ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

        ராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான   உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும்  ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது   ஆட்சியாண்டில்   அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு  "திருவிசலூர் சிவன் கோயிலில்"   நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது!  கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் " என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய,  கே,ஏ.  நீலகண்ட சாஸ்திரிகளும்  'ராஜராஜன்  ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்! 

       ராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம்   முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக...  சோழப் பேரரசு குறித்து  சில  செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

         உலக மாதேவியார்,   பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார்!  இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர்!   ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன்,  கி.பி. 985 - கி.பி.1014  - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு.    (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே,  அதாவது கி. பி. 1012-ஆம் ஆண்டே,   அவனது மகன் ராஜேந்திர சோழன்   ஆட்சி பொறுப்பை  ஏற்றுக்   கொண்டிருந்தான்.)

      ராஜராஜனது   ஆட்சியின் போதே, அவரது மகன் ராஜேந்திர சோழனது தலைமையில் பல்வேறு படையெடுப்புகளை  நடத்தியது, பெரும் வெற்றிகளை குவித்தது. வெற்றியடைந்த நாடுகளில் இலங்கையும், பாண்டிய,சேர, சாளுக்கிய, நுளம்ப பாடி,,கங்கபாடி, கலிங்கம், வேங்கிநாடு, நாவலந்தீவு எனபடும் இந்தோனேஷியா என விரிந்து பரந்து ,  சோழப்பேரரசு உருவானது!

         புலிக்கொடியை உடைய சோழர்படை. வீரத்தை விதைத்து, எதிரி நாட்டின் வளத்தை அழித்து, செல்வம்,பொன்னும்,பொருளும், அப்புறம் பெண்களையும் கொள்ளையிட்டது!  கொள்ளையிட்ட அனைத்தும் சோழப்பேரரசின்  உடைமைகளாக, செல்வமாக,ஆக்கப்பட்டு  சோழப் பேரரசில் குவிக்கப்பட்டது!     சோழர்களின் வலிமையையும், வீரமும், அவர்களது பொருள் வளமும் குறித்து,அவர்களிடம் செல்வம் சேர்ந்தது  குறித்து இப்போது ஒருவாறு புரிந்திருக்கும்  என்று நினைக்கிறேன்!

         அரசாலும் உரிமையை  பரம்பரை உரிமையாக இல்லாதவர்களுக்கு,   அரசாலும் உரிமையை வேள்வி செய்து  பிராமணர்கள் அளிக்கும் உரிமையான,  அரசனை  சத்திரியராக்கும்  "சாதிமாற்ற சடங்கான"  ஹிரானிய கர்ப்பம் புகும்  வேள்வியை   ராஜராஜ சோழனுக்குப்   பார்ப்பனப் புரோகிதர்கள், செய்துள்ளது, மிகபெரிய கேள்வியை சிந்தனையை நக்கு   ஏற்படுத்துகிறது! 

     காரணம்,   பரம்பரையாக  ஆட்சி செய்துவரும்  சோழ மரபில் வந்தவன் ராஜராஜ  சோழன்  எனபது  எல்ல வரலாற்று ஆசிரியர்களும்  அறிந்த உண்மையாகும்!   அப்படி இருக்கும்போது  ராஜராஜனுக்கு, அவன் பட்டத்துக்கு வரும்முன்,  இதுபோன்ற சடங்கைச் செய்திருந்தால் கூட,பரவாயில்லை!  நமக்கு அது குறித்து  எந்தவித  சிந்தனையோ,    சந்தேகமும்ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாமல்  போயிருக்கும்.! அப்படி ஆட்சிக்கு  வரும் சமயத்தில் நடக்காமல், பார்ப்பனர்கள் சாதி மாற்றச் சடங்கை நடத்தாமல்,     ராஜராஜனது அந்திம காலத்தில், அவன் இறப்பதற்கு சிலகாலம் இருக்கும் சூழலில்   இந்த ஹிரணிய கர்ப்பச் சடங்கு நடத்தியுள்ளதற்கு  என்ன காரணமாக  இருக்கும்?  எதற்காக அப்போது  நடத்தப் பட்டது? 

