எது தேசபக்தி ? அவசரமாக அலசப்படும் விஷயம்!

          இந்த நாட்டில் சிலர்  நூறு சதவீத  தேச பக்தியுடன் இருப்பதை பார்த்து வியந்து போகிறேன்!   தேச பக்தி  என்பதற்கு   அவர்கள் கூறும் அடிப்படை தகுதி  என்னவென்று பார்த்த பொது,"தேசபக்தர்கள்" என்போரிடம்  சில குறிபிடத்தக்க   ஒற்றுமை குணங்கள்,இருப்பதைப்  பார்த்தேன்!

       தேச பக்தர்களாக இருப்போருக்கு முதல்தகுதி,  முதலில் அவர்  இந்துவாக  இருக்கவேண்டும் என்பதுதான்!  அப்படியே இந்துவாக இருந்தாலும்  அவர்,   இந்து மதத்தைப் பற்றி எந்தவித  விமர்சனமும்  அதுவும் எதிர்மறையான விமர்சனமும் செய்யாதவராக  இருக்கவேண்டியது  அவசியமாக இருக்கிறது,!


           இந்தியாவில் பிறந்த,வேற்று மததினரர்  யாரும், தங்களுக்கு  தேசபக்தி இருக்கிறது என்று சொன்னால்  அவர்கள் வேஷம் போடுகிறார்கள்,ஏமாற்றுகிறார்கள்  என்று எள்ளி நகையாடப் படுவர்!   அதேபோல  இந்துமதத்தை , அல்லது இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்யும்  இந்துகளுக்கு, நாத்திகர்களுக்கு  கொஞ்சமும் தேசபக்தி  இருபதாக  கருதுவது  முட்டாள் தனமாகும்! 

            அதேபோன்று,    தேசபக்தி உள்ளவர்கள்  தங்களது  மொழி குறித்தோ, மாநிலங்கள் குறித்தோ, மாநிலங்களுக்கு இடையில்  உள்ள பிரச்னை குறித்தோ, தங்களது உரிமைகள் பறிபோகிறது  என்றோ  கவலைப் படகூடாது!  எதிர்ப்பு  தெரிவிக்கக் கூடாது! கவலைபட்டால்,எதிர்த்து  குரல் கொடுத்தால்,  அவர்களுக்கு  இந்த நாட்டின் மீது அக்கறை இல்லை, தேசபக்தி இல்லை என்பதை அவர்களாக பறைசாற்றிக் கொள்கிறார்கள் என்று பொருளாகும்! 


             இவைகள் மட்டுமின்றி  நீங்கள் தேசபக்தர்களாக  இருந்தால், அல்லது தேசபக்தர்களாக  ஆக விரும்பினால்,  மத்தியில் ஆளுவது  காங்கிரசோ,பாரதிய ஜனதாவோ, அவர்களது எல்லா திட்டங்களையும், செயல்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு  ஆதரிக்க வேண்டும். ஆமாம் சாமி போட வேண்டும்! 

 வள்ளுவர் சொன்னாரே, 

" எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்,  அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு! "


     -என்று யோசித்தால் கூட....  உங்களுக்கு தேசபக்தி இல்லை, நீங்கள் தேசத்துக்கு எதிராக சிந்திக்கும் பேர்வழி என்பதால் தேச துரோகியாகி விடுவீர்கள்!  அதே போல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆகாதா? நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு என்ன எது என்று பார்க்காமல், கேள்வி கேட்காமல், பாகிஸ்தானை எதிரியாகவே பார்க்கவேண்டும்! 

         அமெரிக்கவும் இந்தியாவும் கொஞ்சி குலவுகிறதா? நீங்களும் நாயைப்போல வாழை ஆட்டி நன்றிவிசுவாசத்தைக் காட்டவேண்டும்! இங்கும் கேள்வி,சிந்தனை கூடாது!  அப்படியே உங்களுக்கு வந்தாலும் நீங்கள்  தேசபக்தி இல்லாதவர்கள் ஆகிவிடுவீர்கள்! 

