பார்பனீயமும் பெண்களின் நிலையும்!

           பார்பனீயம்  கீழ் சாதி மக்களை  அடக்கி,அடிமைப் படுத்தி வந்ததைப் போலவே பெண்களையும் அடிமைப் படுத்தி அவர்களது வாழ்க்கையை அமைத்து இருந்தது! இந்த நிலை, சமூகத்தின் எல்ல வர்ணப் பெண்களுக்கும்  இருந்தது. பிராமணர்களின்  பெண்களும்  அடிமைபடுத்தப்பட்டு, அவலமான வாழ்க்கையே வாழ்ந்தனர். காரணம்,பிராமணர்களின் மனைவிமார்கள் பெரும்பாலோர் திராவிடர்களாக இருந்ததுதான். மவள் சாதிப் பெண்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் சூத்திரர்களைப்  போலவே   விதிக்கப் பட்டு இருந்தது!

            பெண்களைக் குறித்து இவர்களின் மனு தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி  காப்பியங்கள்  ஆக கூறப்படும் ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளும் இதர புராணங்களும் மிகவும் மோசமான சித்தரிப்புகளை செய்து இருந்தது!

          " மாதர்கள்  கற்பு நிலை இன்மையும்,நிலையா மனமும்,நன்மின்மையும் இயற்கையாக உடையவர்கள்"( மனுதர்மசச்திரம் 9 :15 ) என்று கூறியது.


            "கணவன் சுதாடுகிறவனாக இருந்தாலும்,குடியனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தினால் பணிவிடை செய்யாவிட்டால்,  அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றைக் கொடாமல், மூன்று மாதம் நீக்கி வைக்கவேண்டியது"                                       ( மனுதர்மசச்திரம் 9 :78 ) 


          ஆனால் அவர்களுக்கு பிரச்னை என்னும்போது, மாதர்களை மிகவும் அருவெறுப்பு கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி, உபயோகப் படுத்திக் கொண்டு வரவும் தவறவில்லை.!


             " பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிகிறதா இருந்தால், அப்போது அந்த ஸ்திரி,தன கணவன் மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு  தன மைத்துனன் அல்லது தன கணவனுக்கு  ஏழு தலைமுறை உட்பட்ட  பங்காளி ஆகியோர்களுடன்  புணர்ந்து ஒரு பிள்ளையை  உண்டுபண்ண  வேண்டியது"
( மனுதர்மசச்திரம் 9 :59 )
      என்று விபசாரத்தை  செய்ய சொன்னது! பெண்களின் கற்பு குறித்த பிராமணீயத்தின் பார்வையில் ஏராளமான விசித்திரங்களும், விநோதங்களும் இருப்பதைப்  பாருங்கள்! 


               பிராமணர்கள் உயர்த்திக் கூறும் ராமனின் பிறப்பும் அவர்களின் சகோதர்கள் பிறப்பும் மேலே குறிப்பிட்டு உள்ள  மனுதர்ம சாஸ்திரத்தின் படி  கணவன் அல்லாத  பிற  ஆடவர்களின்  சேர்க்கையால்   நடந்த பிறப்புகளே!


         "அரசனின்  (தசதரனின் ) மனைவிகளை ஹோதா,அத்வர்யு, உத்சதா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள்"
(பால  காண்டம்  14 -வது சருக்கம்,மன்மதநாத் தத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு) 
      சூர்பநகை  மூக்கு தனம் அறுப்பு, தாடகை வதம், சீதையை நெருப்பில் புக சொல்லுவது, கர்ப்பிணியான அவளை  காட்டுக்கு அனுப்புவது  என்று  இதுபோல ராமாயணத்தில்  பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம்!  மகாபாரதமும்  இதற்க்கு சளைத்தது அல்ல!

