அன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே!

        நமது தமிழகத்தின் வரலாறை...  அதுவும் சோழர்களது வரலாறை  அறிந்து கொள்ள விழையும் உங்களது ஆர்வமும், நீங்கள்  கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்கள் மூலம் தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

         உள்ளபடியே,  அவ்வப்போது..  நமக்கு தோன்றும் சந்தேகங்களை  கேட்டு தெளிவு பெறுவது  எல்லோருக்கும் உள்ள இயற்கை குணமாகும்! சிலர், "நாமும் கேட்போமே "என்று கேட்பதும் உண்டு,!   தெளிவுபெற கேட்பது போல, நம்மை  திசை திருப்ப , அதாவது இந்த பதிவை படிப்பவர்களிடம்  தேவை அற்ற குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட.. எண்ணி கேட்பவர்களும் உண்டு!  அப்படிப் பட்டவர்களால் நான்,  பதிவு எழுத வந்த நோக்கம் திசை மாறி, வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பதிவுகள்  விவாத மேடையாகி விடும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளதால், அனைவருக்கும்    விளக்கங்களை  தருவதை, அதுவும் உடனுக்குடன்  தருவதையும்  நான் தவிர்க்க விரும்புகிறேன்!

          மேலும் நான்வரலாற்றில் உள்ள தவறுகளை  திருத்தும் நோக்கத்திலோ, {ஏனெனில் அது தேவையற்ற சர்ச்சைகளையே ஏற்படுத்தும்} வரலாறு முழுவதும் தவறு என்று வாதிடவோ,  அல்லது நான் எழுதுவதே  உண்மைவரலாறு  என்று நீங்கள் நம்பவேண்டும்  என்பதற்காகவோ, உங்களை நம்ப சொல்லியோ, இந்த பதிவுகளை எழுதவில்லை! அது  எனது நோக்கம் இல்லை என்பதையும் முதலிலேயே குறிப்பிட்டு உள்ளேன்!

     அதே போல ஒரு மதத்தை தாக்கியும் ,ஒரு மதத்தை தூக்கிபிடிக்கவும் இந்த பதிவுகள் இல்லை! 

       உழைக்கும் வெகுஜன மக்களுக்கு,  உதவி செய்ய முன்வருவது , அது எந்த அரசானாலும் ஆளானாலும் பாசிசம் அனுமதிக்காது, முடியாட்சி என்றாலும், குடியாட்சி என்றாலும்  பாசிசம் என்ற பயங்கரவாதம அழித்து விடும்! என்ற உண்மையை, நான் நம்புவதை.. காரண காரியங்கள், ஆதாரங்கள் மூலம் விளக்கி  சொல்லவும்,

     பாசிசம்  எப்படிமக்களுக்கு எதிராக செயல் படுகிறது, தனக்கு எதிரான  எல்லாவற்றையும் அழித்துவருகிறது! அப்படி பாசிசம் அழித்து,  ஒழிப்பதால் வெகுஜன மக்கள் படும்  தொல்லைகள் எப்படிப் பட்டது! என்றும்  அவர்களது போராட்டங்கள் எப்படி  சித்தரிக்கப் படுகின்றன,  பாசிச பயங்கரவாதிகள் தங்களது தவறுகளை,தங்கள் செய்த கொடுமைகளை  வரலாற்றில் இருந்து எப்படி மறைக்கிறார்கள், திசை திருப்புகிறார்கள்,   தங்களது தவறுகளை,  நியாயப்படுத்தி, விளக்கம் அளிக்கிறார்கள் எனபது பற்றி பதிவு செய்வது முக்கிய நோக்கமாகும்.!

      மேலும், உழைக்கும் மக்களின் போராட்டம், அவலம் குறித்து எழுதப்படும்,எழதப்பட்ட,    கலை, இலக்கிய ஆவணங்கள்  அழிக்கபடுவது, அதனுடன் தொடர்புள்ள மக்களைஒடுக்குவது,  ஒட்டு மொத்த மக்களின் வாழ்வை குலைத்து, பொருளாதாரத்தை அழித்து, அனைவருக்குமான  செல்வத்தை, பொது சொத்தை, கைப்பற்றி...  பாசிசவாதிகள்  சிலர் மட்டும்  சுகபோகங்களில் திளைக்க செய்யும் விதங்கள், பாசிசத்தின்  கொடூரமான, மனித நீதி, மனித உணவுகளை மதிக்காத  பயங்கர வாதம்  குறித்தும்,   அந்த பாசிசத்தையே,  நியாயம்,  தருமம்  என்று தொடர்ந்து கூறியும், தொடர்ந்து  செய்தும், தொடர்ந்து வர  ஊக்கபடுத்தியும்  வருகின்ற "பிராமணீயம்" பற்றிய ஆய்வாக.., பதிவுகளை  செய்ய   விரும்புகிறேன்!
     
   இந்த இடத்தில எனது விளக்கம் தேவைபடுகிறது. 