           அதுவும் ராஜராஜனோடு, கூடவே ஆட்சியில் அவனது மகன் ராஜேந்திர சோழன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு,ஆட்சி நடத்திவந்த நிலையில், இந்த சடங்கை  செய்யவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகிறது! 
          பார்ப்பனர்களின்  பொருளாசையால்  தான்     இந்தகைய சடங்கு   நடத்தப் பட்டுள்ளது என்று நினைக்கவும்   தோன்றவில்லை!   ஏனெனில், இத்தகைய சடங்கை  பார்ப்பனர்கள்  பொருளாசையால், அரசனின் ஆதரவு வேண்டும் என்று நினைத்து செய்திருந்தால், ராஜராஜனது ஆட்சி நடந்த  இருபத்து ஒன்பது ஆண்டுகளில்  எப்போதோ,செய்திருக்க முடியுமல்லவா? அப்படிச் செய்யாமல்,அவனது   அந்திம காலத்தில் செய்யவேண்டிய அவசியம்  என்ன?சிதுள்ளதர்க்கு வேறு ஏதேனும் காரணம்  இருக்குமா? 
   
        ராஜராஜன்  ஆட்சி செய்யும் உரிமை படைத்த சாதியான, " சத்திரியர்" சாதி இல்லையா?  அல்லது  ஆட்சி அதிகாரம் செய்யும் உரிமைப் படைத்தது இருந்த,   சத்திரிய சாதியில் பிறந்த  ராஜராஜன், சத்திரிய சாதியில் இருந்து, அதாவது சாதிகளை தருமமாக  வைத்திருக்கும் இந்துமதத்தை அவன் வெறுத்து ஒதுக்கி விட்டு,  பிறமதத்துக்கு  சென்று விட்டானா?

     அவ்வாறு   ராஜராஜன்  செய்திருந்தால் அவன் சென்ற மதம் எது ?  அப்படி சென்றவன் ,  ஏதோ காரணத்துக்காக  தனது அந்திம காலத்தில், தான்   சென்றிருந்த மதத்தில் இருந்து விலகி, மீண்டும் இந்து மதத்திற்கு  வந்ததால்தான் அவனுக்கு  இந்த சாதிய மாற்றச் சடங்கு அந்திம காலத்தில்  நடத்தப்பட்டதா? 

          அவன் அவ்வாறு மீண்டும் இந்து மதத்துக்கு வந்தது உள்ளது,   தன்னிசையானதாக  நடந்ததா? அல்லது    தனது மகனின் வற்புறுத்துதலின் பேரில்  நடந்திருக்குமா? இல்லை   அவனது மகனின் ஆட்சிக்கு  எந்த ஒரு பாதிப்பும் தன்னால் வந்துவிடக் வந்துவிடக் கூடாது  என்பதாலா?  அல்லது வேறு ஏதேனும்   நிர்பந்தத்தால்    மீண்டும் இந்து மதத்துக்கு வந்தானா?
  
      இத்தனைக்கும்  ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே,  அதாவது கி. பி. 1012-ஆம் ஆண்டே,   அவனது மகன் ராஜேந்திர சோழன்   ஆட்சி பொறுப்பை  ஏற்றுக் கொண்டு ,  அரசாண்டு    வரும் சூழலில்  ராஜராஜன்  ஹிரணிய கர்ப்பம்  புகவேண்டிய அவசியம் என்ன வந்தது? 

           ராஜராஜன்,"  தான் வென்றபகுதிகளை,   தனது நேரடியான ஆட்சியில் ஆண்டவன் ஆயிற்றே!   "மக்களாட்சிமுறையில் மண்ணை ஆண்ட மன்னன்"  அவன் என்று படித்து இருக்கிறோமே!?    குட ஓலைத் தேர்தல்  கொண்டு வந்தவன்  அவன்தான் என்று  வரலாறு புகழ்கிறதே? !  நிலத்தை அளந்து,  முறைப் படுத்தியவன்  அவன்தான் என்பதால் தானே?  "உலகத்தை அளந்தான்"   என்று பட்டம் அவனுக்கு உள்ளதாக வரலாறு குறிப்பிடுகிறது!
        அப்படி உலகத்தை அளந்த ராஜராஜனை,  மூன்றடி மண்கேட்டு, மன்னனின்  தலையில் ஊன்றி...( வாமன அவதாரம்)  நாட்டை அபகரித்த  கதையைச் சொல்லும்  பிராமணர்கள்'   முட்டாளாக்கி விட்டார்களா?  ராஜராஜன் முட்டாள் ஆக்கப்பட்டது தான் உண்மையா?சோழர் ஆட்சியில்   என்ன நடந்தது? ராஜராஜனுக்கு நடந்தது என்ன? எனபது   எனது  சந்தேக வினாக்களாகும்!

