பிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்!

       கோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம்  இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்!

   அரசின் அன்றாட பணிகளை  செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக  கோயில்கள்   விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும்  மக்களுக்கும் இடையில் தொடர்புகளை  கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட  பணியாளர்கள்  ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர்  என்பதை அறியலாம்!

    கோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான  நிலத்தை  அரசர்கள்  எழுதிவைத்தார்கள்  என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம்! பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக  கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக  செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! தவிர நிலத்தின் வருவாயே  அரசின் முக்கிய வருவாயாக  இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும்  அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!

    ஆட்சியின் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் இயங்கிவந்ததால்  குறிப்பிட்ட சாதியினர்தான்  கோயிலுக்குள் போகவர முடியும், குறிப்பிட்ட சாதியினர் போகவர முடியாது!  என்ற நிலையில் அரசர்கள் காலத்தில் கோயில்கள் இருந்துவரவில்லை!  என்பதையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரிமையான,அதிகாரத்தை வழங்கும் இடமாக  கோயில்கள்  இருந்துவரவில்லை என்பதும்  இன்றைய தீண்டாமையை  அரசர்கள் காலத்தில்  யாரும் கடைபிடிக்கவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 

     கோயில்கள் ஆட்சியதிகாரம் மிக்க இடங்கள், ஏராளமான பொக்கிஷம் இருந்த இடங்கள் என்பதாலேயே  பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களைக் கைப்பற்றும், கோயில்களை தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவரும் செயல்களில் முனைந்து ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது! இன்றுவரை கோயில்களை தங்களது ஏகபோக உரிமை பிரதேசமாகவும், தங்களது ஆதிக்க இடங்களாகவும், தங்களது எல்லாவித செயல்களுக்கும்  பயன்படுத்திவருகிறது!

     நாள்தோறும்  கடினமாக உழைக்கும்   மக்களால்  மாதத்தில் ஒருநாள் நெய்சோறு சாப்பிடமுடியுமா? ஆனால் பிராமணீயம் உழைக்காமல், மாதம் முழுவதும்  நெய்வேத்தியம் சாப்பிட வழிவகை ஏற்படுத்துவது, வாழ்வாதாரமாக இருப்பது  கோயில்கள்தான்!  அதனால்தான்  கோயில்களை பிராமணீயம் அதிகமாக கட்டவும், அவைகளை தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தில் வைத்து கொண்டுவரவும்  செய்கிறது!

       பிராமணீயம் என்ற பாசிசத்தின் சுரண்டல், ஊழல், ஏகபோகத்தின் முக்கிய மையப் புள்ளி எனபது கோயில்களே! 

     இந்துமதம் என்று சொல்லும் எவரும் பிராமணர்களைத் தவிர,கோயில்களில், பிராமணர்களின் இடத்தில இன்றுவரை நுழையமுடியாதபடி  உள்ளதற்கு காரணத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்! அனைத்து சாதியினரும் முயன்றால்  அம்பத்கர்  வடிவமைத்த சட்டப் படி, கலைக்டர்  ஆகலாம், டாக்டர்,ஆகலாம், ஏன் கவர்னர் ஆகலாம்! இந்தியாவையே கூட ஆளலாம்! திருப்தி போன்ற கோயிலில் மணியாட்ட முடியாது!  தினமும் நெய்சோறு, நிவேதனம் என்று வசதிகளை  உழைக்காமல் சாப்பிடமுடியாது! உழைத்தாலும் சாப்பிட முடியாது! காரணம்  பிராமணீயம் என்ற பாசிசத்தின் கட்டமைப்பு அப்படிப்பட்டது! 

     அனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமும் நடைமுறையும்  பிராமணீயம் என்ற பாசிசத்தின் எதிரி என்பதாலேயே அவை  இன்றுவரை நிறைவேறாமல் இருந்துவருகிறது!

       இப்போதும் கிராமபுறங்களில் உள்ள கோயில்களை  பிராமணர் அல்லாதவர்களும்  பூசாரிகளாக இருக்கின்றனரே? என்று நினைக்கலாம்!  முக்கிய வருமானம் உள்ள, அனைத்து கோயில்களும்  பிராமணர்களுக்கு  ஆதாயம் அளிக்கும் கோயில்களாக உள்ளது. அவைகளில் இந்த பூசாரிகளை பணியில் அமர்த்துவார்களா?  அல்லது கிராம, வருமானம் இல்லாத கோயில்களுக்கு பிராமணர்கள்  பணிமாறுதல் செய்யபடுவார்களா? என்று யோசியுங்கள்!  பிராமணீயம் எனபது இந்துமதத்தில்எத்தகைய  தனி உரிமையும்   முக்கியத்துவமும் பெற்றுள்ளது எனபது விளங்கும்! 

