வந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்!

       சோழ நாட்டின் முக்கிய பகுதி எனபது  தஞ்சையும் திருச்சியும் ஆகும்! தஞ்சை பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்ததை அறிந்து இருப்பீர்கள் ! தஞ்சையைப் போலவே  திரட்சி உறையூரும்  ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கி வந்தது. உறையூர் சோழர்கள்  என்று வரலாறு சில சோழ மன்னர்களைக் குறிப்பிடுகிறது!


        இப்படி சோழர்களுக்கு   முக்கியத்துவம் வாய்ந்த இரு நகரங்களான  திருச்சியில்  இருந்து  தஞ்சை செல்லும்  வழியில் துவாக்குடி   என்ற ஊருக்கு வடக்கே சுமார் மூன்று கி.மி.தொலைவில் உள்ள கோயிலின் பெயர், "திருநெடுங்களநாதர் கோயில்" என்பதாகும்.

       திருநெடுங்களம் என்ற இந்த ஊரில் உள்ள இக்கோயிலின் தல வரலாறு,   "அன்னை பார்வதி தேவி இங்கேயே தவமிருந்து இறைவனின் கைத்தலம் பற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. அகத்தியர் இத்தலத்தில் தவமிருந்து இறைவன் அருள் பெற்றதாகவும் வந்திய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் அருள் பாலிததாகவும்   புராண வரலாறுகள் கூறுகின்றன" என்கிறது! 
(ஆதாரம்:தமிழ்நாட்டு சிவாலயங்கள் ,தொகுதி-2 ,பக்கம் 390, ஆசிரியர் மா.சந்திர மூர்த்தி.மணிவாசகர் பதிப்பக வெளியீடு-2004 }

       பிராமணீயத்தின் தந்திர யுக்திகளில் மற்றொன்று என்னவென்றால், உண்மையான வரலாறை திரிக்க  அதனை புராணம் என்று சொல்வதும், உண்மையற்ற, கற்பனையான புராண கதைகளை  உண்மையாக நடந்த வரலாறு போல காட்டுவதும் ஆகும்!

        ஒரு கோவிலை, அல்லது வேறு ஒரு கட்டிடத்தை எடுத்துகொண்டால், அந்த கோயில் எப்போது கட்டப்பட்டது ?, யாரால் கட்டப்பட்டது? எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டது?, பயன்படுத்தப் பட்டது , போன்ற அடிப்படையான தகவல்களும் , எவ்வளவு மதிப்பில் ,எவ்வளவு கால இடைவெளியில் அது கட்டி முடிக்கப்பட்டது , எவ்வளவு பேர்கள் பணியாற்றினார்? கட்டுமானத்தில் பயன்படுத்தப் பட்ட  பொருட்கள் என்னென்ன? கோயிலாக இருந்தால் அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்ட கடவுள் யார்? கடவுளுக்கு அந்த பெயரை வைக்க காரணம் என்ன? போன்ற கூடுதல் தகவல்களையும்  கோயில் தல வரலாறு சொல்லவேண்டும்! அப்படி சொன்னால் தான்  அது உண்மையான வரலாறு என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உறுதிப்படும்!

     ஆனால், பிராமணீயத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்த கோயில்களில் சொல்லப்படும்  தலவரலாறு எனபது,  மேலே சொன்ன  எந்தவித  விவரங்களையும் நமக்கு சொல்லுவதில்லை! காரணம் என்னவன்றால்,நமக்கு  சரியான விவரங்களை சொன்னால், அந்த கோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும்  அங்கு நடைபெற்று வந்த அரசு அலுவல் பணிகளும், இதர காரியங்களும்  பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தெரிந்துவிடும்  வாய்ப்பு இருப்பதாலும்  அப்படி நமக்கு தெரிய வந்துவிடுமாயின்   அது  தங்களது ஆதிக்கத்துக்குஆபத்தை எங்கே ஏற்படுத்திவிடுமோ? என்றஎச்சரிக்கை உணர்வும் காரணமாகும்!

       எனவே, ஒரு கோயிலின் உண்மையான வரலாற்றை பிறர் அறிந்து கொள்ளாமல் மறைக்க வேண்டுமானால்  உண்மை வரலாற்றோடு சேர்த்து கற்பனையான புராண வரலாறுகளையும் ஒன்றுக்கு இரண்டாக  சொல்லி வைப்பது!  மக்கள் எதனை  நம்புகிறார்களோ,  அதுவே உண்மை என்று நினைத்துக் கொள்ளட்டும்  என்பதும், கூடவே  உண்மையான வரலாற்றை  கற்பனையா? நிஜமா? என்று குழம்பிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகதான்!

     பிராமணீயம் இத்தகைய தந்திர, உபாயங்களை, சூழ்ச்சியை  தமிழகத்தில் உள்ள,முக்கியமான, பெரும்பாலான கோயில்களில் செய்துள்ளதை...  ஒவ்வொரு கோயிலின்,  தல வரலாறாக  இப்போது அது சொல்லிவருவதைப் பார்த்து, நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்!

