வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

              சென்ற  பதிவின்  தொடர்ச்சி....


       வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம்  தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர்.   கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக  விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது!

            யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised )  இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார்.   உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது!

           இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது                                   .இ.  சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும்  எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்!

      இவைகளில்  பிரஹதாரண  உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே
  "பிரஹதாரன்யகம்"    எனபடுகிறது . (வீர ராகவாச்சாரியார்,உபநிஷத்சாரம்,சென்னை,1965 , பக்கம்-131 ) கூறுகிறார்!
       இந்த உபநிஷத்தில், ஆறாம் அத்தியாயத்தில் (நான்காம் பிராமணம்,பதினெட்டாவது வசனம்)  யாக்ஞ்வல்கியாரின் குருவான ஆருணி குறு பிரவாஹன்   ஆரோக்கியமான  குழந்தையைப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்  என்று கர்பிணிப் பெண்களுக்கு யோசனை கூறுவதாக வருவதே கீழே  தரப்பட்டு உள்ளது !
         தன் மகன் புலவனாகவும்,புகழ் பெற்றவனாகவும்,நல்ல பெசாலனகவும்,சபைகளிலே திறமை உள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும்,  முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென  விரும்பினால், தாயானவள்,நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது!
   He who desires a son reputed,eloquent and speaking words pleasant to hear, to be born to him, to be versed in aal the vedas and to live to a full age of hundred years, should have rice boiled with the meat of a bull able to breed and with his wife should eat the same mixed with ghee. Then they would be able to give birth to a son as desired. ( BRIHADARANYAKOPANISAD, Upanisad series 10, sri Ramakirushna math,mylapore,1945,p. 573.)
     பசுவை வைத்து(வதைத்து கொல்லும்)    யாகத்தின் பெயர்களும்  நோக்கங்களும்:

   கோசவம் -     பசுமாடு,காளை மாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்!
  வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது.
 காம்யபசு  - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்கு உரிய பசு யாகம்.
 வத்சொபகரணம்-  கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
 அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
 ஏகாதசீன பசுவிதானம் - பதினோரு பசுக்களைக் கொல்லும் யாகம்.
  கிறாமாரண்யா பசு பிரசம்ஷா  - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுகளைக் கொன்று யாகம் செய்வது!
 ஆதித்ய வேதாகபசு- சூரிய தேவதைக்கு பசு யாகம்.
 காம்யபசு விதானம்-பசுமாட்டைக் கொன்று நடத்தும் யாகம்.
 ரிஷபாலம்பன விதானம்- எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி.


          இவைகளை அதாவது யாகம்  பற்றி எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் (கோலோளன்பு அம்சம்,பொன்னானி,மதவிசாரணை, பக்கம்-78 ,79 , 80 )விரிவாக தெரிவித்து உள்ளார்!

     தெய்வங்களின் பெயரைச் சொல்லியும், பல்வேறு காரியங்களைச் சொல்லியும், பசுகளும் எருதுகளும்  தேவைக்கு தகுந்தபடி, பலியிடப் பட்டு, உணவாக உண்ணப்பட்டு வந்தது,     இவைகளை மட்டுமே தனியாக  சாப்பிட்டால் என்ன " கிக்கு" இருக்கும்?    அதனால் " கிக்கு" மற்றும்  "கில்மா " வேலைகளுக்கு  மதுவும் கட்டாயமாக  சேர்த்துக் கொள்ளப்பட்டது! 
           ஆணும் பெண்ணும் எல்லோரும் ஒன்று கூடி உண்டும்,கூடியும், ஆடியும்,பாடியும்,சேர்ந்தும் களித்தும்,  கலந்தும் உறங்கினார்கள்!

         மது பார்க்கம்  என்பது  மதுவுடன் கூடிய மாமிச உணவை  விருந்தாக  உண்பதும் வழங்குவதுமாகும்!  அதுகுறித்து அடுத்து பார்ப்போம்! 

 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?