வந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு!

        அதிகார ஆசை எனபது  அதீத வெறியாகும்போது, நியாயங்கள், தர்மங்கள், ஒழுங்குமுறைகள்,கட்டுப்பாடு போன்ற மனித தர்மங்களும், நல்ல குணங்களும் மிதிக்கப்படுவது,மீறப்படுவது எனபது எப்போதும் நடந்துவரும் செயலாக இருக்கிறது! பாசிசம் என்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரக்கமனம் கொண்ட  பார்ப்பனீயம், இத்தகைய செயல்களை இயல்பாக தொடர்ந்து செய்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணக் கிடைகிறது!

      எனது முந்தையப் பதிவுகளில், ஆதித்ய கரிகாலன் படுகொலை பற்றியும்,அவனைப் படுகொலை செய்தவர்கள்,சோழ அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த, பார்ப்பன அதிகாரிகள். அவர்கள்  தங்களது இன நலனுக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக   எத்தகைய கொடும் செயலையும் செய்பவர்கள்!, செய்யத் தயங்காதவர்கள் !!

      தங்கள் மேன்மைக்கு,ஆட்சி அதிகாரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியே,  ஆதித்ய கரிகாலனைக் கொன்றதோடு அல்லாமல்  அவனது பெற்றோர்களான  சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆகியோர் சிறைபட்டு,   சித்திரவதை பட்டு இறக்க நேரிட்டது! உத்தம சோழன் அரசனாக நேரிட்டது!  ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள்,  குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையும் கொல்லாமல் விட்டு இருப்பார்களா? அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தார்களா? என்று கேட்டு, அவர்கள் தப்பித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர் என்பதையும்  அவர்கள் தப்பிப் பிழைத்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு ,சோழ நாட்டு குடிமக்கள், ஆதரவு படையினர், மாற்று சமூகத்தினர்  ஆகியோர்கள்  பல்வேறு தருணங்களில் பலவிதமான உதவிகளைச் செய்து, உத்தம சோழன்  ஆட்சியில் காப்பாற்றி வந்துள்ளனர்!

      ராஜராஜன் தப்பிப் போக,அல்லது தப்பி வாழ்  உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தரின்  மனைவியுமான  செம்பியன் மாதேவியார்  காரணமாக இருந்துள்ளார் என்றும் அதனாலேயே தனது ஆட்சிக் காலத்தில்  ராஜராஜன்  உத்தமனின் தாயாரை  விரோதமாக எண்ணாமல், அவர்மீது அன்பும், மதிப்பும் வைத்து  பாதுகாத்து வந்துள்ளான் என்றும் பலரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது முந்தைய பதிவுகள் மூலம் விளக்கி உள்ளேன்!

      குந்தவைக்குத்தான் திருமணம் ஆனதாக சொல்லுகிறார்களே!, அவள் வாழ்க்கைப்பட்ட, வேங்கி  நாட்டில்  அவளது கணவனான வல்லவரையன் வந்தியத் தேவன் பாதுகாப்பில்  அவளும் அவளது தம்பியான ராஜராஜனும் பாதுகாப்பாக வசித்து இருக்கலாம் ! என்று நினைக்கவும், சந்தேகம் கொள்ளவும் எல்லோருக்கும் தோன்றும் !  அந்த சந்தேகத்தை   முந்தைய பதிவு போக்கியிருக்கும் என்று நம்புகிறேன்!

   ஆதித்ய கரிகால சோழன்,தனது தந்தையும் அரசனுமான சுந்தரச் சோழன் காலத்தில்,    காஞ்சீபுரம் உள்ளடங்கிய தொண்டை மண்டலத்தை  உள்ளடங்கிய  சோழ அரசை நிர்வகித்து வந்தது போலவே , சுந்தர சோழனின் மகள் குந்தவையை  மனமுடிதிருந்த வல்லவரையன் வந்தியத் தேவன்   சித்தூர்,வேலூர்,கோலார்,ஹோசூர்,பெங்களூர்,ஆகிய பகுதிகளை  சோழப் பேரரசு சார்பில் நிர்வகித்து வந்தான்!ஆதித்ய கரிகாலன்  கலந்துகொண்ட சேவூர் போரில்  இவனும் தனது மைத்துனனுக்கு உதவியாக  கலந்து கொண்டு போரிட்டு உள்ளான்!

        மைத்துனன் ஆதிய கரிகாலன் படுகொலை செய்யப் பட்டதை கேள்விப் பட்டு, அல்லது நடந்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, ஒன்றும் செய்யாமல் சும்மாவா இருந்திருப்பான்!?  தனது மனைவிகுந்தவைக்கு, மற்றொரு மைத்துனன் ராஜராஜனுக்கு என்னவானதோ? தனது மாமனார் சுந்தர சோழன்,மாமியார் வானவன் மாதேவி  ஆகியோரின் நிலை என்னவோ? அவர்களுக்கு  ஆறுதல் சொல்லவேண்டும், அரசியலில் அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டும்! ஆதியனின் படுகொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்   என்று நினைத்து இருப்பானா, இல்லையா?  அதனால் பதறி,துடித்து  தஞ்சைக்கு வந்திருப்பானா,இல்லையா? நிச்சயம் வந்திருப்பான் !

