Posts

Showing posts from February, 2012

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

சிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம்  முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும்! இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது! சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது! புலியானது  சோழர்களின் "இலச்சினை" என்பதை அறிந்திருப்பீர்கள்!

  274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர்! காரணம்,   இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த  இடம் இது என்பதால்! இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல,  எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள்  கொடுத்திருப்பதாக தெரியவில்லை!   அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…

ராஜராஜேஸ்வரம் கோயிலும்,சிறப்புகளும்!

  தண்+செய்+ஊர்  என்பதே தஞ்சாவூர் ஆயிற்று ! காவிரியின் கருணையால் குளிர்ந்த நிலபரப்பு  உள்ள தஞ்சையை  முத்தரையர் மன்னனிடம் விஜயாலய சோழன் கி.பி.850 -யில்  கைப்பற்றி சோழநாட்டின் தலைநகராக்கினான் ! 

        விஜயாலன் தொடங்கி, ஆதித்யன்,பராந்தகன்,கண்டராதித்தன், அரிஞ்சயன்,   சுந்தரசோழன்,ஆதிய கரிகாலன்,உத்தமசோழன், ராஜராஜசோழன், இவனது மகன் ராஜேந்திர சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை 176-ஆண்டுகள் தஞ்சை சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது! 

ராஜராஜன் தனது காலத்தில் கட்டியதே,பிரகதீஸ்வரர்  கோயில் என்று பிராமணர்களால்  பெயர்மாற்றப் பட்டுள்ள,பெரு உடையார்கோயில் என்ற  ராஜராஜெச்வரம் கோயிலாகும்! கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, "தட்சிண மேரு " என்று குறித்து வந்தது!  "தென் கயிலாயமலை"  என்று பொருள்! 

     இக்கோயிலின் முதல் கோபுரவாயிலுக்கு,  "கேரளாந்தகன் திருவாயில்" என்று பெயர்! காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக  வைக்கப்பட்டது!  இரண்டாவது கோபுரவாயிலுக்கு  ராஜராஜ…

பிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்!

       கோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம்  இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்!

  அரசின் அன்றாட பணிகளை  செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக  கோயில்கள் விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும்  மக்களுக்கும் இடையில் தொடர்புகளை  கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட  பணியாளர்கள்  ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர்  என்பதை அறியலாம்!

    கோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான  நிலத்தை  அரசர்கள்  எழுதிவைத்தார்கள்  என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம்! பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக  கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக  செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! தவிர நிலத்தின் வருவாயே  அரசின் முக்கிய வருவாயாக  இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும்  அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்ப…

கோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்!

கோயில்கள்  இறைவழிபாடு செய்ய மட்டுமே   என்று நினைத்து,நம்மை ஆண்ட அரசர்கள் கட்டியவை அல்ல !  அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான   பலதுறை    அரச அலுவல்களை நடத்திவர உதவிடும்  ஒருங்கிணைப்பு  இடங்களாகவே  எண்ணி  கோயில்களைக் கட்டயுள்ளனர்! இந்நாளில்     கட்டப் பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்களை போல,  அரசின் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தேவைகளுக்கு,    பொதுபயன்பாட்டு  நோக்கத்திற்காகவே அரசர்கள் கோயிலைக்   கட்டி உள்ளதுடன்,அவ்வாறான பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்!

பண்டை கால தமிழகத்தின்  சமயம்,சமுதாயம், வரலாறு,வாழ்க்கைத் திறன்,, அறச்செயல்கள்,ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை   நாமறிய  உதவிடும்  வண்ணம். கோயில்கள் திகழ்கின்றன என்று தனது  தமிழ் நாட்டு சிவாலயங்கள் என்ற நூலில் குறிப்பிடும் மா.சந்திர மூர்த்தி,அவர்கள்,

   "பண்டைக் காலங்களில் கோயில்கள் பல்வேறு கலை நூல்களும் ஓலை ஏட்டில் எழுதிவைத்து, பாதுகாக்கும் நூலகங்களாகவும் ,விற்றல்,கொடுக்கல் வாங்கல் முதலிய பத்திரப்பதிவு நடத்தும்   இடங்களாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், விளங்கி வந்துள்ளன"  என்றும் 

அரசின் முக்கிய வருவாயா…

உத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்!

