ஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையும்!


      பிராமணர்களின் மனுதருமம்,  சத்திரியர்களாக பிறந்தவர்கள்தான்  ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுவதை,பிராமணர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள்கூட  அரசனாக  வேண்டும் என்றால்  சத்திரியராகும் சாதி மாற்ற சடங்கினை பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பும் பொன்,பொருள் முதலியவற்றைக் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன் யாகம் செய்து பிறகுதான் அரசனாக முடியும்,நாட்டை அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்ய முடியும்  என்பதை முந்தைய எனது பதிவுகளில் இருந்து விளங்கிக் கொண்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!

     அப்படி செய்யாமல், பிராமணர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளாமல், வேறு சாதியைச் சேர்ந்தவர்களை,வேறு மதநெறிப்படி ஆட்சி செய்ய முயன்றவர்களை,"  பிராமணீயம்" என்ற பாசிச, ஆதிக்க வெறிகொண்ட  வேத பிராமணர்கள் ஆட்சியில் இருந்து அகற்ற,  பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகளைச் செய்தும்,சமயங்களில் அரசர்களை சதி செய்து கொன்றும் வந்துள்ளதற்கு முக்கிய உதாரணமாக   ஹர்ஷ வர்தனருக்கு நேர்ந்த கதியில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்!

     மனுதரும விதிப்படி, சத்திரிய சாதியில் பிறவாமல்,{ வியாபாரம் செய்யும்} வைசிய சாதியில் பிறந்தவர், பிரபாகர வர்த்தனன்!  மிகப் பெரிய வீரரான அவர், போர்புரிந்து,மகத நாட்டைக் கைப்பற்றி, அரசனாகி ஆட்சி செய்து வந்தார்! அவருக்கு ராஜியவர்த்தனன், ஹர்ஷ வர்த்தனன், ராஜீயஸ்திரி என்று மூன்று குழந்தைகள்! பிரபாகர வர்த்தனன், பவுத்த நெறிப்படி ஆட்சி செய்து வந்ததை பொறுக்காத,  பிராமணர்கள்,தங்களது  ஆதி பூர்விகமான ஈரானிய பகுதியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த, ஹூனர்களை தூண்டிவிட்டு,  மகத நாட்டின்மீது படையெடுக்க செய்தனர்! 

        ஹூனர்களை எதிர்த்து, பிரபாகர வர்த்தனின் மகனும் ஹர்ஷ வர்த்தனின் சகோதரனுமான, ராஜீய வர்த்தனன் வீரப் போர் புரிந்து,ஹூனர்களை விரட்டி அடித்தான்! மாவீரனான ராஜீய வர்த்தனன்  தனது தந்தைக்குப் பிறகு,மகத நாட்டின் மன்னனாக ஆட்சி செய்து வரும் நிலையில், தனது சகோதரி ராஜஸ்ரீயின் கணவனான, கிருஹ   வர்மனைக் கொலைசெய்த,மாளவ நாட்டின் மன்னன்மீது படையெடுத்துச் சென்று, அவனை வென்றுவிட்டு, திரும்பும்போது, மேற்கு வங்க,பார்ப்பன மன்னனாகிய, "சசாங்கன்"  என்ற சதிகாரனால் சதிசெயயப்பட்டு, கொலையானான்! 

       இந்த கொடிய அரசன், சசாங்கனால் ஆயிரக்கணக்கான  புத்த பிட்சுகள் கொலை செய்யப்பட்டும், யாகங்களுக்கு நரபலியாக்கப் பட்டும் அழித்து ஒழிக்கப் பட்டனர்!  தவிர, "புத்தர் தவமிருந்த போதிமரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தியவன் இவனே" என்றும் சரித்திரம்   கூறுகிறது!

      தனது அண்ணன்,ராஜீய வர்த்தனன், சசாங்கனால் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த ஹர்ஷ வர்த்தனன்,  பவுத்த நெறிப்படி மகத நாட்டின் அரசனாகி, தனது அண்ணனைக் கொலை செய்த, சசாங்கன் மீது படையெடுத்துச் சென்றான்! போரில் புறமுதுகு காட்டி, அவனை ஓடச் செய்து, வங்காளம் முழுவதையும் கைப்பற்றி, தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்! அதுமட்டுமின்றி, பிராமணர்களின் ஆதிக்கத்தை ஏற்று அரசாண்ட... கன்னோசி,மாளவம்,நேபாளம் ஆகிய நாடுகளையும் வென்று, தனது ராஜ்ஜியத்தை பேரரசாக விரிவு செய்து, பவுத்த நெறிப்படி சமதர்மம ஆட்சி செய்து வந்தான்! 