      எனக்கு தெரிந்து கோயில் தலவரலாறு என்று  புராணக் கற்பனைக் கதைகளை சொல்லாத, இதுவரை சொல்ல முடியாத கோயில் ஒன்று இருக்கிறதென்றால் , அது தஞ்சையில் ராஜராஜ சோழனால்   கட்டப்பட்டு ,"ராஜராஜெச்வரம் என்று பெயரிடப்பட்டு, இப்போது "பெரிய உடையார் கோயில்" என்ற "பிரகதீஸ்வரர் கோயில்"  என்றும் அழைக்கப்பட்டு வரும் கோயில்தான்!

     இக்கோயிலில் பல  கல்வெட்டுகள், பல்வேறு வரலாற்று சான்றுகள், உள்ளதால் அவைகளை அழிப்பதும், திரிப்பதும்  கடினம் என்பதால், புதிதாக," புராண வரலாறு" என்று  கற்பனைக் கதைகளை இன்றுவரை  செய்யாமல்  இருந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது!

     ஆயினும் தஞ்சைக் கோயிலை, பிராமணர்கள்   கைப்பற்றி, தங்களது ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் முன்பு இருந்த நிலையையும், கொண்டுவந்த பின்பு  இப்போது உள்ள நிலையையும்  குறித்து தனியாக  பதிவு  செய்யவேண்டியுள்ளது! அப்போது அதுகுறித்து பார்ப்போம்!

      வந்தியதேவனுக்கு இறைவன் அருள் பாலித்த விசயத்தை பார்க்கலாம்!

    இந்துமதத்தில் சைவ பிரிவினராக இருந்து இறந்தவர்களை, சிவலோகப் பதவி அடைந்தார், இறைவனடி சேர்ந்தார் என்றும்  வைணவப் பிரிவினரர் இறந்துவிட்டால்,வைகுண்டப் பதவி அடைந்தார் என்றும் சொல்வது வழக்கமாக உள்ளது!  யிரை நம்பிக்கை இல்லாதவர்கள் இறந்தால்கூட    இயற்கை எய்தினார்! என்று சொல்லுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.!

   பிராமணர்களின் பாசிச ஆதிக்கத்துக்கு எதிராக செயபடுபவர்கள், தடையாக இருப்பவர்கள், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சி செய்கிறவர்கள்  என்று  யாராக இருந்தாலும் அவர்களை சூழ்ச்சி செய்து  கொன்றுவருவதை  பிராமணீயம் என்ற பாசிசம் தொடர்ந்து செய்து வருவதை வரலாறு குறித்து வைத்துள்ளது! அப்படி கொலை செய்தவர்களை கூட  இறைவனடி சேர்ந்தார், இறைவனோடு கலந்தார், இறைவன் அவருக்கு அருள் பாலித்தார் என்று கூறி வருகிறது!

        இவ்வாறு கூறும்போது,இறந்தவரை நாங்கள் எங்களது ஆதிக்கம்,மற்றும் இன மேன்மைக்காக கொள்ளவில்லை!  என்று தங்களை  கொலை பழியில் இருந்து விடுவித்து கொள்வதுடன், மேற்கண்ட  செயலுக்கு காரணம் நாங்கள் இல்லை,   இறைவனேதான்! என்று கூறி, தங்களது செயலுக்கு  இறவனை  காரணமாக்கி, திசை திருப்பி விடுவதையும்  தந்திரமாக செய்து வருகிறது! 

    இதற்கு, பல்வேறு உதாரணங்கள் உள்ளன! நந்தனாரை நெருப்பிலிட்டு கொன்றுவிட்டு, அறுபது மூன்று நாயன்மார்களில்  ஒருவராக  காட்டுவதை போல, சுந்தர சோழனை  சித்திரவதை செய்து  கொன்றுவிட்டு, பொன்மாளிகை துஞ்சிய தேவராக  சொல்லுவதைப் போல,பவுத்த நெறிப்படி  அரசாண்ட ஹர்ஷ  வர்தனரைக் கொன்றதைப் போல,    குந்தவையின் கணவனான,வந்திய தேவனை, "திருநெடுங்களம்"  என்ற  இடத்தில  கொன்றுவிட்டு , அவருக்கு  அந்த ஊர் இறைவன்  அருள் பாலித்ததாக  புராணவரலாறு  எழுதி வைத்துள்ளனர்!  
   
       புராணத்தில்  இறைவன் என்று சொன்னால், அது பிராமணீயத்தில்,  அதாவது பாசிச கண்ணோட்டத்தில், "பிராமணர்கள்"  என்றுதான் பொருளாகும்! வேறு பொருளில்லை! 

        மேலே நான் சொன்னதைப் பார்த்து,நான் சொல்லியுள்ளதை  இட்டுக் கட்டியோ, கற்பனையாகவோ கூறியதாக  நினைத்து,சிலர் வருந்தக் கூடும், ஏன்? கோபப்படக் கூடும். அப்படி எண்ணுபவர்கள்,  கீழே உள்ளதைப் படித்துவிட்டு,  வருந்துவதே  நியாயமாகும்!