இன்றைய  நாமக்கல் மாவட்டதில் உள்ள கொல்லிமலை குறித்து  தமிழ் இலக்கியங்கள் கூறுவதை அறிந்து இருப்பீர்கள்! வள்ளல் பாரி மன்னன்  இம்மலையை ஆண்டான் என்றும் அவரது மகள்கள்  'அங்கவை,சங்கவை ' ஆகியோருக்கு.  தமிழ் மூதாட்டி  அவ்வை என்பவர் அடைக்கலம் தந்தார் என்றும் கதைகள் உள்ளன! சோழ பேரரசில் இப்பகுதி, "மலையனூர் "என்று அழைக்கப்பட்டு வந்தது! 

  உத்தம சோழனின் தாயாரான,செம்பியன் மாதேவியார்  இப்பகுதியை ஆண்டுவந்த, வேளிர் குறுநில மண்ணின் மகள்  என்றும் இவரையே உத்தம சோழனின் தந்தையான  கண்டராதித்தர் என்பவர் மனம் செய்திருந்தார் எனபது எல்லாம் சோழ வரலாற்றில் குறிப்புகளாக கிடைகின்றன!  

ஆதித்ய கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்களில் ஒருவன்  இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து  வந்தவன் என்பதாலேயே  அவனை மலையனூரான ரேவதாச கிரமவித்தன்  என்று, "காட்டுமன்னார் கோயில் கருவறையில் உள்ள,ஆதித்ய கரிகாலனைக் கொன்று துரோகிகளானவர்கள்" என்று  குறிக்கும் கல்வெட்டு குறித்து வருகிறது!

இந்த மலையனூரில், கொல்லிமலையில்  உத்தம சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்தான்,  "அறபலி ஈஸ்வரர் கோயில்" ஆகும்!

இக்…

உத்தம சோழனின் பிராமணீய ஆட்சி!

உத்தம சோழனின்ஆட்சியை  பிராமணீய ஆட்சி என்றே உறுதியாக கூறலாம்! பிராமணர்கள் தங்கள் சார்பாக  உத்தம சோழனை பேருக்கு மன்னனாக்கி விட்டு சோழ நாட்டை தங்களது ஆதிக்க,அதிகார பூமியாக்கும்  செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அறுதியிட ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன!

உத்தம சோழனது ஆட்சியைப் பற்றி, "மதராஸ் மீயுசியத்தின்  சாசனம் "  விளக்குகிறது!

"உத்தம சோழன் நாட்டை ஆளத் திறமை அற்றவனாகவும்,தகுதி அற்றவனாகவும் விளங்கினான்"  என்று தமிழக வரலாறு என்னும் நூலில் அ.தேவ நேசன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்!

திருவாலங்காடு செப்பேடு, "கலி"என்பதாக  ஆதித்ய கரிகாலனின் படுகொலைக்கு உரியவர்களைக் குறிப்பது உடன்,உத்தம சோழனை, ராஜராஜனின் சிற்றப்பன்,அருண்மொழி வர்மனுக்குரிய ஆட்சியினை ஆவலோடு முயன்று அடைந்தவன்,எனவும்  அந்தணர்களுக்கு செல்வதை வாரி வழங்கி,உலகத்தைப் {நாட்டைப் பெற்றவன}பெற்றவன் எனவும் குறிபிடுகிறது!

"ஆதித்தன் என்ற சூரியன் மறைந்தான், பாவம் என்ற இருள் சூழ்ந்தது" என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி  தனது சோழர்கள் நூலில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சுருக்கமாக கூறுகிறார்!

  தவிர ப…

பிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்!

பிராமணர்கள் தங்களது இனநலனுக்காக,பொருளாதார, அரசியல் மேன்மைக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக,  எந்தவித அடாத செயலையும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி செய்பவர்கள், இயற்கையாகவே  செய்து வருபவர்கள்  எனபது குறித்து  அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மேலும் சில நிகழ்சிகளை பார்க்கலாம்!

இப்படிப்பட்ட சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்திருக்கலாம், மனிதர்கள் நாகரீகம், கல்வி அறிவு பெறுவதற்கு முன்பு நடந்த செயல்களை, ஒரு இனத்தை அவமதிக்கும் செயலை வெளிச்சமிடலாமா? நியாயமா? என்றும்  தேவையற்ற ஒன்று,வீண் வேலை என்றும் கூட சிலர் நினைக்கக் கூடும்!

