காதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்!

           காதலர் தினமாக உலமெங்கும் ஏற்றுக்   கொள்ளப்பட்டு  பிப்ரவரி 14 -ஆம் நாள் இளசுகளால் கொண்டாடப் பட்டு வருகிறது! இந்த கொண்டாட்டங்களில் நடக்கும் அத்துமீறல்கள் நமக்கும் உடன்பாடான ஒன்று இல்லை!

     ஆனால், காதலை நாகரீகமாக, தங்களது எதிர்கால வாழ்வின் அடித்தளமாக என்னும் காதலர்கள், காதலை சொல்லி, பரிசுகள் வழங்கி,வாழ்த்துகள் சொல்லி, நீடித்த அன்பு கொள்ள விரும்பும் இளசுகளுக்கு  காதலர் தினம் ஒரு வாய்ப்பும், வசதியும் தருகிறது! என்பதால் அதனை வரவேற்கிறேன்!
      
        நானும் காதலித்து,கலப்பு மனம்புரிந்து, மனமொத்து வாழ்ந்துவருவதை இந்த தருணத்தில் குறிப்பிடுவது, மகிழ்ச்சி அளிக்கிறது!

         இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவு இருப்பதைப் போலவே எதிர்ப்பு இருப்பதையும்,  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் என்பதை நாம்,  நன்கு தெரிந்து கொள்ள முடியும்! 
        இந்துத்துவ தருமத்தை கடைபிடித்து வரும் அமைப்புகளும் கட்சிகளும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்  முன்னணியில் இருகின்றன! அவைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணங்களை கூறுகின்றன? என்று பார்த்தால், காதலர் தினம் நமது கலாசாரத்திற்கு எதிரானது, நமது இளைய தலைமுறையினரை  அது சீரழித்து விடும்  என்று கூறுகிறார்கள்!

        உண்மையில் காதலர் தினம் நமது கலாசாரத்தை சீரழிக்கிறதா?  இவர்கள் சொல்லுவது உண்மையா? என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மையாகும்!   பிறகு ஏன் இவர்கள் காதலர் தினத்தை எதிர்கிறார்கள்? ஏனென்றால், காதலிப்பது இவர்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய குற்றம் என்பதான பார்வை  கொண்டிருப்பது தான்! அதற்கு காரணம், மனு தர்மம்  என்ற இவர்கள் விரும்புகிற , இவர்கள் இதுவரைக்  கட்டமைத்து வைத்துள்ள சாதிய கட்டமைப்பு  என்பதை அது சிதைத்து விடும் என்று  அஞ்சுகிறார்கள்! எனவேதான்  சாதிய கட்டமைப்பை  சிதைக்கும் காரணியாக  உள்ள காதலை எதிப்பவர்கள் காதலர் தினம் என்று  கொண்டாடுவதை  ஏற்றுகொள்ள முடியாமல், அதனை பொறுக்க முடியாமலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்!

      இல்லை ! அப்படி எல்லாம் எந்த வித உள்நூள்ளமும் இவர்களுக்கு இல்லை! உண்மையிலேயே நமது கலாசாரம் சீரழிந்து போவதை  தடுக்கவே, நமது இளைய சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையினாலேயே, எதிர்கிறார்கள் என்று  சிலர் எண்ணக்கூடும்!   அப்படி உண்மையிலேயே இவர்கள் உண்மையிலேயே கலாச்சாரம் சீரழிந்து வருவதற்காகதான் எதிர்கிறார்கள் என்றே வைத்துகொள்வோம். 
  
       இந்த கலாசார காவலர்கள் கூறும்,    நமது "இந்து தரும கலாசாரம்" என்ன? என்பதும், இவர்கள்  புனித நூலாக, இப்படிதான் நடந்தது  என்று கூறுவதே இதிகாசம் என்பதற்கு பொருள் என்று கூறி, இந்துமதப் பெருமைகளை, மேன்மைகளை   டிவி., பக்திநூலக, ஆன்மீக நூல்கள், என்று தினம் தினம் மாற்றப்பட்டு,.மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகாபாரதம்  சொல்லும் கலாச்சாரமா? என்று கேட்கத் தோன்றுகிறது! 

