கோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்!

      கோயில்கள்  இறைவழிபாடு செய்ய மட்டுமே   என்று நினைத்து,நம்மை ஆண்ட அரசர்கள் கட்டியவை அல்ல !  அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான   பலதுறை    அரச அலுவல்களை நடத்திவர உதவிடும்  ஒருங்கிணைப்பு  இடங்களாகவே  எண்ணி  கோயில்களைக் கட்டயுள்ளனர்! இந்நாளில்     கட்டப் பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்களை போல,  அரசின் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தேவைகளுக்கு,    பொதுபயன்பாட்டு  நோக்கத்திற்காகவே அரசர்கள் கோயிலைக்   கட்டி உள்ளதுடன்,அவ்வாறான பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்!  

     பண்டை கால தமிழகத்தின்  சமயம்,சமுதாயம், வரலாறு,வாழ்க்கைத் திறன்,, அறச்செயல்கள்,ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை   நாமறிய  உதவிடும்  வண்ணம். கோயில்கள் திகழ்கின்றன என்று தனது  தமிழ் நாட்டு சிவாலயங்கள் என்ற நூலில் குறிப்பிடும் மா.சந்திர மூர்த்தி,அவர்கள்,

     "பண்டைக் காலங்களில் கோயில்கள் பல்வேறு கலை நூல்களும் ஓலை ஏட்டில் எழுதிவைத்து, பாதுகாக்கும் நூலகங்களாகவும் ,விற்றல்,கொடுக்கல் வாங்கல் முதலிய பத்திரப்பதிவு நடத்தும்   இடங்களாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், விளங்கி வந்துள்ளன"  என்றும் 
 
           அரசின் முக்கிய வருவாயான   நிலத்தின் மூலம் வரும்  வருவாயை   கோயில் வழியே பெற்று ,  அதிலிருந்து பல்வேறு பயன்களுக்கு செலவிடப்படும் நிதி வைப்பு நிலையங்களாகவும், போர்கள் நிகழும் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் புகழிமாகவும் ,பஞ்சம்,இயற்கை சீற்றங்கள் நிகழும் காலத்தில் உணவளித்து,பொருளாதார உதவி செய்யும் பணிமனைகளாகவும், பரம்பரையாக பணிபுரிவோருக்கு,வேலை  வாய்ப்பு அளிக்கும், மானியம்{ஊதியம்}நிறுவனமாகவும், விளங்கிவந்தன!"என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்!

     இவைகள் தவிர, கோவில்கள் அன்றைய நாளில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு விசாரித்து, தீர்ப்பு வழங்கும் நீதி மன்றங்களாகவும்,பணியாற்றி வந்தன! கோவில்களில் நூல்களின் அரங்கேற்றம், நூல்களின் விளக்கங்கள், நாடகம், நடனம், இதர கலைகள் என்று அனைத்துக்கும் தேவையான பணிகளை அரசு சார்பில்  செயல்படுத்தும் இடங்களாகவும்,  கோயில்கள் அமைக்கப் பட்டன!

   பல்லாயிரகணக்கான  பணியாளர்களுக்கு வேலை வழங்கி, அரசின் பணிகள்,மக்களின் பணிகளுக்கு  அரசால் ஏற்படுத்தப்படும்  ஊர் சபைகளை   நடத்தி, அரசு பணியாளர்கள்,இதர வகை  ஊழியம் செய்வோர்  ஆகியோருக்கு  ஊதியம் தந்து,தங்களது ஆட்சியை நடத்திட  கோயில்களைக் கட்டியிருந்தனர்!

      பிற்கால சோழர்களில்  கோச்செங்கணான் என்ற சோழன் காவிரியின் இரு கரைகளிலும் எழுபது கோயில்களைக் கட்டினான் என்று  கோயில் கல்வெட்டுகள் தெரிவிகின்றன! இவன் கட்டிய கோயில்கள் மட்டுமில்லை, விஜயாலய சோழன்,சுந்தர சோழன்  உள்ளிட்ட  சோழ மன்னர்கள் கட்டிய அனைத்துக் கோயில்களும்  அரசின் பணிகளை  செவ்வனே செய்ய உதவிடும் பணிமனைகளாகவும், பல்வேறு அலுவல்களை செய்திடும்  பொது இடங்களாகவும்  அக்காலத்தில் கோயில்கள்  திகழ்ந்துள்ளன! 

      செங்கற்களால் கட்டப்பட்ட  கோயில்கள் காலத்தில் சேத முற்றபோது, அவைகள் முன்னிலும் வலிவுடனும் வசதிகள் அதிகரித்தும், கற்றளிகளாக, கருங்கல்லால் ஆன கோயில்களாக  சோழர்கள்  மாறுதல் செய்து வந்தனர்!