      "பார்ப்பனீயம்" என்பது  பாசிசவெறிகொண்ட சித்தாந்தம்,  பாசிசத்தை தவிர வேறு எந்த சித்தாந்தங்களையும்,தத்துவங்களையும்   அது எப்போதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை!   என்பதை அப்படி நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! இப்போதும், நவீன காலத்திலும் "பிராமணீயம்" என்ற பாசிசம் இத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்கிவருகிறது! இனிவரும் காலத்திலும் அது அவ்வாறே இயங்கி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

நவீன காலத்திலும்  பிராமணீயம் என்ற பாசிசம் நடத்திவ…

ஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையும்!

பிராமணர்களின் மனுதருமம்,  சத்திரியர்களாக பிறந்தவர்கள்தான்  ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுவதை,பிராமணர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள்கூட  அரசனாக  வேண்டும் என்றால்  சத்திரியராகும் சாதி மாற்ற சடங்கினை பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பும் பொன்,பொருள் முதலியவற்றைக் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன் யாகம் செய்து பிறகுதான் அரசனாக முடியும்,நாட்டை அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்ய முடியும்  என்பதை முந்தைய எனது பதிவுகளில் இருந்து விளங்கிக் கொண்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!

அப்படி செய்யாமல், பிராமணர்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளாமல், வேறு சாதியைச் சேர்ந்தவர்களை,வேறு மதநெறிப்படி ஆட்சி செய்ய முயன்றவர்களை,"  பிராமணீயம்" என்ற பாசிச, ஆதிக்க வெறிகொண்ட  வேத பிராமணர்கள் ஆட்சியில் இருந்து அகற்ற,  பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகளைச் செய்தும்,சமயங்களில் அரசர்களை சதி செய்து கொன்றும் வந்துள்ளதற்கு முக்கிய உதாரணமாக   ஹர்ஷ வர்தனருக்கு நேர்ந்த கதியில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்!

மனுதரும விதிப்படி, சத்திரிய சாதியில் பிறவாமல்,{ வியாபாரம் செய்யும்} வைசிய சாதியில் பிறந்தவர், பிரபாகர வர்த்தனன்!  ம…

வந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்!

சோழ நாட்டின் முக்கிய பகுதி எனபது  தஞ்சையும் திருச்சியும் ஆகும்! தஞ்சை பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்ததை அறிந்து இருப்பீர்கள் ! தஞ்சையைப் போலவே  திரட்சி உறையூரும்  ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கி வந்தது. உறையூர் சோழர்கள்  என்று வரலாறு சில சோழ மன்னர்களைக் குறிப்பிடுகிறது!


இப்படி சோழர்களுக்கு   முக்கியத்துவம் வாய்ந்த இரு நகரங்களான  திருச்சியில்  இருந்து  தஞ்சை செல்லும்  வழியில் துவாக்குடி என்ற ஊருக்கு வடக்கே சுமார் மூன்று கி.மி.தொலைவில் உள்ள கோயிலின் பெயர், "திருநெடுங்களநாதர் கோயில்" என்பதாகும்.

திருநெடுங்களம் என்ற இந்த ஊரில் உள்ள இக்கோயிலின் தல வரலாறு,   "அன்னை பார்வதி தேவி இங்கேயே தவமிருந்து இறைவனின் கைத்தலம் பற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. அகத்தியர் இத்தலத்தில் தவமிருந்து இறைவன் அருள் பெற்றதாகவும் வந்திய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் அருள் பாலிததாகவும்   புராண வரலாறுகள் கூறுகின்றன" என்கிறது! 
(ஆதாரம்:தமிழ்நாட்டு சிவாலயங்கள் ,தொகுதி-2 ,பக்கம் 390, ஆசிரியர் மா.சந்திர மூர்த்தி.மணிவாசகர் பதிப்பக வெளியீடு-2004 }

பிராமணீயத்தின் தந்திர யுக்திகளில் …

வந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு!

அதிகார ஆசை எனபது  அதீத வெறியாகும்போது, நியாயங்கள், தர்மங்கள், ஒழுங்குமுறைகள்,கட்டுப்பாடு போன்ற மனித தர்மங்களும், நல்ல குணங்களும் மிதிக்கப்படுவது,மீறப்படுவது எனபது எப்போதும் நடந்துவரும் செயலாக இருக்கிறது! பாசிசம் என்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரக்கமனம் கொண்ட  பார்ப்பனீயம், இத்தகைய செயல்களை இயல்பாக தொடர்ந்து செய்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணக் கிடைகிறது!