          நீங்கள் தமிழனா? நீங்கள் என்ன 'குட்டி கரணம்' போட்டாலும்,  நீங்கள்இந்தியாவில் இருந்தாலும்,  நிச்சயம் இந்தியாவுக்கு நீங்கள் எதிரிகள்தான்!  இந்திய துரோகிகள்தான்!!  அப்படி  இல்லை என்றால், நாங்கள் இலங்கையை ஆதரிக்கிறோம், நட்பு பாராட்டுகிறோம், எனபது தெரிந்தும்  சிங்களர்களிடம் மண்டியிடாமல், சண்டை போடுவீர்களா? தனி நாடு கேட்பீர்களா?  இலங்கையுடன் போடும் சண்டை எனபது,   தேசபக்தர்களான, இந்தியர்களான  எங்களிடம் போடுவது எனபது கூடத்  தெரியாதா? 

         ஒன்னுமில்லேங்க ...   ஆஸ்திரேலியா  ஜெயிக்கும் என்று சொன்னால் கூட, சிலபேரு   நம்மை  இந்திய துரோகிகள்  ஆக்கிடுறாங்க!  விளையாட்டில் கூட  வேறு நாடு  வெற்றிபெறக் கூடாது என்று நினைப்பதுதான் தே பக்தியாம்! இல்லேன்னா,     அது,  தேசதுரோகமாம் !  அவனவன்  இந்தியாவையே ஏலம் போட்டு,  வித்துகிட்டு  இருக்கிறப்போ,   இப்படியெல்லாம் ஆளாளுக்கு தேசபக்திக்கும், தேச துரோகத்துக்கும்   இப்போ விளக்கம் சொல்லிட்டு வருகிறார்கள்! 

       நாமும் நமக்கு தெரிந்த தேசபக்தியை பற்றிய  விளக்கத்தை சொல்லி வைக்கலாமே  என்று  சொல்லிபுட்டேன்! 


 

Comments

 1. சகோ ராஜன்,

  அற்ப்புதமான பதிவு. நிறைய பேர் தேவை இல்லாத விசயங்களில் தான் தேச பக்தியை காண்பிக்கிறார்கள். உதாரணம் கிரிக்கெட், பாகிஸ்தான் மற்றும் இத்யாதி. மற்றபடி வரி கட்டுவது போன்ற விசயங்களில் காட்டமாட்டார்கள். நிறைய பேரை இது போன்று சந்தித்து உள்ளேன்.

  /* நீங்கள் தமிழனா? நீங்கள் என்ன 'குட்டி கரணம்' போட்டாலும், நீங்கள்இந்தியாவில் இருந்தாலும், நிச்சயம் இந்தியாவுக்கு நீங்கள் எதிரிகள்தான்! இந்திய துரோகிகள்தான்!! அப்படி இல்லை என்றால், நாங்கள் இலங்கையை ஆதரிக்கிறோம், நட்பு பாராட்டுகிறோம், எனபது தெரிந்தும் சிங்களர்களிடம் மண்டியிடாமல், சண்டை போடுவீர்களா? தனி நாடு கேட்பீர்களா? இலங்கையுடன் போடும் சண்டை எனபது, தேசபக்தர்களான, இந்தியர்களான எங்களிடம் போடுவது எனபது கூடத் தெரியாதா?
  */

  இந்த வரிகள் புரியவில்லை.

  ReplyDelete
 2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

  ---- >
  புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
  < ----

  ReplyDelete
 3. இந்தியாவின் தமிழின வெறுப்பையும் இலங்கை சிங்கள ஆதரவையும் கேலியாக சுட்டி காட்டி உள்ளேன்! தமிழினமே அழிந்தாலும் கவலைப் படாமல்,கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இந்திய தேசபக்தியின் லட்சணம் என்று சிலர் எண்ணுகிறார்கள்!

  ReplyDelete
 4. வாஞ்சூராரரின் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 5. முண்டம் ஓசூர் ராஜன், இந்தியாவிற்கு தமிழின வெறுப்பு என்று கதை அளக்க வேண்டாம்.உன்னை மாதிரி திராவிடம் பேசும் வெறி நாய்களுக்கு தான் இந்தியா மீது வெறுப்பு.திராவிடம் பேசும் வெறி நாய்களின் கொட்டை அறுக்கப் ப்டும் நாள் சீக்கிரமே வரும்.பொறுத்திரு சொறி நாயே.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?