பார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்!

           பார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும் மிகவும்   கொடூரமாகவும்,   மனிததன்மை அற்ற  வகையிலும்  இருந்தது.  சாதிக்கு ஒரு நீதியை கடைபிடித்த பார்பனர்கள் தங்களது இன நலத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மட்டும் கருத்தில் கொண்டு  செயல்படவில்லை. தொடர்ந்து தங்களது வழித் தோன்றல்கள்,சந்ததிகள்  சுக போகமாக  வாழவும் பிற சாதியினரை தங்களது கட்டுப்பாட்டில், அடிமைகளாக வைத்து வரவும்  தேவையான  சட்டங்களை மனுதரும சட்டங்கள்  என்ற பெயரில் வைத்து இருந்தனர். 

    இந்த கொடுமையான சட்டங்களை  நேரடியாகவும், மன்னர்கள் துணையுடனும், அமல் படுத்தி  இதர சாதியினரை  தண்டித்து வந்தார்கள். அதிலும் சூத்திரர்கள்  சாதியினர்  பார்பனர்களின் கொடுமையான தண்டனைக்கு ஆளானதுடன்  எந்த வித உரிமையும் இன்றி  அடிமைகளாகவே   நீடித்துவரும் நிலையை ஏற்படுத்தி இருந்தனர். 

        உழைக்கும் மக்களான, இந்தியாவின் மண்ணின் மைந்தர்களான,     சூத்திரர்களுக்கு பார்ப்பன பாசிசம்  வழங்கிய தண்டனைகளும் அனுமதித்த வாழ்வும் சொல்ல தரம் அற்றதாக இருந்தது. நரகம் என்பார்களே அதற்க்கு ஒப்பானது!

  " தர்மோபதேசம் தற்பேண 
   விப்ராணா  மச்யகுர்வத
   தப்த மாஸே சயேத்தைலம் 
   வக்த்ரே  ஹ்ரோத்ரே சபார்திவ " - மனு 


   "  பிராமணனுடைய பெயரையோ,அவனது குலப் பெயரையோ கேட்கிற சூத்திரனுடைய வாயில் பத்து அங்குல அளவுள்ள இரும்பாணியை பழுக்க காச்சி செலுத்தவேண்டும்." எண்ணிப் பாருங்கள், பிராமணனைப்  பிறந்த ஒருவனுடைய பெயரைக் கேட்டாலே சூத்திரனுக்கு கொடுக்கும் தண்டனையை! பிராமணனுக்கு  ஒழுக்கத்தை  போதிக்கும் சூத்திரனது காதுகளில் எண்ணையைக் காச்சி விடவேண்டுமாம். 

      ஏனெனில் பிராமணனுக்கு ஒழுக்கம் எனபது  அவனது  மனதின் எண்ணத்திற்கு தகுந்தவாறு  நடந்து கொள்வது ஆகும். அவனுக்கு  சூத்திரனானஉழைக்கும் மக்கள் அறிவுரை கூறுவது  தவறு எனபது பிராமணர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. எந்த வித கேள்வியும் கேட்காமல், பிராமணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு அடிபணிந்து  சேவை செய்ய வேண்டும்! 

      அதேபோல அவன் தரும் உணவு,உடை, ஆகியவைகளே அவன் கூலியாகபெறவேண்டும் .  கிடைக்கும்  அதுபற்றியும் அவன் மூச்சு விடக் கூடாது.ஏன்னெனில் சூத்திரனை  கூலி கொடுத்தாவது,இல்லாவிட்டாலும்  வேலை வாங்கலாம். ஏனென்றால்,பிராமணனுக்கு பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரனை  சுயம்புவாக (பிரம்மா) படைத்தது இருகிறாராம்!
 
       "சூதிரந்து  கார்யேத் தாஸ்யம்  கிரீதமக்ரீ  தமேவவா;
       தாச்யாயைவஹீ  சிருஷ்டோ சௌப்ராஹ் 
       மனஷ்ய சுவயம்புவா "  என்று மனுவின் ஆட்சி சொல்லுகிறது!
    
       அதுமட்டுமல்ல... அப்படியே சூத்திரனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றாலும் பார்ப்பன பாசிச ஆட்சியாளர்கள்  என்ன கொடுக்கவேண்டும் தெரியுமா? 

    சூத்திரனுக்கு எச்சிலும்,கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு,  பதரும் வைக்கோலும் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறது!

     இப்படியெல்லாம் நடக்குமா? நடந்ததா? என்று சிலருக்கு சந்தேகம் தோன்றலாம்.

        இந்தியாவை ஆங்கிலேயர்கள்  கைப்பற்றி ஆட்சி செய்யும்வரை..  பெரும்பாலும் இப்படிதான் பார்பனர்களின்  மோசடியால்.. மூட நம்பிக்கை, சாஸ்திரம், சனாதனம், சாத்திய கொடுமைகள்  ஆகியவைகளை  இந்துமத்தின் பெயரால்  நடத்தப் பட்டு வந்தது. பின்னணியில் பார்பனர்களின் மனுதரும சட்டமும் பாசிசமும் இருந்துவந்தது.
      
    இது போன்ற கொடுமைகளை  எதிர்த்து யாரும்  பிராமணர்களையோ, பிராமண ஆச்சாரியார்களின் பேச்சைக் கேட்டு  ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களையோ , கேட்டுவிட முடியாது!  காரணம் அப்படி எதிர்த்து கேட்பவர்களுக்கு  என்ன தண்டனை  தெரியுமா? 