   வசிஷ்டர்,ராமனுக்கு கூறும் அறிவுரையைப் பாருங்கள்:

      "திருமால்,சிவன்,நான்முகன்,ஐம்பூதம்,வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும்,பிராமணர்கள் பெருமையுடையவர்கள்! ஆதலால்,அவர்களை வழிபடுவாயாக!"  என்று ராமனுக்கு வசிஷ்டர் கூறுகிறார்!  இவ்வாறு ஏன்? வசிஷ்டர் கூறுகிறார் என்றால்'  "வாய்மை,பஞ்ச  பூதங்கள் தெய்வத்துக்கு கட்டுபட்டவைகள்!தெய்வங்கள் வேத மந்திரத்துக்கு கட்டுபட்டவைகள்! வேத மந்திரங்கள்  பிராமணனுக்கு கட்டுப் பட்டவை! ஆகவே பிராமணனே தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் ! " என்று  மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதை உணர்ந்து, பிராமணர்களை வழிபடுமாறு வசிஷ்டர் கூறியுள்ளார்!

     "  தெய்வம் மனுஷ ரூபனாம்"என்று பிராமணர்கள் கூறுவது, மனிதர்களாகிய எங்கள் ரூபத்தில்தான், கடவுளை நீங்கள் தரிசிக்க முடியும், என்ற ஆதிக்க, மேலாண்மை உணர்வுதான்!

    பிராமணர்கள் கொலை போன்ற கொடும்  செயலைச் செய்வார்களா? 
வீண் பழி சுமத்துகிறீர்கள் என்று கருதுவதாக தெரிகிறது, பாசிசம் கொலை மட்டுமுள்ள, களவு, சூது, விபச்சாரம்,பிறன் மனை விளைதல் போன்ற பஞ்சமா பாதகங்களையும் செய்யும்! செய்து வந்தது! செய்து வருகிறது! இனியும் செய்துவரும்! என்பதை புரிந்து கொள்ளவேண்டும்!  


       "அரசனுடைய ஒற்றர்கள் எதிரியுடன் பழகி,யாகம் செய்யும்படி அவனைத் தூண்ட வேண்டும்! யாகம் செய்வதில் அவனுக்கு நம்பிக்கை பிறக்கச் செய்யவேண்டும்!அவன் யாகம் செய்துகொண்டு இருக்கையில் அவனைக் கொன்றுவிட வேண்டும்" - அர்த்த சாஸ்திரம் ,அத்தியாயம் 13 : சுலோகம் 2 .

        அர்த்த சாஸ்திரம் பிராமணர்கள் தங்கள் இன மேன்மைக்காக என்னென்ன செய்யவேண்டும், எவைஎவைகளைச் செய்யக்கூடாது என்று 
கூறும் நூல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

     வந்தியத் தேவன், தஞ்சைக்கு போகும்போதோ,தஞ்சையில் இருந்து தப்பி திருச்சிக்கு வரும் வழியிலோ, ஆதித்ய கரிகாலனது படுகொலைக்கு பின் ,உத்தம சோழன் ஆதரவு படைகளோடு  நடந்த போரில், அல்லது தாக்குதலில்    திரு நெடுங்களத்தில் கொல்லப்பட்டு,  இறந்துள்ளான்! எனபது விளங்குகிறது!  

       நெடுங்களத்தில்தான் இறந்துள்ளான் என்பதை  அந்த கோயிலில் உள்ள பிற சான்றுகளும்,கல்வெட்டுகளும் உறுதிப் படுத்துகின்றன.!

       பிராமணர்களால் கொல்லப்பட்ட  ஹர்ஷ வர்தனரைப் பற்றியும், பிராமணர்கள் மீது அரசர்களுக்கு இருந்த  அச்ச உணர்வையும் பார்த்துவிட்டு, பிறகு குந்தவை,ராஜராஜனின் நிலை என்ன என்பதை பற்றி பார்ப்போம்!Comments

  1. ஒரு கோவிலை, அல்லது வேறு ஒரு கட்டிடத்தை எடுத்துகொண்டால், அந்த கோயில் எப்போது கட்டப்பட்டது ?, யாரால் கட்டப்பட்டது? எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டது?, பயன்படுத்தப் பட்டது , போன்ற அடிப்படையான தகவல்களும் , எவ்வளவு மதிப்பில் ,எவ்வளவு கால இடைவெளியில் அது கட்டி முடிக்கப்பட்டது , எவ்வளவு பேர்கள் பணியாற்றினார்? கட்டுமானத்தில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் என்னென்ன? என்பதை அறியும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  2. ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்ட பின்பு வந்தியதேவன் இறந்தான் என்றால், வந்தியதேவனின் பெயர் ராஜேந்திர சோழன் கால இலங்கை படையேடுபிலும், கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய காலத்திலும் சொல்லபடுவது ஏன்? (வேங்கையின் மைந்தன்)

    ReplyDelete
  3. தவறான தகவல் , முழுவதுமாக ஆய்வு செய்து விட்டோம். உங்களால் முடிந்தால் அதற்கான கல்வெட்டை காண்பித்து நிரூபியுங்கள்

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?