   ராஜராஜேஸ்வரம் கோயில் குறித்தபதிவு நாளை  வரும்!

Comments

 1. ராஜன்,
  சிந்திக்கும் அறிவுள்ள எவரும் தங்கள் கருத்துகளை ஏற்பார்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர், பரமசிவம்.!

   Delete
  2. நன்றி சகோதரர், பரமசிவம்,!

   Delete
 2. உருப்படியான சிந்திக்க தூண்டும் பதிவுகலள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, பாலாஜி கண்ணன்! தொடர்ந்து வாருங்கள் பல மறைக்கப்பட்ட தகவல்களும் சிந்தனையை தூண்டும் தகவல்களும் அதிர்ச்சி அளிக்கும்,ஆச்சரியமூட்டும் தகவல்களும் இருக்கின்றன!

   Delete
 3. சிறந்த பதிவு. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. நீங்கள் நடுநிலையான பதிவராக இருந்தால், மன்னராட்சி முறையின் அனைத்து கோணங்களையும் முறையாக ஆராய்ந்து எழுதுங்கள். பொன்னியின் செல்வனையே ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டால் கூட பழுவேட்டரையர்களை மீறி சோழ சாம்ராஜ்யத்தில் அரச குடும்பத்தினராலேயே என்ன செய்ய முடிந்தது? சத்திரியர்கள் அரசாளும் சாதியினராக இருந்த அந்தக்காலத்தில் தளபதிகளாக இருந்தவர்கள் எந்த சாதி, போர்வீரர்களாக இருந்தவர்கள் எந்த சாதி?, கோவிலுக்கு உடையவர்களாக இருந்தவர்கள் எந்தசாதி?, முதல்மரியாதை பெற தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட முதலிகள் எந்த சாதி?, இது போன்ற பல்வேறு செல்வாக்கு பெற்ற சாதிகளைத் தாண்டி பிராமணர்கள் நினைத்திருந்தால் கூட ஒதுக்கப்பட்டவர்களை உள்ளே நுழைய விட்டிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு முன்னேற்றமடைந்த ஜனநாயகத்தில் அதுவும் திராவிட இயக்கம் அரியணையில் இருக்கும் இந்தப் பொற்காலத்தில் கூட கீரிப்பட்டி, பாப்பாபட்டி, சேலம், இன்னும் பல இடங்களில் சில சாதியினரால் கோவிலுக்குள்ளேயே நுழைய முடியவில்லை. எழுதும் போது மனசாட்சியுடன் யோசித்து எழுதுங்கள். வெள்ளைக்காரன் காலத்தில் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டவர்களை உள்ளே அழைத்துச் செல்ல ஒரு வைத்தியநாதையாருக்குத் தான் தைரியம் இருந்தது

  ReplyDelete
 5. எதிர்ப்புக் குரலாக இருந்தாலும் அதனை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிடும் உங்களது பரந்த பார்வைக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.
  கடவுளின் பெயரால் மன்னர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமணர்கள், கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் ஏராளமான நிலங்களையும் மானியங்களையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
  நிலங்களைத் தானமாகப் பெற்ற அவர்கள் அந்த நிலங்களில் உழுது பயிரிட்டதற்கு ஆதாரங்கள் உண்டா?

  தமிழ் மன்னர்களான சோழர்கள் ஆட்சியில் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, சமஸ்கிருதம் முதல் மொழியாக ஆட்சி புரிந்ததே, அது யாரால்?
  காஞ்சியில் பல்கலைக் கழகம் வைத்து அம்மொழியை வளர்த்தது போல் தமிழ் வளர்க்கப் படவில்லையே, அது யார் செய்த சூது?

  பொன்னியின் செல்வன் மிகக் குறைந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஒரு கற்பனைப் புதினம் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.
  இன்னும் சொல்லப் போனால் ஜாதிகள் உருவாகக் காரணமே இந்தப் பிராமணர்கள்தானே?
  பன்னிரண்டாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளோடு, இன்றைய கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியை ஒப்பிடுவது சரியல்ல்.

  ReplyDelete
 7. ஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.

 8. ஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.

 9. ஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?