      சாதாரண மக்களாகிய  நம்மில் பலரும் சொல்லும்  "இந்து மதம் "என்று   சொல்வதும், நம்பிக்கொண்டு இருப்பதும்  வேறு!  நான் பார்பனீயம் என்று குறிப்பது வேறு. ! பார்பனீயம் என்று குறிப்பது , நிச்சயம் இந்துமதத்தை அல்ல.! 

    இந்து மதத்தைதான் நான், "பார்ப்பனீயம் "என்று குறிப்பதாக நினைப்பவர்கள்,  "பார்ப்பனீயம்" தான்   "இந்துமதம்" என்று  அவர்களே ஏற்றுகொண்டதாகவும், ஒப்பு கொண்டதாகவும்   ஆகிவிடும்!   { பார்ப்பனியம் என்ற சொல்லுக்கு,  பாசிசம் என்று  பொருள் கொள்ளவேண்டுமே தவிர ,இந்து மதம் என்று பொருளில் நான்  குறிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்}   பார்பனீயம் எனபது  பாசிசம் என்பதின் வேறு சொல்லாகும்.!

        பார்பனீயத்தை விமர்சிக்கும் போது, இந்துமதத்தை சாடுவதாகவும், விமர்சிப்பதாகவும்  பலரும் தவறாக புரிந்து கொள்ளும் நிலை உள்ளதை எண்ணியே, இந்தவிளக்கத்தை  தருகிறேன்!  இதற்கு மேலும் சிலர்  வலிந்து புரிந்து கொள்வார்களானால்  நான் பொறுப்பில்லை!!

            தயவு செய்து , நல்ல நோக்கத்துக்காக, மக்களின் அன்பு, அமைதி இனிய வாழ்வுக்காக, அவைகளுக்கு எதிராக  உள்ள பார்பனீயத்தை முதலில் புரிந்து கொண்டால்தான்.. அதனை நீங்கள் புரிந்து  கொண்டு  இந்து மதத்தில் இருந்து பார்பனிய சிந்தனையை  அகற்றினால்தான், நீக்கினால்தான்  நமது நாடு வல்லரசு ஆகும்!   ஊழல், கருப்பு பணம், லஞ்சம், சமூக கொடுமைகள், போன்ற நிரந்தர தீமைகள் போன்ற சமூக அவலங்களும், வறுமை வேலை இல்லாத் திண்டாட்டம், சாதி, மத மோதல்கள் போன்ற சமூக கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனபது எனது  உறுதியான கருத்தாகும்! 

     எனது கருத்தை ஒட்டி பல்வேறு இன்னல்கள், பொருளாதார பிரச்சனைகள், அனைத்தையும் ஏற்றுக்கொண்டே இந்த பதிவுகளை செய்ய முன்வந்துள்ளேன்!  
   
       ஆகவே, ஒவ்வொன்றுக்கும் உடனடி ரியாக்சன்  காட்டாமல் தொடர்ந்து வாருங்கள். ""  இனம், சாதி, மதம், ஆண் ,பெண் , நாடு, நிறம்""  என்ற,  நம்முள் பொதிந்து போயுள்ள,  அனைத்து அடையாளங்களையும் துறந்துவிட்டு, உங்கள் நெஞ்சமெனும் நியாய தராசில், நீதியை மட்டுமே  நிலைநிறுத்தி... தீர்ப்பு கூற வாருங்கள்! 

     தீர்ப்பை அனைத்து விசயங்களையும் பார்த்து, பரிசீலனை செய்து,  அப்புறம் தாருங்கள்!

       அடுத்து வரும் பதிவுகளே.., தமிழகத்தை, தென்னகத்தை, ஏன்? இந்தியாவையே....  ஆங்கிலேயர்கள் வரும்வரை,  பாசிச வழியில், "தனது  இனது மேன்மைக்காக"   நன்மைக்காக,  ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வில் ஊடுருவி,  பார்ப்பனீயம்   எப்படியெல்லாம் நடந்து கொண்டது,  என்பதை பல்வேறு ஆதாரங்களுடன்  விளக்கும் பதிவுகளாகும்!Comments

  1. //எனது கருத்தை ஒட்டி பல்வேறு இன்னல்கள், பொருளாதார பிரச்சனைகள், அனைத்தையும் ஏற்றுக்கொண்டே இந்த பதிவுகளை செய்ய முன்வந்துள்ளேன்// உங்கள் சிரத்தை மிகு இந்த தொடர்பதிவு , இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாற்றில், பார்ப்பனீயத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்களை தருகிறது.தொடர்ந்து வாசிக்கிறேன்.நன்றிகளும்,பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. ஓசூர் ராஜான் என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய பதிவர். எதுக்கு தான் இந்த வீண் பிழைப்போ. போய்யா போ போய் வேலையை பாரு. கிறுக்கு தனமாக ஏதாச்சும் எழுதி வெறுப்புணர்சியை வளர்க்காதே.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?