பிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்!

     "யக்ஜவல்கியரே  இந்த உலகம் நீரில் இரண்டற  கலந்திருக்கிறது. நீர் எதில் இரண்டற கலந்திருக்கிறது?"

 "காற்றில் கலந்திருக்கிறது -கார்க்கி"


"காற்று எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"அது வானவெளியில் இரண்டற கலந்திருக்கிறது. மேலும்,கேள் கார்க்கி..,கந்தர்வலோகம் ,சூரியலோகம்,சந்திரலோகம்,நட்சத்திர உலகம்,தேவலோகம்,இந்திரலோகம்,பிரஜாபதி உலகம்,பிரம்மலோகம்  இவைகளில் முன்னது பின்னதில்  இரண்டற கலந்திருக்கிறது"


"பிரம்மலோகம் எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"கேள்வியின் எல்லையைத் தாண்டி போகாதே. போனால்  உன் தலை கீழே விழுந்து விடும். கேள்வியின் எல்லையைக் கடக்க முடியாத தேவனைப் பற்றி  நீ அதிகம் பிரஸ்தாபித்து, ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்"


       ஜனகரின் சபையில்   (அதாங்க நம்ம.. ராமர் கடவுளோட மாமனார் ) பிரம்மஞானம் பற்றிய விவாதத்தில் நடந்த நிகழ்ச்சி மேலே கண்ட கேள்வியும் பதிலும்.


        புத்தரின் கொள்கைகளைக் கண்டு பயந்து  பார்பனீயம் பிரம்மஞானதுக்குள் புகுந்து கொண்டது. என்றாலும் நால்வருண கொள்கைகளை நியாயப் படுத்தவும், அதனை எல்லோரும் சரி என்று ஏற்றுக் கொள்ளவும்  வேண்டிய தேவைக்காக இதிகாச கதைகளுக்குள் போகவேண்டிய நிலைக்கு ஆளானது! 


   குருஷேத்திர யுத்தத்தில்  அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் நடந்த விவாதத்தில் பார்ப்பனீயம் புகுந்தது.

     "அர்ஜுனா,சத்திரியனாய்ப்  பிறந்துவிட்டு , உனது சுதர்மத்தை விட்டு,உன் கடமையை விட்டு,போகிறாயா?" என்று கேட்டு,                         உன் சாதிக்கு உரிய தர்மத்தைச் செய். அது பிறருடைய தர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதை விட மேலானது என்றது! 

       " எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ... அப்போது, நான் அவதரித்து தர்மத்தைக் காப்பேன் "என்று   கண்ணன் வாயிலாக பிராமணீயம் பேசியது! (இங்கு தர்மம் என்று சொன்னது, சாதிய தர்மதைதான்! )

        எப்போதும் சாதிக்கு அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது.அப்படி அழிவு ஏற்படுமானால்  கடவுளே மீண்டும் அவதரித்து சாதிய தர்மத்தை காப்பாராம். 

  
       கீதை வலியுறுத்தும் இந்த பார்ப்பனக் கோட்பாட்டை எதிர்த்தும், சாதிமுறையை எதிர்த்தும் புத்தர்  கொள்கையாளர்களும் பகுத்தறிவு  கொண்ட பலரும் தொடர்ந்து போராடினர்!

        காலடியில் பிறந்த கேரளா பார்ப்பனர், சங்கரன் என்பவர்  சாதிய முறைகளைக் அப்படியே தொடர்ந்து நீடிக்கவும், காக்கவும் விரும்பினார்! 


         மனுஸ்மிருதியை பாதுகாக்கவும்,பிரம்மஞனதைப் புதிய வடிவில்  அதையும் மாயாவாத வடிவில் மிகவும் தெளிவாக விளக்கினார்! 
  
         புத்த மதம் வழங்கிய பலவிஷயங்களை தமதாக்கி கொண்டு, தன்னுடையது போல வழங்கினார். புத்த மதத்தினர் வழியிலேயே, இந்து தர்மமான  வருணாசிரம தருமத்தைக்  காப்பாற்ற  மடங்கள், மடாலயங்களை அமைத்தார்.  இந்த மடங்கள் முழு நீர ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் என்பதும், இவைகளின் பணிகளும் உங்களுக்கே தெரியும்! 

            சங்கரன்  (நான் சொல்லும் சங்கரன் ஆதி சங்கரன்.) மண்டோதிரி உபநிஷதிற்கு மிகவும்  தெளிவாக உரை  எழுதினார்.சாதி முறைக்கு பங்கம் வரும்போதெல்லாம்  அதனை சீர்செய்து கெட்டிப்படுதினார்.


         வேதங்கள்,வேதாந்தம்,மனுஸ்மிருதி, பிரம்மஞானம் , மாயாவாதம், மறுஉலக வாதம் எல்லாவற்றிலும் சாதிய முறை மேலும் வலுவடையத் தேவையானதை செய்தார். சாதிய முறையைத் தகர்க்க நடந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.


           முற்ப்போக்கு கருத்துகளையும் புரட்சிகளையும் முறியடிப்பதில் பார்பனீயம்  போன்று, அதற்கு   நிகரான வேறு ஒரு தத்துவம், வேறு ஒரு வடிவம் உலகில்  இல்லை!  இருக்கவும் முடியாது! 


          அந்த அளவு மிகவும் கொடிய,   நுணுக்கமான,  தத்துவமே பார்பனீயம் என்கிற பயங்கர பாசிசமாகும்! 


     ( பார்பனிய பாசிசத்தின் சில நிகழ்வுகளை  அடுத்து பார்கலாம்)Comments

  1. குறைகள் சொல்லி விட்டால் போதுமா ? நிறைகள் எங்கே ? கறைகளை வர்ணித்துக் கொண்டிருந்தால் கறைகள் போகுமா? வெளிச்சத்தை ஏற்றும் கட்டுரைகளை வெளியிடுங்கள்

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?