பார்ப்பனீயத்தின் பயங்கர ஒடுக்குமுறைகள்!

          பார்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை  இப்போது படிப்பவர்கள், கேள்விப் படுபவர்கள்  அதிர்ச்சி அடையலாம்  அல்லது எப்போதோ நடந்ததுதானே?  என்று அலட்சியமாக நினைக்கலாம்.. பொதுவாக,  அடக்கி ஒடுக்கப் படும் ஆளும் வர்கங்களின் கொடுமைகள்  குறித்து  எல்லோராலும் சொல்லப் படும்   விமர்சனம் என்றும் நினைக்கலாம் . இவைகள் யாவும் ஓரளவு உண்மையாக இருந்தபோதிலும்  இவைகளுக்கு மேலே  பயங்கரமான ஒடுக்குமுறையாக  உள்ளது பார்பனிய ஒடுக்குமுறை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்!

          ஒரு குறிப்பிட்ட காலஎல்லை  அளவு கொண்டதோ, பாதிப்புகளை ஏற்படுத்துவதோ போன்ற  ஒடுக்குமுறை அல்ல பார்ப்பனீய ஒடுக்குமுறை.!        அது ,  பல  நூற்றாண்டுகளாக, பாரம்பரியமாக, வாழையடி வாழையாக, தலைமுறை  தலைமுறையாக  தொடர்ந்து உழைக்கும் மக்களை  ஒடுக்கி வரும்  பயங்கரமாகும்.    தண்டித்து வரும் ஒடுக்குமுறை  ஆகும். !  இன்றும் பல்வேறு வடிவங்களில்,  பல்வேறு பரிணாமங்களில்  நீடித்து வரும் பயங்கரமாகும்! 

              சாதிவாரியாக தெருக்களை அமைத்தனர் . ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனிப் பகுதிகளாக வாழ்ந்தனர்  என்று முன்பே நான்   குறிப்பிட்டு உள்ளதை  நினைவில் வைத்து, கீழே வருபவைகளை படிக்குமாறு வேண்டுகிறேன்!

           சாதிவாரியாக வசிப்பிடங்களும் அவர்கள் புழங்கும் தெருக்களும் இந்திய கிராமங்களில்  இருந்ததைப் போன்று  பூஜை, புனஸ்காரங்கள், வேள்வி, சடங்குகள்செய்ய,  பார்பனர்கள் வசிக்கும் தெருக்கள், அஹ்ரகாரங்கள்,  கிராமங்களில் இருந்துவந்தன.    இங்கு வசித்துவந்த பார்பனர்கள் மக்களை  அளவற்ற மூட நம்பிகையில் ஆழ்த்துவதையும், சாதிக்கு ஒரு தர்மத்தையும்,  சாதிக்கு ஒரு நீதியை    நிர்ணயித்தும், நிர்வகித்தும், சாதிக்கு ஒருநீதியை  தொடர்ந்து  பாதுகாத்தும்  வந்தார்கள்! 

           இவர்களது சமத்துவம் அற்ற,மனிதத்  தன்மையற்ற  செயல்களால், ஆட்சி அதிகாரத்தால், ஒடுக்குமுறையால்  பார்பனர்கள் தவிர  மற்ற எல்லாதரப்பு மக்களும் பாதிக்கப் பட்டார்கள்!  ஒவ்வொரு சாதிக்கும்  உணவு, உடை, பழக்கவழக்கங்கள்  வகைபடுத்தப் பட்டது,  அதாவது செருப்பு போடக்கூடாது, முழங்காலுக்கு கீழே உடை அணியக்கூடாது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது. என்று  எல்லாவற்றிலும் தடையும் கட்டுபாடுகளும்   விதிக்கப் பட்டது.     இந்த விதிகளை கட்டுபாடுகளை மீறுவோருக்கு தண்டனைகள் நிறைவேற்றப் பட்டன.   தண்டனைகளும்  சாதிக்கு தகுந்தபடி  வெவ்வேறு வகையாக   வழங்கப்பட்டது!