     ஹர்ஷ வர்த்தனன்,எல்லோருக்கும் சம உரிமை அளித்து, கல்வி கறபித்து வர ஏற்பாடுகள் செய்தான்! இவனது ஆட்சியில்தான், இப்போதைய,  பீகார் மாநிலத்தின்  " ராஜகிரி"  என்ற இடத்தில் " நாளந்தா பல்கலைக் கழகம்"  இயங்கி வந்தது!  இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டினரும்  வந்து  தங்கியிருந்து ,பயின்றனர்! ஆசியா கண்டம் முழுவதும் நாளந்தாப் பல்கலை கழகத்தின் புகழ் பரவி இருந்தது! இவரது ஆட்சி காலத்தில் இந்தியா வந்த சீன பயணி, யுவான் சுவாங் என்பவர் வந்து,இந்துஆ முழுவதும் சுற்றித் திரிந்து  பயணக் குறிப்புகளாக இந்திய வரலாற்றில் பலவற்றை பதிவு செய்தார்! காஞ்சியில்  பிறந்த பொதி தர்மரும், தின்னாகரும்,தருமபாலரும் இந்த பல்கலைக் கழகத்தில், பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர்!

     அனைவருக்கும் ஹர்ஷ வர்த்தனர் கல்விபெறச் செய்ததை, சூத்திரர்கள்  படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தைக் காச்சிஊற்றவும், படித்தால் நாக்கை அறுக்கவும் சொல்லும்  மனுதரும வாதிகள் ஆன,   பிராமணீயம் எப்படி ஏற்றுகொள்ள முடியும்? அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும்? தவிர, தங்களது  ஆலோசனை, உதவி எதுவும் வேண்டாமல், தன்னிச்சையாக பவுத்த நெறிப்படி அரசாலும்  சத்திரியனும் இல்லாத வைசிய சாதியைச் சேர்ந்த, ஹர்ஷ வர்தனனை, விட்டு வைக்க முடியுமா? கொன்றுவிட முடிவு செய்தார்கள்!  
  
    ஹர்ஷ   வர்த்தனர், உலகமெங்கும்  உள்ள அறிஞர்களை, பேராசிரியர்களை  தனது நாட்டிற்கு  ஐந்து  ஆண்டிற்கு  ஒருமுறை அழைத்து,  மாபெரும் மாநாட்டைக் கூட்டி, உலகிலுள்ள  அனைத்து மதத்தின் தத்துவங்களை  பற்றி   விவாதிக்க,அவைகளில் உள்ள நன்மைகள்,தீமைகள் குறித்து யாவரும் அறிந்து கொள்ள   ஏற்பாடு  செய்து வந்தார்!  {விவேகானந்தர்  இதுபோன்ற  நிகழ்ச்சியில்,  "சிகாகோவில்" கலந்து கொண்டுதான் இந்துமதத்தின் பெருமைகள் குறித்து  பேசினார்!} 

       அப்படியான  மாநாடு,ஹர்ஷ வர்தனரால், கன்னோசியில் கூட்டப் பட்டது! அந்த மாநாட்டுக்கு வரும்போது ஹர்ஷவர்த்தனரைக் கொலை செய்துவிட வேண்டும்  என்று பிராமணர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டு, மக்களோடு மக்களாக மாநாட்டிற்கு வந்தனர்!  மாநாட்டின் மிகப் பெரிய, பவுத்த கோபுரத்துடன் அமைக்கப் பட்டு இருந்த பந்தலுக்கு தீவைத்தனர்!  பதறி,துடித்து தீயை அணைக்க  ஹர்ஷ வர்த்தனர்  செய்த ஏற்பாடுகள்   வீணாகி,பந்தல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது! 

