உத்தம சோழனின் பிராமணீய ஆட்சி!

     உத்தம சோழனின்ஆட்சியை  பிராமணீய ஆட்சி என்றே உறுதியாக கூறலாம்! பிராமணர்கள் தங்கள் சார்பாக  உத்தம சோழனை பேருக்கு மன்னனாக்கி விட்டு சோழ நாட்டை தங்களது ஆதிக்க,அதிகார பூமியாக்கும்  செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அறுதியிட ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன!

     உத்தம சோழனது ஆட்சியைப் பற்றி, "மதராஸ் மீயுசியத்தின்  சாசனம் "  விளக்குகிறது!

       "உத்தம சோழன் நாட்டை ஆளத் திறமை அற்றவனாகவும்,தகுதி அற்றவனாகவும் விளங்கினான்"  என்று தமிழக வரலாறு என்னும் நூலில் அ.தேவ நேசன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்!

       திருவாலங்காடு செப்பேடு, "கலி"என்பதாக  ஆதித்ய கரிகாலனின் படுகொலைக்கு உரியவர்களைக் குறிப்பது உடன்,உத்தம சோழனை, ராஜராஜனின் சிற்றப்பன்,அருண்மொழி வர்மனுக்குரிய ஆட்சியினை ஆவலோடு முயன்று அடைந்தவன்,எனவும்  அந்தணர்களுக்கு செல்வதை வாரி வழங்கி,உலகத்தைப் {நாட்டைப் பெற்றவன}பெற்றவன் எனவும் குறிபிடுகிறது!

      "ஆதித்தன் என்ற சூரியன் மறைந்தான், பாவம் என்ற இருள் சூழ்ந்தது" என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி  தனது சோழர்கள் நூலில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சுருக்கமாக கூறுகிறார்!

      தவிர பல்வேறு கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உத்தம சோழனைப் பற்றி "நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்தவன்," "பேரு வலியுடையவன் ", "முயன்று ஆட்சிக்கு வந்தவன்", "இவன் நல்ல தந்தைக்குப் பிறந்த கேட்ட மகன்", என்று குறிப்பிடுகின்றன. வரலாற்று ஆய்வாளர்களும் தங்களது ஆய்வு நூல்களில் அவ்வாறே   குறிப்பிட்டு வருகின்றனர்!

       சோழப் பேரரசை தங்களது பாசிச ஆட்சிக்கு ஆதரவாக கொண்டுவரவும், பாசிசத்துக்கு எதிரான,வெகுஜன மக்களுக்கு ஆதரவாக இயங்கிவந்த  பிற சமயங்களை அழிக்கவும், வேரறுக்கவும் திறமையும் தகுதியும் அற்றவனும் பேராசைக் கொண்டவனுமான உத்தம சோழன் போன்ற ஒருவனை பிராமணர்கள்,மன்னனாக்கி உள்ளனர் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்!

        மேலும் கிடைக்கும் ஆவணங்களை ஆராயும் பொது, உத்தம சோழனுக்கு பல மனைவிமார்கள் இருந்துள்ளதாக தெரிய வருகிறது! அவனது மனைவியரில் ஐந்து பேரைப் பற்றி ஒரே கல்வெட்டில் குறிப்புகள் உள்ளது. ஓரட்டணம் , சொரப்பையார்,{கன்னடப் பெயர்} அக்கரமாதேவியார்,மூத்த நம்பிராட்டியார்,திரிபுவன மாதேவியார் ஆகியோர்கள்  உத்தம சோழனின் பல மனைவியரில் சிலராக அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டு  உள்ளனர் ! இவர்களும் உத்தம சோழன் வழியில்  தஞ்சைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பல தானங்களை வழங்கியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது!

       அதாவது உத்தம சோழன்  ஆட்சியை, பிராமணர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு,மது, மாது  மயக்கத்துடன், காமக் களியாட்டங்கள், கேளிக்கைகள் என்று  நாட்டை பற்றி கவலையின்றி,  உல்லாச வாழ்வு வாழ்ந்துள்ளான் என்று இதன் மூலம் விளங்குகிறது!
 
         தனது நாட்டில் உள்ள எல்லாதரப்பு மக்களுக்கும் நன்மைகளைச் செய்து வரும் அரசனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்ந்து வருவதும், அப்படி இல்லாமல் துன்பத்தை தரும், மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் மன்னனை வெறுத்து துற்றுவதும்   மக்களின் இயல்பாக இருப்பதை அறிவோம்!