      சோழரது ஆட்சி குறித்து,  சுமார் பத்து ஆண்டுகள்  ஆய்வு செய்யும் சூழ்நிலையில்,  எனது  சந்தேக  வினாக்களுக்கு     கிடைத்த விடைகளும், விளக்கங்களும்,  அதிர்ச்சியூட்டும்  ரகங்கள்.!   பல நூறு கிரைம் நாவல்கள், திகிலூட்டும்  பயங்கரங்கள்,  நம்பவே முடியாத  உண்மைகள்,என்று சொல்லலாம்!   அப்போது நடந்த  உண்மைகள் பலவும் சோழ சாம்ராச்சியத்தின்  வரலாற்றில் இருந்து,   பல்வேறு தருணங்களில் பலராலும்  கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு உள்ளதை   அறிந்து கொள்ள முடிந்தது!தொடர்ந்து மறக்கப் பட்டும் வருவதையும் உணரமுடிந்தது !

        எனது  இத்தகைய என்னத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை!  சொல்றது ஆட்சியை  பற்றிய ஆய்வு  செய்தவர்கள், வரலாற்று ஆசிரியர்கள்  பலரும் ஒருச்சர்பாகவே  பதிவுகளைச் செய்து இருந்ததை  அறிய முடிந்தது!  அவர்கள் அனைவரும்  கீழே வரும்  நிகழ்சிகளை பற்றி தெளிவு படுத்தாமல்  எழுதி வந்துள்ளனர்  அவர்கள் தெளிவு படுத்தாத  பகுதிகள் இவைகள்தான்!  

         ராஜராஜனது இளமைக்காலம் பற்றிய  மேலோட்டமான பதிவு ஏன்? ,  ராஜராஜனின் அண்ணன்,    ஆதித்த கரிகாலன் படுகொலை நடந்ததுக்கு என்ன காரணம்?  கொலையை செய்தவர்கள்  பார்ப்பன  பிரம்மராயர்கள், பார்ப்பன அதிகாரிகள்  எனபது தெரிந்தும் அதனை ஏன்  குறிப்பிடுவதை தவிர்க்கின்றனர்?
   அமரர் கல்கி, மாய்ந்து மாய்ந்து  "பொன்னியின் செல்வன்  எழுதியதற்கு  காரணம்  கொலை செய்த பிராமணர்களை காப்பாற்றவா? தங்கள் இனத்தின் மீது உள்ள பழியை  திசை திருப்பவா?"     உத்தமசோழன்  எப்படி ஆட்சிக்கு வந்தான்? உத்தம சோழனின் தாயார், எப்போது திருவயிறு வாய்த்த பிராடியானார் ஆனார் ?  

          ராஜராஜன் தந்தை சுந்தர சோழன்  காஞ்சி அரண்மனையில்  இறந்ததாகவும் அதனால் அவரை, "பொன்மாளிகை துஞ்சிய தேவர்"  என்று  அழைக்கப் படுகிறார்  என்றும் சொல்கிறார்களே! சுந்தர சோழன்  இருந்த்து   காஞ்சி அரண்மனையா? அரண்மனை சிறையிலா? சுதந்திரமாகவா? அல்லது   சுந்தரசோழன் சித்தரவதைப் படுத்தப்பட்டு, கொல்லபட்டானா/ இறந்தானா? 

          ராஜராஜன்,ஆதித்த கரிகாலனின்  சகோதரி குந்தவை நாச்சியார்  என்னவானார்? அவளது கணவனாக சொல்லப்படும்   வந்தியத்தேவன் நிலை என்ன?  அவன் எப்போது, எங்கு இறந்தான்? 

     ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி,கணவர் இறந்தவுடன்    எரியும் நெருப்பில்  விழுந்து உயிரைத் துறந்ததாக  சொல்கிறார்களே?  அவரே விரும்பி அப்படி  செய்தாரா? அல்லது (பார்ப்பன) சதியா? 
  
         ராஜராஜனின் இளமைகாலம் பற்றி எப்படி தெரியாமல் போனது? ஏன் அதைப் பற்றி யாருமே  சரியாக சொல்லுவதில்லை?  ஆய்வு செய்வதில்லை ? அவனது சரித்திரம் கூறும் நூல்கள் என்னவானது?  அவனது ஆட்சி காலத்தில்  ஆக்கப்பட்ட பிற சமய நூல்கள் பலவும் இன்றுவரை கிட்டாத நிலைக்கு என்ன காரணம்?

