இந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி!

        இந்துமதத்தின்  பாராட்டுதல்களுக்கும்,போற்றுதலுக்கும் உரியவராக சத்திரபதி சிவாஜியை  பார்ப்பனர்களும், பார்பனீயத்தின் வழித் தோன்றல்களும் உயர்த்திப் பிடிப்பதை ஓரளவு அரசியலை கவனிப்பவர்களும் கூட அறிந்திருக்க முடியும்.!    ஆதாயம் இல்லாத எந்த காரியத்தையும்  பார்ப்பனர்கள் செய்வதில்லை.! அதுபோலவே தங்களது மேன்மைக்கு,இன நலத்துக்கு ஆதயமற்ற,,பயனற்ற   பிறமக்களை,பிற சாதியில் பிறந்தவர்களை ,அவர்கள் எத்துணை  உயர்ந்த மனிதராக இருந்தாலும், உயர்பொருப்புகளை வகித்தாலும் பாராட்டும் வழக்கம்,அவர்களுக்கு இருந்ததில்லை! 

        இத்தகைய பிறவி குணமுள்ள  பார்பனர்கள்,  பிற சாதியில் பிறந்த, அதுவும் மலைபகுதியில் பிறந்து வளர்ந்த  சிவாஜியை  மட்டவர்களைக் காட்டிலும்  அதிகமாக போற்றுகிறார்கள்,புகழ்கிறார்கள்  என்றால் அதற்கு காரணம் இல்லாமலில்லை!  சத்திரபதி சிவாஜியின் ஆட்சியானது  சூத்திரரான, முஸ்லிம்களின் ஆட்சிக்கு எதிராக, புதிதாக உருவான  ஆட்சி  என்பதும் இல்லை! முஸ்லிம் சக்கரவர்த்தி  ஹவுரங்கஜெபை எதிர்த்தும், அவரது ஆட்சிக்கு உள்ளிருந்த நிலபகுதிகளில்  சில பகுதிகளை  பிடித்தும்  சுதந்திரமாக ஆட்சி செய்தார் என்பதும் இல்லை! அவரது சுதந்திர உணர்வு, வீரம், ஆகியவைகளுக்காகவும்  பார்ப்பனர்கள் போற்றிவரவில்லை!  

        சத்திரபதி சிவாஜி  சத்திரிய குலத்தில், அரசாலும் தகுதியுள்ள  சாதியில் பிறந்தவர் இல்லை  என்பதால்,  போராடிப் பிடித்த அவரது  நிலபகுதிகளை  சுதந்திரமாக ஆளவிரும்பி, அரசனாக முடிசூடிக் கொள்வதையே  அப்போது எதிர்த்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள்! அதையும் தங்களது ஆட்சி அதிகார  வழிமுறை நூலான  மனுதரும சாஸ்திர நூலைக்காட்டி  சிவாஜி அரியணை ஏறுவதை தடுத்துவந்தார்கள்!

      "நசூத்திர  ராஜேயே  நிவஷேந
         நதார்மிக ஜனாவ்ருதே;
      நபாஷண்டி  ஜனாக்ராந்தே 
          நாபஸ்ருஷ தேந்த்ய ஜென்த்ருபே "  - என்று மனுதருமம்  கூறுகிறது.

      அதாவது "சூத்திரன் ஆட்சி செய்யும் நாட்டில் குடியிருக்கக் கூடாதாம்."  இது மட்டும் இல்லை. எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாக இருக்கிறானோ அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப்போல  பார்த்துக்கொண்டு இருக்கும்போதே  அழிந்துபோகும் என்றும்  பார்ப்பனர்கள் விதிவகுத்து இருந்தார்கள்!

        எனவே சிவாஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், அரசனானால், அவரது நாட்டை விட்டே போய்விடுவதாக, பிறகு அந்த நாடு  சுடுகாடாகிவிடும் என்றெல்லாம் கூறி கலகம் செய்தார்கள்  மக்களிடம் .குழப்பம் விளைவித்தார்கள்.!

        அப்படிப்பட்ட பிராமணர்கள்  இன்று,  சத்திரபதி சிவாஜியை போற்றும் பிராமணர்கள், அதன்பிறகு" காசி காகபட்டரை"  அழைத்துவந்து, சிவாஜியை "யாகவேள்விமுன்"  உட்காரவைத்து, சத்திரியனாக...  அதாவது அரசாலும் தகுதி உடையவனாக,   மாற்றினார்கள்!  "யாகவேள்வி" மூலம் சிவாஜியின் சாதியை  மாற்றியதால் அவரது பிறந்த சாதி,  "அக்கினிகுல சத்திரியர்"  சாதியாக  மாறியது!  
    
           இந்த  சடங்குக்கு..   சிவாஜி, எல்லா பார்ப்பன புரோகிதர்களுக்கும்  லட்சகணக்கில்  பொன்னும் பொருளும் கொடுத்து,அவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டியதாயிற்று.!
 
             அதன் பிறகு சிவாஜியின் ஆட்சி  முற்றாக, முழுதாக  பார்பனர்களின்  ஆட்சியாகவே பரிணமித்தது! பார்ப்பனர்களின் பாசிச ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் வழிகாட்டுதல்களின் பேரிலேயே  சத்திரபதி சிவாஜியின் ஆட்சி  நடந்ததால்தான்  இன்றும் பார்ப்பனர்களும் மனுதரும வாதிகளும்  அவரைப் போற்றி வருகிறார்கள்! 