           அளவற்ற மூட நம்பிகையால்  மக்கள் ஆழ்த்தப் பட்டனர்.  மூட நம்பிகைக்கு ஆளான மக்கள்,  எல்லாவற்றிற்கும் சகுனம் பார்த்தார்கள். வீட்டில் இருந்து வெளியே வர,,,      ஏர் உளவு செய்ய,  கால்நடைகள்  வாங்க, விற்க,தங்களது எல்லா செய்கைகளுக்கும் சகுனம் பார்த்தே செயல்பட்டார்கள்.
          கொள்ளை நோய்கள் வந்து மக்கள் மந்தைமந்தையாக மாண்ட போதும்,கண்ணெதிரே மாபெரும் படுகொலைகள் நடந்தபோதும், கற்பழிப்பு,  களவு என்று எது நடந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இன்றி, உணர்வுகளும்  அற்ற    சவங்களைப் போல, வாழப்   பழகிப் போனார்கள்!

            பார்பனர்களின்  அதிகாரத்தால்   மிக பயங்கரமாக,அதிகமாக   பாதிக்கப் பட்டவர்கள்,      கீழ் சாதியாக.... பிராமணர்களால் வகைபடுத்தப் பட்ட ஆதிதிராவிடர்களே!   இவர்களுக்கு பிறகு,  எல்லாதரப்பு பெண்களும்  பாதிக்கப் பட்டார்கள்!

             கீழ்சாதி மக்கள், கல்வி, அறிவு பெற உரிமை மறுக்கப் பட்டது. இதனால் கடுகளவு உலகஅறிவு  இன்றியும், யார் எது சொன்னாலும்  எளிதில் நம்பும் தன்மை  கொண்டவர்களாக, எதார்த்தமான மக்களாக  கீழ்சாதியின மக்கள் இருந்தனர்!" பிராமணீயம் "  இவர்களை,  விவசாயிகள் வீட்டில் விவசாயத்திற்கு பயன்பட வளர்க்கும் கால்நடிகளைப் போல வாழும் நிலைக்கு ஆளாக்கியது!  ஆடுமாடுகளின் வாழ்கையை விட இவர்களது வாழ்க்கை எந்த விதத்திலும்  மேலானதாக இல்லை!

             பார்பனர்களை தீண்டக் கூடாது,ஊருக்குள் குடியிருக்கக் கூடாது. பிற சாதியினர் வசிக்கும் தெருக்களில்  செருப்புடன்  போககூடாது,  சமமாக  பழக கூடாது,  அனைவரும் பயன்படுத்தும் பொது குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாது, பருக கூடாது, குளிக்க கூடாது.  பறை அடித்தல், செருப்பு தைத்தல்,கழிவுகளைச் சுத்தம் செய்தல்,துவைத்தல்,நாவிதம் செய்தல் ஆகிய தொழில்களைத் தான்  செய்ய வேண்டும். சமுதாயத்தில் கேவலமான  தொழில்களை மட்டுமே செய்யவேண்டும். 

               பழையது, கழிசல், செத்த மாடு ஆகியவைகளையே உணவாகக் கொள்ளவேண்டும். மிகக் கேவலமாகத்தான் உடையணிய வேண்டும். குடிசையிலும் கீழான குடிசைதான் வசிக்கவேண்டும். பிராமணர்களை மட்டுமல்ல எல்லா சாதியினரையும் மதிக்கவேண்டும். அனைவரின் சொல்லுக்கும் அவர்கள் இடும் கட்டளைக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும். ஆனால் இவர்களை யாரும்  மதிக்க வேண்டியது இல்லை! மனித சிந்தனையற்ற பார்பனீயத்தின் கட்டுபாடுகள் கீழ்சாதியினரை  ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்து வைத்து,  சித்தரவதைப் படுத்தும்  மிருக வாழ்கையை  கீழ் சாதியினருக்கு வழங்கியது இந்த மரபான விதிகளில் அடிமைபடுத்திய இந்த மக்களுக்கு எல்லோரையும் போல ஆண்டவனை வழங்கக் கூட உரிமை மறுக்கப் பட்டது. கோவிலுக்குள் நுழையும்  உரிமையும் மறுக்கப் பட்டது. 

              இதுபோன்ற மரபான விதிகளை விதித்து ,அடிமைப் படுத்தி, மூட நம்பிக்கையில் ஆழ்த்தி,  கீழான மக்களுக்கு மாபெரும் கொடுமைகளைச் செய்த பார்பனீயம் இவர்களைப் போலவே பெண்களுக்கு இழைத்த கொடுமைகளும் மிக அதிகம்.!  

       எல்லாதரப்பு பெண்களும் பார்ப்பனீய  ஒடுக்கு முறையால், பாரபட்சமான  ஆட்சிமுறையால்  பாதிக்கப் பட்டார்கள்!

         அவைகளைப் பற்றி  அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?