             தமிழர்களின் வரலாற்றை   பல வரலாற்று ஆய்வாளர்களின் மேலோட்டமான  ஆய்வும்,  பட்டும் படாமலும்,  அவர்கள் விட்டும், தொட்டும் செல்லும் இடங்களும்,  தமிழர்   வரலாற்றில் நடந்த...   கசப்பான உண்மைகளை, நமக்கு சொல்லாமல் மறைக்கும்..இடங்களாகும்!  ,  அவர்கள் வெளிச்சமிட விரும்பாத இடங்களில் தான் நமது உண்மையான வரலாறு உள்ளது!
 
     
               சோழரது ஆட்சி குறித்து,  சுமார் பத்து ஆண்டுகள்  ஆய்வு செய்யும் சூழ்நிலையில்   எனக்கு ஏற்பட்ட  சந்தேகங்களும்  அவைகளுக்கு  கிடைத்த விடைகளும், விளக்கங்களும்,  அதிர்ச்சியூட்டும்  ரகங்கள்.!  பல நூறு கிரைம் நாவல்கள், திகிலூட்டும்  பயங்கரங்கள்,  நம்பவே முடியாத  பல உண்மைகள்,   சோழ சாம்ராச்சியத்தின்  வரலாற்றில்   இருந்ததை அறிய முடிந்தது! அவைகள் யாவும்" பார்ப்பனர்களின் பாசிச அரசியலை" சார்நதவையாக இருப்பதையும் அறிய முடிந்தது!

       நம்மில் பலரும் இதனை    அறியமுடியாமல்  உள்ளதற்கு  காரணம்,      வரலாறு  தொடர்புடைய   பலவற்றையும்  "அவாள்களே"   கோயில், கல்வெட்டு துறை, தொல்லியல் துறை,அருங்காட்சி அகங்கள்,ஆவண   காப்பகங்கள்  என்று எங்கும் வியாபித்து  பரவி இருந்ததால் தான்! 
   அவர்களது, கடந்த காலத்தை, மோசடிகளை  நாம் அறிந்து கொள்ளக் கூடாது என்பதால் தான்!

  சோழர்களின் இளவலான ராஜேந்திர சோழனுக்கு தங்களது இனத்துப் பெண்ணான, "பரவை நாச்சியார்"  என்ற அழகிய பெண்ணொருத்தியை             " காமக்கிழத்தி"    அதாங்க...,  "ஆசை நாயகி"ன்னு  சொல்லுறாங்களே,  அப்படி  ஆனதன்   மூலம்.,  ஆக்கியதன் மூலம்,  அவர்களது உறவை அனுமதித்து  மூலம், அங்கீகரித்ததன் மூலம்! என்ன நடந்தது தெரியுமா?

       சோழர்கள் பிற நாட்டோடு  போர் தொடுத்து,  போராடி, உயிர்கொடுத்து, பிற நாட்டினரின் (பிறரின்) உயிரை எடுத்து,  கைப்பற்றிவந்த  செல்வதை, போராடாமல், எந்தவித சிரமமும் இல்லாமல்   எளிதாக  பிராமணர்களால்  கைகொள்ள முடிந்தது.?

        ( பரவை நாச்சியார்-ராஜேந்திர சோழனது  காதலைப் பற்றி சமயம் வாய்க்கும்போது,பிறிதொரு தருணத்தில் பார்ப்போம்)

      நமது உண்மை வரலாற்றை  கொஞ்சம் கொஞ்சமாக, அழித்தும், சிதைத்தும், மாற்றப்பட்டும் மறைக்கப் பட்டும்  வரும் நிலை  உள்ளது!     .தொடர்ந்து மாறுதல்   செய்யபட்டுவரும் நிலையும்   உள்ளது!
   
       சோழ அரசின்  வரலாறை சொல்லுவதும், வரலாறைத் திருத்துவதும் எனது நோக்கம் அல்ல. சோழர்களது ஆட்சியில்  நடந்த சமயப் புரட்சி பற்றி கூறுவது,  சோழ அரசில் இஸ்லாம் சமயத்தின் பங்கும், இஸ்லாமியர்களின் பங்களிப்பு தொடர்பான  பதிவுகள் அவசியம் என்று கருதுகிறேன்!