       இவைகள் தவிர தங்களது செல்வதை பாதுகாத்து வரும் கருவூலங்களாகவும், போரில் எதிரி நாட்டில் இருந்து  கைபட்டபடும் ஏராளமான  செல்வங்களையும் கோயிலில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்கள்!   மிகுந்த செல்வம் வைக்கப் பட்டுள்ள கோயில்களுக்கு  படைவீரர்களை வைத்து காவல் காத்துவரும் பணியும் சோழர் ஆட்சியில் செய்யப்பட்டு இருந்தது!

     ராஜராஜன்  தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பே,நெல்லை மாவட்டம் திருவாலீச்வரர் கோயிலைக் கட்டியிருந்தான்! இக்கோயில் கருவூலத்தை காக்க,"மூன்று கை  மாசேனை"என்னும் படையை காவல் காக்கும்படி   செய்திருந்தான், பல்வேறு இடங்களைச் சார்ந்த கிராம சபையினரை  கோயிலுக்கு காவலாளிகளை நியமிக்குமாறு பணித்திருந்தான், சபையினரும் அவ்வாறே கோயிலுக்கு காவலாளிகளை அமர்த்தியுள்ளனர்! என்று தென்னிந்திய கல்வெட்டு தொகுதி,வால்யூம் இரண்டு, கல்வெட்டு-70, தெரிவிக்கிறது!

       கோயில்களில் வழக்குகள் விசாரிக்கப் பட்டு, தீர்ப்புகள் சொல்லும் நிதிமன்றமாக செயல் பட்டதை,  நீலி என்பவளுக்கும், வணிகன் ஒருவனுக்கும் நேர்ந்த  வழக்கு , பழையனூர் திருவாலங்காட்டுக் கோயிலிலும்  வணிகப் பெண் ஒருத்திக்கு நடந்த திருமணம் பற்றிய வழக்கு,திருப்பனந்தாள் மற்றும் மதுரைக் கோயிலிலும், வரிஏய்ப்பு,ஊழல் வழக்கு திருமாற்பேறு கோயிலிலும் நடைபெற்றதை திருவெறும்பூர், கூகுர்  போன்ற கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது!

     "அக்காலக் கோயில்கள் மேற்கொண்டிருந்த பணிகளில் கல்விப்பணியும் ஒஎன்றாகும். கோவில்களில் சரஸ்வதிப் பண்டாரம் என்ற பெயரில் நூல்நிலையங்கள் இருந்துள்ளன.கோயில்களின் சில பாகங்கள் கல்லூரிகளாகவும் பொது மண்டபங்களாகவும் இருந்துள்ளன!" என்று தமிழர் சமுதாயம் கி.பி.9 ,10 -ஆம் நூற்றாண்டுகள்  என்ற நூலில், {பக்கம் -73 ), அதன் ஆசிரியர்  க.முத்தையா விவரிக்கிறார்!

         தஞ்சை,பெரிய கோவிலில், இரண்டு வங்கிகள் நடந்து வந்தன, அவைகள்  பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும்  கடன் கொடுத்து, வட்டியுடன் வசூலித்து வந்தன என்று  'ராஜராஜேஸ்வரம் " என்னும் தனது நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன்  தெரிவிக்கிறார். இவர் தஞ்சை சரஸ்வதி மகாலின்  பொறுப்பாளராக  இருந்தவர்!  

     கோயில்களின் பயன்கள் வேறு எவைஎவை என்பதுடன் தஞ்சை கோயில், தில்லையம்பதி என்னும் சிதம்பரம் கோயில்  அவைகளின் செல்வா வளம் ஆகியவைகளையும் அடுத்துப் பார்க்கலாம்! 
  
   

Comments

 1. தஞ்சை,பெரிய கோவிலில், இரண்டு வங்கிகள் நடந்து வந்தன, அவைகள் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் கடன் கொடுத்து, வட்டியுடன் வசூலித்து வந்தன என்று 'ராஜராஜேஸ்வரம் " என்னும் தனது நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவிக்கிறார். இவர் தஞ்சை சரஸ்வதி மகாலின் பொறுப்பாளராக இருந்தவர்!

  மிகச்சிறப்பான பயனுள்ள ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ராஜ ராஜேஸ்வரம் கோயில் ஒரு ஆயிரம் ஆண்டுகால அதிசயம் மட்டுமல்ல,நமது ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பதிவும் கூட! நன்றி ராஜேஸ்வரி!

   Delete
 2. பலான பதிய தகவல்கள் அறிந்துகொண்டேன். வங்கிகளாக செயல்பட்டதும் கேள்விபடாததே.
  பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. தொடரவும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை என்னை ஊக்கப் படுத்துகிறது,நன்றி !

   Delete
 3. ம் ம் ம் தொடரட்டும் உஙகள் பணி,கிழியட்டும் அவாள் துணி. வாழ்த்துக்கள் ராஜன். அன்புடன் பாலாஜி கண்ணன்.

  ReplyDelete
 4. நான் இதுவரை அறிந்திராத செய்திகளை தந்துள்ளீர்கள் நண்பரே வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?