குந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திருமணமா?

     குந்தவை நாச்சியாருக்கு திருமணம்  ஆனதாக கல்வெட்டுகள் குறிப்பதில் இருந்து அறிய வருகிறது!

         குந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் அவரை,  "உடையார் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் "  என்றும் "ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார் " என்றும் வல்லவரையர் வந்திய தேவர் மாதேவர் மாதேவியார் என்றும் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில்  பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு இப்போது போல வயதோ,சட்டமோ ஏற்படுத்த வில்லை! ஆதலால், பெண்களுக்கு அவர்கள் வயதுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே,அல்லது வயதுக்கு வரும் பருவத்திலே கூட திருமணம் நடந்து வந்தது! உயர்ந்த குடும்பத்து  பெண்களுக்கும் இது பொருந்தும்! அதுவும் குந்தவை போன்ற அரச குடும்பத்து பெண்களுக்கு திருமணம் எனபது, அவர்கள் விருப்பத்தின் பேரில் நடப்பது அரிதாகும்!

       குந்தவை வந்தியத் தேவனை காதலித்ததாக எண்ணும்படி,  அமரர் கல்கி அவர்கள் தனது" பொன்னியின் செல்வன்" நாவலில் சித்தரித்து உள்ளது தவறாகும்!

        குந்தவை   காதல் திருமணம் செய்து கொண்டிருப்பின் அல்லது தனது கணவனை  சுயமாக தேர்ந்தெடுத்ததாக இருப்பின் நிச்சயம் அது குறித்து  கல்வெட்டுகளில், செப்பேடுகளில், அல்லது வரலாற்றில் வேறு குறிப்புகள் தெரிவித்து இருக்கும்!

         சுயவரம் போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால் பல நாட்டு அரசர்கள் கலந்து கொண்டது, அவர்களுக்கு இடையே நடந்த வீர விளையாட்டு போட்டிகள் குறித்து, சுயவரம் எங்கு நடந்தது, அந்தணர்கள், சோழ குடிகளுக்கு வழங்கப்பட்ட தானங்கள், கோயில்கள், பவுத்த விகாரங்கள், சமணபள்ளிகள், மடங்கள் ஆகியவற்றிற்கு  வழங்கப் பட்ட  அறக்கொடைகள்  என்றோ, பல குறிப்புகள் மூலம்  அவைகள் வெளிப்பட்டு  இருக்கும்! அப்படி இதுவரை  எந்த குறிப்புகளும் கிடைகாமல் உள்ளதைப் பார்க்கும் போது,குந்தவையின் திருமணம்  காதல் திருமணமோ, சுயவர திருமணமோ இல்லை என்பதை அறிய முடியும் !

         குந்தவை திருமணம் செய்து கொண்டதாக அறியப் படும்  வந்திய தேவன்  என்பவனை, வல்லவரையன்  வந்திய தேவன் என்றும் வேங்கி நாட்டை சேர்ந்தவன்  என்றும் வரலாறு குறிப்பிடுகிறது . ஆகவே, அவன் இன்றைய வேலூர் மாவட்டத்தில்  உள்ள திருவலம் என்ற பகுதியை சேர்ந்தவனாகவும்,அன்றைய வேங்கி நாட்டை ஆண்ட  அரசகுமாரன் என்றும் அறிய வருகிறது!

      இந்த பகுதியிலேயே,  ராஜரானின்  பாட்டனாரான  அரிஞ்சய சோழன்  இறந்த இடமான மேல்பாடியும், அவரது நினைவாக ராஜராஜ சோழன் கட்டிய, "அரிஞ்சையேசுவரம்" என்ற "பள்ளிப்படை கோயில்" என்று அழைக்கப்படும் நினைவு சமாதி கோயில் உள்ளது! 

   பேரரசு விஸ்தரிப்பு முயற்சியில்  சோழர்கள், இப்பகுதியில் படைகளுடன் தங்கி போரிட்டு வந்தார்கள்! மேலும் தமிழகத்தின் மீது படையெடுத்து வரும் கீழை சாளுக்கியர்கள் உள்ளிட்ட வடநாட்டினரை தடுத்தும், தாக்கியும் வந்தார்கள்! 
 
        இத்தகைய சூழ்நிலையில் இருந்த சோழர்கள்,தங்களது திருமண உறவு மூலமும்  அரசு அதிகாரத்தையும் ஆளுமையையும் அதிகரித்து கொண்டு வந்தனர்! அப்படி தங்களது அரசு அதிகாரத்தை  தொடர்ந்து நீடித்து, படைபலம், ஆகியவைகளை அதிகரிக்க செய்த முயற்சியாகவே  குந்தவை நாட்சியாருக்கும் வேங்கி நாட்டு இளவரசனான, வந்திய தேவனுக்கும் திருமணம் நடந்துள்ளது விளங்குகிறது! 