         மறுநாள், அங்குவந்து சேதத்தை,   ஒரு பழைய பவுத்த 
 ஸ்துபியின் மீது  ஏறி, பார்வையிட்டு விட்டு,கீழே இறங்கிய  ஹர்ஷ வர்தனரை,  "பைராஹி" என்ற பிராமணன்,மறைவிலிருந்து   திடீர் என்று  கத்தியுடன் பாய்ந்து, கொலை செய்ய முயன்றான்!  மாவீரரான  ஹர்ஷ வர்த்தனர், அந்த கொலைகாரனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டதுடன், அவனைப் பிடித்து தனது பாதுகாவலர்களிடமும்  ஒப்படைத்தார்!அவனிடம் நடத்திய விசாரணையில்,  அவனோடு,சேர்ந்து ஐநூறு பிராமணர்களும்  ஹர்ஷ   வர்த்தனரைக் கொல்ல வந்தது,தெரிந்தது!  

     ஹர்ஷ வர்த்தனரின் படைவீரர்கள்  ஐநூறு பிராமணர்களையும் கண்டுபிடித்து கைது செய்து, ஹர்ஷ வர்தனரிடம் கொண்டுபோய் நிறுத்தினர்!  அவர்களை  கடுமையாக விசாரணை செய்தபோது,மாநாட்டு பந்தலின் மாபெரும் கோபுரத்தின் மீது, எறியும் தீப்பந்தங்களை  அம்புகள் மூலம் பல இடங்களில் தாங்கள் மறைந்து இருந்து எரித்ததையும், தங்களது குற்றங்களையும் ஒப்புக்கொண்டு  தங்களை மன்னிக்கும்படி கோரினர்! 

       கொடிய குற்றம் செய்த சிலரை கடுமையான  தண்டனை தந்து,பிராமணர்கள் பலரையும் ஹர்ஷ வர்த்தனர்  மன்னித்து, தனது நாட்டை விட்டு வெளியேறி செல்லுமாறு  உத்தரவிட்டார்!  ஹர்ஷ வர்தனரால்  அப்போது மன்னிக்கப்பட்ட   சில பிராமணர்களால், ஹர்ஷ வர்த்தனர் பிறகு வஞ்சகமாக,  கொலை செய்யப்பட்டார்!   இதனை நான்..  பிராமணர்கள் புனைத்து கூறும் புராண கற்பனையாகவோ, ஆதாரம் இல்லாமலோ  கூறவில்லை!   "ஹிந்து ஏகாதிபத்தியத்தின் பயங்கரம்"- The Menace of Hindu Imperialisam} என்ற நூல் கூறுகிறது! "வேதமும் விஞ்ஞானமும் " என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ். டி. விவேகி என்பவரும் இந்நிகழ்ச்சி பற்றி  விவரித்துள்ளார்!

        இப்போது மேலும் ஒரு உண்மையை சொல்லுகிறேன்! ஹர்ஷ வர்தனரால்,  நாடு கடத்தப்பட்டு, விந்திய மலையைக் கடந்து தென்னிந்தியாவிற்குள்  வந்து பரவிய...  இந்த  பிராமணர்களை,  பாசிச வாதிகளை,  தமிழகத்திற்கு    அழைத்து வந்து, தஞ்சை,சிதம்பரம்,ஸ்ரீரங்கம், எண்ணாயிரம், பிரம்மபுரம், என்று குடியாற்றியவர்,வாழ்வளித்தவர்  யார் தெரியுமா? 

     "அரிந்தமன்" என்ற "அரிஞ்சய சோழ "அரசன்!   பிராமணர்கள் படுகொலை செய்த, ஆதித்ய கரிகால சோழனின் பாட்டனார்தான்  !  பாட்டனாரால் அழைத்துவரப் பெற்ற...    பிராமணர்களின்  பாசிச,ஆதிக்க, வெறியால், அவனது பேரன் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப் பட்டதுடன்,  அவனது பேரனும், பேத்தியும் ஆன குந்தவையும், ராஜராஜனும்  உயிருக்கு பயந்து,  எங்கெல்லாமோ   ஓடி, தப்பித்து மறைந்து, ,தலைமறைவு வாழ்கையை மேற்கொள்ளும்  அவலமும், பெரும் சோகமும் நேர்ந்திருக்கிறது! 