     இன்றைய, "இஸ்லாம்-இந்துத்துவ "  மோதலுக்கு   அவையும் காரணமாக இருக்கக் கூடும் என்பதால்!      பார்ப்போம்! 
Comments

 1. பதிவுக்கு நன்றி
  நட்புடன்
  மூன்றாம் கோணம்

  ReplyDelete
 2. i am astounded by the things u have said here,, to know that our history has been darkened from us makes me squeal,, i appreciate ur quest for seeking truth and knowledge ,, looking forward to more on this topic from;-)

  ReplyDelete
 3. சகோ ராஜன்,

  உங்கள் பதிவுகள் மிகவும் விறு விறுப்பாகச் செல்கின்றன. உண்மையில் அடுத்த பதிவு எப்பொழுது என்று காத்திருக்கிறேன். சோழப் பேரரசில் இஸ்லாம் என்ற வார்த்தையே இப்பொழுதான் படிக்கிறேன்.

  ReplyDelete
 4. வரலாறு என்பதே ஒரு திகில் கதைதான்... மேலும் தொடர்ந்து வர உள்ளேன்...

  ReplyDelete
 5. i am astounded by the things u have said here,, to know that our history has been darkened from us makes me squeal,, i appreciate ur quest for seeking truth and knowledge ,, looking forward to more on this topic from;-)

  ReplyDelete
 6. அன்பு சகோதரரே தொடர்ந்து எழுதுங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

  பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட போகிறீர்கள் என்று நினைக்கிறேன் எதிர்ப்பு இப்போதே ஆரம்பித்து விட்டது பாருங்கள் அதுக்குள்ளே மைனஸ் ஓட்டு யாரே போட்டு அதை உறுதிபடுத்தியிருக்கார் தொடருங்கள் சகோதரரே நானும் தொடர்கிறேன்

  ReplyDelete
 7. தொடருங்கள் சகோதரரே நானும் தொடர்கிறேன்

  ReplyDelete
 8. ஐயா,

  நல்ல கேள்விகள்... நல்ல தேடல்கள்

  சோழர்கள் இசுலாமுக்கு மாறி பார்ப்பனர்களின் சதியால் மீண்டும் சைவத்திற்கு வந்தனரோ !

  கிருத்துவத்தின் பங்களிப்பு ஏதேனும் உள்ளதா?
  அப்படியே சமண பௌத்த மதங்களின் நிலை பற்றியும் முடிந்தால் விளக்குங்கள்.
  நன்றி

  ReplyDelete
 9. ஐயா
  ஒரு சந்தேகம்
  ஜாதியை அல்லா உருவாகியதாக ஒரு பதிவிட்டுள்ளேன்
  முடிந்தால் படித்து பாருங்கள்.

  //"மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13 //
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/02/blog-post_07.html

  எனக்கு என்ன சந்தேகம் என்றால்
  இந்த ஜாதி மேட்டர் இசுலாமில் இருந்து இங்கு வந்ததா அல்லது இங்கே இருந்து அங்கே போனதா அல்லது இரண்டும் ஏதேச்சையாக நடந்து இருக்குமா?

  நன்றி

  ReplyDelete
 10. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
  அன்பின் ஓசூர் ராஜன்,
  மறைக்கப்பட்ட வரலாறுகளை தோண்டி எடுப்பதற்கு அதுவும் ஆதாரத்துடன் எடுப்பதற்கு அதிகமதிகம் முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய முயற்சியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள். வரலாற்றின் மற்றொரு பக்கத்தையும் காண மிகவும் ஆவலாக உள்ளேன். தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 11. பார்ப்பனர்கள் சொல்லுவதை எல்லாம் சத்திரிய மன்னர்கள் அப்படியே கேட்டார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட சத்திரிய மன்னர்களோடு பார்ப்பனர்கள் முறையாக சம்பந்தம் வைத்துக் கொண்டு (தங்கள் வீட்டுப் பெண்களை மனம் செய்து கொடுத்து நேரடியாகவே ஆட்சியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறதே அப்படி ஏதாவது சரித்திரம் இருந்தால் அதைப் பற்றியும் எழுதலாமே? (இப்போது பிரியங்கா காந்தியைக் கைப்பிடித்து ராபர்ட் வதேரா அரசியலில் குதிக்கத் துடிப்பது போல அல்லது ராகுல் காந்தியை கைப்பிடித்ததின் மூலம் இந்தியாவின் சக்கரவத்தினியாகத் திகழும் சோனியா அம்மையாரைப் போல)

  ReplyDelete
 12. "சோழ அரசில் இஸ்லாம் சமயத்தின் பங்கும், இஸ்லாமியர்களின் பங்களிப்பு தொடர்பான பதிவுகள் அவசியம் என்று கருதுகிறேன்!"

