ராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்!


      ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு அடுத்து நடந்த நிகழ்சிகளில் ஒன்றாக வரலாறு குறிக்கும் சோகத்தை, சுந்தர சோழன் அவன் மனைவி  வானவன் மாதேவி ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி இருந்தேன்!

        வரலாற்றில் சுந்தர சோழன் இறந்ததை,  " பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்" என்று மிகவும் நயமாக, உயர்த்தி சொல்லி உள்ளார்கள்! 

   "பொன்மாளிகை"   என்று  குறிக்கப்படுவது  காஞ்சியில்  இருந்த, சோழர்கள் அரண்மனையைதான் !  என்று கல்வெட்டு கலைச்சொல் அகர முதலி {மதுரை காமராஜர் பல்கலை கழகம்   வெளியீடு}  குறிப்பிடுகிறது!

        சோழர்களுக்கு கடம்பூர்,கும்ப கோணம்  அருகில் உள்ள பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை, திருச்சியின் சமயபுரம் என்று பலஇடங்களில் அரண்மனைகள்  இருந்துள்ளது! 

      ராஜராஜனை  பால்குடி மாறாத குழந்தை என்று நான் வேண்டும் என்று குறிப்பிடவில்லை!   வானவன் மாதேவி உயிர் துறந்தது  குறித்து,  ( ARE 230 OF 1902) கல்வெட்டுகள் உள்ளது!
 அதில், 
                 " முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்
                    தலைமகன் பிரியாத் தையல்" 

      -இவ்வாறு குறித்து ,புகழ்ந்துள்ளதாக "தென்னாட்டு போர்களங்கள்" என்ற நூலில், கா.அப்பாதுரையார் பக்கம் ௦௦-220 -யில்  குறிப்பிடுவதையே  எடுத்து காட்டி உள்ளேன!

       மேலும் அவர், "சுந்தர சோழனின் இறுதிகாலம் அவலம் மிகுந்ததாக, இருந்துள்ளதாக " குறிபிடுகிறார்!  அவர் குறிப்பிட்ட அவலம் எனபது நான் குறிப்பிட்டுள்ளது  போல்,சுந்தரசோழன் அரண்மனை சிறையில் அடைத்துவைக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு ,  இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று,  எனது ஆய்வின் ஆய்வின் அடிப்படையில் முந்தைய பதிவில் தெரிவித்து உள்ளேன்! 

      சோழர்கள் நூல் எழுதிய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள்  காஞ்சி அரண்மனையில்  தங்கி,  சுந்தர சோழன்,தனது நாட்டின்  அலுவல்களை அயராது கவனித்தான் எனபது உண்மை இல்லை!  என்பதை தெளிவுபடுத்த வேண்டியே, உத்தமசோழன்,  காஞ்சி அரண்மனையில் தங்கி இருந்து.. " அந்தணர்களுக்கு தானம் "வழங்கியுள்ளான் என்றும்  குறிப்புகள் உள்ளன என்றும் சொல்லி இருந்தேன்!   இப்படி நான் கூறுவதில்  கூட,    சிலருக்கு சந்தேகம் வரலாம்.!  அவர்களுக்கு....

     சுந்தர சோழன் காஞ்சி சிறையில் இல்லை, அரசனாக அலுவல்களை கவனித்தான் என்று நீலகண்ட சாஸ்திரி சொல்வது  உண்மையாக இருந்தால், உத்தம சோழன்  காஞ்சி அரண்மனைக்கு போய் அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டிய அவசியமே நேராது போயிருக்கும்!  அங்கே, அவனுக்கு மூத்தவனும், முன்பிருந்தே அரசனாக இருந்து வருபவனும் ஆன,  சுந்தர சோழன் அல்லவா தானம் செய்திருப்பான்?  அவன் தானம் செய்ததாக அல்லவா கல்வெட்டுகள் பொறித்து இருப்பார்கள்! ?

        தவிர,  சுந்தர சோழனை வைத்துகொண்டு,  உத்தம சோழன் தானம் செய்தான் என்று வாதிட்டாலும், உத்தமனுடைய பெயருடன்  சுந்தர சோழன் பெயரையும்  அல்லவா சேர்த்து பொறித்து இருப்பார்கள்?  எனவே ,  சுந்தர சோழன் காஞ்சியில் அரசனாக இல்லை, கைதியாக இருந்தான்! , அவனைப் பற்றியோ, அவனது இதர வாரிசுகள் எங்கே?  என்று அறிந்து கொள்ளவோ, உத்தமன்  காஞ்சிக்கு சென்றபோது,அரண்மனை உண்ணாழி மண்டபத்தில் இருந்து தானம் செய்திருக்கிறான்!   அல்லது, சுந்தர சோழன் இறப்புக்கு பிறகு,   காஞ்சிக்கு சென்ற உத்தம சோழன்,   தான் அரசனாக காரணமான  அந்தணர்களுக்கு...,அல்லது   அவர்கள் சொல்லும்  அறக்கொடைகளுக்கு,  தானம் செய்தான்!   என்று கருதுவதே ஏற்புடையதாகும்! 