  எனது முந்தையப் பதிவுகளில், ஆதித்ய கரிகாலன் படுகொலை பற்றியும்,அவனைப் படுகொலை செய்தவர்கள்,சோழ அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த, பார்ப்பன அதிகாரிகள். அவர்கள்  தங்களது இன நலனுக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக   எத்தகைய கொடும் செயலையும் செய்பவர்கள்!, செய்யத் தயங்காதவர்கள் !!

தங்கள் மேன்மைக்கு,ஆட்சி அதிகாரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியே,  ஆதித்ய கரிகாலனைக் கொன்றதோடு அல்லாமல்  அவனது பெற்றோர்களான  சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆகியோர் சிறைபட்டு,   சித்திரவதை பட்டு இறக்க நேரிட்டது! உத்தம சோழன் அரசனாக நேரிட்டது!  ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள்,  குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையு…

குந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திருமணமா?

குந்தவை நாச்சியாருக்கு திருமணம்  ஆனதாக கல்வெட்டுகள் குறிப்பதில் இருந்து அறிய வருகிறது!

குந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் அவரை,  "உடையார் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் "  என்றும் "ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார் " என்றும் வல்லவரையர் வந்திய தேவர் மாதேவர் மாதேவியார் என்றும் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில்  பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு இப்போது போல வயதோ,சட்டமோ ஏற்படுத்த வில்லை! ஆதலால், பெண்களுக்கு அவர்கள் வயதுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே,அல்லது வயதுக்கு வரும் பருவத்திலே கூட திருமணம் நடந்து வந்தது! உயர்ந்த குடும்பத்து  பெண்களுக்கும் இது பொருந்தும்! அதுவும் குந்தவை போன்ற அரச குடும்பத்து பெண்களுக்கு திருமணம் எனபது, அவர்கள் விருப்பத்தின் பேரில் நடப்பது அரிதாகும்!

குந்தவை வந்தியத் தேவனை காதலித்ததாக எண்ணும்படி,  அமரர் கல்கி அவர்கள் தனது" பொன்னியின் செல்வன்" நாவலில் சித்தரித்து உள்ளது தவறாகும்!

  குந்தவை   காதல் திருமணம் செய்து கொண்டிருப்பின் அல்லது தனது கணவனை  சுயமாக தேர்ந்தெடுத்ததாக இருப்பின் நிச்சயம் அது குறித…

காதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்!

காதலர் தினமாக உலமெங்கும் ஏற்றுக்   கொள்ளப்பட்டு  பிப்ரவரி 14-ஆம் நாள் இளசுகளால் கொண்டாடப் பட்டு வருகிறது! இந்த கொண்டாட்டங்களில் நடக்கும் அத்துமீறல்கள் நமக்கும் உடன்பாடான ஒன்று இல்லை!
     ஆனால், காதலை நாகரீகமாக, தங்களது எதிர்கால வாழ்வின் அடித்தளமாக என்னும் காதலர்கள், காதலை சொல்லி, பரிசுகள் வழங்கி,வாழ்த்துகள் சொல்லி, நீடித்த அன்பு கொள்ள விரும்பும் இளசுகளுக்கு  காதலர் தினம் ஒரு வாய்ப்பும், வசதியும் தருகிறது! என்பதால் அதனை வரவேற்கிறேன்!         நானும் காதலித்து,கலப்பு மனம்புரிந்து, மனமொத்து வாழ்ந்துவருவதை இந்த தருணத்தில் குறிப்பிடுவது, மகிழ்ச்சி அளிக்கிறது!
         இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவு இருப்பதைப் போலவே எதிர்ப்பு இருப்பதையும்,  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் என்பதை நாம்,  நன்கு தெரிந்து கொள்ள முடியும்!          இந்துத்துவ தருமத்தை கடைபிடித்து வரும் அமைப்புகளும் கட்சிகளும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்  முன்னணியில் இருகின்றன! அவைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணங்களை கூறுகின்றன? என்று பார்த்தால், காதலர் தினம் நமது க…

ராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்!

ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு அடுத்து நடந்த நிகழ்சிகளில் ஒன்றாக வரலாறு குறிக்கும் சோகத்தை, சுந்தர சோழன் அவன் மனைவி  வானவன் மாதேவி ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி இருந்தேன்!
வரலாற்றில் சுந்தர சோழன் இறந்ததை,  " பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்" என்று மிகவும் நயமாக, உயர்த்தி சொல்லி உள்ளார்கள்! 