      உத்தம சோழனை, அவனது ஆட்சியை, மக்கள் பலரும் வெறுத்து, தூற்றி வந்துள்ளனர்! மேலும்  தலைமறைவாக  வாழ்ந்துவந்த ராஜராஜனை  எப்படியாவது மன்னனாக்கவும் சோழ நாட்டு மக்கள்  விரும்பி உள்ளார்கள்!  உத்தம சோழனை எதிர்த்து  கிளர்ச்சிகள்,போராட்டங்கள் செய்தும் வந்துள்ளனர்! ஆனாலும் ராஜராஜ சோழன்  அவசரப்பட்டு , உத்தம சோழனை  அகற்றிவிட்டு, மக்கள் விரும்பியும் கூட, தான் அரசனாகாமல், காலந்தாழ்த்தி வந்துள்ளான் எனபது விளங்குகிறது!
 
      இதனை "நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்த  பெருவலியுடைய கலியினை அழித்து, அரசாட்சி ஏற்க வேண்டப்பட்ட போதும்,அரசியல் நடவைக்கைகளை நன்குணர்ந்தவன் ஆதலால், அருண்மொழி வர்மன்  அரசேர்ப்பதனை  மனதாலும் சிந்தியாதிருந்த பொது," என்று குறிக்கும் திருவாலன்காடுச் செப்பேடு மூலம் அறிகிறோம்!

      ராஜ ராஜனை அரசனனாக்க வேண்டி  மக்கள் நடத்திய போராட்டங்களில்  சோழகுடிகள்,  பாசிச ஆட்சியாளர்களால், பிராமண ஆதரவு, உத்தம சோழனது படையினரால் கொடூரமாக தண்டிக்கப் பட்டனர், கொல்லப் பட்டனர்!

      சோழப் பெரசில் இருந்த சோழக் குடிமக்களும், பாசிச பிராமணர்களின்  அடாத செயல்களைப் பொறுக்க இயலாத..  பிற இன,மதத்தைச் சேர்ந்தவர்களும் ,  ராஜராஜனுக்கு ஆதரவாகவும், உத்தம சோழனுக்கு எதிராக செயல் பட்டு வந்து உள்ளது   குறித்து,  தமிழக வரலாற்று  ஆய்வாளகள் யாரும் சரியான ஆய்வை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளது  வியப்பளிகிறது!
    
        ஆனால்,  பிராமண பாசிச, ஆதிக்கத்தை எதிர்த்த, மக்களின் உரிமைப்போராக, வரலாறு நெடுகிலும் இப்போர்  வலங்கை, இடங்கைப் போர்  என்ற  பெயரில்  தொடர்ந்து நடந்து வந்தது!இப்போரினால்  தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது!  பாசிச பிராமணீயத்தின் பக்கமே  ராஜராஜனுக்கு பின்வந்த  சோழ அரசர்களும் அடுத்துவந்த ஆட்சியாளர்களும்  இருந்ததால் பிராமணீயம் என்ற  பாசிசத்தின் கீழ் தமிழகம் சுமார் 900 -ஆண்டுகள் கட்டுண்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!  

     " வலங்கை இடங்கை போராட்டம் "என்று  வரலாற்றில் குறிப்பிடப்படும்  போராட்டம்  எனபது  ஆதித்த கரிகாலனின் படுகொலைக்கு பிறகே தொடங்கியுள்ளது! ஆனால் பலரும் இந்த போராட்டம் எப்போது தொடங்கியது எனபது தெரியவில்லை... என்று ,மேலோட்டமாக குறிக்கிறார்கள்! கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது சோழர்கள் என்ற நூலில், ஆதித்யன் காலத்தில் தொடங்கியதாக  ஒரு புராணம் உள்ளது என்று  குறிப்பிட்டு உள்ளார்! 

     வலங்கை இடங்கை போராட்டத்தை பற்றி விரிவாக பார்க்க வேண்டி உள்ளது! அதற்கு முன்  உத்தம சோழன் காலத்து,  "அறபலி ஈஸ்வரர்" கோயிலையும்,அது கட்டப் பட்டதன் நோக்கத்தையும் பார்த்து விடுவோம், இந்த கோயில்  நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது!
     
  


 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?