       ராஜதந்திர முறையான,   இது போன்ற திருமண உறவை  சுந்தரச் சோழன் விரும்பியே குந்தவையை வல்லவரையன் வந்திய தேவனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான்!  மேலும் அவனது ஆட்சிப் பகுதியுடன் சோழர் ஆட்சிப் பகுதியையும் சேர்த்து அவனது பாதுகாப்பில் இருந்துவருமாறு  செய்துள்ளான்!
  
       இன்றைய காலத்தில் வசதியாகனவர்களும் செல்லமாக தங்களது  மகளை வளர்த்து வரும் சிலர்  வீட்டோடு மாப்பிள்ளை பார்ப்பது போல, குந்தவையை  திருமணம் செய்து கொடுத்து உள்ளார்கள்!{ குந்தவை என்பதற்கு பொருளே, திருமணம் ஆகியும் புகுந்த வீட்டுக்கு போகாமல்  பிறந்த வேட்டிலேயே இருந்த பெண் என்பதுதான்!} குந்தவையின்  உண்மையான பெயர், "மந்தாகினி" என்பதாகும்!

       ராஜராஜ சோழனும்  தனது மூத்த சகோதிரியான குந்தவையின் மீது உள்ள மரியாதை காரணமாக,  தனது மகளுக்கு, "குந்தவை" என்று பெயரிட்டுஇருந்தான்! தனது மகளை  வேங்கிநாட்டு  இளவல், விமலாத்திதனுக்கு  தனது ஆட்சி காலத்தில் திருமணம் செய்து, கொடுத்திருந்தான்!  {ராஜராஜ சோழன் திரைபடத்தில் காட்டபடுபவர் இந்த குந்தவையே!}

       திருமணம் நடந்தாலும் அவருக்கு குழந்தைகள் ஏதும் இருப்பதாக எந்த சான்றுகளும் குறிப்புகளும் கல்வெட்டுகளும் குறிப்பிடுவதில்லை! எனவே, குந்தவையின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அதிககாலத்துக்கு  நீடிக்கவில்லை, எனபது தெரிகிறது! அதற்கு காரணம்  குந்தவையின் கணவன்  வல்லவரையன் வந்தியத்தேவன்  இளமையிலேயே  இறந்துவிட்டான் என்பதே ஆகும்!
   
     வல்லவரையன் எப்போது? எங்கே? எப்படி இறந்தான்? அவனது இறப்புக்கு காரணம் என்ன? அல்லது யார் காரணம்? என்பதை அடுத்து பார்க்கலாம் !
 
      வரலாறை ஓரளவாது புரிந்துகொள்ளாமல், நான் சொல்லவரும் பாசிசத்தைப் புரிந்துகொள்ள முடியாது!  என்பதற்காவே,  இத்தகைய பதிவுகளை செய்யவேண்டி உள்ளது!
      

Comments

 1. Please write a lot about this.PLease give your mail i.d. and enable the option of getting your posts via mail. I am interested in History.So i want to read all your posts. So give the facility of getting your posts by mail.

  ReplyDelete
  Replies
  1. thank you for your visit brother ponniyin selvan! my email.Id www.aswinrajan6@gmail.com

   Delete
  2. thank you for your visit brother ponniyin selvan! my email.Id www.aswinrajan6@gmail.com

   Delete
 2. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
  அன்பின் சகோதரர் ஓசூர் ராஜன்,
  திரிபுகளில் இருந்து வரலாற்றை மீட்டெடுப்பது சாதாரண காரியமன்று. அதை தாங்கள் செய்வது மகிழ்வை தருகிறது. தமக்கு சாதகமாக வரலாற்றை நாவல்களின் வழியாக, திரைப்படங்கள் வழியாக இன்னும் என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனூடாகவெல்லாம் திரித்து வைத்திருக்கின்றனர் சிலர். மக்களின் ஆழ்மனதில் இந்த திரிபுகள் தான் வரலாறுகளாக படிந்திருக்கின்றன. அந்த மாயைகளை மக்களின் மனதில் இருந்து அகற்றுவது லேசுப்பட்ட காரியமில்லை. "பொய்கள் ஆட்சி செய்யும் தேசத்தில் உண்மையை பேசுவது கூட புரட்சி தான்". அந்த வகையில் உங்களின் எழுத்துக்கள் புரட்சி தான் ராஜன். (இப்போது எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பது படிக்க எளிதாக இருக்கிறது)

  ReplyDelete
 3. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. thank you for your visit brother ponniyin selvan! my email.Id www.aswinrajan6@gmail.com

   Delete
 4. நன்றி..,அன்பின் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்.!