  ஹி ஹி..இப்போ தான் புரியுது இதுக்கு ஓட்டு ஏன் அதிகமா இருக்குன்னு : )

  செலக்டிவ்வா ஹிஸ்டரி படிக்கிற பழக்கத்தை சிலர் எப்பொழுது தான் மாத்திப்பாங்கன்னு தெரியல...

  ReplyDelete
 13. i am asking the same questions. Ponniyin Selvan' is an utter waste cock and bull story. Just because , kalki was a brahmin the totally foolish, imaginary novel was given a big big hype and made [MADE ] popular, like the movies of today.
  In fact, Sandilyan referred to so many books and went to the historical places and wrote 'HISTORICAL ' novels in the true sense. But he was not given the right place.
  In fact when I was a school student, I read ponniyinselvan, in the magazine KALKI and at the end readers raised so many doubts and demanded clarification from kalki. But he could not give any authentic answer.
  I REQUEST YOU TO CONTINUE YOUR RESEARCH AND GIVE A TRUE HISTORICAL PICTURE.
  KARTHIK+AMMA

  ReplyDelete
 14. கல்கியின் கற்பனயைவிட உங்கள் கற்பனை நன்றாக (!) உள்ளது!

  ReplyDelete
 15. "பொன்னியின் செல்வன் எழுதியதற்கு காரணம் கொலை செய்த பிராமணர்களை காப்பாற்றவா? தங்கள் இனத்தின் மீது உள்ள பழியை திசை திருப்பவா?"

  முட்டாள்தனமான கருத்து..
  கல்கி பிராமணர்களை காப்பாற்ற நினைத்து இருந்தால் அவர் கரிகாலனைக் கொன்றது 'இவர்தான்' என்று யாரையாவது குறிப்பிட்டு இருப்பார்!
  நம்மில் பெரும்பன்மயனவர்களுக்கு பொன்னியின் செல்வன் படித்து தான் ஆதித்த கரிகலனையும் வந்தியதேவனையும் தெரியும்.. அப்படி இருக்கையில் அவர் ஏன் நமக்கு கரிகாலனையும், கரிகாலனின் கொலையை அறிமுகப்படுத்த வேண்டும்?
  உங்களை விட கல்கி நம்னகத்தன்மை மிகுந்தவர்.. உங்களது பதிவை விட 'பொன்னியின் செல்வன்' அதிக நம்பிக்கைக்கு உரியது!

  ReplyDelete
  Replies
  1. கல்கிமீது குற்றம் சாட்டியமுதல் ஆள்

   Delete
 16. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற போக்கு தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது குறிப்பாக மத விடயத்தில், சோழர்காலத்தில், சைவம் வைணவம் எனும் இரு பெரும் சமய நூல்களும்(மதம்) தொகுக்கப்பட்டிருக்கின்றன, மேலும் இஸ்லாம் மதத்தை தழுவ தெரிந்து கொள்ள மொழியும் ஒரு தடையாக இருந்த காலம் அது வென்பதையும், அரேபி முரட்டுக் கூட்டத்தினர் மதப்பிரச்சாரம் செய்யாத காலம் அதபு என்பதையும் தங்கள் மதத்தை ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தே பரப்பியவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும், நடுவுநிலையான வரலாறு மதம் சார்ந்து யாராலும் இயற்றமுடியாது.....கிறித்துவம்,இஸ்லாம் மதங்கள் தோன்றிய பின் அவை மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே பரவின, அதிலும் இஸ்லாம் பிரச்சாரத்தினால் மட்டுமே பரவியது என்பதை ஏற்கவும் முடியாது, மொகலாயர்கலுக்கும் முன் இந்தியாவிற்கு மதப்பிரச்சாரத்திற்கு வந்த இஸ்லாமியத்தலைவர் யார் என்னும் கேள்வியை இப்பதிவு கேட்க வைக்கிறது......

  ReplyDelete
 17. தெளிவில்லாத பேற்றல்

  ReplyDelete
 18. nenga ena than sola varinga? onume purila sambathame ilama history solathinga

  ReplyDelete
 19. please provide 'follow by mail' option.
  thank you,
  kalakarthik

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?