   ஆனால் பாருங்கள், அதித்ய கரிகாலனின் படுகொலைக்கு  அப்புறம் வல்லவரையன் வந்தியத் தேவனைப் பற்றிய எந்த வித குறிப்புகளும், ஆதாரங்களும், செய்தியும்  வரலாற்றில் இல்லவே இல்லை! அவைகள் பற்றி எந்த வித ஆய்வும் யாரும் செய்ததாகவும் தெரியவில்லை! அதுமட்டுமின்றி, வல்லவரையன் வந்தியத்தேவனைப் பற்றி, எந்த ஆதாரங்களும் வரலாற்றில்   நேரடியாக குறிப்பதே இல்லை! வந்திய தேவனின் வரலாறு, குறிப்பாக ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்புள்ள வரலாறு  சோழ வரலாற்றில் மறைக்கப் பட்ட வரலாறாகவே  உள்ளது! வந்தியத் தேவன்  வரலாம் அவன் குறித்த விவரங்களும் இன்றுவரை கிடைகாமல் உள்ளதற்கு காரணம், அல்லது கிடைத்து இருந்தும் வெளிவராமல்  மறைக்கப் பட்டு உள்ளதற்கு காரணமாக, பின்புலத்தில் உள்ளது 'பிராமணீயம்' என்ற  பாசிச கண்ணோட்டமே என்பதை அறிய முடிகிறது! 

    வந்திய தேவனை  பற்றி  நாம் எப்படி தெரிந்துகொள்கிறோம், அல்லது எப்படிவரலாறு  குறிக்கிறது என்று பார்த்தால், குந்தவை நாச்சியாரை குறிக்கும் போது மட்டுமே,"வல்லவரையன் வந்தியத் தேவர்  மகாதேவர்  மாதேவியார்  குந்தவை நாச்சியார் " என்று குறிப்பதில் இருந்துதான்  அப்படி ஒருவன் இருந்தான் என்பதையே நாம்  அறிந்து கொள்ள முடிகிறது!

   {அமரர் கல்கி அவர்கள், தனது பொன்னியின் செல்வன் நாவலை  வந்தியத் தேவனில் ஆரம்பித்து, முடியும் வரை  அவனை ஒரு காதல் கதாநாயகனாக்கி இருப்பார்!}

       பாசிசம் என்ற பிராமணீயம், காலம்காலமாக  கடைப்பிடித்துவரும் பல்வேறு யுக்திகள்,தந்திரங்களில்  ஒன்று..., "இருப்பதை இல்லை என்று சொல்வதும் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதும் ஆகும்!"  இந்த பார்ப்பனீய தந்திரத்துக்கு பெயர்தான், "மாயாவாதம்" என்பதாகும்!

     கல்கியும் வந்திய தேவன் விவகாரத்தில் இந்த பிராமணீய தருமத்தையே கடைபிடித்து உள்ளார் எனபது தெரிகிறது!

      போகட்டும்! வந்தியத் தேவனின் கதி என்ன ஆனது? அவன் எங்கே போனான்? ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்பு , இறுதி சடங்கில் கலந்து கொண்டானா? மாமனார் மாமியாரை  சந்தித்தானா?  ஆறுதல் சொன்னானா? குந்தவையை சந்தித்தானா ?  சோழ அரசில் படுகொலைக்குப் பின்பு,  அவன் நடவடிக்கைகள் என்ன? எனபது குறித்து எந்த ஒரு விவரமும் இல்லை! 

      அவனைப் பற்றி  சோழநாட்டு கோயில் ஒன்றின்  "கோயில் தல வரலாறு"  ஒரே ஒரு குறிப்பை மட்டும் தருகிறது!  அந்த கோயில்  திருச்சி-  தஞ்சை  இடையில் உள்ளது!   வந்திய சோழன் என்ற அரசனுக்கு,"இறைவன் அருள் பாலித்த  கோயில் இது"  என்று கூறுகிறது!

      வந்தியத் தேவ சோழனுக்கு  இறைவன் எப்படி அருள் பாலித்து இருப்பார் என்றும், அந்த கோவிலைப் பற்றியும்  அடுத்த பதிவில் பார்க்கலாம்!
Comments

 1. வித்தியாசமான பதிவு..

  பதிவின் செய்திகளுக்கான தரவுகளை முன் வையுங்கள்..அப்போது பதிவின் சாரம் கூடும்.

  நன்றி.

  ReplyDelete
 2. Vanthiyatheven ruled vanakapadi nadu. It is around thiruvannamalai and chengi. thiruvannamalai temple has this information.

  ReplyDelete
 3. நண்பரே ஆதாரங்களையும் முன் வையுங்கள் .

  ReplyDelete
 4. வேங்கி மன்னனுக்கு மணமுடிக்கப் பட்ட குந்தவை ராசேந்திரனின் மகள்..

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?