பார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்!

      ஆதித்த கரிகால சோழன்,ராஜராஜ சோழனின்  அண்ணனும்,சுந்தர சோழனின் மகனும் ஆவார்!இவர்களது தாயார்  வானவன் மாதேவி என்பவர்.

      ஆதித்த கரிகால சோழனுக்கு  கி.பி.966 -லில் இளவரசு பட்டம்  கட்டப்பட்டது என்றும்  அவன் கி.பி.969 -லில் படுகொலை செய்யப் பட்டான் எனவும், இவன் தனது தந்தை சுந்தர சோழனுக்கு   துணையாக, தொண்டை மண்டலப் பகுதியை கல்வெட்டு பொறித்துக் கொள்ளும் தனி உரிமையுடன் காஞ்சியில் தங்கி,  ஆட்சி செய்தவன் என்றும் தென்னாட்டு போர்களங்கள்  என்ற நூலின் ஆசிரியர் கா.அப்பாதுரையார் குறிபிடுகிறார்! இவரைப் போலவே  சோழ வரலாறு எழுதிய பல்வேறு  வரலாற்று ஆசிரியர்களும்  இதனையே குறிபிடுகின்றனர் !

       ஆதித்த கரிகால சோழனுக்கு, "இரண்டாம் ஆதித்த சோழன் என்றும் "ராஜகேசரி" என்றும் பட்ட,விருது பெயர்கள் உண்டு. தவிர,  பாண்டியர்களை  சேவூர் போரில் வென்றதால்," பாண்டியர்  தலை கொண்ட ஆதித்த சோழன்" என்று பட்டயங்கள் கல்வெட்டுகள் மிகவும் சிறப்பாக குறிக்கின்றன!
       இத்துணை சிறப்பு வாய்ந்த  ஆதித்தனை, அவனது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள்  படுகொலை செய்தனர்! 

        ஆதித்தனைப்   படுகொலை செய்துவிட்டு, தங்களது கைப்பாவையாக  இருந்த, ஆட்சி அதிகாரத்திற்கு தகுதி அற்றவனான மதுராந்தகச் சோழன் என்ற  உத்தமசோழன்  என்பவனை அரசனாக்கினர்!  இந்த உத்தமசோழன் சுந்தர சோழனுக்கு தம்பிமுறையும் ஆதித்த சோழனுக்கு சித்தப்பா முறையும் ஆகவேண்டும்!

           விரிந்து பரந்து, பேரரசாகிவரும்  சோழஅரசின் இளவரசன், அடுத்து சோழ அரசனாகப் போகும், நாட்டை ஆளும்  தகுதியும் திறமையும்  உள்ள    ஆதித்தனை படுகொலை    செய்து உள்ளார்களே! அவனை   யார் படுகொலை செய்தது?  யார் அந்த ராஜ துரோகக் குற்றத்தைச் செய்தவர்கள்?   எனபது சோழ நாட்டில் பரபரப்பாகபேசப்பட வேண்டிய விஷயம். அதுமட்டுமல்ல அரச கொலதவர்கள் அதனை பேருமே அதிச்சி அடியவேண்டிய ஒன்று! தவிர  எதிர் காலத்தில் இதுபோல அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல்  தவிர்க்கவும் கூட, இளவரசனைக் கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து தண்டிப்பது அவசியம் என்று  உணர்ந்து செயல்பட்டுவதே வழக்கமாகும்!

       எனவே, அடுத்து வந்த அரசன் என்ன செய்து இருக்க வேண்டும்? ஆதித்தனைக் கொலைசெய்தவர்களை  கண்டுபிடித்து, நாட்டுக்கு அறிவித்து   இருக்க வேண்டும் .!   குற்றவாளிகளைத்   தண்டித்து இருக்க வேண்டும்.!!

       ஆனால் அப்படியெல்லாம் அடுத்து ஆட்சிக்கு வந்த,சோழ நாட்டின் அரசனான , உத்தம சோழன் செய்ய வில்லை.!  கொலையாளிகளை கண்டுபிடிப்பது  குறித்து   எந்த நடவடிக்கையும்  சோழ அரசால் எடுக்கப் படவில்லை!     உத்தம சோழன்  அரசனாக  சோழ நாட்டை ஆட்சி செய்த கி.பி.-970 - 985 வரையில் )பதினைந்து வருடங்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை!

            பிறகு, கொலையாளிகளை  யார் கண்டுபிடித்து தெரியுமா?   கி பி . 985-லில் ஆட்சிக்கு  வந்த ராஜராஜன்,  தனது அண்ணன் ஆதித்ய கரிகால சோழனைப் படுகொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்கிறான்! அவர்கள்,   வீராணம் என்று இன்று அழைக்கப் படும் ஊருக்கு... சோழர்காலத்தில்  "வீரநாராயண சதுர்வேதி மங்களம்" என்று பெயர் இருந்தது!  அங்கு வாழ்ந்த பிராமணர்களும், பிரம்மராயர்கள் என்ற அரசுப் பொறுப்பிலும் இருந்த பார்ப்பன அதிகாரிகள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் !!   கண்டுபிடித்து, அவர்களது உடமைகள், சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, நாட்டை விட்டு வெளியேற்றுகிறான்!
    
           ஆதித்த கரிகால சோழனைக் கொன்றவர்கள், சோமன் பண்டிதன்,, ரவிதாசனான பஞ்சவன் பிரஹ்மாதிராஜன்,   பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரஹ்மாதிராஜன், மலையனூரானான  ரேவதாச  கிராமவித்தன் ஆகிய நான்கு பிராமணர்கள்  என்று சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது!{ காட்டு மன்னார் கோயில்கருவறையில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு) 
      சரி ஆதித்த கரிகாலனை  எதற்கு பார்ப்பனர்கள்  படுகொலை செய்கிறார்கள்?
       "மனுதர்மம முறைப்படி[வருணாசிரம தருமப்படி ராஜிய பரிபாலனம்  செய்யாமல் இருக்கிற அரசனை  அவனது செங்கோலை{தண்டத்தைக்] கொண்டே,மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாமாம்!" ( மனுதரும சாஸ்திரம்,அத்தியாயம் ஆறு, சுலோகம் இருபத்தியாறு.)