      மனுதர்மம் சொல்ல்வதையே  கர்ணன் வாயிலாக,  "உன் புருசர்கள் உனக்கு  உதவி செய்யவில்லை எனவே வேறு ஆடவர்களைத் தேடிக்கொள் " என்று கூறுவது!  
        விசித்திர வீரியனின்  மனைவிகளிடம்  புணர்ந்து  சந்ததியை உண்டாக்க சத்தியவதி பீஷ்மரிடம்  சொல்வது..  பீஷ்மர் மறுத்துவிடவே,  சத்தியவதியின் தீர்மானத்துக்கு முன்பே பிறந்ததாக  சொல்லப்படும் வியாசன்  அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை புணர்ந்து  பாண்டு, திருதராஷ்டிரன் ஆகியோர்கள் பிறப்பது,  போதாதற்கு  அரண்மனைப் பணிப்பெண் மூலமான  விதுரன் பிறப்பு!  பாண்டுவின் மனைவிக்கு அயிந்து  கணவர்கள், பாஞ்சாலியான திரோபதைககும்   அயிந்து கணவர்கள்  என்று  மகாபாரதம்  சொல்லும் பெண்களின் நிலையும், அடிமைதனமும்  பெண்களுக்கு ஏற்படுத்தப் பட்ட கொடுமைகளுக்கும்  அளவே இல்லை!   


         சாதாரண குடும்ப வாழ்கையில்,   பெண்கள் உணர்ச்சி யுள்ள  இதர மிருகங்களைப்  போலவே  நடத்தப் பட்டனர்.
   " பாலியமாக இருந்தாலும்,யவனமாக இருந்தாலும்  வார்திபகமாக இருந்தாலும்  ஸ்திரீகள் தத்தம்  வீடுகளில் மனம்  போனபடி  ஒரு காரியத்தையும் செய்யகூடாது"   ( மனுதர்மசச்திரம் 5 : 147 
          தனித்து பெண்கள் தங்கள் வீட்டுக்குள்ளே கூட இயங்க, தடை செய்த பிராமணீயம்  மேல் சாதி பெண்கள் இறந்தால் கணவனுடன்  உடன்கட்டை ஏறவேண்டும் என்று பெண்களை தீயில் போட்டு  கொன்றது! அப்படி உடன்கட்டை ஏறாவிட்டால், தலையை மொட்டை அடித்துக்கொண்டு  வெள்ளை உடை உடுத்த  நிர்பந்தம் செய்தது! அதுமட்டும் இன்றி, கணவனை இழந்த,    இதுபோன்ற பெண்கள்,  வயிறு நிறைய உண்ணக் கூடாது, சுவையான உணவு உண்ணக்கூடாது, மூன்று வேலையும் உண்ணக்கூடாது  என்றது! 

        இது மட்டுமின்றி கணவன் இருக்கும் பொது,வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது,வெளியில் வரவேண்டும் என்றால் கணவனுடந்தான் வர வேண்டும். கணவன் இல்லாதபோது  அவசியம் வெளியே வரவேண்டும் என்றால் தந்தையோ,சகோதரனோ உடன் வரவேண்டும்  

         என்ன பாதுகாப்பு பாருங்கள்,   பெண்களுக்கு  பிராமணீயத்தின் இத்தகைய கட்டுப்பாடுகளால்  வாழ்க்கை எனபது எந்த வித சுவையோ, மகிழ்ச்சியோ  இன்றி இருந்தது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களுக்கு வாய்த்தது, விதிக்கப்பட்டது(? )இதுதான் என்று  ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப் பட்டு   வெறுமையுடனும் விரக்தி உடனும் ஆடுமாடுகளைப்  போலவே  ஆண்களின்  ஆசைக்கும் தேவைக்கும் ஆளானார்கள்!

            பிராமணீயத்தின் பயங்கரவாதம்  மற்றும் அதன்  விளைவுகள்  தொடர்பாக   ஆய்வுகளை செய்து, இந்த பதிவுகள்  எழுதப் படுகிறது!

       இதன் தொடர் பதிவை  பிப்ரவரி மாதம்  வெளியிட உள்ளேன்!  
Comments

  1. hi,
    It is a different way of thinking.

    I don't know that the concept of "Sathi" has brought by whom. But in many other castes also, there is a concept of "wearing white dress" after husband's death. But i heard that this has brought for the concept "Oruvanukku Oruthi". But i don't understand why the samething was not followed by males. Please explain these things also.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?