      அதாவது உரிமைக்கு குரல் கொடுத்தால், உரிமையை கேட்டு  போராட்டம் நடத்தினால்  அல்லது, பாசிச ஆட்சியாளர்களான  பிராமணர்களுக்கு  ஏதேனும் பிரச்னை ஏற்படுத்தும் எண்ணம்  இந்த உழைக்கும் மக்களுக்கு, இந்திய மண்ணின் மைந்தர்களுக்கு, வந்துவிட்டால்  என்ன செய்வது ?என்று நினைத்து ,  அத்தகைய காரியத்தை தடுக்கவும்,  ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவும், மற்றவர்களுக்கு அத்தகைய எண்ணம் வரக் கூடாது  என்ற எச்சரிக்கை ஆகவும்  கொடுக்கப்பட்ட தண்டனைகள்  கீழே வருபவைதான்!

      " சூத்திரன் உயர் குலத்தோனை  எந்தெந்த உறுப்புகளை துன்புருத்துகிறானோ, அவனது அந்தந்த உறுப்புகளை வெட்டி ஏறிய வேண்டுமாம்! அதாவது அடிக்க கையை ஓங்கினால்  கையையும், உதைக்க காலைத் தூக்கினால்  காலையும்  வெட்டி விடுவதுடன், எச்சில் துப்பினால் உதடுகளை அறுக்கவும், உயர்ந்த சாதியான்  உட்காரும் ஆசனத்தில்  உட்கார நினைத்தால்  அவனது பின்பகுதியையும்  அறுத்து எறிய வேண்டும் " என்கிற காட்டுமிராண்டி சட்டத்தை  நிறைவேற்றி வந்தார்கள்!

          அதுமட்டும் இன்றி பிராமணன் அருகில் இருப்பதை கவனிக்காமல் கூட மூத்திரமோ,மலமோ கழித்தாலும் அதற்குரிய அங்கங்களை துண்டிக்க வேண்டும் என்றும், சட்டங்களை வைத்து நிறைவேற்றி வந்தார்கள்! 

          மறந்தும் கீழ் ஜாதியினர் வேதம் படிக்க கூடாது, கல்வியறிவு, ஞானம், பெற்றுவிடக் கூடாது என்பதில் கடுமையான நடைமுறைகளை  பின்பற்றிவந்தனர்.  அதனை மீறுபவர்களை எப்போதும் மன்னிக்கவே இல்லை பிராமணர்களின்  பாசிச ஆட்சி!

      இன்று மனித நேய காவலர்கள் ஆகவும், சாதுக்கள் ஆகவும், சத்திய சீலர்கள் ஆகவும், அகிம்சை,ஜீவகாருண்யம் என்று வேடம் போடும்  பார்பன பாசிஸ்டுகள்  செய்த கொடுமைகளை மறைத்தும், திரித்தும், தங்களுக்கும் அத்தகைய கொடுமைகளுக்கும்  சம்பந்தமே இல்லை எனபது போலவும் காட்டி வருகிறார்கள்! தவிர அத்தகைய கொடுமைகாரர்களாக  
சூத்திரர்களான  தலித்துகளையும், முஸ்லிம்களையும்  இன்று  காட்டி வருகிறார்கள்! 

         வேதத்துக்கு பொருள் கேட்டதற்கு  திருமலைநாயக்க மன்னனது செங்கோலை ஒரு முகூர்த்த நேரத்துக்கு மட்டும்  கொடுக்குமாறு  கேட்டு பெற்று, அரசனது குருவாக இருந்த  பிராமணன்  கொடுத்த தண்டனை, சிவாஜி  மகாரஷ்ட்ரிராவைஆண்டபோது, வேதம் படித்த  பார்ப்பனர்  அல்லாத  நாற்பது பேர்களையும் படுகொலை செய்த செயலையும், நீதிகேட்ட அவர்களது உறவினர்கள்எழுநூறு பேர்களையும்  கொன்ற கொடூரத்தையும் சேர்த்தே, பார்பனர்களின் தண்டனைகளையும்  நீதியையும் அடுத்தப் பதிவில் பார்க்கலாம் ! 
    

Comments

 1. rajan nalla pathivu. vazhththukkal.

  ReplyDelete
 2. நமக்கு தெரியாத பல செய்திகள் வரலாற்றிலிருக்கின்றன, அம்மாதிரியான செய்திகளாய் நீங்கள் பகிர்ந்து கொள்வது சிறப்பு! பார்ப்பணியம் எதிர்த்து முடிந்த மட்டும் போராடும், முடியாத பட்சத்தில் அந்த சக்திகளை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு புதிய பரிமாணம் எடுக்கும், புத்தர் காலம் தொட்டு வரலாறு நமக்குணர்த்துவது இதுதான்.

  சமணர்களை கழுவிலேற்றிய வரலாற்றை படித்துள்ளேன் ஆனால் நீங்கள் சொல்லும் திருமலை நாயக்கரை பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். பகிர்ந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

  ReplyDelete
 3. போதிய ஆதாரங்களைத் தந்திருக்கிறீர்கள்.
  ஆராய்ந்து தெளிந்து கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள்.
  பசுத்தோல் போர்த்த நரிகளாக, படிப்பறிவில்லாத ஏனைய மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
  இதையெல்லாம் மறுப்பவர்கள் முழுமையான வரலாற்று அறிவு இல்லாதவர்கள்; பிராமணீயத்தைப் போற்றுபவர்கள்.

  தொடர்க தங்கள் பணி.

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?