விவேகானந்தரும் பசுபாதுகாப்பு சங்க பிரமுகரும்!

          ஸ்ரீ சரத் சந்திரர்  தன்னை போன்றே  ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர் அவர்களை சந்திக்க வந்திருந்தார். சந்திப்பு விவேகானந்தர் தங்கி இருந்த ஸ்ரீ பிரியநாத் முகர்ஜி என்பரின் வீட்டில் நிகழ்கிறது! 

     விவேகானந்தர் அவர்களை சந்திக்க கோ சம்ரஷ்ண சங்க பிரசாரகர்  வருகிறார்! இருவர்க்கும் உரையாடல் நடக்கிறது!


 விவேகானந்தர்: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?


பிரசாரகர் : நாங்கள் எங்கள் கோமாதா  க்களைக் கசாப்புக் காரர்கள் வாங்கிவதைபுரியா வண்ணம் பார்ப்பதும்,நோயுற்றும் கிழமாயும்   அங்க ஈனமாயும் உள்ள பசுக்களைக் காப்பாற்று கிறோம் .


விவேகானந்தர்: இது சிறந்த நோக்கந்தான்.உங்கள் வருமான வழிகள் எவை?

 
பிரசாரகர் : தேவரீரைப் போன்ற காருண்யா சீலர்கள் அளிக்கும் கொடைப் பொருளைக் கொண்டு மேற்படி வேலை நடைபெற்று வருகிறது!


விவேகானந்தர்: உங்களிடம் இப்போதுள்ள மூலதனம் எவ்வளவு?


பிரசாரகர்: மார்வாரிகளின் வர்த்தக மரபினர்களே இச்சபையின் போஷகர்கள்.அவர்கள் ஏராளமாக பொருளுதவி புரிந்துள்ளார்கள்!


விவேகானந்தர்:  மத்திய இந்தியாவில் மிகக் கொடிய பஞ்சம் மக்களைக் கொள்ளை கொண்டு போகிறது. இந்திய அரசாங்கத்தார் பட்டினியால் இறந்தவர்களின் தொகை 900000  என்று வெளியிட்டு  இருக்கிறார்கள் . உணவின்றி, மரிக்கும் மாந்தர்களை எமன் வாயிலிருந்து ரஷிக்க உங்கள் சங்கம் ஏதாவது முயற்சிகள் எடுத்துகொண்டு இருக்கிறதா? பிரசாரகர்:  பஞ்சம் முதலியவற்றில் நாங்கள் உதவி புரிவதில்லை.எங்கள் நோக்கம் எல்லாம் பசு பரிபாலனம்தான்.

விவேகானந்தர்: லஷ்க்கணகான நமது சகோதரர்கள்,சமயத்தவர்கள் கொடிய வறுமையால்  மடியும்போது ஒரு ஆழாக்கு அரிசி கொடுத்து உதவுவது கடமை என்று உங்கள் சங்கத்தாருக்கு தோன்றாத விந்தைதான் என்ன?

பிரசாரகர்:  இல்லை. அவர்கள் கர்மவினைப்படி அவர்கள் செய்த பாபத்திற்காக இவ்விதப் பஞ்சம் சம்பவித்து இருக்கிறது.தம் வினைக்காக அவர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். 

       இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விவேகானந்தருடைய முகம் சிவந்தது.கண்கள் தீப்பொறி  கக்கின. பிரசாரகரை ஒருமுறை உற்று  பார்த்தார். தமது வேகத்தை அடக்கிக் கொண்டு பேசலுற்றார்.
 
                   " அன்பரே! கண்கூடாகப் பல்லாயிரம் சகோதரர்கள் வறுமையால் பட்டினி கிடந்தது பரிதவித்து உயிரை விடுகிறார்கள்.அவர்களுக்கு ஆழாக்கு அரிசியும் கொடாது,கேவலம் எள்ளளவு உதடு அனுதாபமும் கொள்ளாது,  லஷ்க்கணகான பொருளைப் பறவைகளையும், மிருகங்களையும் காப்பாற்றவே  செலவளிக்கிற கூட்டத்தாரிடம் எனக்கு அனுதாபமே கிடையாது. இவற்றால் எவ்விதப் பொது சேமமும் ஏற்படுமென்பதை நான் நம்பவில்லை.!    "மனிதர்கள் அவர்கள் கர்மவினைக்காக சாகின்றனர்! ஆகையால்,அவர்கள் இறக்கட்டும்!" ஆஹா ! இவித கொடிய வசனங்களைச் சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா? கர்மயோகத்தை ஆதாரமாகக் கொண்டு நீர் இந்த சாக்குச் சொல்லுவீரானால்,பிறருக்கு உதவி புரிவதைப் பற்றி சிந்திக்கவேண்டிய வேலையே இலை. நீர் சொல்லும் நியாயப்படிப் பார்த்தால்,உங்க சங்க வேலையும் கொமாதாகளும் தத்தம் முன் கர்மத்தின் பயனாய் கசாப்புகாரர்களின் வாளுக்கோ, பிணிக்கோ ஆளாகின்றன. ஆகையால் அவற்றிற்கு உதவி புரியவேண்டிய அவசியம் இல்லை என்பதும் பொருந்தும் அல்லவா? "என்றவுடன் அந்த  பிரசாரகர் பயந்து போய்,

  பிரசாரகர்:     "தாங்கள் கூறுவதும் சரியே,ஆனால் நமது சாஸ்திரங்கள் " கோ " நமது தாய் என்று விளம்புகின்றனவே? "என்றார்.

           இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விவேகானந்தர் ஆச்சரியமுற்று, " ஆம்! அப்பசு உங்கள் தாய் என்பதை நானும் அறிவேன்! அப்படி இல்லை என்றாள்,உங்களைப் போன்ற விசேஷப் புத்தி வைபவமுள்ள புத்திரர்களை யார்தான் பெறுவார்கள்?" என்றார்.

              இந்த அழுத்தமான சொல்லை பிரசாரகர் கவனிகவில்லை போலும்.ஏனெனில்,அவர் எந்த மறுமொழியும் புகலாது.... விவேகானந்தர் இடம் ஏதேனும் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். 
  
            அப்பொழுது,விவேகானந்தர், "நான் ஒரு சன்னியாசி என்பதை நீங்கள் பிரத்யக்ஷமாய் பார்கிறீர்கள்.ஜனங்கள் எனக்குப் பொருள் அளித்தால்,அதை முதன்முதலாக நான் மனிதர்களுக்கு உதவி புரிவதில் செலவிடுவேன்! மனிதர்களுக்கு உண்டி அளித்து,சமய அறிவும் கல்வியும் ஊட்டி, அவர்களைக் காப்பாற்ற நான் முதலில் முற்சிகிறேன். இந்த விசயங்களில் செலவளிதப் என்னிடம் ஏதேனும் எஞ்சுமேல் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை உங்கள் ஸ்தாபனத்துக்கு  அளிக்கிறேன்" என்று கூறினார்.

               அந்த பிரசாரகர் அகன்ற பிறகு தம்மிடம் இருந்தவர்களிடம்,       "அந்த மனிதன் எவ்வளவு 'ஆ' பாசமாக பேசினான், பாருங்கள்.! அவரவர் கர்மதிற்காக  சாகின்றவர்களுக்கு உதவி புரிவதில் என்ன பயன்?  என்று அவன் மொழிந்ததை நினைக்க நினைக்க ,எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. !  இப்படிப் பேசிப் பேசித்தான் இந்த தேசம் மதிகெட்டு, வதைபட்டு பாழாகி விட்டது!      எவ்வளவு அகோரமான சந்திக்கு கர்மத்தை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?  அந்தோ! மக்களின் கஷ்டங்களைக் கண்குளிரக் கண்டு, எள்ளளவும் இரக்கமின்றி, இருக்கும் ஜென்மமும் ஒரு ஜென்மமா?"  என்று கூறிய வண்ணம் பெருமூச்செறிந்து உடல் நடுங்கினார்.
(விவேகானந்தரின் சரித்திரம் சொல்லும் செய்திகள் நூல்,உறையூர் எஸ்.வி. வரதராஜையங்கார்.-1929 ) இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ஞானதீபம்,சுடர்- 5 ,பக்கம் 6 ,7 ,8  சம்பாஷனைகள் என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது.
      
             இந்த நாட்டில் புண்ணிய மதமான நமது இந்து மதம் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவதை விட மாடுகளைப் பற்றி படும் கவலை அதிகம்!  மாடுகள் கேள்வி கேட்பதில்லை!  உரிமைக்கு குரல் கொடுப்பதில்லை, ஊழலைச் சாடுவதில்லை, தனிநாடு, தனி மாநிலம் கோரிக்கை வைப்பதில்லை என்பதாலோ என்னவோ?   
          

Comments

 1. எங்கும் அதிகம் கேள்விப்பட்டிராத தகவல் இது, சக மனிதன் பட்டினியால் வாடும்பொழுது அவனை அப்படியே பசியால் சாகவிட்டுவிட்டு மிருகங்களை பாதுகாப்பது மனிதத்தன்மையுள்ள செயலல்ல. இந்த செயலை
  விவேகானந்தர் கண்டித்தது அருமை.

  இது போன்று நம் பார்வையிலிருந்து மறைந்த வரலாற்று சம்பவங்களை பற்றி மென்மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 2. நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வணக்கம். நலமா? மிகவும் மகிழ்ச்சி. உங்களது கருத்துகள் என்னை மேலும் எழுதத் தூண்டும்! நன்றி!

  ReplyDelete
 3. அருமையான் பதிவு.. கீழ்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரைகளை படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை இந்த பதிவில் வெளியிடவும்...

  ReplyDelete
 4. http://thamizhan-thiravidana.blogspot.com/

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?