  ReplyDelete
 5. அறிய தகவல் பகிர்வு அருமை .

  ReplyDelete
 6. நன்றி..சகோதரி சசிகலா.!

  ReplyDelete
 7. சகோ ராஜன்,

  கேள்வி கேட்க வேணாம்னு சொல்லிட்டீங்க. இருந்தாலும் இந்த இடத்திற்கு பொருந்தும் என்பதால் ஒரே ஒரு கேள்வி. முடிந்தால் பதில் சொல்லுங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை. குந்தவையும் வந்தியத் தேவனும் காதலித்தார்கள் என்று எதன் அடிப்படையில் கல்கி எழுதி உள்ளார்???? ஒரு வேலை, உண்மை சம்பவத்துடன் கதையின் அழகுக்காக பொய்யும் கலந்து எழுதி உள்ளாரா????

  ReplyDelete
 8. பல அரிய தகவல்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 9. //இத்தகைய சூழ்நிலையில் இருந்த சோழர்கள்,தங்களது திருமண உறவு மூலமும் அரசு அதிகாரத்தையும் ஆளுமையையும் அதிகரித்து கொண்டு வந்தனர்! அப்படி தங்களது அரசு அதிகாரத்தை தொடர்ந்து நீடித்து, படைபலம், ஆகியவைகளை அதிகரிக்க செய்த முயற்சியாகவே குந்தவை நாட்சியாருக்கும் வேங்கி நாட்டு இளவரசனான, வந்திய தேவனுக்கும் திருமணம் நடந்துள்ளது விளங்குகிறது!

  ராஜதந்திர முறையான, இது போன்ற திருமண உறவை சுந்தரச் சோழன் விரும்பியே குந்தவையை வல்லவரையன் வந்திய தேவனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான்! மேலும் அவனது ஆட்சிப் பகுதியுடன் சோழர் ஆட்சிப் பகுதியையும் சேர்த்து அவனது பாதுகாப்பில் இருந்துவருமாறு செய்துள்ளான்!

  இன்றைய காலத்தில் வசதியாகனவர்களும் செல்லமாக தங்களது மகளை வளர்த்து வரும் சிலர் வீட்டோடு மாப்பிள்ளை பார்ப்பது போல, குந்தவையை திருமணம் செய்து கொடுத்து உள்ளார்கள்!{ குந்தவை என்பதற்கு பொருளே, திருமணம் ஆகியும் புகுந்த வீட்டுக்கு போகாமல் பிறந்த வேட்டிலேயே இருந்த பெண் என்பதுதான்!} குந்தவையின் உண்மையான பெயர், "மந்தாகினி" என்பதாகும்!//

  why such a move was never taken with any brahmin family from the kshathriyas through out the history of entire tamil culture? This proves the less importance and less influence of brahmins with kshathriya families. you should disprove my point in this angle with any historical reference.

  ReplyDelete
 10. My dear Pitchaimani

  Kapilar was the court poet of Paari. And also his bosom friend. Paari was killed in the war and his kingdom was razed to the ground by the Chera, Chozha and Pandiya Kings. Kapilar took the two nubile (of marriage age) daughters of Paari under his care, and searched for suitable alliances to them from among the Princes. But no one came forward to marry them as the girls were orphans and penniless. Finally, Kapilar got them married to Brahmins.

  போயும் போயும் கடைசியில் பாப்பான்களுக்குக் இளவரசிகளைக்கட்டிக்கொடுக்கவேண்டியதாயிற்றே என்று கபிலர் அழுகிறார். அவரின் அப்பாடல் இருக்கிறது. நான் கற்பனை பண்ணுவதாக சம்சாரிக்கக்கூடாது. சங்கப்புலவர்களில் தன் ஜாதியைச் சொல்லி பாடல் எழுதியவர் இவர். "யானே அந்தணன். எம் கையைப்பார் எவ்வளவு மெனமயாக இருக்கிறது" என்று உட்குத்து பாடலை எழுதிய வித்தியாசமான‌ பார்ப்பனர் இவர்.

  ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது. பார்ப்ப்னர்களை பிறர் மணம் செய்யும் வழக்கம் தமிழகத்தில் அன்றில்லை.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?