       ஆயர்பாடி கண்ணன், கோபியர்களிடம் செய்த லீலாவிநோதங்களா? பாமா இருக்க...  ருக்குமணியை கண்ணபிரான் " சின்ன வீடாக"  வைத்துகொண்டது போல,   அறிவுரைகளா?  குந்தி முறையே...  சூரியன் மூலம்  கர்ணனையும், எமதருமன் மூலம் யுதிஷ்ட்ரனையும், இந்திரன் மூலம் அர்சுனனையும், வாசுபகவான் மூலம் பீமனையும் மகனைப் பெற்றாளே.!  அதுபோன்ற  கலாச்சாரமா? அல்லது பாஞ்சாலி என்னும் திரோவ்பதிக்கு   நகுலன் சகாதேவன்  ஆகியோரையும் சேர்த்து  அயிந்து கணவர்கள்  என்று சொல்லும் கலாச்சாரமா?  
        பீஷ்மருடன் சேர்ந்து பிறந்த,,, எட்டு பேரில்,   பீஷ்மரைத் தவிர்த்து, ஏழுபேரை அவர்களைப் பெற்ற அன்னையே, (கங்காதேவி)ஆற்றில் விட்டுவிட்டாளே! அந்த கலாச்சாரமா? இல்லை,  வியாச முனிவனுக்கு.. விசித்திர வீரியனின் மனைவிகளை (அம்பிகை,அம்பாலிகை) அனுப்பி,பிள்ளைப் பெற்றுகொள்ள  சொன்ன கலாச்சாரமா? எதனை கலாச்சாரம் என்று,  இவர்கள் கூறுகிறார்கள்?  எது இவர்கள் வலியுறுத்தும் கலாச்சாரம்  என்று தெரிய வில்லை!

        இந்தியாவின் ஒட்டுமொத கலாசார சீரழிவுக்கும் காரணமானவர்கள், "இந்து தருமம் "என்ற பெயரில்,  இந்தியாவின் பூர்வகுடிகளின்  நாகரீகம், பண்பாட்டைக் கெடுத்தவர்கள்  இவர்களே! 

      ஆனால், இன்று ஏதோ....,     இந்து மதத்துக்கு உயர்ந்த நாகரீகம், கலாசாரம் இருந்தது போலவும்,    அதனை, "காதலர் தினம்"என்ற கொண்டாட்டம்  சீரழித்து வருவது போலவும்,     அத்தகைய சீரழிவில் இருந்து காப்பாற்ற போவது போலவும் தங்களைச்  சித்தரித்துக்  கொடு, இவர்கள்   குரல் கொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது  ஆர்பாட்டம் பண்ணுவதும் எதற்கு?  என்று யோசிக்கவேண்டும்!   
 
    நான் மேலே குறிப்பிட்டு உள்ளது  போல... ,  இவர்களது   சாதிய கட்டமைப்பை,     காதல் என்ற ஒற்றை சொல்,  அழகிய சொல், மென்மையான சொல், அனைவரையும் வசீகரிக்கும் சொல், உள்ளத்துள் எண்ணற்ற கனவுகளை ஏற்படுத்தும் சொல், எழுச்சியை தரும் சொல், மகிழ்ச்சியை அதிகரிக்கும் சொல், உலகை முப்பரிணாமத்தில்  காட்டும் சொல், துன்பத்தை துடைக்கும் சொல், இன்பத்தைப் பேருக்கும் சொல், எண்ணற்ற சாதனைகளுக்கும்,   ஏன்? வேதனைக்கும் காரணமாகும்  சொல்லான,   காதல் என்ற சொல்லானது,,

