறினார்.

        திருமலை நாயக்க மன்னனிடம்  இருந்து ஒரு முகூர்த்த நேரமே  அரசுரிமையை  பெற்ற பிராமணரின்  ஆட்சி முறையும் தண்டனையும், நீதி பரிபாலனமும்  இப்படி இருந்துள்ளதே,   பிராமணர்களின் நிலையான, நீடித்த ஆட்சி எனபது எப்படி இருந்திருக்கும்?  என்று எண்ணிப் பாருங்கள்.!  

        மனிதத் தன்மை அற்ற... மாபாவிகளின் கொடுமைகள்,!   நடந்தேறிய கொடூரங்கள், காட்டுமிரண்டிதனங்கள்,  பற்றி எண்ணிப் பார்க்கவே இதயம் தகிக்கிறது.!

               
    எதிர்கால சந்ததிகளின் இனிய  வாழ்வுக்காக, வருங்கால  மக்களின் வரலாற்றுகாக,மறைக்கப் பட்டு வரும் இதுபோன்ற நிகழ்வுகளை  இயன்ற அளவு  பதிவுசெய்வதை  வரலாற்றுக் கடமையாகவும், எனது வாழ்நாள் கடமையாகவும்,  நினைத்து  இதுபோன்ற  பதிவுகளைச் செய்ய வேண்டியள்ளது.! 
           மற்றவைகளை அடுத்து தொடருவோம்!  Comments

 1. தவறு செய்தவர்களின் முகத்திரையை கிழிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் இன்றுள்ளவர்களும் அப்படித்தான் என்று அவர்கள் மீது வெறுப்பு வராமல் எழுதுவதும் உங்கள் கடமை என்றே நினைக்கின்றேன்.
  தொடர்ந்து எழுதுங்கள் நன்றி..

  ReplyDelete
 2. You are the spoiling the community citing the events happened long back

  ReplyDelete
 3. இதுவரை கேள்விப் படாத ஒரு நிகழ்ச்சி.

  ReplyDelete
 4. தங்களது அனுமதி என்னை ஊக்கம் கொள்ளவைக்கிறது, தங்கம்! நன்றி!

  ReplyDelete
 5. You are the spoiling the community citing the events happened long back!
  sorry brother you are mis understaning me. I tring to purify my community !I think you may understand this later!

  ReplyDelete
 6. நான் பழைய குப்பையை கிளறுவதாக, ஒருசாரரை வெறுப்பதாக,வெறுத்து எழுதுவதாக, நினைக்கத் தோன்றும்! உண்மையில் எனக்கு அதுபோல எண்ணம் நிச்சயம் இல்லை! வரலாறை சரி செய்யப் போவதாக சொல்லி இந்துத்துவ வாதிகள் பாபர் மசூதியை இடித்தபிறகு,இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு,அமைதி கேள்விக்குறியாகி உள்ளது.! இந்தியாவில் குண்டுவெடிப்பு, தீவிரவாதம்,மதவாதம் ஆகியவைகளின் வீச்சு மக்களிடமும், அரசியலிலும் அதிகரித்து உள்ளது! nandri puratchi mani.!

  ReplyDelete
 7. Dear Author
  Your article is good and your presentation is excellent, but at the same time if you could give the references for your arguments it will add more value to it.

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?