       ஆகவே, ஆதிய கரிகால சோழன்  பார்ப்பனீய பாசிசத்தின் படி நடந்து கொண்டு ஆட்சி செய்யமாட்டான். அவனால் பார்ப்பனர்களுக்கு  பயனில்லை  எனவே  மந்தருமப்படி ஆட்சிசெயயாத  ஆதித்தனைக் கொலை  செய்துவிட்டு, மனுதர்மப்படி  ஆட்சி செய்ய தயாராக இருந்த, உத்தமச் சோழனை  பார்ப்பனர்கள் அரசனாக்கினார்கள்! 
    
         ஆதித்யன்,  மனுதருமப்படி  அரசாளமாட்டான் என்று,  எப்படி  பார்பனர்கள் முடிவு செய்தார்கள்? அல்லது எல்லாமததையும்  சமமாக பாவித்து  ஆதித்ய சோழனும் அவனது  அப்பனும், அரசனுமான சுந்தர சோழனும் ஆட்சி செய்தவர்களா? என்று கேள்விகள் எழுவது இயற்கையே!
  ஒரு சிறிய குறிப்பு மட்டும்:

        குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள்  என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு  இல்லாத  சுந்தரசோழன்  அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்து,  சோழநாட்டின்  திருச்சி பகுதியில்  சீடர்களுடன் தங்கி  இருந்த இஸ்லாமிய  ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார்  என்பவரது  அருளாசியால் பிறந்தவர்கள் என்றும்  பெர்சிய, பாரசீக  மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன....
  
         அதுகுறித்த  விபரங்களை, ஆதித்த சோழனது படுகொலைக்கு பிறகு நடந்த நிகழ்வுகளை, எல்லாம்   அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்!
 

         


Comments

 1. // குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன....//


  ஐயா தாங்கள் கூறும் வரலாற்றில் பிழை உள்ளதாக அறிகிறேன்.
  ராஜ ராஜ சோழன் பிறந்தது 947 . அவரது அண்ணன் பிறந்தது குறைந்தது ஓராண்டு முன்பு இருக்க வேண்டும்.

  அது ஒரு புறம் இருக்க

  நீங்க கூறும் தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவர் பிறந்ததோ 956 என்றும் 959 என்றும் கூறப்படுகிறது.
  எப்படி இருந்தாலும் அவர்கள் பிறந்து பத்து வருடம் கழித்து தான் இவர் பிறந்ததாக கூறப்படுகிறது. இவரது அருளால் ஆதித்தன் பிறந்தான் என்பதை ஏற்க்க முடியவில்லையே..

  வரலாற்றை பிழை இன்றி எழுத முயலுங்கள்...என்னுடைய கூற்றில் தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள்.
  உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

  மேலும் ஜாதியை உருவாக்கியது அல்லாவா? அல்லது பிராமணனா? என்பதற்கும் தங்கள் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

  இது உண்மையை அறியும் ஆவலே தவிர உங்களை குறை கூறுவது என் நோக்கம் இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது என் கடமை என்றே நினைக்கின்றேன்.
  நன்றி

  ReplyDelete
 2. //R.Puratchimani said...

  மேலும் ஜாதியை உருவாக்கியது அல்லாவா? அல்லது பிராமணனா? என்பதற்கும் தங்கள் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.//

  “ஜாதியை உருவாக்கியது அல்லாஹ்” என்று விஷவித்தை விதைக்கும் “அறியாஜீவிகளே” !
  சொடுக்கி >>>> இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்? <<<<< விளக்கம் பெறுங்கள்.

  ReplyDelete
 3. //VANJOOR said...
  //R.Puratchimani said...

  மேலும் ஜாதியை உருவாக்கியது அல்லாவா? அல்லது பிராமணனா? என்பதற்கும் தங்கள் விளக்கம் எதிர்பார்க்கிறேன்.//

  “ஜாதியை உருவாக்கியது அல்லாஹ்” என்று விஷவித்தை விதைக்கும் “அறியாஜீவிகளே” !
  சொடுக்கி >>>> இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்? <<<<< விளக்கம் பெறுங்கள்.//

  ஐயா,
  விஷம் என்ற பெரிய வார்த்தை எதற்கு?
  சரியான விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ள போகிறேன்.முடிந்தால் மற்றவர்களுக்கும் சொல்வேன்.
  cool :)
  தற்பொழுது நேரம் இல்லை பிறகு சிந்திப்போம் நன்றி

  ReplyDelete
 4. //மனுதர்மம முறைப்படி[வருணாசிரம தருமப்படி ராஜிய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை அவனது செங்கோலை{தண்டத்தைக்] கொண்டே,மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாமாம் //
  ரீல் விடுறதுக்கு அளவு இல்ல! இது உங்களின் அனுமானம் தான். உண்மையாய் இருக்க வாய்ப்பு இல்லை!..
  அந்த மனு தர்ம முறைகளை பிராமணர்கள் கடைபிடித்து இருந்தால் ஆதித்த கரிகாலனை மட்டும் தான் கொன்று இருப்பார்களா? சரித்திரத்தில் எவ்வளவோ அரசர்களையும் இளவரசர்களையும் கொன்று இருக்க வேண்டும்!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?