"பொன்மாளிகை"   என்று  குறிக்கப்படுவது  காஞ்சியில்  இருந்த, சோழர்கள் அரண்மனையைதான் !  என்று கல்வெட்டு கலைச்சொல் அகர முதலி {மதுரை காமராஜர் பல்கலை கழகம்   வெளியீடு}  குறிப்பிடுகிறது!
சோழர்களுக்கு கடம்பூர்,கும்ப கோணம்  அருகில் உள்ள பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை, திருச்சியின் சமயபுரம் என்று பலஇடங்களில் அரண்மனைகள்  இருந்துள்ளது! 
  ராஜராஜனை  பால்குடி மாறாத குழந்தை என்று நான் வேண்டும் என்று குறிப்பிடவில்லை!   வானவன் மாதேவி உயிர் துறந்தது  குறித்து,  ( ARE 230 OF 1902) கல்வெட்டுகள் உள்ளது! அதில், 
 " முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்                     தலைமகன் பிரியாத் தையல்" 

  -இவ்வாறு குறித்து ,புகழ்ந்துள்ளதாக "தென்னாட்டு போர்களங்கள்" என்ற நூலில், கா.அப்பாது…

அன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே!

நமது தமிழகத்தின் வரலாறை...  அதுவும் சோழர்களது வரலாறை  அறிந்து கொள்ள விழையும் உங்களது ஆர்வமும், நீங்கள்  கேட்கும் சந்தேகங்கள், விளக்கங்கள் மூலம் தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
உள்ளபடியே,  அவ்வப்போது..  நமக்கு தோன்றும் சந்தேகங்களை  கேட்டு தெளிவு பெறுவது  எல்லோருக்கும் உள்ள இயற்கை குணமாகும்! சிலர், "நாமும் கேட்போமே "என்று கேட்பதும் உண்டு,!   தெளிவுபெற கேட்பது போல, நம்மை  திசை திருப்ப , அதாவது இந்த பதிவை படிப்பவர்களிடம்  தேவை அற்ற குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட.. எண்ணி கேட்பவர்களும் உண்டு!  அப்படிப் பட்டவர்களால் நான்,  பதிவு எழுத வந்த நோக்கம் திசை மாறி, வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பதிவுகள்  விவாத மேடையாகி விடும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளதால், அனைவருக்கும்    விளக்கங்களை  தருவதை, அதுவும் உடனுக்குடன்  தருவதையும்  நான் தவிர்க்க விரும்புகிறேன்!
மேலும் நான்வரலாற்றில் உள்ள தவறுகளை  திருத்தும் நோக்கத்திலோ, {ஏனெனில் அது தேவையற்ற சர்ச்சைகளையே ஏற்படுத்தும்} வரலாறு முழுவதும் தவறு என்று வாதிடவோ,  அல்லது நான் எழுதுவதே  உண்மைவரலாறு  என்று நீங்கள் நம்பவேண்டும…

அரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்!

குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள்  என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு  இல்லாத  சுந்தரசோழன்  அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப்  பரப்ப  வந்து,  சோழநாட்டின்  திருச்சி பகுதியில்  சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய  ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார்  என்பவரது  அருளாசியால் பிறந்தவர்கள் என்றும்  பெர்சிய, பாரசீக  மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
நத்தார்  வலியார், ( செஸ்தான் ) இன்றைய சிரியா,  பகுதி ஒன்றின் அரசர் என்றும், அவரது இயற்பெயர்,  "சையத் முத்தத்ருதீன்"  என்றும்  குறிப்பிடுகிறது.  அவர் அடக்கமான  தர்காவின் ஆயிரமாவது ஆண்டுமலர்,  { திருச்சி, மதுரைரோடில் அவரது  தர்கா  உள்ளது } குறிப்பிடுகிறது! . ஆந்திராவில்  அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா  என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும்  இவைகளை உறுதிப் படுத்துகின்றன! (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல்  அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை  சொல்லுகிறது!)

இவைகள் தவிர, இரட்டையராக பிறந்த ஆதித்த கரிகாலன் அவரது தந்தையான சுந்தர சோழனிடம் அரண்மனையில…