     பார்ப்பனீய, பாசிச, அடக்குமுறையை விரும்புகிற அனைவருக்கும்  வேம்பைபோல கசக்கிறது!  அந்த கசப்பை மறைத்து,  கலாசாரம் சீரழிக்க படுவதாக  திசை திருப்பி நாடகம் ஆட வைக்கிறது!  உண்மையிலேயே இவர்களுக்கு   இந்திய,  இளம் தலைமுறையினரின் எதிர்காலம், வாழ்க்கைமீது அக்கறை இருக்குமானால்,   நம்பிக்கை இருந்தால்  காதலர் தினத்தை இவர்கள்ஆதரிக்க முன்வரவேண்டும்!    எதிர்க்கக் கூடாது! மேலும் காதலர்  தினத்தை,   அரசு விடுமுறையாக அறிவிக்க குரல் எழுப்ப  வேண்டும்! அதுவும், கிருஷ்ணர் ஜெயந்தி, கோகுலாஷ்டமி, போன்ற பண்டிகை தின விடுமுறைகளை நீக்கிவிட்டு, இதனை  செய்ய முன்வர வேண்டும்!வருவார்களா?

       அது மட்டுமல்ல..,நமது கலாசாரத்தை உண்மையிலே கேவலப்படுத்தி வரும்  மகாபாரதம்உள்ளிட்ட  ஆபாச புராண நூல்களை  தடை செய்யவும் முன்வரவேண்டும்!   செய்வார்களா?   நிச்சயம் செய்ய மாட்டார்கள்! குறைந்த பட்சம்,  அவைகள் நமது கலாசாரம் அல்ல! என்று கூறி, அத்தகைய நூல்களை   கண்டித்து ஒரு அறிக்கை விடுவார்களா?     காதலர் தினம்  கலாசார சீரழிவு என்று கூறி  எதிர்த்து வருபவர்கள் இதனை செய்ய முன்வந்தால் தான்  அவர்கள் கூறுவதை ஏற்றுகொள்ள முடியும்! 

     அந்த முடிவை அவர்கள் எடுக்கும் வரை..    காதலர்களே!   காதலைக் கொண்டாடுங்கள்!  காதலாய்க் கசிந்து உருகி, அன்புடன் வாழுவோம்! 

 " நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
         நாட்டினர்தாம் வியப்பெய்தி, நன்றாம் என்பர்!
   ஊடகத்தே ,கிணற்றோரத்தே , ஊரினிலே
      காதல் என்றால் உறுமுகின்றார்! 
  பாடைகட்டி அதனைக் கொல்ல,
      வழிகள் செய்வார்! பாரினிலே பொறாமையினால்     
மூடரெல்லாம்  விதிகள் செய்து,
      முறைதவறி,இடர்யெய்து கெடுகின்றாரே! " 

  -புரட்சிக்கவி  பாரதியின் ஆதங்கம் எத்தனை அர்த்தமுடையது! 
  
 காதலர் தினத்தை முன்னிட்டு.. இதனைப் பதிவு செய்தாலும் இதுவும் எனது தொடர்பதிவாக கருதலாம்!

      அப்புறம் , நாலு நாளைக்கு உங்கப் (இந்தப்)  பக்கமே வரமாட்டேன்! காரணம் காதலர்கள் தினத்தை  உங்களைப் போல..,  நானும் கொண்டாடணும்
இல்லையா? அதுக்குதான்!

கவிதை ,காதல், புரட்சி கவி,பண்பாடு,மகாபாரதம்!  விடுமுறை

Comments

  1. பார்ப்பனர்கள் மட்டுமே காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதில் உண்மை இல்லை.அவர்கள் எதிர்த்தாலும் பல சமயங்களில் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள்.பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதோர் கடைசி வரை காதலை ஏற்றுக்கொள்வதில்லை. ஒருசிலர் தன மகன் அல்லது மகளையே கொலை செய்யும் அளவுக்குக் கூட சென்றிருப்பதை பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?