          சூத்திரர்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது  என்று மனுதர்மம் விதித்திருக்கிறது என்று முன்பே  குறிப்பிட்டு இருக்கிறேன் அல்லவே? அப்படி மனுதருமதிற்கு எதிராக  வேதம் அறிந்த, ஞானம்   உள்ள பார்ப்பனர்கள்  அல்லாதவர்களை  சத்திரபதி சிவாஜியின் ஆட்சி  கொடூரமாக தண்டித்து!
    
           ஹவுரங்க ஜெப் ஆட்சியில், இந்து மக்களான  அனைத்து மக்களுக்கும்  கல்விபயில  எந்தவித நிபந்தனையும் விதிக்கப் பட்டு இருக்கவில்லை! யாருக்கு எதைப் பற்றி படிக்கவேண்டுமோ, அறிந்துகொள்ள விருப்பமோ, அவர்கள் படித்து அறிந்துகொள்ள  முடிந்ததால், பிராமணர்கள் அல்லாத, வேறு சாதியைச் சேர்ந்த, நாற்பது பண்டிதர்கள் வேத சாஸ்திரங்களைக் கற்று அறிந்திருந்தனர்! 

        சத்திரபதி சிவாஜி ஆட்சி வந்ததும், ( சிவாஜிதான் பார்ப்பனர்களின் பாசிசத்துக்குள்  அடைகலம் ஆகிவிட்டாரே!) மனுவின் சட்டத்தை சிவாஜிக்கு எடுத்துக் காட்டி  அந்த நாற்பது பேர்களையும் கொல்லச் செய்தனர்!  இன்று அஹிம்சா மூர்த்திகளின் மதமாகவும், அன்பே கடவுள் என்று இந்து மதம் போதிப்பதாகவும்  சொல்லுகிற  பார்ப்பனர்கள்!

           அதோடு  முடியவில்லை... அன்பை போதிக்கும், ஜீவகாருண்யம் பேசும் பார்ப்பனர்களின் பாசிசக் கொடுமைகள்... அநியாயமாக  பார்ப்பனர்களின் மோசடி நூலாலும், சதியாலும் கொல்லப்பட்ட அந்த நாற்பது பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,  எழுநூறு பேர்களும் அரசனான சிவாஜியிடம் பொய் தங்களது உள்ளக் குமுறலை, துன்பத்தை தங்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அநீதியை சொல்லி முறையிட்டார்கள்! 

         அரசன் சிவாஜிதான்  பார்ப்பனர்களின் மனுதருமச் சட்டத்தை அடிபிறலாமல் அப்படியே நடைமுறைப் படுத்தும் "இந்துமத காவலர்" ஆயிற்றே!?     அவர் மட்டும்  எப்படி அவர்களது துன்பத்தை  உணருவார்?  அதனால்,  நீதி கேட்டு போன.. அந்த  எழுநூறு பேர்களும்  பிராமணர்களின் வேண்டுகோளை ஏற்று  வெட்டி எறியச் சொன்னபடி,, அவர்களை வெட்டியெறிய சொன்னார்! எழுநூறு பேர்களும் வெட்டிஎறியப்பட்டனர்.!

      இது மகாராஷ்டிரத்தில் நடந்தது! நமது தமிழ் நாட்டில்  திருமலை நாயக்கர் களத்தில் பார்ப்பன குருவே  அரசனாகி   கொடுத்த தண்டனையையும் மற்றவைகளையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்!


 
  

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. தங்கள் கட்டுரைக்கு ஆதார நூல் ஏதேனும் தந்தால் பயனாய் இருக்கும் .

  ReplyDelete
 3. முஸ்லிம்கள் சூத்திரர்கள் என்று யார் சொன்னது? ஏதேனும் ஆதாரம் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. intha katturaye adharamattrathu....ippadi oru sambavam nadanththarkke aadharam illai...

   Delete
 4. ITHU ORU APPATTAMAN POY...MUZHUKKA MUZHUKKA THAVARANA SEITHIGALAI KONDA ORU KATTURAI...SHIVAJI MAHARAJ AVARAGL ORU BODHUM SAADHI-MADHA VERUPATTAY POTTRAVILLAI...AVARIN ETHIRIYANA AURANGAZEBUM MATTRA PORTUGUESE, ANGILEYAR PONDRA ETHIRIGALUM KUDA AVARAI PAARAATIYE EZHUTHI ULLANAR...THAANGAL KURIYATHAIPOL SHIVAJI RAJA ANEETHIYUDAN PARPANAR ALLATHAVARAI DHANDITHATHARKKU ORU AADHARAMAVADHU UNGALAL KODUKKA MUDIYUMA ?? VERUM ISLAMIYA MATHAVERIYAIUM KODURAMANA AURANGZEBIN SEYALAIYUM NYAYAPADUTHUVATHARKAGAVE ITHAGAIYA KEVALAMANA SEYALAI SEIGIREERGAL ENBATHU NANDRAGAVE PURIGIRATHU..... UNMAIYANA VARALATRU ASIRIYARGAL INTHA VISHAYATHAI ETHIRKKA VENDUM...THAN PADAYIL ULLA MUSLIMGALUKKU MASOODHI KATTUVATHARKENDRE THANI IDANGALAI OTHUKKI KODUTHAVAR SHIVAJI RAJA...THAVARU SEITHA PARPANARGALAANA KRISHNAJI BHASKAR, SHAMRAJ RANJEKAR PONDRORGALAI KARUMAYAGA THANDITHAVAR...SAATHI MATHA ELLAIGALAI KADANTHU "MARATHIYA MANNAI ANNIYARGAL PIDIYILERNTHU MEETPATHARKAGA ANAIVARAYUM ONDRU THIRATTI PORADIYA MAAVEERAR...

  ReplyDelete
 5. pls dont write any unwanted an wrong things in the public wht u knw about the maharaj have u ever come accross the life history books and history about themaharaj pls remove the blog

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?