        பிராமணர்களின் பாசிச வெறிக்கு,  அதிகார ஆசைக்கு,தங்களது இன நலனுக்கு எதிராகவும்,  தடையாகவும்  வருகின்ற  எதற்கும்,  எந்தவித  மனிதப் பண்புகளுக்கும்  வேலை இல்லை! "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது", "செய்நன்றி மறத்தல் பாவம்," என்று கூறும் இவர்களின் உபதேசங்கள்,   இவர்களால் பின்பற்றப் படுவதற்கு சொல்லப் பட்டவைகள் இல்லை!, பிராமணர்களுக்கு, பிற சாதியினர் யாரும் அதுபோன்ற தீங்குகளை செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்! 

  பிராமணர்கள்  பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள், செய்ய தயங்காதவர்கள்  என்பதற்கு இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன! அவற்றில் சிலவற்றை அடுத்து பார்ப்போம்!
Comments

 1. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக...
  அன்பின் சகோதரர் ஓசூர் ராஜன்,
  ஹர்ஷ வர்த்தனால் விரட்டப்பட்டு "அரிஞ்சய சோழனால்" அபயமளிக்கப்பட்ட இவர்கள் தான் பின்னாளில் அந்த சோழ மன்னரின் வாரிசுகளை கொன்றதோடு மட்டுமின்றி சிலரை தலைமறைவு வாழ்க்கையையும் வாழ செய்தனர் என்பதை படிக்கும் போது உலகின் வேறொரு வரலாறும் என் கண்முன்னே வந்து போகின்றது ராஜன்.

  உலகில் கிறிஸ்தவ ஆட்சியாளர்களால் படுகொலைகளுக்கும் அதீத இன்னல்களுக்கும் உள்ளான யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்த இடம் இஸ்லாமிய உதுமானிய பேரரசுக்கு உட்பட்ட நாடுகளில் தான். பாலஸ்தீனத்தில் எத்தகைய இன்னல்களுக்கும் ஆளாகாமல் இருந்தனர் யூதர்கள். ஆனால் பின்னாளில் அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனத்தையே சதியால் தம் வசப்படுத்தி இன்றுவரை பாலஸ்தீனியர்களை படுகொலைகள் செய்தும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியும், கொடுமைப்படுத்தி வருகின்றனர் யூதர்கள். இன்று இஸ்ரேலை , யூதர்களை பிராமணர்கள் ஆதரிப்பதன் காரணிகளில் இத்தகைய உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் குண நலனும் ஒன்றாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. வரலாற்றை அயர்ச்சி தராமல் அழகியலோடு எடுத்து சொல்லுகின்றீர்கள். படிக்கும் போது அலுப்பு தட்டவில்லை. வெறுமனே வரலாற்று குறிப்புகள் என்றளவில் இல்லாமல் தரமான எழுத்துக்களோடு எங்களையும் இந்த வரலாற்று பயணத்தில் அழைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். எதற்காக சோழ வரலாற்றில் ஹர்ஷ வர்த்தனை இழுத்து வருகிறார் என்று நேற்று படிக்கும் போது யோசனையில் இருந்தேன். ஒருவேளை பிராமண எதிர்ப்பு என்பதற்காக கொண்டு வருகிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால் இன்று விடை கிடைத்து விட்டது.

  ReplyDelete
 3. மிக அருமையான ஆக்கம். வரலாற்றில் ஹர்சரை மேலோட்டமாகத்தான் படித்துள்ளேன். இவ்வளவு மறைக்கப்பட்ட உண்மைகளை இப்பொழுதுதான் படிக்கிறேன்.

  ஆதார நூல்களையும் கல்வெட்டுகளையும் மறக்காமல் தந்தால் பதிவு இன்னும் சிறப்புறும்.

  ReplyDelete
  Replies
  1. "ஹிந்து ஏகாதிபத்தியத்தின் பயங்கரம்"- The Menace of Hindu Imperialisam} என்ற நூல் கூறுகிறது! "வேதமும் விஞ்ஞானமும் " என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ். டி. விவேகி என்பவரும் இந்நிகழ்ச்சி பற்றி விவரித்துள்ளார்!ஆதாரம்!

   Delete
 4. Hello Hosur Rajan, good posts indeed...great work. thanks

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?