பார்பனீயம் என்னும் பயங்கர பாசிசம்-ஒரு விளக்கம்!

        பார்ப்பனீய பயங்கரத்தைப் பற்றி தெரிந்துகொல்லுவதற்கு முன்  நாம் முதலில்  பயங்கரவாதம் என்ற  பாசிசத்தைப் பற்றித்  தெரிந்து கொள்ளுவதும்,அதுகுறித்த விழுப்புணர்வு கொள்வதும் அவசியம் என்று கருதுகிறேன். 

    " பாசிசம் "எனபது உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டங்களை, உரிமைப் புரட்சிகளை அடக்கவும்,ஒடுக்கவும் அதிகார வர்க்கம் என்ற ஆளும் வர்க்கங்கள்  அவிழ்த்து விடும் ஒரு வெள்ளை பயங்கரவாதம் எனலாம். பாசிசத்தை நிதி மூலதனத்தின் பயங்கரமான,பகிரங்கமான ஆட்சியியல் என்றும் கூறலாம்.


         இந்த பாசிசம் எனபது,உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை, அதாவது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக  எழும் புரட்சியை, புரட்சி இயக்கங்களை  எதிர்க்கும்  பல்வேறு நடைமுறைகளைக் கொண்ட "எதிர் புரட்சி" என்பதன் கட்டமைப்பு தத்துவமே " பாசிசம் "என்கிறார்கள்!

         இத்தகைய பாசிசத்தின் மூலமாகவும்,ஆணிவேராகவும் அழிக்கவும்,எவராலும் எதிர்கொள்ள முடியாததும் ஆன பயங்கரவாதமே,பயங்கரவாத தத்துவமே," பிராமணீயம்"  என்ற பார்ப்பனீய  பாசிசமாகும்!

        இப்படி சொல்லுவதற்கு என்ன காரணம் என்றால், பாசிசம் எனபது வரலாற்றில் மிகமிக  குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் ஆட்சியதிகாரம் என்பதை பாசிசத்தின் துணைகொண்டு,  ஆட்சி நடத்திய பலருக்கு நேர்ந்த நிலைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் !  பாசிச ஆட்சி நடந்த பல்வேறு நாடுகளின்  வரலாற்றில் இருந்தும்  நாம் அறிந்துகொள்ள முடியும்!

        ஆனால் பாசிச ஆட்சியாக  இருக்கும் 'பார்ப்பன பயங்கர வாதமோ', 'பார்ப்பனீய ஆட்சி அதிகாரமோ'  வரலாற்றில் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை  கொண்டதல்ல!   குறுகிய காலத்தில் முடிந்து விடும் பாசிசமும் அல்ல.!  குறைந்த காலத்தில் அகற்றப் பட்டுவிடும்  பயங்கரமும்  அல்ல!!
 
          அது மிகக்  கொடூரமான,தடையே இல்லாத, இனவெறி பூதமாகும்.!  அன்பு,கருணை,ஈவு,இரக்கம் எதுவும் அற்றது! இரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காடேறியைப் போன்று, காலம் தோறும் நீண்டு,நீடித்து, உழைக்கும்  மக்களின் உரிமைப் போராட்டங்களை  ஒடுக்கி,  அழித்து,   ஆட்சி அதிகாரத்தை சுவைக்கும்  பயங்கரவாத பாசிசமாகும்! இந்த பார்ப்பனீய பாசிசத்தை எக்காலத்தும் மாற்ற முடியாது! உலக மக்களின் கொடிய எதிரியான  பார்ப்பனீய ஆட்சி அதிகாரமே  இன்றைய நவீன காலத்து பாசிசத்தின் தாயாகும்!

         இதுபோல  நான் விவரிப்பது, நான் அதீதமாக பார்பனீயத்தை சாடுவதாக சிலர் நினைக்கக் கூடும்! அப்படி நினைக்கும் வகையில்  கட்டமைக்கப் பட்ட பார்ப்பனீய பயங்கரவாதத்தை  அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை  அல்லது இதுவரை  புரியும் வகையில்  யாரும் அவர்களுக்கு சொல்லவில்லை என்றுதான் நான்  கருத வேண்டி உள்ளது! 


           காரணம், நமது இந்தியாவின் ஆட்சிமுறை, அதில் பார்பனீயத்தின் பங்கு, பார்பனர்களின்  ஆட்சி அதிகாரத்தின்  வீரியம்,இந்திய மக்களின் எதார்த்த வாழ்க்கை முறை,இந்திய புரட்சிகளின் வீழ்ச்சி, இந்திய புரட்சியாளர்களின் நிலையம்,கதியும் போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை,  பற்றி சரியாக அவர்கள் யாரும் புரிந்து  கொண்டிருக்க வில்லை  என்பதேயாகும்!

     அடுத்தப் பதிவுகளில்  அலசுவோம்!
Comments

 1. உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

  பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

  கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?.

  ஆனால் அது தான் உண்மை!

  மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்


  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க திப்பு சுல்தானை தூண்டியது.  மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

  திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது.


  இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

  "நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது". “

  -----------------------------------------------
  சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  >>>> பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” <<<<<<

  .

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?