       இவ்வளவு கொடுமைகளைச் செய்த உத்தமச்க் சோழனும் அவனை முன்னிறுத்தி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பிய பார்ப்பனர்களும்  சுந்தர சோழனின் இதர வாரிசுகளான குந்தவையையும்,ராஜராஜனையும் போனால் போகட்டும் என்று  சும்மா விட்டு இருப்பார்களா?  அவர்கள் சோழர்களின் அரண்மனையில் சுகபோகத்துடன் , ஆடம்பர வாழ்வு வாழ்ந்தார்களா ? அப்படி வாழ்ந்திருந்தால், ஏன் ? ராஜரானின் இளைமைகாலம் பற்றி யாரும் அறிந்தவர்கள் இல்லை! அறிந்து சொன்னவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள் ?

   உண்மையில் ராஜராஜனையும் , குந்தவையையும் கொல்லவும்,அழித்துவிடவும் உத்தம சோழனின் படைகள்  சோழநாடு முழுவது சுற்றி சுற்றி வந்தன. ஆனால் அவர்கள், சுந்தர சோழனின் ஆதரவுப் படைகளாலும்,சோழக் குடிகளாலும், சோழநாட்டில் இருந்துவந்த சமணர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர்கள்  ஆகியோரின் உதவியாலும்  உத்தம சோழனின் படைகளிடம் சிக்காமல் தப்பித்து, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள்! அவர்கள் தலைமறைவு வாழ்க்கையும், அதாவது ராஜராஜ சோழனது இளமைப் பருவம் குறித்து சரியாக சொல்லாமல் உள்ளதற்கும், அவனது இளமை காலம் பற்றி யாரும் கண்டது இல்லை என்று வரலாறு மேலோட்டமாக குறிப்பதற்கும் அதுவே காரணமாகும்!

    ராஜராஜன் இளமையில்  தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது! அவனது இளமைக் கால தலைமறைவு வாழ்கையில் அவனுக்கு அனைத்து கலைகளையும் கற்க வைத்து, ராஜராஜனை அரசனாக்க , அரசு நிர்வாக பயிற்சி வழங்கி , ஆட்ற்றலுள்ளவனாக, எதிர்காலத்தில் பேரரசனாக ஆக்கியதில் அவனது அக்காள் குந்தவைக்கும் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார், மற்றும் அவரது சீடர்களுக்கும் பெரும் பங்கு இருந்துள்ளது! இவைகளும் வரலாற்றில் மறைக்கப் பட்ட வெளிச்சம்படாத பகுதிகளாக சோழ வரலாற்றில் இருந்து வருகிறது! 

      ராஜராஜ சோழனது இளமைகாலம் பற்றிய  விவரங்களை பார்க்கும் முன்பு குந்தவைக்கு திருமணம் ஆனதாக சொல்லுகிறார்களே, அவளது கணவனாக வல்லவரையன் வந்திய தேவன் சொல்லப்படுகிறதே? அவன் எங்கு போனான்? என்னவானான்? அவனது நிலைமை ஆதித்ய கரிகாலன் படுகொலை சம்பவத்துக்கு பிறகு என்ன? எனபது குறித்து பார்க்கலாம்!

     


Comments

 1. /இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார்//
  ஐயா, இவர் ஒரு சுக்பி ஞானி...என்னோட ஜாதி :)

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய ஐயா,
  பொன்னியின் செல்வன் படிக்கும் போதே எனக்கு பல சந்தேகங்கள் வந்தது!மறக்கடிக்கப்பட்ட வரலாற்றை தேடி வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்! தொடர்ந்து எழுதுங்கள்..தொடர்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன்!
  களப்பிறர்கள் என்பவர்கள் யார்?ஏன் அவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்கிறார்கள்? பழந்தமிழகத்தில் இவர்களது ஆட்சிமுறை எவ்வாறிருந்தது?
  தங்களுக்குநேரம் கிடைக்கும் போது விளக்கவும்.நன்றி!

  ReplyDelete
 3. இளமைக் காலத்தில் இராஜராஜன் நாகப்பட்டணத்தில் இருந்த புத்த விகாரத்தில் வளர்ந்தான் என்ற தகவல் உண்டு.

  -----------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - பிப்'2012)

  ReplyDelete
 4. நல்ல பதிவு வாழ்த்துக்கள்... நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?